Popular Posts

Sunday 29 January 2017

இஸ்லாத்தின் பார்வையில் இறைநேசர்களின் தர்ஹாக்களில் சந்தனம் பூசுவது, சந்தன குச்சி (ஊதுபத்தி) பற்றவைப்பது மற்றும் சந்தனக்கூடு விழா கூடுமா

🌾 *"இஸ்லாத்தின் பார்வையில் இறைநேசர்களின் தர்ஹாக்களில் சந்தனம் பூசுவது, சந்தன குச்சி (ஊதுபத்தி) பற்றவைப்பது மற்றும் சந்தனக்கூடு விழா கூடுமா?"🌾*

♣ *வலிமார்களின் தர்ஹாக்களில் சந்தனம் பாவிப்பது, பூசுவது மார்க்கத்தில் கூடுமா?*

சந்தனம் என்பது ஒரு மனமான பொருள் மக்கள் ஒன்று கூடுகின்ற இடத்தில் மனமான பொருட்களை பாவிப்பது, பூசுவது சுன்னத்தான விடயம் எனவே சந்தனம் பூசுவது "கூடும்" என்பதெல்ல மாறாக "சுன்னத்"என்பதுதான் சரியான கருத்தாகும்.

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் இந்த உலகத்தில் எனக்கு பிடித்தது மூன்று விடயங்கள் உள்ளன. அவைகளில் ஒன்று நறுமணம் என்றார்கள்.(ஆதாரம் நசாயீ 3939,ஹாகிம் 2/174)

எனவே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிடித்த ஒன்றை நாம் செய்வது சுன்னத்தான காரியமாகும். அந்த அடிப்படையில் மக்கள் ஒன்று கூடும் இடத்தில் சந்தனம் பாவிப்பது, மனம் பூசுவது சுன்னத்தான காரியமாகும்.

♣ *வலிமார்களின் தர்ஹாக்களில் சந்தன குச்சி (ஊதுபத்தி) பற்றவைப்பது கூடுமா?*

அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய அவ்லியாக்களின் தர்ஹா ஷரீபில் சந்தனம் பூசுவது, சந்தன குச்சி (ஊதுபத்தி) பற்றவைப்பதை அதிகமாகவே காண்பீர்கள். அந்த அடிப்படையில் சந்தனம் பூசுவது, சந்தன குச்சி (ஊதுபத்தி) பற்றவைப்பது ஒரு மனமான பொருள் என்பதனாலாகும். மக்கள் ஒன்று கூடுகின்ற இடத்தில் மனமான பொருட்களை பாவிப்பது, பூசுவது பற்றவைப்பது விரும்பதக்க விடயமாகும். எனவே தர்ஹாக்களில் சந்தனம் பூசுவது ஊதுபத்தி பற்றவைப்பது "ஷிர்க் - ஹராம்" என்பதெல்ல இஸ்லாம் மார்க்கம் அனுமதித்த நல்ல காரியம் என்பதே சரியான கருத்தாகும். ஏனெனில் குர்ஆனில் கலிமா தய்யிபாவிற்கு உதாரணமாக மனம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்று என்று இறைவன் கூறியுள்ளார் அப்படிப்பட்ட மனம் கமலும் சந்தனம் மரத்தை அரைத்து நறுமனமாக பூசப்படுவதும் அல்லது ஊதுபத்தியாக பற்றவைப்பதும் நமது சமுதாயத்தில் குறிப்பாக அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய அவ்லியாக்களின் தர்ஹாக்களில் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட தத்துவங்களை வழிகெட்ட வஹ்ஹாபிகள் புரிந்து கொள்ளாமல் சந்தனம் பூசுவது ஊதுபத்தி பற்றவைப்பது ஷிர்க் என்றும் ஹறாம் என்றும் கூச்சலிடுவது குர்ஆன், ஹதீஸ்களின் சரியான அறிவு இல்லாததே காரணம் ஆகும்.

♦ நபியே! கலிமா தய்யிபாவிற்கு அல்லாஹ் எவ்வாறு நல்வாக்கியத்திற்கு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மனம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும். (அல்குர்ஆன் : 14:24)

​​♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் இந்த உலகத்தில் எனக்கு பிடித்தது மூன்று விடயங்கள் உள்ளன. அவைகளில் ஒன்று நறுமணம் என்றார்கள். (நூல் : நஸாயீ 3939, ஹாகிம் 2/174)

