Popular Posts

Sunday 29 January 2017

பெரியார்கள், ஷைகுமார்களின் கை, கால்களை, வலிமார்களின் கப்ருகளை குணிந்து முத்தமிடும் போது ஸஜதாவின் அமைப்பு தோற்றம் வெளிப்பட்டால் அது கூடுமா

🌾 *"பெரியார்கள், ஷைகுமார்களின் கை, கால்களை, வலிமார்களின் கப்ருகளை குணிந்து முத்தமிடும் போது ஸஜதாவின் அமைப்பு (தோற்றம்) வெளிப்பட்டால் அது கூடுமா?"🌾*

(இபாதத்) என்ற நோக்கத்துடன் ஷைகுமார்கள், பெரியார்களின் கப்ருகளுக்கு ஸுஜூது செய்வது ஷிர்க், மேலும் (கண்ணியம்  - மரியாதை) என்ற நோக்கத்துடன் அவர்களுக்கு ஸுஜூது செய்வது ஹராம், மேலும் யதார்தத்தில் பரக்கத் அன்பின் வெளிப்பாட்டின் காரணத்தினால் சர்வ சாதாரணமாக குணிந்து வலிமார்களின் ஷைகுமார்களின் கை, கால்களை, கப்ருகளை குனிந்து முத்தமிடும் போது  ஸஜதாவின் (அமைப்பு -  தோற்றம்) வெளிப்பட்டால்-வந்தால் அது கூடும்.

இமாம் இப்னு ஹஜருல் ஹைதமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது 'ஜவ்ஹர் அல்முனல்லம்' என்ற கிதாபில் கூறுகிறார்கள். அதனை சுருக்கமாக இங்கே தொகுத்து கூறுகிறேன் "ருகூவைக் கொண்டே, ஸூஜூதைக் கொண்டே கப்ரையோ, அல்லது தரையோ முத்தமிடுவது ஹராம்" என்று இதை அடிப்படையாக வைத்து சிலர் ஷைகுமார்களின் கை, கால்களை, கப்ருகளை குணிந்து முத்தமிடும் போது ஸஜதாவின் (அமைப்பு - தோற்றம்) வந்தால் கூடாது ஹராம் என்று கூறுவார்கள் இது தவரான கருத்தாகும்.

இமாம் இப்னு ஹஜருல் ஹைதமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதன் விளக்கம் என்ன?  இவர்கள் கூறும் விளக்கம் என்ன? என்பதை நாம் அனைவரும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். குனிந்து முத்தமிடும் போது ஸஜதாவின் (அமைப்பு -  தோற்றம்) வந்தால்- வெளிப்பட்டால் அது கூடாது ஹராம் என்று கூறுபவர்கள் இமாம் இப்னு ஹஜருல் ஹைதமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறிய கருத்தினை (சரியாக - தெளிவாக) புரிந்து கொள்ளாததே இதன் விபரீதமாகும். ருகூவைக் கொண்டே ஸூஜூதைக் கொண்டே முத்தமிடுவதான் கூடாது, ஆனால் முத்தமிடும் போது ஸஜதாவின் ( அமைப்பு- தோற்றம்) வெளிப்பட்டால் அது கூடும். எனவே ருகூவைக் கொண்டே, ஸூஜூதைக் கொண்டே முத்தமிடுபதற்க்கும், முத்தமிடும் போது ஸஜதாவின் அமைப்பு வெளிப்படுவதும் இந்த இரண்டு அமைப்பும் வேறுபட்ட இரண்டு அம்சமாகும், இதில் எது முந்தியது எது பிந்தியது என்பதை நூதனமாக சிந்தித்து பாருங்கள். முதலாவது அமைப்பைத்தான் இமாம் இப்னு ஹஜருல் ஹைதமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹராம் என கூறியுள்ளார்கள்.

