Popular Posts

Monday 8 August 2016

TNTJ மூத்த ஹதீஸ் நிராகரிப்பாளர் பி.ஜெபணத்தை வைத்து பந்தயம் கட்டுவது சூது.

முதல் முறையாக இஸ்லாமிய மார்க்கத்தில் சூத்தாட்டத்தை அறிமுகம் படுத்தி புதிய வரலாறை படைத்துள்ளார் - TNTJ மூத்த ஹதீஸ் நிராகரிப்பாளர் பி.ஜெ

   பணத்தை வைத்து பந்தயம் கட்டுவது சூது. இது இஸ்லாமில் ஹராம். நல்ல விஷயமாக இருந்தாலும்கூட ஹலாலான வழியிலேயே அதை செய்ய
வேண்டும்.

உதாரணமாக, ஒரு முஸ்லிம் குடும்பம் கஷ்டப்படுகிறது அவர்களின் கஷ்டத்தை தீர்த்து வைக்கவே நான் சூதாடினேன் என்பது போன்ற காரணங்களை யாராவது சொன்னால் மார்க்க அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியுமா?

எடுத்ததற்கெல்லாம் ஆதாரம் கேட்கும் ததஜ சகோதரர்களே!

இப்படி பணத்தை பந்தயமாகக் கட்டி இஸ்லாமை பரப்ப சஹீஹான ஹதீஸ்களில் ஆதாரம் காட்ட முடியுமா?

இப்படி தனக்கு தானே சூனிய செய்ய சொல்ல சஹீஹான ஹதீஸ்களில் ஆதாரம் காட்ட முடியுமா?

பெரும் பாவங்களில் ஒன்று தான் சூனியம் என்று அறிவிப்பு இருக்க... மற்றவரை சூனியத்தை செய்ய சொல்ல சஹீஹான ஹதீஸ்களில் ஆதாரம் காட்ட முடியுமா?

சூனியக்காரன் பேச்சை கேட்டு ஷைத்தானுடைய வழிமுறையை ஏற்று கொண்டு ஒரு பிணத்தின் சாம்பல் மீது சிறுநீர் கழிக்க சஹீஹான ஹதீஸ்களில் ஆதாரம் காட்ட முடியுமா?

அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் என்கிற  நம்பிக்கைக்கு விஷய பரிச்சை செய்ய சஹீஹான ஹதீஸ்களில் ஆதாரம் காட்ட முடியுமா?

இவ்வாறு எந்த ஒரு  குரான் சுன்னாஹ் ஆதாரம் இன்றி காரியத்தை செய்வதற்க்கு பி ஜெ வெற்றி பெற துஆ செய்யுங்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர். நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா ???

சூனியம் என்பது உண்டு அதுவும் அல்லாஹ்வின் நாட்டத்தின் படியே நடக்கும் என்பதே சஹாபாக்கள், தாபியீன்கள் , புஹாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ , இப்னு மாஜா, நஸாயீ போன்ற ஹதீஸ் கலை வல்லுனர்கள், மற்றும் உலகில் வாழும் 99% மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்தும், முடிவுமாகும்.

பி.ஜே அவர்களின் சூனியம் என ஒன்று இல்லை என்று ஒட்டுமொத்தமாக மறுக்கும் போக்கு மிக மிக தவறானதாகும்.

அல்லாஹ்வும் அவனது ரஸூலும் உண்டு என்று சொன்ன ஒரு விஷயத்தை அறிவுக்கு பொருந்தவில்லை என்று மறுப்பது வடிகட்டிய குஃப்ர் (நிராகரிப்பாகும்) எனவே இந்த விஷயத்தில் சகோதரர்கள் எச்சரிக்கையோடு நடந்து கொள்ளும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.
இஸ்லாம் இந்த உலகில் தடுக்கப்பட முடியாத , தவிர்க்கப்பட முடியாத சக்தி என்பதை சூரா ஸஃப் -ல் திட்ட வட்டமாக அல்லாஹ் தெளிவு படுத்தியுள்ளான். இஸ்லாம் வெல்ல வேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால் பி.ஜே அவர்களின் இந்த விபரீத விளையாட்டு ஈமானை பறிக்க
கூடியது எச்சரிக்கை.நன்மையும், தீமையும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் என்பதே முஃமீன்களின் முழுமையான நம்பிக்கை.

