Popular Posts

Tuesday 6 December 2016

நபிகள்_நாயகம்_ﷺ_அன்னவர்கள்_ஆஷிகீன்களின்_நோய்களை_நீக்கி_குணப்படுத்துவார்களா

#நபிகள்_நாயகம்_ﷺ_அன்னவர்கள்_ஆஷிகீன்களின்_நோய்களை_நீக்கி_குணப்படுத்துவார்களா?  _________________________________

மௌலித் & மீலாது நபி விழா குற்றச்சாட்டு - தொடர் (28) __________________________________

*♣ நோய்களுக்கு நிவாரணம் தருவதற்க்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி அவர்களால் முடியும் என்ற கவி வரிகள் வரம்பு மீரப்பட்டுள்ளதா?*

​நபி ஈஸா (அலைஹிஸ் ஸலாம்)
அவர்கள் நோய்களை குணப்படுத்துவார்கள் என்று அல்குர்ஆனில் பின்வருமாறு இறைவன் கூறியுள்ளார். "இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்)". (அல்குர்ஆன் : 3:49)

♦ யூசுஃப் நபியின் பிரிவை நினைத்து கண் பார்வையை இழந்த தந்தை எஃகூப் நபியின் முகத்தில் யூசுஃப் நபியின் பரக்கத் நிறைந்த கண்னியமான சட்டையை முகத்தில் போட்டபோது கண் பார்வை மீண்டும் வந்த நீண்ட வரலாற்று செய்தி.“என்னுடைய இந்தச் சட்டையை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று, என் தந்தையாரின் முகத்தில் போடுங்கள்; அவருக்குக் கண்பார்வை வந்துவிடும்; இன்னும் உங்களுடைய குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” (என்று கூறினார்).(அல்குர்ஆன் : 12:93)

​பிறகு, நன்மாராயங் கூறுபவர் வந்து,
(சட்டையை) அவர் முகத்தில் போட்டபோது அவர் மீண்டும் பார்வையுடையோரானார்; “நீங்கள் அறியாததையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாக நான் அறிவேன் என்று உங்களிடம் கூறவில்லையா?” என்று (அவர்களை நோக்கிக்) கூறினார்.  (அல்குர்ஆன் : 12:96)​

♦ கைபர் போரின் பொழுது ஹழ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்கள் கண் வலியால் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் பிறரின் கையைப் பிடித்து நடந்தாலே தவிர தனியாக நடந்து செல்ல இயலாதவராக இருந்தார்கள். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஹழ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்களின் இரு கண்களிலும் தங்கள் எச்சிலை உமிழ்ந்தார்கள். அந்த நேரத்திலேயே ஹழ்ரத் அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்கள் கண்வலியிலிருந்து குணமடைந்தார்கள் (நூல்: ஸஹிஹுல் புகாரி, ஸஹிஹ் முஸ்லிம்) ​

♦ ஜுஅய்த் இப்னு அப்திர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள் சாயிப் இப்னு யஸீத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைத் தொண்ணூற்று நான்கு வயது உடையவர்களாக, (அந்த வயதிலும்) திடகாத்திரமானவர்களாக (கூன் விழாமல்) முதுகு நிமிர்ந்தவர்களாக கண்டேன். அவர்கள், 'எனக்குக் கேள்விப்புலன் மற்றும் பார்வைப் புலனின் நலம் அல்லாஹ்வின் தூதரின் பிரார்த்தனையால் தான் வழங்கப்பட்டுள்ளன என்பதை நான் அறிந்திருக்கிறேன். என் தாயின் சகோதரி என்னை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் அழைத்துச் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியின் மகன் நோயுற்றிருக்கிறார். இவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள். எனவே, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எனக்காக பிரார்த்திதார்கள்" என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு (நூல் ஷஹீஹ் புகாரி)

​♦ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (யாரேனும் ஒரு) மனிதருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டால், அல்லது கொப்புளேமா காயேமா ஏற்பட்டால், தமது ஆட்காட்டி விரலைப்பூமியில் வைத்து (மண்ணைத் தொட்டு) விட்டு அதை உயர்த்தி, "அல்லாஹ்வின் பெயரால்! எங்களில் சிலரது உமிழ்நீரோடு எமது இந்தப் பூமியின் மண் (இணைந்தால் அது) எங்கள் இறைவனின் ஆணையின் பேரில் எங்களில் நோயுற்றிருப்பவரைக் குணப்படுத்தும்'' என்று கூறுவார்கள்.அறிவிப்பவர்: ஹழ்ரத் உஸ்மான் இப்னு ஹுனைப் ரலியல்லாஹு அன்ஹு. (நூல்: முஸ்லிம்) ​