உதாரணமாக ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரை எந்த விதத்தில் முத்தமிட்டார்கள். ஸஹாபாக்கள், யூதர்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கால் பாதத்தை எந்த அமைப்பில் முத்தமிட்டார்கள் மேலும் மய்யதையும் கூட கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் முத்தமிட்டிருக்கிறார்கள். உஸ்மான் இப்னு மல்ஊன் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் இறந்த போது அவர்களின் (மய்யித்தை) முகத்தை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முத்தமிட்டார்கள் (நூல் திர்மிதி), கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகைவிட்டும் மறைந்த போது அவர்களின் புனித உடலை அபூ பக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முத்தமிட்டார்கள் (நூல் புகாரி) எனவே பெரியார்கள், ஷைகுமார்களின் (கை, கால்கள், மைய்யத், கப்ர்) போன்றவற்றை அவர்கள் மீது நாம் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாட்டின் காரணத்தினால் குணிந்து முத்தமிடல் என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விடயமாகும்.  எனவே இவ் அமைப்புகளை நாம் சிந்திக்கும் போது குனிந்து தான் முத்தமிட வேண்டும் குனியாமல் முத்தமிட முடியாது. அந்த அடிப்படையில் குனிந்து முத்தமிடும் போது ஸஜதாவின் அமைப்பு - தோற்றம் வந்தால் கூடும். பெரும்பாலும் அந்த அமைப்பு வராது. ஆனால் ருகூஃவைக் கொண்டே, ஸஜதாவைக் கொண்டே முத்தமிடுவது தான் கூடாது.

ஆகவே பெரியார்களின் பாதங்களை, கப்ருகளை குனிந்து உதட்டினால் முத்துவதை ஸுஜூதே தஃழீமாகக் கருதுவது மிகப் பெரும் பிழையாகும். காரணம் ஸஹாபாப் பெருமக்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாதங்களை முத்தியதாக பதிவாகியுள்ள நபிமொழிகளுக்கு விளக்கம் தரும் சிலர் கரத்தினால் தொட்டு முத்துதல் என்பதாகக் கருத்துக் கொள்கின்றனர். இது தவறானதாகும். நபிமொழிக் கிரந்தங்களில் 'பாபு தக்பீலில் யதி வர்ரிஜ்லி' கரம் பாதங்களை முத்தமிடுதல் என்ற தலைப்பு இடம் பெற்றுள்ளதாய் கரத்தினை முத்தும் விதமே பாதத்தை முத்தும் விதமாகும். பாதத்தை உதட்டால் முத்தமிடுவது ஸுஜூதே தஃழீம் என்றால் 'தக்பீல்' என்ற சொல் உதட்டால் முத்தமிடுவதற்கே அன்றி கையால் தொட்டு முத்துவதற்கு அல்ல. அதற்கெனும் 'இஸ்திலாம்' (கையால் தொட்டு முத்துதல்) என்ற பதம் உண்டு.பாதங்களை முத்துவதற்கும் ஸஜ்தாவிற்கும் என்ன தொடர்பு? பாதத்தை முத்தமிடல் என்பது தலையை அல்லது உதட்டை பாதத்தில் வைப்பதும், ஸஜ்தா என்பது நெற்றியை தரையில் வைப்பதும் ஆகும். இதில் சந்தேகம் கொள்வோர் அல்லாஹ்வின் நேசர்களுக்குப் புரியும் கண்ணியத்தினை மறுப்போராகும். ஆகையால் பெரியோர்களின் பாதங்களை குனிந்து முத்துவோரை ஸஜ்தா செய்வதாக தவறாக எண்ணம் கொள்ளாதீர்கள் என்று அஹ்மது ரிழா கான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் 'பதாவா ரிழ்விய்யா' (10:267) வில் கூறியுள்ளார்கள்.

