Popular Posts

Thursday, 1 December 2016

மாநபியின்_ﷺ_அன்னவர்களின்_மீலாதுன்_நபி_விழா_ஏன்_கொண்டாட_வேண்டும்

#மாநபியின்_ﷺ_அன்னவர்களின்_மீலாதுன்_நபி_விழா_ஏன்_கொண்டாட_வேண்டும்
__________________________________

மௌலித் & மீலாது நபி விழா குற்றச்சாட்டு - தொடர் (16) __________________________________

*♣ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாது விழா (பிறந்த நாளை) ஏன் கொண்டாட வேண்டும்?*

''வந்தது வசந்தம்'' ரபீவுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் பெருமானார் (ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது பரிபூரணமாக நேசம், மஹப்பத் கொண்ட உண்மை முஸ்லீம்கள் மாத்திரம் பெருமானார் பிறந்த தினத்தில் மீலாது விழாவிற்காக ஏற்பாடுகளைச் செய்யும் அதே வேளையில் மீலாது கொண்டாடக்கூடாது சுப்ஹான மெளலிது ஷரீபு ஓதுவது ஷிர்க் - பித்அத் என முஸ்லீம் பெயர் கொண்ட ஒரு கூட்டம் நாடி நரம்புகள் வெடிக்க கூக்குரலிடத் தொடங்கி விடுவார்கள்.

ஆகவே மீலாது விழாவின் அடிப்படை நோக்கமும், மீலாது விழா ஏன் கொண்டாட வேண்டும் என்பதற்கும் பின்வரும் காரணங்கள் மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். அந்த அடிப்படையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதும், அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதும், மக்களை ஈமானின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதும், அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதும், சந்தோசத்தையும் முஹப்பைத்தையும் மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதும், அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதும், மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வதும் அதன் மூலம் அன்றைய தினத்தில் கூட்டம் கூட்டமாக ஊர்வலமாக சென்று நன்றியை வெளிப்படுத்துவதாகும். இவ்வாறு எங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஒரு முஸ்தஹப்பான அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை அள்ளித்தரக்கூடிய காரியமாகும்.

இந்த உண்மைகள் விளங்காத சிலர் மீலாத் விழாவை சிலை வணக்கம் போல் சித்தரித்து, அதை செயல்படுத்தும் முஸ்லிம்களை தடுத்து வருவது சகிக்க முடியாத தவறாகும். "எங்களை விட அறிஞர்கள் இல்லை" என்ற கர்வ நிலையில் உள்ள தற்கால வழி கெட்ட அறிஞர்களை விட பல்லாயிரம் படித்தரத்தால் அறிவாலும், இறையச்சத்தாலும் மென்மையான நேர்வழி பெற்ற இமாம்கள் அனைவரும் அனுமதித்துள்ள மீலாதுன் நபி விழாவை வழிகேடவர்களின் விசமகருத்திட்காக தவிர்க்க வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை. 

*♣ மீலாது விழா கொண்டாடுவதால் இதில் எமக்கு எதாவது படிப்பினை உண்டா?*

உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காகவே ரஸுல்மார்களின் சரித்திரங்களில் இருந்து ஒவ்வொன்றாக நாம் உமக்குக் கூறுகிறோம். இவைகளில் உண்மையும், நல்லுபதேசமும் விசுவாசிகளுக்கு நினைவூட்டலும் இருக்கின்றன. (ஸுரத்து ஹுத் 121)

♦ மேலும் திட்டமாக நபிமார்களின் சரித்திரங்களில் அறிவுடையோருக்கு படிப்பினைகள் இருக்கின்றன. (ஸுரத்து யூஸுப் 111)

♦ நபிமார்களை நினைவு கூர்வது வணக்கமாகும், ஸாலிஹீன்களை நினைவு கூர்தல் பாவப்பரிகாரமாகும். என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.(நூல் அல்ஜாமிவுஸ்ஸகீர் 4331)

