Popular Posts

Sunday 29 January 2017

நபிமார்கள், ஸூஹதாக்கள், வலிமார்களுக்கு இல்முல் கய்ப் எனும் மறைவான ஞானம் உண்டா? என்பது பற்றி இஸ்லாம் மார்க்கம் கூறும் தீர்வு என்ன

🌾 *"நபிமார்கள், ஸூஹதாக்கள், வலிமார்களுக்கு இல்முல் கய்ப் எனும் மறைவான ஞானம் உண்டா? என்பது பற்றி இஸ்லாம் மார்க்கம் கூறும் தீர்வு என்ன?"🌾*

♣ *இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு*

நபிமார்கள, ஷூஹதாக்கள், வலிமார்கள் மறைவானாவற்றை அறியமாட்டார்கள், அல்லாஹ் மாத்திரமே மறைவான விஷயங்களை அறிந்து கொள்வான் என்று குர்ஆன் வசனங்களை, ஹதீஸ்களை மேலோட்டமாக தர்ஜமா, தமிழ் மொழிபெயர்ப்பினை வைத்துக் கொண்டு சரியான முறையில் குர்ஆன் வசனங்களை இமாம்களின் கூற்றுக்களை ஆய்வு செய்யாமலும் சில நபிமொழிகளை மறைத்து இருட்டடிப்பு செய்து கிருக்கு பிடித்தவர்களாக வழிகேட்டில் சென்று கொண்டு இருக்கிறார்கள் வஹ்ஹாபிகளே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள், ஏனைய நபிமார்கள், ஸஹாபாக்கள், வலிமார்கள் மறைவான விடயங்களை அறிந்து கொள்வார்கள் என அல் குர்ஆன், அல் ஹதீஸ் தெட்டத் தெளிவாக கூறியுள்ளது. ஆனால் அவர்கள் மறைவான விஷயங்களை அறிந்து கொள்ள மாட்டார்கள் என்பதற்கு வழிகெட்ட வஹ்ஹாபிகள் காட்டும் போலி ஆதாரங்களுக்கு தக்க பதில்கள் பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளோம். எனவே குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்கள் பற்றிய விளப்பமில்லாத குழப்பத்தின் காரணத்தினால் நபிமார்கள், வலிமார்களுக்கு மறைவான ஞானத்தை அறியக்கூடிய அறிவாற்றல் இல்லை என்று தவராக பிரசாரம் செய்து வருகிறார்கள், அல்லாஹ் போதுமானவன்.

♣ *வழிகெட்ட வஹ்ஹாபிகளின் தவரான வாதங்களுக்கு தக்க பதில்கள்*

(நபியே!) நீர் கூறும்: “என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.” இன்னும் நீர் கூறும்: “குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” (அல்குர்ஆன் : 6:50)

இறைவன் சகலவற்றையும் அறிந்தவன் இறைவனுக்கு மறைவான தெரியாத அறியாத எந்த ஒன்றும்மில்லை மேலே உள்ள வசனத்தில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவானவற்றை நான் அறியமாட்டேன் என்று கூறியதன் விளக்கம் "நானாகவே அல்லாஹ்வின் எவ்வித உதவியின்றி சுயமாக அறிந்து கொள்ள மாட்டேன் மாறாக அல்லாஹ் அறிவித்து தந்தே அந்த மறைவான விடயத்தை அறிந்து கொள்வேன்" என்பதுதான். எனவே இந்த வசனத்தை தெளிவுபடுத்தித்தான் குர்ஆனில் மற்றுமொரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான். கீழே உள்ள வசனத்தில் அவன் பொருந்திக் கொண்டவர்கள் (அவன் பொருந்திக் கொண்ட ரஸூல்மார்களுக்கும்) மறைவான ஞானம் உண்டு அவர்களுக்கு மறைவானவற்றை வெளிப்படுத்துவதாக இறைவன் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.