♦ மிஷ்காத் நபிமொழிக் கிரந்தத்திற்கு விரிவுரை வழங்கிய அல்லாமா அஹ்மது ரிழா கான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெரியார்களின் கரங்களையும், பாதங்களையும் முத்துவது நபிமொழியாகும். பாதத்தினை கரத்தால் தொட்டு முத்தமிடலாம், உதட்டினாலும் முத்தமிடலாம். உதட்டால் முத்துவதே சிறந்ததாகும் என்று கூறியுள்ளார்கள். (மிர்காதுல் மனாஜீஹ் 03:364)

அந்த அடிப்படையில் ஷரீஅத், தரீகத், சூபித்துவத்தில் புகழ் பெற்ற மற்றும் சர்வதேச அளவில் ஏழு வருடங்கள் கிதாபுகளை மாத்திரம் மனனம் செய்த மௌலவிமார்களுக்கும் தற்பொழுது வழிகாட்டிகளாக இருக்கக் கூடிய மௌலானா ஷெய்க் நாஸிம் ஹக்கானி, ஷெய்க் ஹபீப் அலி அல் ஜிப்ரி, ஷெய்க் ஹபீப் உமர், ஷெய்க் அத்னான் கப்பானி, ஷெய்க் கலீல் அவ்ன் மௌலானா போன்ற உலக புகழ்பெற்ற மார்க்க அறிஞர்களில் பலர் இந்த அமைப்பில் அதாவது யதார்தத்தில் பரக்கத் அன்பின் வெளிப்பாட்டின் காரணத்தினால் சர்வ சாதாரணமாக குணிந்து முத்தமிடும் போது ருகூஃ, சுஜூது போன்ற அமைப்பு தோற்றம் வெளிப்படும் வகையில் முத்தமிட்டுள்ளார்கள்.

ஆனால் இமாம்களை, அவர்களின் கருத்துக்களை எவ்வாறு வழிகெட்ட வஹாபி ஷெய்த்தான்கள் கீழே போட்டு மிரிப்பார்களோ அவ்வாறு உலக புகழ்பெற்ற மார்க்க அறிஞர்கள், பெரியார்கள், ஷைகுமார்கள், அஹ்லுல் பைத்களை கீழே போட்டு மிரித்து அவர்கள் அனைவரும் அறிவீனர்கள் நான் மாத்திரம்தான் அறிவாளி என்ற பாணியில் விதண்டாவாதம் செய்துக்கொண்டு அஹ்லுல் பைத்துக்களும், ஷைகுமார்களும், ஸுன்னத் ஜமாஅத் உலமாக்களும் ஹராத்தை செய்வது போல் வழிகெட்ட வஹ்ஹாபிஸ கொள்கையை பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள் இப்படிப்பட்டவர்களிடம் இருந்து ஈமானை பாதுகாத்து கொள்ளுங்கள்.

ஆகவே யதார்தத்தில் பரக்கத் அன்பின் வெளிப்பாட்டின் காரணத்தினால் சர்வ சாதாரணமாக குணிந்து முத்தமிடும் போது ருகூஃ, சுஜூது போன்ற இபாதத்தின் அமைப்பு தோற்றம் வெளிப்படுவதும் - ருகூஃ, சுஜூது போன்ற இபாதத்தின் அமைப்பில் தோற்றத்திலே அந்த அமைப்பை செய்து கொண்டே முத்தமிடுவதும் வேறு, இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு இது புரியாமல் இப்லீஸ் ஆதம் அலைஹிஸ்ஸம் அவர்களுக்கு சுஜூது செய்ய மறுத்ததைப் போன்றே பீfல் பன்னி சிலர் பெரியார்களின் ஷெகுமார்களின் கை, கால்களை வலிமார்களின் கப்ருகளை குணிந்து முத்தமிடும் போது ருகூஃ, ஸஜதா போன்ற அமைப்பு தோற்றம் வெளிப்படுவது ஹராம் என்று குணிந்து முத்தமிடுவதை மறுக்கின்றார்கள்.