♦ ஒரு தடவை, கண்பார்வையற்ற ஒரு மனிதர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து, யாரசூலல்லாஹ்! என்னைக் குணப்படுத்தும்படியாக அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள் என வேண்டிக் கொண்டார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீ விரும்பினால் உனக்காக பின்னர் துஆச் செய்கின்றேன். அது உனக்கு சிறந்ததாக அமையும். அல்லது இப்போதே விரும்பினால் அதை செய்கிறேன் என்று கூறினார்கள். ​​இப்போதே துஆச் செய்யுங்கள் என அவர் வேண்டிக் கொண்டார்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து, அம்மனிதரை உழுச் செய்யுமாறு ஏவினார்கள். பூரணமாக உழு செய்தபின், இரண்டு ரஅகத்துகள் தொழச் சொன்னார்கள். அதன்பின் இவ்வாறு பிரார்த்தியுங்கள் என்று கீழ்க்காணும் துஆவை கற்றுக் கொடுத்தார்கள் யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் நபிமார்களுக்கெல்லாம் அருளான முஹம்மத் (ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம்) அவர்களின் பொருட்டினால் உன்னை முன்னோக்கிக் கேட்கிறேன். முஹம்மதே! நிச்சயமாக நான் எனது குறித்த தேவை நிறைவேற்றப்படுவதற்காக தங்களைக் கொண்டு எனது இரட்சகனிடம் முன்னோக்கியுள்ளேன். யாஅல்லாஹ்! எனது விடயத்தில் அவரை பரிந்துரைக்கச் செய்வாயாக! (இமாம் நஸாயி, இமாம் பைஹகீ, இமாம் தபரானீ, இமாம் திர்மித, இமாம் ஹாகிம் இன்னும் பல ஹதிஸ்கள் உள்ளன).​

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கண்பார்வையிழந்த ஸஹாபி ஒருவருக்கு பின்வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள். (அதனை ஓதிய அவர் பார்வை பெற்று நலமடைந்தார். தேவைகள் ஏற்படும் போதெல்லாம் ஸஹாபாக்கள் இந்த துஆவை ஓதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்) இச்சிறப்பு மிக்க துஆ இதோ!​​யா அல்லாஹ்! உன்னிடம் கேட்கிறேன்.
ரஹ்மத்துடைய நபியாகிய முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் பொருட்டைக் கொண்டு உன்பால் முகம் நோக்குகின்றேன். யா ரசூலல்லாஹ்! உங்கள் பொருட்டைக் கொண்டு நாயன்பால் எனது இத்தேவைக்காக முகம் நோக்குகின்றேன். என் தேவை நிறைவேறுவதற்காக நாயனே! எனது விடயத்தில் அன்னாரின் ஷபாஅத்தை ஏற்றுக்கொள்வாயாக!. (நூல்கள்: "திர்மிதி 2 -197, இப்னுமாஜா 1 - 441, நஸாயி 658, 659, முஸ்தத்றக் 1 - 519, இப்னுஹுசைமா2 - 226)

♦ நான் ஸலாமா (ரலியல்லாஹூ அன்ஹு) அவர்களின் கெண்டைக்காலில் அடிபட்ட ஒரு காயத்தின் அடையாளத்தைப் பார்த்தேன். உடனே நான் அவரிடம் 'இது என்ன?' என்று கேட்டேன். அதற்கவர், 'கைபர் போரன்று எதிரிகளின் தாக்குதலால் எனக்கு காலில் அடிபட்டுவிட்டது. 'ஸலாமா காயம் பட்டுவிட்டார்' என்று மக்கள் கூறினார்கள். பின்னர், அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் என்னை கொண்டு சென்றார்கள். அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் என் மீது மூன்று முறை ஊதினார்கள். அதன் பிறகு இந்த நேரம் வரை அந்தக் காயத்தின் காரணமாக எந்த வலியும் எனக்கு ஏற்படவில்லை.' என்று கூறினார்கள். ​​அறிவிப்பவர்: ஹழ்ரத் யஜீது பின் அப்திர்
ரஹ்மான் (ரலியல்லாஹு அன்ஹூ)​(நூல்: அபூதாவூத்) ​