♦ (அவன் தான்) மறைவானாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான், “தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர - எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக நடத்தாட்டுகிறான்.(அல்குர்ஆன் : 72: 26, 27)

♦ மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பவனாகவுமில்லை  ஏனினும் தன் தூதர்களில் தான் நாடியவர்களை இதனை அறிவிக்க தேர்ந்தெடுக்கிறான்
(அல்குர்ஆன் 3:179)

♦ அது அல்லாஹ்வுடைய பேரருளாகும். அவன் நாடியவர்களுக்கு அதனைக் கொடுக்கின்ரான். மேலும் அல்லாஹ் மகத்தான பேரருளுடையவன்
(அல்குர்ஆன் 62: 4)

நபிகள் நாயகம் ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மறைவான ஞானமாக எது எதுகளை பெற்றார்களோ, அதெல்லாம் அல்லாஹ்வால் கற்றுக்கொடுக்கப் பட்டதென்பதையும், அந்த ஞானத்தில் நின்றும் எந்த பகுதியானாலும் அறிவிக்கப்படாமல் இல்லை என்பதையும் மேல் கானும் திரு குர்ஆன் வசனங்கள் வலியுறுத்துகிறது. அவர்கள் அறியாவற்றை அவன் கற்றுக் கொடுத்தான் என அல்லாஹ்வே கூறும் பொது, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு அவ்வாறான மறைவான ஞானம் இல்லை என்று கூறும் வஞ்சகம் நிறைந்த கல் நெஞ்சுடையோரைப் பற்றி கவலை படுகிரதா இல்லா விட்டால் அவர்களை வெறுப்பதா என்பது நமக்குள்ள கேள்விக்குறியாகும். இன்னும் அல்லாஹ் அதை அவனின் பெரும் பேரருள்களில் நின்றும் உள்ளதாக அறிவிக்கின்ரான். அவனின் பேரருளைப் பற்றி அறிவிக்கும் இந்த இறை வசனங்களை யாரால் மறுக்க முடியும்?

எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் பொருந்திக் கொண்ட தூதருக்கு வெளிப்படுத்துவேன் என்று குர்ஆனில் இறைவன் கூறுகின்றான் ஆனால் இந்த வழிகெட்ட வஹ்ஹாபிகள் மேலே கூறப்பட்ட குர்ஆன் வசனத்தினை மறைத்து விட்டார்கள். அந்த அடிப்படையில் மறைவானவைகளை ரஸூல்மார்களில் தான் பொருந்திக் கொண்டவர்களுக்கு வெளிப்படுத்துகிறான். மறைவானவற்றை அறியும் ஆற்றலை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் ஏனைய நபிமார்கள், வலிமார்களுக்கும் அல்லாஹ் அதிகமாகவே வழங்கியுள்ளான் என்பதற்கு குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இதற்குத் தெளிவான ஆதாரங்கள் நிறைந்து காணப்படுகிறது.

இறை வசனங்களை சரியாக புரிய தேடினாள், இல்முல் கய்ப் என்பது அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு கீழே உள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அவனின் அந்த ஞானத்தை அவனின் அடியார்களில் ஒருவருக்கும் வழங்க மாட்டான் என்றோ அவனின் அந்த ஞான பொக்கிசத்தின் கதவுகள் ஒருவருக்கும் திறக்கப் பட மாட்டும் என்றோ கூறப்பட்டிருக்கிரதா? யாராலும் ஒருவன் அவனின் ஞானத்தை இன்னுமொருவருக்கு அவனுக்கு கொடுக்க முடியாதென கூரினால் அவர் அல்லாஹ்வுக்கு இயலாமை எனும் முஸ்தஹிலான ஸிபத்தெனும் வர்ணிப்பை சூட்டினதற்க்காக அவர் இறை மறுப்பவராக ஆகிவிடுகிரான். இல்முல் கய்பை பற்றி தன் சொந்த கருத்துகள் கூறி வழி தவறி விடாமல் இருப்பதற்க்கு இவ்விசயத்தில் மிக முக்கியமான கவணம் செலுத்த வேண்டுமென்பதை வற்புறுத்துகின்ரோம். எனவே, யாராகிலும் ஒருவர், குர்ஆனில் சிலதை ஒப்புக்கொண்டு மற்றும் சிலதை மறுத்து, அல்லாஹ்வின் அருளை நிராகரிப்பார்களேயானால், அல்லது சந்தேகிப்பார்களேயானால் அவன் முஸ்லிம் என்ற பட்டியலிருந்து அகன்று விடுகிரான். ஏனெனில், அல்லாஹ்வின் கட்டளைகளை மனப்பூர்வமாகவும் நிபந்தனைகளுமின்றி முற்றாக அடிபனிவதே ஒரு முஸ்லிம் மீது கடமையாகும்.

