Popular Posts

Thursday 17 March 2016

அல்லாஹ்வின் அருள் யாருக்கு உண்டு என்று நாம் அறிய மாட்டோம்!

அல்லாஹ்வின் அருள் யாருக்கு உண்டு என்று நாம் அறிய மாட்டோம்!
.
முஃமின்களை காபிராக்க நினைக்கும் முஃமின்களுக்கு படிப்பினை!
.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் காலத்தில் ஒருவர் இருந்தார். அவருடைய பெயர் அப்துல்லாஹ் என்பதாகும். ஹிமார் (கழுதை) என்று பட்டப் பெயரால் அவர் அழைக்கப்பட்டு வந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை அவர் சிரிக்க வைத்து விடுவார்.
.
மது குடித்ததற்காக அவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கசையடி கொடுத்தும் இருக்கிறார்கள்.
.
பின்னர், ஒரு நாள் அவர் மது குடித்தற்காகக் கொண்டு வரப்பட்டார். அவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கசையடி கொடுக்குமாறு கட்டளையிட்டு, அவர் கசையடி கொடுக்கப்பட்டார்.
.
அப்பொழுது, (அங்கிருந்த) மக்களில் ஒருவர் “நாயனே, அவருக்கு லஃனத்துச் செய். (உன் கிருபையை விட்டு அவரை விலக்கி வை) எவ்வளவு அதிகமாக அவர் கொண்டு வரப்பட்டிருக்கிறார்” என்று சாபமிட்டார்.
.
அப்பொழுது, “அவரை லஃனத்துச் செய்யாதீர்கள். (சாபமிடாதீர்கள்) அல்லாஹ்வின் மீது சத்தியமாகக் கூறுகிறேன். அல்லாஹ்வையும் அவனுடைய ரஸுலையும் அவர் நேசிப்பவராகத்தான் அறிகிறேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்.
.
ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு - புகாரி 6780

Mail of Islam
Presentby ;;SSF krishnajippattinam branch, pudukkottai district, Tamil Nadu.

No comments:

Post a Comment