Popular Posts

Tuesday 6 December 2016

நபிகள்_நாயகம்_ﷺ_அன்னவர்கள்_மறைவானாவற்றை_அறிந்து_கொள்வார்கள்_என்று_சொல்லலாமா

#நபிகள்_நாயகம்_ﷺ_அன்னவர்கள்_மறைவானாவற்றை_அறிந்து_கொள்வார்கள்_என்று_சொல்லலாமா?
__________________________________

மௌலித் & மீலாது நபி விழா குற்றச்சாட்டு - தொடர் (25) __________________________________

*♣ மறைவானவற்றை நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்ற கவி வரிகள் வரம்பு மீரப்பட்டுள்ளதா?*

​♦ மேலும் அல்லாஹ் இவ்வேதத்தையும் ஞானத்தையும் உம்மீது இறக்கி வைத்தான் இன்னும் நீ அறியாதிருந்தவற்றையும் உமக்கு கற்றுக் கொடுத்தான். மேலும் உன்மீது அல்லாஹ்வின் பேரருள் மகத்தானதாகவே இருக்கின்ரன (அல்குர்ஆன் 4/ 113) ​

♦ மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பவனாகவுமில்லை ஏனினும் தன் தூதர்களில் தான் நாடியவர்களை இதனை அறிவிக்க தேர்ந்தெடுக்கிறான்.(அல்குர்ஆன் 3/179)

♦ இன்ஸானை (அல்லாஹ்) படைத்து அவனுக்கு பயானை கற்றுக் கொடுத்தான்' (அல்குர்ஆன் 55: 3,4) என்ற திரு இறைமறைவசனத்திற்கு, இன்ஸான் என்பது நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எனவும், 'பயானைக் கற்றுக் கொடுத்தான்' என்றால் நடந்தவை, நடப்பவற்றை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தான். அன்னவர் முன்னோர், பின்னோர் பற்றி அறிபவர்களாக இருந்தனர் எனவும் தப்ஸீர் கலை மேதைகள் கூறுகின்றனர்.(நூல்கள்: தப்ஸீர் மஆலிமுத் தன்ஸீல் பாகம் 7, பக்கம் 1, தப்ஸீர் காஸின் பாகம் 7 பக்கம் 2, தப்ஸீர் ஸாவி பாகம் 4 பக்கம் 129, தப்ஸீர் ஜமல் பாகம் 4 பக்கம் 253)

♦ 'நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ் உங்களுக்கு கற்றுக் கொடுத்தான். உங்கள் மீது அல்லாஹ்வின் வருசை மகாத்தானதாக ஆகிவிட்டது' என்ற திருமறை வசனத்தின் கீழ்,சிருஷ்டிகளின் முடிவான் ஞானங்களும், நடந்தவை, நடப்பவை அனைத்து ஞானங்களும் கற்றுக் கொடுத்தான் என்கிறது தப்ஸீர்அராயிஸுல் பயான் (பாகம் 1, பக்கம்159)

♦ 'ஒவ்வொரு வஸ்த்துவையும் தெளிவாக விவரிக்கும் வேதத்தை உமக்கு இறக்கி வைத்தோம்.' என்ற வசனத்திற்கு எல்லா அறிவுகளையும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிபவர்களாக இருந்தார்கள். என்ற விளக்கத்தை தப்ஸீர் அராயிசுல் பயான் பாகம் 1 பக்கம் 536 ல் காணலாம்.

♦ 'அவர்களுக்கு தெளிவான விளக்கத்தைக் கூறுவதற்காகவே அன்றி வேதத்தை உமக்கு அருளவில்லை.'(அல்-குர்ஆன் 16:64)'அவர் உங்களுக்கு வேதத்தையும், ஹிக்மத்தையும் கற்றுக் கொடுப்பார். நீங்கள் அறியாதவற்றையும் உங்களுக்கு கற்றுக் கொடுப்பார்.(அல்குர்ஆன் 2:15)

♦ அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (கல்வி ஞானத்தை)கற்றுக் கொடுக்கின்றான். அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.(அல்குர்ஆன் : 2:282)

♦ இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு ) அறிவித்தார்கள். வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இருவருடைய கப்ருகளைத் கடந்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சென்றபோது, “இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள் ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைக்காதவர், இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்“ எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரண்டு கப்ருகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், “இறைத்தூதர் அவர்களே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?“ என்று கேட்டதும், “இவ்விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படக்கூடும்“ என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.(நூல்: புகாரி 1378, மேலும் பார்க்க : புகாரி 3192) ​

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கூறினார்கள் நான் மிஃராஜ் சென்ற இரவில் கதீபுல் அஹ்மத் என்ற இடத்தில் நல்லடக்கமாகி இருக்கின்ற மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் கப்ருக்கருகே சென்றேன் அப்போது அவர்கள் தமது கப்ருக்குள்ளே தொழுது கொண்டிருப்பதைப் பார்த்தேன். (நூல்: முஸ்லிம் : பாகம் 2 பக்கம் 268) ​

♦ அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள் (ஒரு முறை) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அபூ பக்ர், உமர், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகீயோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும், (நானும்) ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்” என்று கூறினார்கள்.​​ (நூல்: புகாரி :3675)
​குறிப்பு : நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பின்னால் (எதிர்காலத்தில்) நடக்க இருக்கும்
செய்தியினை அதாவது மேலே கூறப்பட்ட இரண்டு ஸஹாபா தோழர்களும் ஸஹீதாக்கப்படுவாருகள் என்பதை முன்கூட்டியே அறிவித்து விட்டார்கள்.​

