Popular Posts

Sunday 1 January 2017

விலாயத்தின் அரசர், குவலயம் போற்றும் குருநாதர், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கராமத் 03

#குத்பு_நாயகத்தின்_கராமத்_தொடர்_03

¶"*விலாயத்தின் அரசர், குவலயம் போற்றும் குருநாதர், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கராமத் *"¶

♦ அஷ்ஷெய்கு அபூ அம்று உதுமான் அஸ்ஸரீபின் அஷ்ஷெய்கு அபூ முஹம்மது,அப்துல் ஹக் அல் ஹரிமி ஆகிய இருவரும் பின்வரும் விடயத்தைக் கூறுகின்றனர்.நாங்கள் ஷெய்கு முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் திருச்சபையில், ஹிஜ்ரி 555, ஸபா - 3 ஞாயிறு அன்று இருந்தோம். ஷைய்கவர்கள் எழுந்து சென்று அவர்களின் மிதியடியிலிருந்து கொண்டு வுழுச் செய்தார்கள். பின் இரண்டு ரக்அத் தொழுதார்கள். தொழுது முடித்து ஸலாம் கூறியபின் பயங்கரமாக சப்தமிட்டார்கள். பின் மிதியடிகளில் ஒன்றை எடுத்து ஆகாயத்தில் வீசினார்கள். எமது பார்வை விட்டும் அது பறந்து சென்றது. பின் மீண்டும் கூச்சலிட்டார்கள். மற்றைய மிதியடியை எடுத்து எறிந்தார்கள். அதுவும் எமது பார்வையை விட்டும் மறைந்தது. அதன் பின் இருக்கையில் வந்து அமர்ந்தார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்பதற்கு யாருக்கும் துணிவு இருக்கவில்லை.

♦ இது நடந்து இருபத்து மூன்று நாட்களுக்கு பின் அஜமி பிரதேசத்திலிருந்து ஒரு கூட்டம் வந்தது. எங்களிடம் ஷைய்கவர்களுக்கான நேர்ச்சைப் பொருட்கள் இருக்கின்றன என்று அவ்வர்த்தக கூட்டம் கூறியதும்,ஷைய்கவர்களிடம் இது பற்றி அனுமதி கேட்டோம். அனுமதி வழங்கினார்கள். ஹரீர் பட்டும்,பட்டுப் புடைவைகள், தங்கம் அந்த நாள் ஷெய்கவர்கள் வீசிய மிதியடி உட்பட இவற்றை எம்மிடம் கையளித்தனர். இந்த மிதியடி உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்று அவர்களிடம் வினவினோம். அவர்கள் தங்கள் கதையை விபரித்தனர்.ஸபர் மூன்றாம் நாள் நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தோம். அறபு நாட்டு முன்னணிக் கொள்ளைக் கூட்டம் திடீரென எம்மைத் தாக்கி எமது பொருட்களை சூறையாடியும்,எங்களில் சிலரை கொன்றும் வெறியாட்டம் ஆடின. பின் ஒரு ஓடையருகே உட்கார்ந்து கொண்டு சூறையாடி எமது பொருட்களை பங்கீடு செய்து கொண்டிருந்தனர். நாங்கள் ஓடையின் மறு கரையில் ஒதுங்கி நின்றோம்.

♦ இச்சந்தர்ப்பத்தில் ஷைய்கவர்களை நாம் நினைத்துக் கொண்டு இதில் நாம் பாதுகாக்கப்பட்டால் அவர்களுக்கு நமது உடமைகளில் சிலதை நேர்ந்து கொள்வோம் என்று கூறினோம். இப்படி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பாரிய இரு சப்தத்தைக் கேட்டோம். இச்சத்தம் ஓடையை நிறைத்து நின்றது. கொள்ளையர்கள் பதற்றப்பட்டவர்களாக நின்றதை நாங்கள் கண்டோம். மற்றுமொரு அறபுக் கொள்ளையர் கூட்டம் வந்துவிட்டதோ என்று நாம் அஞ்சினோம். அப்போது கொள்ளையர்களில் சிலர் எம்மிடம் வந்து, உங்கள் உடமைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்! எங்களுக்கு நேர்ந்த கதியை வந்து பாருங்கள் என்றனர். பின், எங்களை அழைத்துச் சென்று அவர்களின் இரு தலைவர்களையும் காட்டினர். அவ்விருவரும் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் நனைந்த மிதியடிகள் இரண்டு காணப்பட்டன. பின் எங்களின் அனைத்து சாமான்களையும் திருப்பித் தந்துவிட்டு, இது ஒரு பாரதூரமான விடயம் என்று கூறிவிட்டு நகர்ந்தனர். (நூல் : பஹ்ஜத்துல் அஸ்றார், பக்கம் - 132)

http://www.mailofislam.com/tm_article_-_kuthbu_nayagam_karamath.html

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

No comments:

Post a Comment