♣ *நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மறைவான ஞானம்*

(மேலும்),,, அல்லாஹ் இவ்வேதத்தையும் ஞானத்தையும் உம்மீது இறக்கி வைத்தான் இன்னும் நீ அறியாதிருந்தவற்றையும் உமக்கு கற்றுக் கொடுத்தான். மேலும் உன்மீது அல்லாஹ்வின் பேரருள் மகத்தானதாகவே இருக்கின்ரன.
(அல்குர்ஆன் 4: 113)

♦ இன்ஸானை (அல்லாஹ்) படைத்து அவனுக்கு பயானை கற்றுக் கொடுத்தான்' (அல்குர்ஆன் 55: 3,4) என்ற திரு இறைமறைவசனத்திற்கு, இன்ஸான் என்பது நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எனவும், 'பயானைக் கற்றுக் கொடுத்தான்' என்றால் நடந்தவை, நடப்பவற்றை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தான். அன்னவர் முன்னோர், பின்னோர் பற்றி அறிபவர்களாக இருந்தனர் எனவும் தப்ஸீர் கலை மேதைகள் கூறுகின்றனர்.(நூல்கள்: தப்ஸீர் மஆலிமுத் தன்ஸீல் பாகம் 7, பக்கம் 1, தப்ஸீர் காஸின் பாகம் 7 பக்கம் 2, தப்ஸீர் ஸாவி பாகம் 4 பக்கம் 129, தப்ஸீர் ஜமல் பாகம் 4 பக்கம் 253)

♦ 'நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ் உங்களுக்கு கற்றுக் கொடுத்தான். உங்கள் மீது அல்லாஹ்வின் வருசை மகாத்தானதாக ஆகிவிட்டது' என்ற திருமறை வசனத்தின் கீழ்,சிருஷ்டிகளின் முடிவான் ஞானங்களும், நடந்தவை, நடப்பவை அனைத்து ஞானங்களும் கற்றுக் கொடுத்தான் என்கிறது தப்ஸீர்அராயிஸுல் பயான் (பாகம் 1, பக்கம்159)

♦ 'ஒவ்வொரு வஸ்த்துவையும் தெளிவாக விவரிக்கும் வேதத்தை உமக்கு இறக்கி வைத்தோம்.' என்ற வசனத்திற்கு எல்லா அறிவுகளையும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிபவர்களாக இருந்தார்கள். என்ற விளக்கத்தை தப்ஸீர் அராயிசுல் பயான் பாகம் 1 பக்கம் 536 ல் காணலாம்.

♦ 'அவர்களுக்கு தெளிவான விளக்கத்தைக் கூறுவதற்காகவே அன்றி வேதத்தை உமக்கு அருளவில்லை.'(அல்-குர்ஆன் 16:64)'அவர் உங்களுக்கு வேதத்தையும், ஹிக்மத்தையும் கற்றுக் கொடுப்பார். நீங்கள் அறியாதவற்றையும் உங்களுக்கு கற்றுக் கொடுப்பார்.(அல்குர்ஆன் 2:15)

♦ அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (கல்வி ஞானத்தை)கற்றுக் கொடுக்கின்றான். அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.(அல்குர்ஆன் : 2:282)

♦ அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களைப் பற்றி எங்களிடம் கூறலானார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ருப் போர் நடக்கக்கூடிய மைதானத்தில்  நடந்து சென்று  எங்களிடம் பத்ருப் போரில் எதிரிகள் மாண்டு கிடக்கவிருக்கும் இடங்களைக் இன்ஷா அல்லாஹ்! நாளைய தினம் இன்னார் கொல்லப்படும் இடம் இது... இன்ஷா அல்லாஹ்! நாளைய தினம் இன்னார் கொல்லப்படும் இடம் இது... என்று தாங்கள் விரரால் சுட்டிக் காட்டினார்கள். சத்திய (மார்க்க)த்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அனுப்பியவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் பிசகாமல் சரியாக அவர்கள் மாண்டு கிடந்தனர்.(நூல் :முஸ்லிம் 5511, திர்மிதி)