இப்போது கூறப்பட்ட இம்மூன்று ஆதாரங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கூறுவதற்க்கும் அதைக் கேட்டுக் கொண்டிருப்பதற்க்கும் விழாக்கள் எடுப்பது ஆகுமாக்கப்பட்ட நல்லதோர் அம்சமாகும். மேலும் நபிமார்களின் வாழ்க்கை சரிதைகளை ஞாபகம் பண்ணுவதும் மன தைரியத்தையும், படிப்பினையையும், மறுமையைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்தக் கூறியதாக இருக்கின்றது என்று மிகத் தெளிவாக விளங்க முடிகிறது. அப்படியானால் நபிமார்கள் யாவரிலும் எல்லா வகையிலும் ஏற்றம் பெற்றவர்களும் (திர்மிதி 3616, தாரமி 47, மிஷ்காத் 5762) மேலும் நபிமார்கள் யாவரிலும் தொந்தரவு அடைந்ததிலும் தெளிவடைந்ததிலும் தன்னிகரற்றவர்களாகவும் இருக்கின்ற நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் (திர்மிதி 2472, இப்னுமாஜா 151, மிஸ்காத் 5253) வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கூறுவதில் முஃமின்களுக்கு எந்த அளவு உபதேசமும், நினைவூட்டுதலும், படிப்பினையும் இருக்க வேண்டும்?

எனவேதான் நாம் கொண்டாடி வருகின்ற மீலாது விழாவில் நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் வாழ்க்கை வரலாறுகளை அடிப்படையாக வைத்தும் ஏனைய நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை சம்பந்தப்படுத்தியும் உலமா பெருமக்கள் உரை நிகழ்த்தி வருகிறார்கள். ஆகவே நபிமார்களின் சரித்திரங்களை அறிஞர்கள் கூறுவதற்கும் பொதுமக்கள் கேட்பதற்கும் அதன் மூலம் நமது பாவங்கள் பொறுக்கப்படுவதற்கும் மீலாது விழாக்கள் மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருப்பதால் மீலாது விழா கண்டிப்பாக வரவேற்கப்படக் கூடிய ஒன்றாகும்.

♦ எவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை ஈமான் கொண்டு மேலும் அன்னவர்களை உகப்பு கொண்டு மகிமைப்படுத்தி மேலும் அன்னவர்களுக்கு (பல வகையிலும்) ஒத்தாசையாக இருந்து அன்னவர்களுடன் இறக்கிவைக்கப்பட்ட பேரொளியையும் பின்பற்றி நடக்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான வெற்றியாலர்களாகும். (அல் அஃராப் -157) என்று அல்லாஹ் தஆலா குறிப்பிடுகிறான்.

இப்போது கூறப்பட்ட இத்திருவசனத்தின் கூற்றிற்கிணங்க கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை மகிமைப்படுத்தி அதன்மூலம் சத்தியடைந்தவர்களுடன் சேருவதற்கு மீலாது விழா ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதை அறிவுடையோர் யாவரும் நன்கறிவர். மேலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த நாள்தான் மார்க்கத்திற்கு மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்பட்ட நாளாகும். ஆகவே மீலாது பெருவிழா கொண்டாட்டம் அல்லாஹ் நமக்கு அருள்புரிந்த நன்னாளாகும்.

*♣ மீலாது நபி விழாவை பெரு மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதே அல்லாஹ்வின் விருப்பமாகும்*

எப்படி என்றால் 'அல்லாஹ்வுடைய "பள்ல்" எனும் ரஹ்மத்தைக் கொண்டு அவர்கள் (முஹ்மீன்கள்) மகிழ்ச்சி கொண்டாடட்டும்' என நபியே! நீங்கள் கூறுங்கள் அது அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துகளை விட மிக சிறந்ததாகும். (அல்குர்ஆன் 10 - 58)

மேற்கூறிய மறை வசனத்தில் கூறப்பட்டுள்ள "பள்ல்" எனும் ரஹ்மத் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என பல தப்சீர் கலை அறிஞர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பையும், அதனுள் பொதிந்துள்ள சிறப்புகளையும் எடுத்து கூறுவது குர் ஆன், ஹதீசுக்கு மாற்றமில்லாத சுன்னத்தான நல்ல அமலாகும்.

