Popular Posts

Wednesday 4 January 2017

விலாயத்தின் அரசர், குவலயம் போற்றும் குருநாதர், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கராமத07

#குத்பு_நாயகத்தின்_கராமத்_தொடர்_07

¶"*விலாயத்தின் அரசர், குவலயம் போற்றும் குருநாதர், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கராமத் *"¶

♦ அஷ்ஷெய்கு அல் இம்றான் அல் கீமாதி, அஷ்ஷெய்கு பஸ்ஸார் ஆகிய இருவரும் பக்தாதில் வைத்து ஹிஜ்ரி  571இல் பின்வரும் விடயத்தைக் கூறியதாக அபுல் ஹஸன் என்பவர் உரைக்கின்றார்.தங்களுக்கு ‘முஹ்யத்தீன்’ என்று புனைப் பெயர் வரக் காரணம் என்ன? என்று கேட்கப்பட்டதற்கு.. ஹிஜ்ரி 511இல் வெள்ளிக்கிழமையன்று எனது சில துறவு நிலையிலிருந்து மீண்டு, நான்வெறுங் காலுடன் பக்தாதுக்கு வந்தேன். நிறம் மாறிய, மெலிந்த ஒரு நோயாளி அருகே நான் சென்றேன். அவர் அப்துல் காதிரே! என்று விளித்து எனக்குச் ஸலாம் கூறினார். நானும் அவருக்கு பதில் கூறினேன். என்னை அருகில் வருமாறு அழைத்தார். நெருங்கினேன். என்னை இருப்பாட்டும் என்றார். இருப்பாட்டினேன். உடனே அவரின் தேகம் வளர்ந்தது. கோலமும் பொலிவுற்றது. நிறமும் தெளிந்தது. நான் சற்று அஞ்சினேன்.

♦ அப்போது அவர் என்னைத் தெரியுமா? என்று கேட்டார். தெரியாது என்றேன். அதற்கு அவர் நான் தான் ‘தீன்’ சன்மார்க்கம்! நீர் பார்த்தது போன்று பங்கறையாக இருந்தேன். உம்மால் அல்லாஹ் என்னைச் உயிராக்கினான்.நீர் ‘முஹ்யத்தீன்’ மார்க்கத்தை உயிர்ப்பித்தவர். என்றார். நான் அவரை விட்டுப் பிரிந்து ஜாமிஆ மஸ்ஜித்துக்குச் சென்றேன். ஒருவர் என்னை சந்தித்தார். ஒரு செருப்பை எனக்கு முன் வைத்தார் பின் யா செய்யிதி! நாயகமே! முஹ்யத்தீன் என்றார். தொழுது முடிந்த பின்,மக்கள் திரண்டு என்னிடம் வந்து,எனது இரு கரத்தையும் முத்தமிட்டனர். பின் யா முஹ்யத்தீன் என்று கோஷமிட்டனர். இது நாளிலிருந்து இப்பெயரால் அழைக்கப்படுகின்றேன் என்று  கௌதுல் அஃழமவர்கள் கூறினார்கள் (நூல் :பஹ்ஜத்துல் அஸ்ரார் பக்கம் - 109)

http://www.mailofislam.com/tm_article_-_kuthbu_nayagam_karamath.html

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

No comments:

Post a Comment