♦ ஹஸ்ரத் ருபய்யிஃ பின்த் முஅவ்வித் (ரலியல்லாஹு அன்ஹா) கூறினார்கள்:​எனக்கு திருமணம் நடந்த பின்னர், நபிகள்
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் என்னிடம்  
வந்தார்கள். எனக்கருகில் இப்போது நீங்கள் (ஹதீஸின் இரண்டாவது அறிவிப்பாளர்) அமர்ந்து இருப்பது போல் (அத்தகைய தூரத்தில்) என் விரிப்பின் மீது அமர்ந்தார்கள். அப்போது சில சிறுமிகள் பத்ர் போரில் ஸஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி கஞ்சிராக்களை (தஃப்) அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே இறை தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இதை விட்டு விட்டு நீ முன்பு சொல்லி கொண்டிருந்ததை சொல்” என்றார்கள். (நூல்கள் : புகாரி 5147, 3726 இப்னு மாஜா, அபூதாவூத், திர்மிதி) ​

♦ அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள் (ஒரு முறை) நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அபூ பக்ர், உமர், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகீயோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும், (நானும்) ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்” என்று கூறினார்கள். (நூல் புகாரி 3675)

குறிப்பு: நபிகள் நாயகம் அவர்களின்  பின்னால் நடக்க இருக்கும் செய்தியினை அதாவது மேலே கூறப்பட்ட இரண்டு ஸஹாபா தோழர்களும் ஸஹீதாக்கப்படுவாருகள் என்பதை முன்கூட்டியே  அறிவித்து விட்டார்கள்.

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அன்னவர்கள் கூறினார்கள்:"மண்ணறையின் வேதனைக் குரலை நான் என் செவிகளால் கேட்பதே போன்று நீங்களும் கேட்பீர்களாயின், இனிமேல் எந்த ஜனாசாவையும் நல்லடக்கம் செய்யாதிருந்து விடுவீர்களோ என நான் அஞ்சுகிறேன். அத்தகைய அச்சம் எனக்கு இல்லையாயின் உங்களுக்கும் புதைகுழிகளில் இருப்பவர்களின் அவலக்குரலைச் செவியேற்க வைக்குமாறு பிரார்த்தனை செய்திருப்பேன் "என உத்தம நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் உரைத்தார்கள். அறிவிப்பவர் ஹழ்ரத் ஸைத் பின் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு, (நூல் முஸ்லிம், மிஷ்காத் - 25)

♦ ஒரு சமயம் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் எங்களுக்கு அறிவுரை பகர்ந்து கொண்டிருக்கும் போது சிருஷ்டிகளின் உற்பத்தியிலிருந்து சுவர்க்கவாதிகள் சுவர்க்கத்திலும், நரகவாதிகள் நரகத்திலும் நுழைவது வரையிலான சகல விடயங்களையும் கூறிக்காட்டினர்கள். அவற்றைப் பாடமிட்டவர்கள் பாடமிட்டுக் கொண்டனர். ஏனையோர் மறந்துவிட்டனர். அறிவிப்பவர் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு, (நூல் புகாரி, மிஷ்காத் - 506 )

♦ தொழுகைக்கு இகாமத்து சொல்லப்பட்டது அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தங்களின் முகத்தைக்கொண்டு எங்களில் பால் முன்னோக்கி உங்களின் சப்புகளை நேராக்கிக்கொள்ளுங்கள். மேலும் ஒருவருக்கொருவர் சேர்ந்து நின்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக நான் எனது முதுகுக்குக் பின்னால் இருந்தும் உங்களைப் பார்க்கிறேன் என்று கூறினார்கள். அறிவிப்பவர் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு (நூல் புகாரி 719)

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒரு கோட்டையின் மீதிருந்து நோட்டமிட்டார்கள். பிறகு, 'நான் பார்ப்பதைநீங்கள் பார்க்கிறீர்களா? நான் உங்கள்வீடுகள் நெடுகிலும் (வருங்காலத்தில்)குழப்பங்கள் விளையக் கூடிய இடங்களைமழைத்துளிகள் விழும் இடங்களைப் (பார்ப்பதைப்) போன்று பார்க்கிறேன்!" என்றுகூறினார்கள்.அறிவிப்பவர் உஸாமா ரலியல்லாஹு அன்ஹு, (நூல் புகாரி 1361)

♦ இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்.  வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இருவருடைய கப்ருகளைத் கடந்து நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சென்ற போது, “இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைக்காதவர்; இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்“ எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரண்டு கப்ருகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், “இறைத்தூதர் அவர்களே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?“ என்று கேட்டதும், “இவ்விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படக்கூடும்“ என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (நூல்புகாரி 1378)

