Popular Posts

Wednesday 4 January 2017

விலாயத்தின் அரசர், குவலயம் போற்றும் குருநாதர், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கராமத் 06

#குத்பு_நாயகத்தின்_கராமத்_தொடர்_060

¶"*விலாயத்தின் அரசர், குவலயம் போற்றும் குருநாதர், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கராமத் *"¶

♦ ஒரு சமயம் அபூ ஹப்ஸ் உமரி ஹத்தாதி என்பவர் ஷெய்குனா ஜீலானி {ரஹ்மதுல்லாஹி அலைஹி} அன்னவர்களிடம் சென்று '' நான் ஹஜ் செல்கிறேன் காலம் குறைவாக உள்ளது என்னிடம் ஒட்டகமோ மெலிந்து கிழடாக உள்ளது வேகமாகவும் செல்ல முடியவில்லை. தாங்கள் துஆ செய்து தரும்படி வேண்டுகிறேன்'' என தனது ஒட்டகையை ஷெய்குனா அன்னவர்களின் அருகிலே நிறுத்தினார் .ஷெய்குனா அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்கள் துஆ செய்து அவ் ஒட்டகத்தை தம் பொற்கரத்தால் தடவி விட்டார்கள். நான் ஹஜ்ஜுக்கு செல்லும்போது அந்த ஒட்டகம் மற்ற ஒட்டகங்களைவிட வேகமாகவும் வலிமைமிக்கதாகவும் ஆகிவிட்டதை நான் அறிந்தேன் என அன்னவரே குறிப்பிட்டுள்ளார். (நூல்:கலாயிதுல் ஜவாஹிர்,தாரிக் அல்பக்தாத்)

http://www.mailofislam.com/tm_article_-_kuthbu_nayagam_karamath.html

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*0

No comments:

Post a Comment