♦ பெரியோர்களின் பாதங்களை குனிந்து முத்துவோரை ஸஜ்தா செய்வதாக தவறாக எண்ணம் கொள்ளாதீர்கள் என்று அஹ்மது ரிழா கான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் 'பதாவா ரிழ்விய்யா' (10:267) வில் கூறியுள்ளார்கள். மேலும் மிஷ்காத் ஹதீஸ் கிரந்தத்திற்கு விரிவுரை வழங்கிய அல்லாமா அஹ்மது ரிழா கான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெரியார்களின் கரங்களையும், பாதங்களையும் முத்துவது நபிவழியாகும். பாதத்தினை கரத்தால் தொட்டு முத்தமிடலாம், உதட்டினாலும் முத்தமிடலாம். உதட்டால் முத்துவதே சிறந்ததாகும் என்று கூறியுள்ளார்கள். (மிர்காதுல் மனாஜீஹ் 03:364)

ஸுஜூது என்பது அல்லாஹ்வுக்கான வணக்கம் என்றால் நபி யூசுப் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் தகப்பனாரும், அவர்களின் சகோதரர்களும் நபி யூசுஃப் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மரியாதை நோக்கில் செய்த ஸுஜூது குணிந்து புரிந்ததாகும், மேலும் மலக்குமார்கள் (அமரர்கள்) ஆதம் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு செய்த ஸுஜூது தரையில் நெற்றியை வைத்ததாகும். ஆகவே மேற்கண்ட செய்தியிலிருந்து (கண்ணியம் - மரியாதை) நிமித்தம் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஜதா தஃழீம் கூடுமானதாக இருந்தது பிறகு அந்த செயல் தடுக்கப்பட்டன, பாதங்களை முத்துவது என்பது உதட்டை பாதத்தில் வைப்பதாகும். இதனை ஸுஜூதாகக் கருதுவது மேற்கூறிய பெரியார்களின் தீர்ப்பின் பிரகாரம் அறியாமையாகும். உதாரணமாக தரையில் தூங்கும் குழந்தையை ஒருவர் முத்தமிடுவதாக இருந்தால் குனிந்து தான் முத்தமிட வேண்டும் அந்த அடிப்படையில் குனிந்து முத்தமிடும் போது முத்தமிடுபவரை பார்த்து குழந்தைக்கு ஸஜதா செய்கிறார் என்று சொல்ல முடியுமா? ஆகவே ஸஜதாவின் அமைக்கு வரத்தேவையில்லை தாராளமாக குனிந்து முத்தமிடலாம்.

ஆகவே இப்படிப்பட்டவர்கள் இஸ்லாத்துக்கு முரணான வஹ்ஹாபிஸ கருத்துக்களைக் கூறி அப்பாவி பாமர பொது மக்களுக்கிடையில் குழப்பத்தையும் மனக் கசப்பையும் ஏற்படுத்தி வருகின்றார்கள். ஆயினும் இன்று அவ்வாறு கூச்சலிடுவோர் தமது வழிகேட்டை வேரூன்றச் செய்வதற்காக நாய்க்கு மலத்தைக் காட்டி அதை வசப்படுத்துவது போலும் பேய்க்கு சாம்பிராணி போட்டு அதை ஆட வைப்பது போலும் இளைஞர்களிடத்தில் நான் மாத்திரம்தான் அறிவாளி மற்றவர்கள் அறிவீனர்கள் என்ற பாணியிலும் தனக்கனம், பெருமை பிடித்த அறிவையும், விவாதம் செய்யும் திறனையும் காட்டித் தமக்கு ஆதரவைத் தேடி வசப்படுத்தி கைக்குள் வைத்துக்கொண்டிருப்பதால் அப்பாவி ஏழைகளும், நல்லவர்களும், சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில இளைஞர்களும் அவர்களின் வழிகேட்டுக்கு கூச்சலிட்டு ஆமாசாமி போட வேண்டியதாயுள்ளது.

