Popular Posts

Thursday 1 December 2016

ஸஹாபாக்களின்_காலத்தில்_மீலாதுன்_நபி_விழா_கொண்டாடப்பட்டுள்ளதா

#ஸஹாபாக்களின்_காலத்தில்_மீலாதுன்_நபி_விழா_கொண்டாடப்பட்டுள்ளதா?
__________________________________

மௌலித் & மீலாது நபி விழா குற்றச்சாட்டு - தொடர் (13) __________________________________

♣ ஸஹாபாக்கள் மீலாது விழா கொண்டாடினார்களா?

நபிகள் நாயகமும் ஸஹாபா பெருமக்களும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பின் நிகழ்வுகளை ஒன்று கூடி பேசிக் கொண்டு இருப்பார்கள். அவ்வேளையில் யா ரசூலல்லாஹ்! உங்களைப் பற்றி எங்களுக்கு கூறுங்கள். என சஹாபாக்கள் கூறுவார்கள். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவார்கள்.  இமாம் ஹாகிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கிறார்கள் (நூல் ஹாக்கிம் பாகம் 2 பக்கம் 600, அகீததுஸ்ஸூன்னா பக்கம் 349)​

♦ ஸெய்யதுனா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ, ஆமிர் அல் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு போன்ற ஸஹாபாக்கள் தமது வீடுகளில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நிகழ்ச்சியைப் (மீலாதுன் நபி) பற்றி தனது குடும்பத்தாருக்கு கூறிக்கொண்டிருப்பார்கள் இதனை கண்ணுற்ற நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் ரஹ்மதுடைய வாசல்களை திறந்து விட்டான் என்று கூறி துஆ செய்வார்கள்.நூல்: அகீததுஸ்ஸூன்னா பக்கம் 349​

​♣ மீலாதைக் கொண்டாடி மறுமையில்
மாண்படைவோம்​

அபூலஹ் மரணித்து விட்ட சில தினங்களில் அவர் மோசமான நிலையில் இருப்பதை கனவில் கண்ட அவரின் சகோதரரான அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் உமது மறுமை நிலைமை எப்படி இருக்கிறது என்று வினவினார்கள் அதற்கு அவர் எனது தம்பி மகன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்து விட்டார்கள் என்று நற்செய்தி சொன்ன எனது அடிமை பெண் ஸூவைபாவை எனது ஆட்காட்டி விரரால் சுட்டிக் காட்டி நீ எனக்கு இந்த நற்செய்தியை சொன்ன சந்தோஷத்தினால் இன்றிலிருந்து உன்னை நான் உரிமை விட்டுவிட்டேன் என்று கூறினேன் அப்படி உரிமை விட்ட காரணத்தினால் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் என்னுடைய அந்த விரலிருந்து மதுரமான பானம் புகட்டப்படுகிறேன் என்று கூறினார். ​​நூல்: புகாரி 5101​

இதைக் கொண்டு இமாம் நாஸிருத்தீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் "உரூதுஸ்ஸாதி" என்ற தமது நூலில் நரகத்திலே நிரந்தரமாக்கப்பட்ட ஒரு காபிருக்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் (மீலாத் பிறப்பைக்) கொண்டு மகிழ்ந்த காரணத்தினால் திங்கட்கிழமை தோறும் வேதனை இலேசாக்கப்படுகிறது இன்று இருக்குமானால் ஆயுள் பூராகவும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டு மகிழ்ச்சியடைந்து ஈமானுடன் மரணித்த ஒரு முஃமினுக்கு எவ்வளவு பாக்கியம் கிடைக்கும் என்று எழுதுகிறார். நூல்: அகீததுஸ்ஸூன்னா பக்கம் 359​

இப்போது மேலே கூறப்பட்ட இவ்வதாாதாரங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கூறுவதும் அதைக் கேட்டுக் கொண்டிருப்பதும் அதை ஞாபகம் பண்ணுவதும் மன தைரியத்தையும், படிப்பினையையும், மறுமையைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்தக் கூறியதாக இருக்கின்றது என்று மிகத் தெளிவாக விளங்க முடிகிறது. அப்படியானால் நபிமார்கள் யாவரிலும் எல்லா வகையிலும் ஏற்றம் பெற்றவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தில் அவர்களின் சிறப்புக்களை எடுத்துக் சொல்வதில்லை என்ன தவறு உள்ளது?

ஆகவே இந்த உண்மைகள் விளங்காத சிலர் மீலாத் விழாவை சிலை வணக்கம் போல் சித்தரித்து, அதை செயல்படுத்தும் முஸ்லிம்களை தடுத்து வருவது சகிக்க முடியாத தவறாகும். "எங்களை விட அறிஞர்கள் இல்லை" என்ற கர்வ நிலையில் உள்ள தற்கால வழி கெட்ட அறிஞர்களை விட பல்லாயிரம் படித்தரத்தால் அறிவாலும், இறையச்சத்தாலும் மென்மையான நேர்வழி பெற்ற இமாம்கள் அனைவரும் அனுமதித்துள்ள மீலாதுன் நபி விழாவை வழிகேடவர்களின் விசமகருத்திட்காக தவிர்க்க வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை. மேலே கூறப்பட்ட ஹதீஸ் அடிப்படையில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த நாளை ஞாபகம் செய்யும் பொருட்டு மீலாது விழா அன்று பல நற்காரியங்களைச் செய்து அந்த நாளை கௌரவிப்பது எவ்வளவு சிறப்பானதாக இருக்கும்.​

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

No comments:

Post a Comment