Popular Posts

Monday 2 January 2017

விலாயத்தின் அரசர், குவலயம் போற்றும் குருநாதர், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கராமத05

#குத்பு_நாயகத்தின்_கராமத்_தொடர்_05

¶"*விலாயத்தின் அரசர், குவலயம் போற்றும் குருநாதர், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கராமத் *"¶

♦ பக்தாத்தில் ஒரு சமயம் கடும் பஞ்சம் ஏர்ப்பட்டப்போது அபுல் அப்பாஸ் என்ற ஒருவர் ஷெய்கு ஜீலானி  {ரஹ்மதுல்லாஹி அலைஹி} அன்னவர்களிடம் வந்து பசி பட்டினியிலிருந்து எங்களுக்கு நிரந்தர தீர்ப்பு ஏற்பட தாங்கள் அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும் எனக்கேட்டார் .அவ்வாறே ஷெய்குனா ஜீலானி அன்னவர்கள் துஆ செய்து சிறிது கோதுமையை தங்களின் பொற்கரத்தால் அள்ளி அவரிடம் கொடுத்து இதனை ஒரு பாத்திரத்திலிட்டு அதன் வாய் பகுதியை துணியால் கட்டிவிடுங்கள். அதன் நடுவே ஒரு ஓட்டைப்போட்டு வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு உணவு தேவைப் படும்போது அந்த ஓட்டைவழியாக எடுத்துக்கொள்ளுங்கள் துணியை கழற்றி விடாதீர்கள் எனக்கூறினார்கள்.அவரும் குடும்பத்தினரும் ஐந்து வருடங்கள் அந்த பாத்திரம் மூலம் கிடைக்கும் உணவை சாப்பிட்டனர். ஒருமுறை அவரது மனைவி அந்த துணியை அவிழ்த்துவிட்டார். அன்றிலிருந்து ஏழாம் நாள் தானியம் வருவது தடைபட்டு பாத்திரம் காலியாகி விட்டது. (நூல் நூல்:தாரிக் அல் பாக்தாத், நூருல் அப்சார்)

http://www.mailofislam.com/tm_article_-_kuthbu_nayagam_karamath.html

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

No comments:

Post a Comment