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அன்னவர்கள் கூறினார்கள்:"மண்ணறையின் வேதனைக் குரலை நான் என் செவிகளால் கேட்பதே போன்று நீங்களும் கேட்பீர்களாயின், இனிமேல் எந்த ஜனாசாவையும் நல்லடக்கம் செய்யாதிருந்து விடுவீர்களோ என நான் அஞ்சுகிறேன். அத்தகைய அச்சம் எனக்கு இல்லையாயின் உங்களுக்கும் புதைகுழிகளில் இருப்பவர்களின் அவலக்குரலைச் செவியேற்க வைக்குமாறு பிரார்த்தனை செய்திருப்பேன் "என உத்தம நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் உரைத்தார்கள். அறிவிப்பவர் ஹழ்ரத் ஸைத் பின் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு, (நூல் முஸ்லிம், மிஷ்காத் - 25)

♦ ஒரு சமயம் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் எங்களுக்கு அறிவுரை பகர்ந்து கொண்டிருக்கும் போது சிருஷ்டிகளின் உற்பத்தியிலிருந்து சுவர்க்கவாதிகள் சுவர்க்கத்திலும், நரகவாதிகள் நரகத்திலும் நுழைவது வரையிலான சகல விடயங்களையும் கூறிக்காட்டினர்கள். அவற்றைப் பாடமிட்டவர்கள் பாடமிட்டுக் கொண்டனர். ஏனையோர் மறந்துவிட்டனர். அறிவிப்பவர் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு, (நூல் புகாரி, மிஷ்காத் - 506 )

♦ தொழுகைக்கு இகாமத்து சொல்லப்பட்டது அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் முகத்தைக்கொண்டு எங்களில் பால் முன்னோக்கி உங்களின் சப்புகளை நேராக்கிக்கொள்ளுங்கள். மேலும் ஒருவருக்கொருவர் சேர்ந்து நின்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக நான் எனது முதுகுக்குக் பின்னால் இருந்தும் உங்களைப் பார்க்கிறேன் என்று கூறினார்கள். அறிவிப்பவர் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு (நூல் புகாரி 719)

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒரு கோட்டையின் மீதிருந்து நோட்டமிட்டார்கள். பிறகு, 'நான் பார்ப்பதைநீங்கள் பார்க்கிறீர்களா? நான் உங்கள்வீடுகள் நெடுகிலும் (வருங்காலத்தில்)குழப்பங்கள் விளையக் கூடிய இடங்களைமழைத்துளிகள் விழும் இடங்களைப் (பார்ப்பதைப்) போன்று பார்க்கிறேன்!" என்றுகூறினார்கள்.அறிவிப்பவர் உஸாமா ரலியல்லாஹு அன்ஹு, (நூல் புகாரி 1361)

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (ஒருமுறை) எங்களிடையே மிம்பரில் எழுந்து நின்று, படைப்பின் ஆரம்பத்தைக் குறித்து எங்களுக்குச் செய்தி அறிவித்தார்கள். (எதுவரை என்றால் படைப்பின் தொடக்கம் முதல் மறுமை வாழ்வு வரை) சொர்க்கவாசிகள் (சொர்க்கத்தில்) தாம் தங்குமிடங்களில் புகும் வரையும் நரகவாசிகள் (நரகத்தில்) தாம் தங்குமிடங்களில் புகும் வரையும் நரகவாசிகள் (நரகத்தில்) தாம் தங்குமிடங்களில் புகும் வரையும் அறிவித்தார்கள். அதை நினைவில் வைத்தவர் நினைவில் வைத்துக் கொண்டார். அதை மறந்தவர் மறந்துவிட்டார். அறிவிப்பவர் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு, (நூல் : புகாரி 3192)

♦ அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் இருந்தோம். அப்போது, ஏதோ விழுந்த சப்தத்தை அவர்கள் கேட்டார்கள். (நாங்களும் கேட்டோம்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”இது என்ன (சப்தம்) என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நாங்கள், ”அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னோம். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ”இது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நரகத்திற்குள் தூக்கியெறியப்பட்ட ஒரு கல்லாகும். அது இந்த நேரம்வரை நரகத்திற்குள் சென்று இப்போதுதான் அதன் ஆழத்தை எட்டியது” என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், ”அது கீழே விழுந்துவிட்டது. அது விழுந்த சப்தத்தைத்தான் (இப்போது) நீங்கள் செவியுற்றீர்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. (நூல் முஸ்லிம் 5466)

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒரு கோட்டையின் மீதிருந்து நோட்டமிட்டார்கள்.பிறகு, 'நான் பார்ப்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் உங்கள் வீடுகள் நெடுகிலும் (வருங்காலத்தில்) குழப்பங்கள் விளையக் கூடிய இடங்களை மழைத்துளிகள் விழும் இடங்களைப் (பார்ப்பதைப்) போன்று பார்க்கிறேன்!" என்று கூறினார்கள்.அறிவிப்பவர் ஹழ்ரத் உஸாமா ரலியல்லாஹு அன்ஹு,(நூல் புகாரி 1878)

♦ அல்லாஹ் உலகின் திரையை எனக்கு நீக்கினான். கியாம நாள் வரையிலும் நடக்கும் அனைத்தையும் எனது உள்ளங்கையில் பார்ப்பது போன்று பார்த்தேன், அறிந்தேன் (நூல்கள் தப்றானி-ஸர்கானி பாகம் 7 பக்கம் 204, கஸாயிசுல் குப்ரா பாகம் 2 பக்கம் 108, தலாயிலுன் நுபுவ்வத் பக்கம் 377.

♦ 'வானத்திலும் வானத்திற்கு மேலுள்ளவைகளும், பூமியிலும் பூமிக்கு கீழுள்ளவைகளும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு தெரியும்.' என அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றனர். (நூல்: மிஷ்காத் விரிவுரையான மிர்காத பாகம்1, பக்கம் 463)

💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

No comments:

Post a Comment