♦ மேலும் (நிஃமத்களை) அருள் கொடைகளை நினைத்துப் பாருங்கள், மற்றவருக்கு எடுத்துக் கூறுங்கள், ரகுமத்தை எண்ணிப்பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தட்டும்  இவைகளை கூறிய இறைவன் அந்த ரஹ்மத்து எது என்று தெளிவாகவே கூறிவிட்டான் (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 21:107) அந்த அடிப்படையில் மீதுலாத் கொண்டாடுவதற்கு அல்லாஹ் அனுமதி தந்திருக்கும்போது அதை தடுக்க நினைப்பவன் ஷைத்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

எனவே ஒவ்வொரு இல்லங்களிலும் மெளலிது ஷரிபு ஓதும் ஓசை ஒலிக்கச்செய்வோம், ஒவ்வோர் ஊரிலும்- மஹல்லாக்களிலும் மீலாது நடத்தி உத்தம நபியின் உதய தின விழாவைக் கொன்டாடுவோம் நம் உயிரிலும் மேலான உயிருக்கு உயிரான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவதரித்த மீலாதின் அருள் அந்த மாதம் முழுவதிலும் உண்டு என்பதை புரிந்து ரபிஉல் அவ்வல் மாதத்தை முஃமீன்கலாகிய நாங்கள் நன்றி உணர்வோடு கொண்டாடி நற்பேறு பெறுவோமாக!

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

ஸஹாபாக்களின்_காலத்தில்_மீலாதுன்_நபி_விழா_கொண்டாடப்பட்டுள்ளதா

#ஸஹாபாக்களின்_காலத்தில்_மீலாதுன்_நபி_விழா_கொண்டாடப்பட்டுள்ளதா?
__________________________________

மௌலித் & மீலாது நபி விழா குற்றச்சாட்டு - தொடர் (13) __________________________________

♣ ஸஹாபாக்கள் மீலாது விழா கொண்டாடினார்களா?

நபிகள் நாயகமும் ஸஹாபா பெருமக்களும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பின் நிகழ்வுகளை ஒன்று கூடி பேசிக் கொண்டு இருப்பார்கள். அவ்வேளையில் யா ரசூலல்லாஹ்! உங்களைப் பற்றி எங்களுக்கு கூறுங்கள். என சஹாபாக்கள் கூறுவார்கள். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவார்கள்.  இமாம் ஹாகிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கிறார்கள் (நூல் ஹாக்கிம் பாகம் 2 பக்கம் 600, அகீததுஸ்ஸூன்னா பக்கம் 349)​

♦ ஸெய்யதுனா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ, ஆமிர் அல் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு போன்ற ஸஹாபாக்கள் தமது வீடுகளில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நிகழ்ச்சியைப் (மீலாதுன் நபி) பற்றி தனது குடும்பத்தாருக்கு கூறிக்கொண்டிருப்பார்கள் இதனை கண்ணுற்ற நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் ரஹ்மதுடைய வாசல்களை திறந்து விட்டான் என்று கூறி துஆ செய்வார்கள்.நூல்: அகீததுஸ்ஸூன்னா பக்கம் 349​