அடுத்து

சூதாட்டாம் மார்க்கத்தில் தடை செய்ய பட்டுள்ளது .. இதற்க்கு ஆதாரம் 

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல் குரான் - 5.90)

சூனியம் என்ற பெயரில் நீங்கள் பந்தயம் கட்டுவது பரிசுகள் பெறுவதும் வாங்குவதும் போல் தான் ஆகையால் இது சூதாட்டமாகாது என்று வாதாடுகிறார்கள்.
உண்மையில் சூதாட்டாம் தான் என்பதை  இவர்கள் கூறும் கூற்றில் இருந்து சில சான்றுகளை முன் வைக்கிறோம்.

//பரிசளிப்பது சூதாட்டத்தில் சேராது. குறிப்பிட்ட விளையாட்டில் வெற்றி பெற்றவருக்கு பத்தாயிரம் ரூபாய் தருவேன் என்று ஒருவர் அறிவிக்கிறார். விளையாடுபவர் இதில் எந்த முதலீடும் செய்யவில்லை. ஒருவருக்குப் பரிசு கொடுத்தால் போட்டியில் உள்ள மற்றவர்களுக்கு எந்த இழப்பும் இல்லை. போட்டியில் இல்லாத ஒருவர் தனது பணத்தைப் பரிசாக அளிப்பதால் இதில் பணத்தைப் போட்டு பணத்தை எடுத்தல் இல்லை. அப்படி இருந்தால் தான் அது சூதாட்டமாகும். //

விளையாடுபவர் இதில் எந்த முதலீடும் செய்யவில்லை என்று எழுதி வைத்து இருக்கிறார்.

இதற்க்கு  ஒரு உதாரணத்தை சொல்லுகிறேன்.

ஒருவன் தன்னை துப்பாக்கியால் சுட்டால் 50 லட்சம் தவறுவதாக சொல்லுகிறான். குறி பார்த்து சுட்டால் தான் 50 லட்சம் தருவேன், குறி தவறி விட்டால் நீ 50 லட்ச ரூபாய் தரவேண்டும் என பேரம் பேசவில்லை.
இந்த விளையாட்டுடைய (நாடகத்துடைய) பின் விளைவை எவனாக இருந்தாலும் சிந்திப்பான். ஒரு வேலை குறி தவறாமல் அவனை சுட்டு விட்டால், அவனுடைய உயிர் பிரிந்து விடும், ஆகையால்கொலை குற்றத்திற்காக  சிறையில் அடைக்க படுவார் அல்லது இவரையும்  சுட்டு கொள்ள படுவார் அல்லது தூக்கில் ஏற்ற படுவார்.

இந்த நிபந்தனைகளை ஏற்று நடப்பதற்க்கு பெயர் என்ன ??? இது ஒன்னும் கிரிக்கெட் விளையாட்டு அல்ல ... பாதிப்பு இரு தரப்பிலும் உள்ளது.

விஷயத்திற்கு வருவோம்

அதே போல் தான் சூனியமும். அல்லாஹ்வின் நாட்டத்தின் படி பி ஜெக்கு சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்பட்டாலும் படாவிட்டாலும், சூனியத்தை செய்த காரணத்தால், அவனுக்கு நிரந்தர நரகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் குரான் சுன்னாஹ் பின்பற்ற கூடியவராக இருந்தால், சூனியத்தை கற்பது, அதை செய்ய முற்படுவது தடுக்க பட்ட காரியம் என்று உங்களுக்கு தெரியாதா ??? இதற்க்கு கூலி நிரந்தர நரகம் என்று உங்களுக்கு தெரியாதா ????
எதிர் அணியை நிரந்தர நரகத்திற்கு செல்ல முற்படுவது எந்த விதத்தில் நியாயம்...

கொஞ்சமாவது உங்கள் சுய புத்தியை கொண்டு சிந்தியுங்கள் !!! எது சொன்னாலும் நம்பி திரிய வேண்டாம்.

சிந்தியுங்கள் சகோதர்களே !!!

No comments:

Post a Comment