​​எனவே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிடித்த ஒன்றை நாம் செய்வது சுன்னத்தான காரியமாகும். அந்த அடிப்படையில் மக்கள் ஒன்று கூடும் இடத்தில் மனம் பூசுவது அதோடு சம்மந்தப்பட்ட மனமான பொருள்களை பாவிப்பது சுன்னத்தான காரியமாகும். இன்று வலிமார்கள் அடங்கியுள்ள புனிதமான இடங்களில் குறிப்பாக வெள்ளிக்கிழமையன்று சாம்பிராணி போடும் காரணம் அன்றைய தினத்தில் மக்கள் அதிகமானவர்கள் ஒன்று கூடுவார்கள், திக்ர் மஜ்லிஸ் செய்வார்கள். அனைவரும் மனமாக இருக்க வேண்டும் என்பதற்காகதான். ஆகவே இஸ்லாத்தில் சந்தனம் பூசுவது, சந்தன குச்சி (ஊதுபத்தி) பற்றவைப்பது, சாம்பிராணி புகை பிடிப்பது இவைகள் அனைத்தும் மார்க்கத்தில் கூடும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனால் கூடாது என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது.

ஆகவே திருக்குர்ஆனையும், நபீமொழிகளையும் தூய மனதுடன் ஆழமாக ஆராய்ந்தால் வழிகெட்ட வஹ்ஹாபிகள் அனாச்சாரங்கள் என்று கூறுகின்ற எல்லாமே நல்ல விடயங்கள் என்பதும், அவற்றுக்கு ஆதாரங்கள் உண்டு என்பதும் தெளிவாகும். அவ்வாதாரங்களை இந்த இடத்தில் விபரமாக மேலே நான் எழுதியுள்ளேன். ஆயினும் ஒரேயொரு திருக்குர்ஆன் வசனத்தை மட்டும் இங்கு மறுபடியும் எழுதுகிறேன். இவ்வசனம் ஒன்றே வஹ்ஹாபிகளின் வாயை அடைப்பதற்குப் போதுமென்று நம்புகிறேன். 'எவன் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகிறானோ அது அவனுள்ளத்தின் “தக்வா” இறையச்சமாகும்' (திருக்குர்ஆன்) எந்தவொரு படைப்பு அல்லாஹ்வை நினைவூட்டுகிறதோ அது அல்லாஹ்வின் சின்னம் எனப்படும். இது “அவாமுன்னாஸ்” என்னும் சாமானிய மனிதர்களுக்குப் பொருத்தமான கருத்து. ஆனால் இறைஞானிகளிடம் படைப்பு எதுவாயினும் அது அல்லாஹ்வை நினைவுபடுத்தும் சின்னமேயாகும்.

♣ *சந்தனக்கூடு விழா கூடுமா?*

சந்தனக்கூடு விழா என்பது ஆங்காங்கே அடங்கி இருக்கும் ஷூஹதாக்கள் / வலிமார்களின் தியாகத்தை நினைவு படுத்தும் விதமாக ஆரம்பிக்கப்பட்டும் நல்ல விடயமாகும். சந்தனக்கூடு என்பது அந்த இடத்தில் கந்தூரி விழா வைபவம் நடைபெருகின்றது என்பதை அடையாளப்படுத்துகின்ற ஒரு அடையாள சின்னமாகும். மேலும் அடையாள சின்னங்களுக்காக செலவழிப்பது மார்க்கத்தில் கூடுமான நல்ல காரியமாகும். அது வீண்விரையம் அல்ல. உதாரணமாக நமது வீட்டில் திருமணம் (நிகாஹ்) விழா நடைபெருகின்றது என்றால் அதற்காக நாம் வீட்டை அலகரிப்பது, திருமண அழைப்பிதல், அலங்கார விடயங்கள் இதுபோன்ற செலவுகலை செய்வது வீண்விரையம் அல்ல. காரணம் நமது வீட்டில் திருமண விழா நடைபெற உள்ளது என்று அடையாளப்படுத்தும் அடையாள சின்னங்களாகும். இது போன்று நிரைய விடயங்களை நமது நடைமுறைகளிலிருந்து பார்க்கலாம். அந்த அடிப்படையில் சந்தனக்கூடு விழா எடுப்பது அவ்விடத்தில் கந்தூரி வைபவம் நடைபெருகின்றது என்று அடையாளப்படுத்தும் காரியம் மார்க்கத்தில் கூடும் ஆனால் மற்ற வீண்விரையங்கள் (மேலதாலம், ஆட்டம் பாட்டம் டான்ஸ்) இதுவெல்லாம் கூடாது. எனவே மார்க்கத்திற்க்கு முறனான செயல்கள்  கூடாது அப்படிதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில இடங்களில் சந்தனக்கூடு விழா அனைத்து சமுதாயத்தினரும் சேர்ந்து சமூக நல்லிணக்க விழாவாக நடந்தப்படுகிறது. இதில் ஷரியத்திருக்கு மாற்றமான ஹராமான  விஷயம் ஏதும் இல்லை. அதனால் கூடும்.

http://www.mailofislam.com/tm_article_-_sandanam_poosuvathu_sandana_koodu_vila_kooduma.html

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

No comments:

Post a Comment