​♣ மீலாதைக் கொண்டாடி மறுமையில்
மாண்படைவோம்​

அபூலஹ் மரணித்து விட்ட சில தினங்களில் அவர் மோசமான நிலையில் இருப்பதை கனவில் கண்ட அவரின் சகோதரரான அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் உமது மறுமை நிலைமை எப்படி இருக்கிறது என்று வினவினார்கள் அதற்கு அவர் எனது தம்பி மகன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்து விட்டார்கள் என்று நற்செய்தி சொன்ன எனது அடிமை பெண் ஸூவைபாவை எனது ஆட்காட்டி விரரால் சுட்டிக் காட்டி நீ எனக்கு இந்த நற்செய்தியை சொன்ன சந்தோஷத்தினால் இன்றிலிருந்து உன்னை நான் உரிமை விட்டுவிட்டேன் என்று கூறினேன் அப்படி உரிமை விட்ட காரணத்தினால் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் என்னுடைய அந்த விரலிருந்து மதுரமான பானம் புகட்டப்படுகிறேன் என்று கூறினார். ​​நூல்: புகாரி 5101​

இதைக் கொண்டு இமாம் நாஸிருத்தீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் "உரூதுஸ்ஸாதி" என்ற தமது நூலில் நரகத்திலே நிரந்தரமாக்கப்பட்ட ஒரு காபிருக்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் (மீலாத் பிறப்பைக்) கொண்டு மகிழ்ந்த காரணத்தினால் திங்கட்கிழமை தோறும் வேதனை இலேசாக்கப்படுகிறது இன்று இருக்குமானால் ஆயுள் பூராகவும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டு மகிழ்ச்சியடைந்து ஈமானுடன் மரணித்த ஒரு முஃமினுக்கு எவ்வளவு பாக்கியம் கிடைக்கும் என்று எழுதுகிறார். நூல்: அகீததுஸ்ஸூன்னா பக்கம் 359​

இப்போது மேலே கூறப்பட்ட இவ்வதாாதாரங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கூறுவதும் அதைக் கேட்டுக் கொண்டிருப்பதும் அதை ஞாபகம் பண்ணுவதும் மன தைரியத்தையும், படிப்பினையையும், மறுமையைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்தக் கூறியதாக இருக்கின்றது என்று மிகத் தெளிவாக விளங்க முடிகிறது. அப்படியானால் நபிமார்கள் யாவரிலும் எல்லா வகையிலும் ஏற்றம் பெற்றவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தில் அவர்களின் சிறப்புக்களை எடுத்துக் சொல்வதில்லை என்ன தவறு உள்ளது?

ஆகவே இந்த உண்மைகள் விளங்காத சிலர் மீலாத் விழாவை சிலை வணக்கம் போல் சித்தரித்து, அதை செயல்படுத்தும் முஸ்லிம்களை தடுத்து வருவது சகிக்க முடியாத தவறாகும். "எங்களை விட அறிஞர்கள் இல்லை" என்ற கர்வ நிலையில் உள்ள தற்கால வழி கெட்ட அறிஞர்களை விட பல்லாயிரம் படித்தரத்தால் அறிவாலும், இறையச்சத்தாலும் மென்மையான நேர்வழி பெற்ற இமாம்கள் அனைவரும் அனுமதித்துள்ள மீலாதுன் நபி விழாவை வழிகேடவர்களின் விசமகருத்திட்காக தவிர்க்க வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை. மேலே கூறப்பட்ட ஹதீஸ் அடிப்படையில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த நாளை ஞாபகம் செய்யும் பொருட்டு மீலாது விழா அன்று பல நற்காரியங்களைச் செய்து அந்த நாளை கௌரவிப்பது எவ்வளவு சிறப்பானதாக இருக்கும்.​

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

#மீலாது_விழா_என்பது_இஸ்லாத்தின்_பெயரால்_யூதர்களால்_உருவாக்கப்பட்டதா?​

#மீலாது_விழா_என்பது_இஸ்லாத்தின்_பெயரால்_யூதர்களால்_உருவாக்கப்பட்டதா?​
__________________________________

மௌலித் & மீலாது நபி விழா குற்றச்சாட்டு - தொடர் (14) __________________________________

♣  மீலாது விழா என்பது இஸ்லாத்தின் பெயரால் யூதர்களால் உருவாக்கப்பட்டதா?