அவர் பெரிய மேதை .. என்ன அறிவு ,, எப்படி வாதம் செய்கிறார், அவருடன் விவாதம் செய்ய யாருக்கு முடியும், அவரின் மனன ஆற்றல் மிக்க சக்தி வாய்ந்தது, எத்தனை பேர்களை இஸ்லாத்திற்கு அழைக்கிறார் அவரின் பேச்சால் எத்தனை பேர் இஸ்லாத்தை தழுவுகிறார்கள், என்று அவரின் வழிகெட்ட கொள்கைகள், அவரின் நச்சு கருத்துக்களை அறியாமல் வெளித்தோற்றத்தை பார்த்து விட்டு, அவர்களின் மீதுள்ள பற்றுக்காக சில அப்பாவி பாமர மக்கள், இளைஞர்கள் அவர்களை திறமையாக பேசுபவர்களாக இருந்தால் இந்த ஹதீஸ் உங்களுக்கு தான்.

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள் : ஒருவரைப் பற்றி 'அவரின் அறிவுதான் என்ன!!! ; அவரின் விவேகம் தான் என்ன!!! அவரின் வீரம் என்ன!! என்று (சிலாகித்துக்) கூறப்படும். ஆனால், அந்த மனிதரின் இதயத்தில் கடுகளவு கூட ஈமான் இருக்காது. அறிவிப்பவர்: ஹழ்ரத் ஹுதைஃபா ரலியல்லாஹு நூல்: ஸஹீஹுல் புகாரி 7086

♦ இவர்களை நீர் பார்த்தால், இவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும்; அன்றியும் இவர்கள் பேசினால், இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்துக்) கேட்பீர்; எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர்; சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர்; ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள்; இவர்கள்தாம் (உம்) பகைவர்கள்; ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக; அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான்; இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்?. அல்குர்ஆன் 63:4

ஆகவே அறிவு, விவாதம் செய்யும் திறமை, அவர்களின் மீதுள்ள பற்று ஒரு போதும் அசத்தியத்தை சத்தியமாக்கி விடாது இப்லீஸும் அறிவாளி உஸ்தாதுதான், பெருமையை அடித்தான் அல்லாஹ்வினால் சபிக்கப்பட்டு காபிராகிவிட்டான் அது போன்று தான் இவர்களின் நிலையும் உள்ளது அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் எனவே சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் வழிகெட்ட வஹ்ஹாபிஸ கொள்கைகளை போதிக்கும் இப்படிப்பட்ட ஓர் சில சக்கைகள், சருகுகள், கருப்பு ஆடுகளே! சுஜூதுக்கும் முத்தமிடுவதற்கும் வித்தியாசம் தெரியாம மடத்தனமா நச்சு கருத்துக்களை மக்களின் உள்ளத்தில் விதைக்க வேண்டாம், இதான் அது அதான் இது என்று வித்தியாசம் புரியாம உளர வேண்டாம் ஆகவே இப்படிப்பட்ட இரண்டு முகங்கள் கொண்ட மார்க்க வியாபாரிகளிடம் இருந்து இஸ்லாத்தையும் ஈமானையும், சுன்னத் வல் ஜமாஅத் அகீதா கொள்கையையும் நமது முஸ்லிம் சமுதாயத்தையும் பாதுகாக்க சத்திய கொள்கை அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் அகீதாவிலுள்ள ஒவ்வொரு முஸ்லிம்களும் குறிப்பாக இளைஞர்களும் முன் வரவேண்டும். இத்தகைய கருப்பு ஆடுகளை சமுதாயத்தில் இருந்து தூரமாக்குங்கள்.

http://www.mailofislam.com/tm_article_-_kai_kal_kabrugalai_kuninthu_muththamiduvathu_kooduma.html?r=20160709195950

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

No comments:

Post a Comment