Popular Posts

Sunday 1 January 2017

விலாயத்தின் அரசர், குவலயம் போற்றும் குருநாதர், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கராமத் *"¶ 04

#குத்பு_நாயகத்தின்_கராமத்_தொடர்_04

¶"*விலாயத்தின் அரசர், குவலயம் போற்றும் குருநாதர், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கராமத் *"¶

♦ அஷ்ஷெய்கு அபுல் அப்பாஸ் கூறுகின்றார் எங்கள் குருநாதர் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களோடு பக்தாதிலுள்ள அவர்களின் மத்தரஸாவில் ஓர் இரவு தங்கியிருந்தோம். அப்போது கலீபா அல் முஸ்தன்ஜித் பில்லாஹ் அபுல் முழப்பர் யூஸுப் அங்கு வந்தார். கௌது நாயகமவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டு, உபதேசம் புரியுமாறு வேண்டினார். அத்தோடு பத்து பொதிகளையும் அவர்கள் முன் வைத்தார். இதனை பத்து அடிமைகள் சுமந்து வந்தனர்.இது எனக்குத் தேவையில்லை  என்று கூறிஅதனை ஏற்க மறுத்தனர்,கௌதுல் அஃழம் அவர்கள் கலீபா அதனை ஏற்குமாறு கெஞ்சினார்.மன்றாடினார். கௌதுல் அஃழம் அவர்கள் அதனை ஏற்கவில்லை.பின் அப்அபாதிகளில் ஒன்றை வலக் கையாலும், மற்றையதை இடது கையாலும் எடுத்து நசுக்கினார்கள்.அதிலிருந்து குருதி வடிந்தது.கலீபாவைப் பார்த்து, அபூ முழப்பர்! நீர் அல்லாஹ்வை அஞ்ச வேண்டாமா? மக்களின் குருதியை என்முன் கொண்டு வந்துள்ளீர்,என்றதும் கலீபா மூர்ச்சையானார்.

♦ அல்லாஹ் மீது ஆணையாக! றஸூலே கரீம்ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடனான தொடர்பு இல்லாதிருந்தால், இக்குருதியை அவர் மாளிகைவரை ஓடச் செய்திருப்பேன்.அஷ்ஷெய்கு அபுல் அப்பாஸ் மீண்டும் மீட்டுகின்றார். ஒரு தினம் கலீபா அபுல் முழப்பர் கௌதுல் அஃழம் அவர்களின் அவைக்கு வந்து, தங்களிடமிருந்து ஒரு கறாமத்தை நேரில் பார்க்க ஆசைப்படுகின்றேன். அதனால் என் மனம் சாந்தி அடையும் என்று கூறினார். நீர் விரும்பும் கறாமத் எது? என்று கௌதுல் அஃழம் அவர்கள் கேட்டார்கள்.மறைவான புறத்திலிருந்து அப்பிள் வருவதை விரும்புகின்றேன் என்றார்.அப்போது ஈராக்கில் அப்பிள் இல்லாத காலமாகும். கௌதுல் அஃழம் அவர்கள் ஆகாயத்தை நோக்கி கையை உயர்த்தினார்கள். இரு அப்பிள்கள் அவர்கள் கைக்குள் வந்தன. ஒன்றை கௌதுல் அஃழம் அவர்கள் வெட்டினார்கள். அது வெண்மையாகவும், கஸ்தூரி மனமும் கமழ்ந்தது. மற்றையதை கலீபா அவர்கள் வெட்டினார்கள்.அதற்குள் புழுக்கள் நிறைந்திருந்தன.இது என்ன ஆச்சரியம்! நீங்கள் வெட்டியது வெண்மையாகவும்,கஸ்தூரி கமழக் கூடியதாகவும் உள்ளது. நான் வெட்டியது இப்படி இருக்கின்றதே, என்றதும், அபூ முழப்பரே! அநியாயக்காரர்களின் கை பட்டதனால் உமது பழத்தில் புழுக்கள் நிறைந்துள்ளன என்று கௌதுல் அஃலம் அவர்கள் இடித்துச் சொன்னார்கள். (நூல் :பஹ்ஜத்துல் அஸ்றார், பக்கம் - 120,121)

http://www.mailofislam.com/tm_article_-_kuthbu_nayagam_karamath.html

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

No comments:

Post a Comment