மீலாது நபி விழா என்பது யூத கலாச்சாரம் கிருத்துவ கலாச்சாரம் என்றும் கேலி பேசும் வழிகெட்ட வஹ்ஹாபிகள் உண்மையை சத்தியத்தை மறைக்கிறார்கள். நாம் மீலாது விழா கொண்டாடுவது போல் யூதர்களும் கிருத்துவர்களும் எந்த மீலாதையும் கொண்டாடுவதில்லை. மீலாது விழா, யூதர்களின் கலாச்சாரம் என்று சொல்வது வழிகெட்ட வஹ்ஹாபிகளால் கடைந்தெடுத்த பொய்யாகும். யூதர்கள் என்ற வார்த்தை அரசியல் ரீதியில் இன்று முஸ்லிம்களிடம் அசூசையான சொல்லாக இருப்பதால் குருட்டுத்தனமாக இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.

யூதர்கள் மூஸா (அலைஹி வஸல்லம்) நபிக்காகவோ மற்ற யாருக்காகவோ இப்படி செய்ததில்லை. நபிமார்களின் தகுதியை குறைத்து மதிப்பதும் – அவர்களை அவமதிப்பதும் தான் யூதக் கலாச்சாரமாகும். மீலாது விழாக்களை எதிர்க்கிற வஹ்ஹாபி தறுதலைகள் தான் யூதக் கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்தஸ்தை குறைத்து மதிப்பிடுகிறார்கள்,கிருத்துவர்கள் ஈஸா  நபியின் (அலைஹி வஸல்லம்) பிறந்த நாள் என்று டிஸம்பர் 25 தேதி ஒரு நாளில் கிருஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள், அதை எப்படி கொண்டாடுகிறார்கள்- கிருஸ்துமஸ் மரம் வைக்கிறார்கள்- குடில் அமைக்கிறார்கள். ஸ்டார் என நட்சத்திர பலூன்களள வீட்டு வாசலில் மாட்டி வைக்கிறார்கள், மது அருந்துகிறார்கள்.ஹராமா காரியங்களை செய்கிறார்கள், இசை கச்சேரி, ஆட்டம் பாட்டம் கூத்து கும்மாளம் என்று அனாசாரத்தில் ஈடுபடுகின்றனர். முஸ்லிம்கள் இப்படியா மீலாது விழா கொண்டாடுகிறார்கள்? கண்ணும் கல்பும் உள்ளவர்கள் யாராவது மீலா விழாக்களை இத்தோடு ஒப்பிடுவார்களா? அல் குர் ஆனுடையவும்  சுன்னாவினுடையவும் எல்லைகளை விட்டு வெளியேறிவிட்ட வழிகெட்ட வஹ்ஹாபி கூட்டம் தான் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாதை
மௌலிதை இன்று விமர்ச்சிக்கிறது. ​

நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் யஹூதிகள் நோன்புற்றதை கண்ட நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களை நோக்கி ஏன் இவர்கள் நோன்பு நோற்கின்றார்கள்? எனக்கேட்டார்கள். அதற்கு ஸஹாபாக்கள் அவர்களின் நபீ மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்களை நினைவுபடுத்தி அவர்களின் நபீமார்களின் வெற்றிகளை நினைக்கும் முகமாக நோற்கிறார்கள். என பதிலளித்தார்கள். அப்போது நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவர்களை விட மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்களை நினைவு படுத்துவதற்கு நானே மிகத்தகுதியானவன் எனக் கூறி ஆஸூறா தினத்தில் நோன்புவைத்தார்கள் . இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் இருந்தால் 9ம் நாளையும் சேர்த்து நோன்புவைப்பேன் என்றும் கூறினார்கள் .​