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கூறினார்கள் நான் மிஃராஜ் சென்ற இரவில் கதீபுல் அஹ்மத் என்ற இடத்தில் நல்லடக்கமாகி இருக்கின்ற மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ருக்கருகே சென்றேன் அப்போது அவர்கள் தமது கப்ருக்குள்ளே தொழுது கொண்டிருப்பதைப் பார்த்தேன் (நூல் முஸ்லிம் : பாகம் 2 பக்கம் 268) 
     
♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (ஒருமுறை) எங்களிடையே மிம்பரில் எழுந்து நின்று, படைப்பின் ஆரம்பத்தைக் குறித்து எங்களுக்குச் செய்தி அறிவித்தார்கள். (எதுவரை என்றால் படைப்பின் தொடக்கம் முதல் மறுமை வாழ்வு வரை) சொர்க்கவாசிகள் (சொர்க்கத்தில்) தாம் தங்குமிடங்களில் புகும் வரையும் நரகவாசிகள் (நரகத்தில்) தாம் தங்குமிடங்களில் புகும் வரையும் நரகவாசிகள் (நரகத்தில்) தாம் தங்குமிடங்களில் புகும் வரையும் அறிவித்தார்கள். அதை நினைவில் வைத்தவர் நினைவில் வைத்துக் கொண்டார். அதை மறந்தவர் மறந்துவிட்டார். அறிவிப்பவர் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு, (நூல் : புகாரி 3192)

♦ அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் இருந்தோம். அப்போது, ஏதோ விழுந்த சப்தத்தை அவர்கள் கேட்டார்கள். (நாங்களும் கேட்டோம்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”இது என்ன (சப்தம்) என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நாங்கள், ”அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னோம். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ”இது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நரகத்திற்குள் தூக்கியெறியப்பட்ட ஒரு கல்லாகும். அது இந்த நேரம்வரை நரகத்திற்குள் சென்று இப்போதுதான் அதன் ஆழத்தை எட்டியது” என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், ”அது கீழே விழுந்துவிட்டது. அது விழுந்த சப்தத்தைத்தான் (இப்போது) நீங்கள் செவியுற்றீர்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. (நூல் முஸ்லிம் 5466)

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒரு கோட்டையின் மீதிருந்து நோட்டமிட்டார்கள்.பிறகு, 'நான் பார்ப்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் உங்கள் வீடுகள் நெடுகிலும் (வருங்காலத்தில்) குழப்பங்கள் விளையக் கூடிய இடங்களை மழைத்துளிகள் விழும் இடங்களைப் (பார்ப்பதைப்) போன்று பார்க்கிறேன்!" என்று கூறினார்கள்.அறிவிப்பவர் ஹழ்ரத் உஸாமா ரலியல்லாஹு அன்ஹு,(நூல் புகாரி 1878)

♦ அல்லாஹ் உலகின் திரையை எனக்கு நீக்கினான். கியாம நாள் வரையிலும் நடக்கும் அனைத்தையும் எனது உள்ளங்கையில் பார்ப்பது போன்று பார்த்தேன், அறிந்தேன் (நூல்கள் தப்றானி-ஸர்கானி பாகம் 7 பக்கம் 204, கஸாயிசுல் குப்ரா பாகம் 2 பக்கம் 108, தலாயிலுன் நுபுவ்வத் பக்கம் 377.

♦ 'வானத்திலும் வானத்திற்கு மேலுள்ளவைகளும், பூமியிலும் பூமிக்கு கீழுள்ளவைகளும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு தெரியும்.' என அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றனர். (நூல்: மிஷ்காத் விரிவுரையான மிர்காத பாகம்1, பக்கம் 463)

♣ *ஹிழ்ரு (அலைஹி வஸல்லம்) அவர்களின் மறைவான ஞானம்*

அல்குர்ஆனில் நபி மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்களுக்கும் ஹிழ்ரு (அலைஹி வஸல்லம்) அவர்களுக்கும் மத்தியில் நடைபெற்ற நீண்ட வரலாற்றுச் செய்தி பின்வருமாறு

“அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது; எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.
(அல்குர்ஆன் : 18:79)

“(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.(அல்குர்ஆன் : 18:80)

“இனி: (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டிணத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை; என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 18:82)