♦ ஹழ்ரத் கதாதா பின் நுஃமான் (ரலியல்லாஹு அன்ஹூ) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகிறது: அவர்களின் கண் உஹதுப் போரில் போய்விட்டது. (எதிரிகள் ஈட்டியில் குத்தியதால் அவரின் கண் துண்டித்து கீழே விழுந்து விட்டது. அவர் அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வந்தார். அண்ணல் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அவரின் கண்ணை அதன் இடத்தில் மீண்டும் பொருத்தினார்கள். அது சரியாக பொருந்திவிட்டது!  (நூல்: தப்ரானி, பைஹகி) ​

♦ ஹழ்ரத் அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய மகள் அஸ்மா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு கைஸான் (ரலியல்லாஹு அன்ஹு) என்ற ஸஹாபிக்கு சொன்னார்கள்: இது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுடைய ஜுப்பா. இது ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடத்தில் காணப்பட்டது. அவர்களுடைய மரணத்திற்கு பிறகு அதை நான் எடுத்து கொண்டேன். இதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் அணியக்கூடியவர்களாக இருப்பார்கள். அந்த ஜுப்பாவை நோயாளிகளுக்கு கழுவிக் கொடுத்து நாங்கள் நோய் நிவாரணத்தை தேடி கொள்வோம். அவர்கள் அதன் மூலம் சுகமும் பெறுகின்றனர் என கூறினார்கள். (ஸஹிஹ் முஸ்லிம் பாகம் 2, பக்கம் 190, மிஷ்காத் பக்கம் 374)

♦ உம்மத்திற்கு முஸல்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடியொன்று இருந்தது. மக்கள் அதன் மூலம் நோயிலிருந்து சுகம் பெறுகின்றனர். சில நேரங்களில் தண்ணீர் பாத்திரத்தில் அத்திருமுடியை முக்கி எடுத்து அந்நீரைப் பருகுவர்.

ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் மவ்ஹிப் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். எனது மனைவி ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தை என்னிடம் கொடுத்து உம்மு சல்மா (றழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் அனுப்பிவைத்தாள். ஒருவனுக்கு கண் திரிஷ்டி அல்லது ஏதோ ஒன்று ஏற்படுமாயின் இவ்வாறு தண்ணீர்ப் பாத்திரம் ஒன்றை உம்மு சல்மாவிடம் என் மனைவி அனுப்புவது வழக்கம். அதேபோல் தான் என்னையும் அனுப்பிவைத்தாள் உம்மு சல்மா அவர்கள் எனது தண்ணீர்ப் பாத்திரத்தைக் கண்டதும் தன்னிடமிருந்த வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்து அதில்வைக்கப்பட்டிருந்த நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தலைமுடியை எடுத்து நான் கொண்டு சென்ற தண்ணீர்ப் பாத்திரத்தினுள் அதைவிட்டு அசைத்தார்கள் அப்பொழுது நான் பாத்திரத்தினுள் எட்டிப்பார்த்தேன் அங்கு சிவந்த முடிகள் இருப்பதை கண்டேண் என்று சொன்னார்கள். (நூல் : புகாரி 5896, மிஷ்காத், மேலும் பார்க்க புகாரி ஓரக் குறிப்பு பக்கம் 875)

♦ அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் தங்களிடமிருந்து ஏராளமான பொன் மொழிகளைக் கேட்கிறேன். (ஆயினும்) அவற்றை மறந்து விடுகிறேன் என நான் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு “உம்முடைய மேலங்கியை விரியும்“ என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். நானும் அதனை விரித்தேன். தம் இரண்டு கைகளாலும் இரண்டு கை நிறையளவு அள்ளி (எடுப்பது போன்று பாவனை செய்து) விட்டுப் பின்னர், “அதனை (நெஞ்சோடு) நீர் அணைத்துக் கொள்வீராக!“ என்றார்கள். நானும் உடனே அதனை என் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் எதனையும் மறந்ததே இல்லை“ என அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். (நூல் புகாரி 119)

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

No comments:

Post a Comment