ஆகவே இவர்கள் கூறுவது போல ஒரு வாதத்திற்கு யூதர்களால்தான் மீலாது விழா உருவாக்கப்பட்டது என்று வைத்துக் கொண்டாலும், அது எவரால் உருவாக்கப்பட்டாலும் நற்செயல்களை செய்ய முடியும். அதற்காக நாங்களும் அக்கூட்டத்தைச் சார்ந்தவர்கள் என்று வந்துவிடாது. கிறிஸ்மெஸ், வெஸாக் போன்ற அந்நிய மத சடங்குகளுக்கு ஒப்பானது என்ற கண்ணோட்டத்தில் மீலாத் விழாக்களையும் நோக்க முடியாது. இருவரும் விழாக்கொண்டாடுகிறோம். ஆனால் அவர்கள் சிலை போன்ற ஹறாமாக்கப்பட்டவைகளை உபயோகிப்பதன் மூலம் எம்மை விட்டும் வேறுபடுகிறார்கள் ஆகவே எது எப்படி இருந்தாலும் மீலாது விழா கொண்டாடுவதற்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத்தில் ஆதாரங்கள் உள்ளன.

♣  நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாது விழா (பிறந்த நாளை) ஏன் கொண்டாட வேண்டும்?

​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதற்க்கும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதற்கும் அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதற்கும், மக்களை ஈமானின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதற்க்கும், அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதற்கும், சந்தோசத்தையும் முஹப்பைத்தையும் மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்கும், அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதற்கும், மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வது அதன் மூலம் நன்றியை வெளிப்படுத்துவதற்காகதான் மீலாது விழா கொண்டாட்படுகின்றது. இதனை இஸ்லாம் மார்க்கம் அங்கிகரித்த விடயமாகும். எனவே இவ்வாறு எங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஒரு முஸ்தஹப்பான அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை அள்ளித்தரக்கூடிய காரியமாகும்.​​

♣  மீலாது விழா அன்று ஏன் ஸூப்ஹான மௌலித் ஏன் ஓத வேண்டும்?​

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்வதற்கு காலம் நேரம் உண்டா? ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நாளும் ஸூப்ஹான மௌலித் ஓதலாம் எனவே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த அழகைக் குறித்தும், பிறந்த அன்று நடந்த நிகழ்சிகள், அற்புதங்கள் பற்றியும் ஆதாரப்பூர்வமான பல செய்திகள் 'ஸூப்ஹான மௌலித்' கிதாபில் உள்ளன. இதன் காரணமாகவே மற்ற மாதங்களில் ஓதுவதை விட நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மாதமான ரபீஉல் அவ்வல் மாதத்திலும் அவர்கள் பிறந்த தினமான மீலாது ஷரீப் அன்று அதை விஷேசமாக நாம் ஓதி வருகிறோம்.

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*

#மாநபியின்_ﷺ_மீலாது_அன்று_கவலை_கொண்டு_துக்கம்_அனுஷ்டிப்பதா_அல்லது_சந்தோஷம்_கொள்வதா

#மாநபியின்_ﷺ_மீலாது_அன்று_கவலை_கொண்டு_துக்கம்_அனுஷ்டிப்பதா_அல்லது_சந்தோஷம்_கொள்வதா?
__________________________________

மௌலித் & மீலாது நபி விழா குற்றச்சாட்டு - தொடர் (15) __________________________________

♣ மாநபியின் மீலாது அன்று (மறைந்த நாளை) நினைத்து கவலை கொள்வதா? அல்லது (பிறந்த நாளை)நினைத்து சந்தோஷம் கொள்வதா?