♣ *நபி யூசுஃப் (அலைஹி வஸல்லம்) அவர்களின் மறைவான ஞானம்*

நபி யூசுஃப் (அலைஹி வஸல்லம்) அவர்கள் நடக்க இருக்கும் விடயங்களை முன்கூட்டியே கூறுகின்றார்கள். அதாவது ஏழு வருடங்களுக்கு பின்னால் (பஞ்சத்தையுடை வருடங்கள்) ஏழு வரும என்றும் மேலும்14 வருடங்களுக்கு பிறகு ஓராண்டு வரும், அதில் மக்களுக்கு நல்ல மழை பொழியும் என்பதாக 14 வருடங்களுக்கு முன்னாலே சொல்லிட்டார்கள் அதனை குர்ஆனில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது

“நீங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு (நல்லபடியாக) விவசாயம் செய்வீர்கள்; பிறகு நீங்கள் அறுவடை செய்த - (விளைச்ச)லில், நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சிறிய அளவைத்தவிர, அதனை அதற்குரிய கதிர்களிலேயே விட்டு வையுங்கள்.(அல்குர்ஆன் : 12:47)

“பின்னும், அதற்கப்பால் கடினமான (பஞ்சத்தையுடை வருடங்கள்) ஏழு வரும்; நீங்கள் பஞ்சமான ஆண்டுகளுக்காக பத்திரப்படுத்தி முன்னமேயே வைத்திருப்பதில் சொற்ப (அளவை)த் தவிர மற்றதை அவை (அந்த பஞ்ச ஆண்டுகள்) தின்றுவிடும்.
(அல்குர்ஆன் : 12:48)

பின்னும், அதற்கப்பால் ஓராண்டு வரும், அதில் மக்களுக்கு நல்ல மழை பெய்யும்; அதில் (விளையும் கனிகளிலிருந்து) அவர்கள் பழரசங்கள் பிழிந்து (சுகமாக) இருப்பார்கள்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 12:49)

♣ *வலிமார்களின் மறைவான ஞானம்*

மரணத்தருவாயிலிருந்த அபூபக்கர் ஸித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: “ஆயிஷாவே! நான் விட்டு செல்கின்ற வராஃதத் சொத்துகளை நீயும் உனது இரு சகோதரர்களும் மற்றும் இரு சகோதரிகளும் இறைவன் குர்ஆனில் கூறியபடி பங்கு பிரித்துக் கொள்ளுங்கள். நான் கேட்டேன்: “எனது அருமைதந்தையார் அவர்களே! இரு சகோதரிகள் என்றீர்களே! அஸ்மா என்ற ஒரு சகோதரி தானே எனக்கு உள்ளார். இன்னொரு சகோதரி யார்? (ஆயிஷாவே!) எனது மனைவியார் பின்து காரிஜா கர்ப்பமாக உள்ளார். அவர் பெண் குழந்தையை ஈன்றெடுப்பார். (எனவே தான் உனக்கு இரு சகோதரிகள் என்றேன்). அவர்கள் கூறியது போன்று பின்து காரிஜா அவர்கள் உம்மு குல்தூம் என்ற பெண் குழந்தையை ஈன்றெடுத்தார்கள். அறிவிப்பவர் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா, (நூல் முவத்தா 1242, பைஹகீ  12267)

♦ திண்ணமாக உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். சாரியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை அப்படைக்கு தளபதியாக நியமித்தார்கள். (மதீனாவில்) சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ‘யா சாரியா! அல் ஜபல்!’ (சாரியாவே! மலையை கவனித்து சண்டையிடுங்கள்) என சப்தமிட்டார்கள்.பிறகு படையிலிருந்து ஒரு தூதர் வந்து சொன்னார். அமீருல் முஃமினீன் அவர்களே! எங்கள் எதிரிகளோடு நாங்கள் போர் புரிந்தபோது அவர்கள் எங்களை விரட்டியடித்தார்கள். அப்போது ‘யா சாரியா அல் ஜபல்’ என்று சத்தம் கேட்டது. பின்னர் மலையை எங்களுக்கு பின்புறமாக ஆக்கி கொண்டு போர் செய்தோம். அல்லாஹ் அவர்களை விரட்டி விட்டான். அறிவிப்பவர் ஹழ்ரத் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, (நூல் – பைஹகீ , தலாயிலுந் நுபுவ்வா 2655)

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY : Moulavi*
*S. L. Abdhur Rahman Ghawsi*

No comments:

Post a Comment