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினத்தில் தான் இவ்வுலகை விட்டு மறைந்தார்கள் என்ற வகையில் அன்றைய தினம் துக்கம் அனுஷ்டிக்க வேண்டிய நாளா? அல்லது அதே தினத்தில் தான் இவ்வுலகில் பிறந்தார்கள் என்ற வகையில் அன்றைய தினம் மகிழ்ச்சிக்குறிய நாளாகவும் இருக்கின்றது. எனவே குறிப்பிட்ட ஒரே தினத்தில் மகிழ்ச்சியைக் காட்டுவதுதான் ஏற்றம் மிகச் சிறந்தது துக்கம் அனுஷ்டிப்பது சாத்தியமான ஒன்றாகும் எனவே ஒருவர் சிக்கலான இரண்டு காரியங்களைக் கொண்டு சோதிக்கப்பட்டு விட்டால் அவ்விரண்டில் இலகுவானத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என்று நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் இரண்டு காரியங்களிடையே இஷ்டம் கொடுக்கப்பட்டால் அவ்விரண்டில் இலேசானதையே தேர்ந்தெடுப்பார்கள் என்று ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்
(நூல்கள் புகாரி 3560, முஸ்லிம் 2327, அபூதாவுத் 4785,மிஷ்காத் 5817)

♦ எனது ஹயாத்தும் உங்களுக்கு நன்மையானது எனது மரணமும் உங்களுக்கு நன்மையானது ஏனெனில் உங்களுக்குடைய அமல்களை என்மீது எடுத்துக் காட்டப்படுகிறது அது நன்மையானதாக இருந்தால் அல்லாஹ்வைப் புகழ்வேன் தீமையானதாக இருந்தால் உங்களுக்கு பிழை பொறுக்கத் தேடுவேன் என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (நூல் மஜ்மவுஸ்ஸவாயித் பாகம் 9 பக்கம் 24,அல்மிர்ஆத் பாகம் 4 பக்கம் 581)

♦ அல்லாஹ் ஒரு சமூதாயத்திற்கு நன்மையை நாடினால் அந்த சமூகத்தின் நபியை மரணிக்கச் செய்கின்றான்(நூல் முஸ்லிம் 2888, மிஷ்காத் 5977)

♦ மேலும் உங்களில் இறந்தவர்களின் நல்ல அம்சங்களை எடுத்துக் கூறுங்கள் (நூல்கள் அபூதாவூத் 4900,திர்மிதீ 1019,மிஷ்காத் 1678)

♦ மேலும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மண்ணோடு மண்ணாகி மக்கிபோய்
இறந்திருந்தால்தானே மறைந்த நாள் என்று சொல்லமுடியும். ஆனால் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் எம்மை விட்டு மறைந்து வாழும் கருணை நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் யதார்தத்தில் இறக்கவில்லை. நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது சொல்லப்படுகிற ஒவ்வொறு ஸலவாத்தையும் ஒரு மலக்கின் மூலம் எத்திவைக்கப்படுகின்றது. ஆகவே மரணித்த ஒருவருக்கு எவ்வாறு எத்திவைக்கப்படும்?

♦ இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள், அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள் எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
(அல்குர்ஆன் 2:154)

♦ அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் றப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.(அல்குர்ஆன் 3:169)

♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: நபிமார்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்களுக்கு கப்ரில் சுவர்க்க உணவுகளும் வழங்கப்படுகிறது.(நூல்கள் அபூதாவுத், நஸாயி, இப்னுமாஜா, தாரமி, பைஹகி, மிஷ்காத்)

♦ நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எம்மைவிட்டும் மறைந்தாலும் எங்களிலேதான் இருக்கிறார்கள்.'நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் உங்களிலேயே இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்'. 
(அல்குர்ஆன் 49:7)

ஆகவே மேற்படி இரண்டு காரியங்களில் எது இலகுவானது என்று கவனிக்கும் போது துக்கம் அனுஷ்டிப்பதை விட மகிழ்ச்சியைக் காட்டுவது தான் அதன் அடிப்படையில் மீதுலாத் நபி விழா கொன்டாடுவது பயன் தரத்தக்கதாகவும் இருக்கின்றது.

*💐💐ஹலாவதுல் ஈமான்💐💐*
*✳ BY Moulavi*
*S.L Abdhur Rahman Ghawsi*