Popular Posts

Saturday, 7 May 2016

ஜும்மாவில் கவனிக்கவும்) இடது கையை பின்னால் ஊன்றி உட்காதீர்கள்

(ஜும்மாவில் கவனிக்கவும்)

இடது கையை பின்னால் ஊன்றி உட்காதீர்கள் (ஹதீஸ்)
---------------------------
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் என்னைக்கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது நான் என் இடது கையை பின்னால் ஊன்றி உட்கார்ந்திருந்ததை பார்த்து நபி(ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின் கோபத்துக்குள்ளானவர்கள் உட்காருவதைப்போல் உட்கார்ந்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள்..
அறிவிப்பாளர்:அஷ்ஷரீத் இப்னு அஸ் ஸுவைத்.
(அஹ்மத் 18960, அபூதாவூத் 4848)

ஜும்மாவில் கவனிக்கவும்) இடது கையை பின்னால் ஊன்றி உட்காதீர்கள்

(ஜும்மாவில் கவனிக்கவும்)

இடது கையை பின்னால் ஊன்றி உட்காதீர்கள் (ஹதீஸ்)
---------------------------
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் என்னைக்கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது நான் என் இடது கையை பின்னால் ஊன்றி உட்கார்ந்திருந்ததை பார்த்து நபி(ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின் கோபத்துக்குள்ளானவர்கள் உட்காருவதைப்போல் உட்கார்ந்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள்..
அறிவிப்பாளர்:அஷ்ஷரீத் இப்னு அஸ் ஸுவைத்.
(அஹ்மத் 18960, அபூதாவூத் 4848)

ரஜப் பிறை 27 (மிஃராஜ்) தினத்தன்று நோன்பு வைப்பது சுன்னத்தா?


♣  ரஜப் பிறை 27 (மிஃராஜ்) தினத்தன்று நோன்பு வைப்பது சுன்னத்தா?

மிஃராஜ் தினத்தில் நோன்பு வைக்கலாம் என்பதற்கு நபிமொழிகளில் ஆதாரங்கள் காணக்கிடைக்கிறது. இமாம் பைஹகி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஷுஃபுல் ஈமானிலும், தைலமி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் முஸ்னதுல் பிர்தவ்ஸிலும், ஸல்மானுல் பார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக இவ்வாறு அறிவிக்கின்றனர்: ரஜப் மாத்தில் ஒரு இரவும், பகலும் இருக்கிறது. அத்தினத்தில் பகலில் நோன்பு வைத்து, இரவில் நின்று வணங்கினால் நூறு ஆண்டுகள் நோன்பு வைத்து வணங்கிய கூலி கிடைக்கும். அவ்விரவு ரஜப் 27வது இரவாகும். அந்நாளில்தான் அல்லாஹ் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாக அனுப்பி வைத்தான்'.

♦ மேலும் அபான் இப்னு ஙயாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அறிவிக்கும் மற்றொரு நபிமொழியும் பைஹகியில் காணப்படுகிறது. ரஜபில் ஓர் இரவுண்டு. அவ்விரவில் நல்லமல் புரிவோருக்கு நூறு ஆண்டுகள் நல்லமல் புரிந்த கூலி கிடைக்கும். அது ரஜபு மாதத்தின் 27வது இரவாகும். அவ்விரவில் யாராவது 12 ரக்அத்கள் தொழுதால் ஒவ்வொரு ரக்அத்திலும் ஸூரத்துல் பாத்திஹாவும், வேறு ஏதாவது ஸூரத்தும் ஓத வேண்டும். ஒவ்வொர இரண்டு ரக்அத்களும் தொழுது முடித்த பின்னர், 'ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வல்லாஹு அக்பர்' என்று 100 தடவைகளும், இஸ்திக்பார் 100 தடவைகளும், அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது 100 தடவை ஸலவாத்துகளும் ஓதிவிட்டு மறுமை, இம்மை சம்பந்தப்பட்டவை குறித்து தேவையானவற்றை துஆச் செய்யலாம். பின்னர் பகலில் நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ் அவரது துஆக்களை ஏற்றுக் கொள்வான்.

♦ ரஜப் 27 எனக்கு நபிப்பட்டம் வழங்கப்பட்டது. அத்தினத்தில் நோன்பு வைத்து நோன்பு திறக்கும் வேளையில் துஆக் கேட்டால், பத்து வருடக் குற்றங்களுக்கு அது பரிகாரமாக அமையும்.' பவாயிது நிஹாத் என்ற நூலில் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது

♦ ஆகவே 'யாராவது ரஜப் மாதம் 27 அன்று நோன்பு வைத்தால் அவருக்கு அல்லாஹ் பல ஆண்டுகள் நோன்பு வைத்த கூலியை கொடுப்பான். அத்தினத்தில்தான் அண்ணல் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபிப்பட்டத்தை வழங்கினார்கள்.' ஜுஸ்உ அபீ முஆத் என்ற நூலில் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே கருத்தில் வந்துள்ள எல்லா ஹதீஸ்களிலும் இந்த ஹதீஸ்தான் மேலானதும், 27வது இரவிலும், பகலிலும் செய்யப்படுகின்ற அமல்களுக்கு அடிப்படை ஆதாரமுமாகும்.

​​நூல்: பதாவா ரிழ்விய்யா, பாகம் 4, பக்கம் 657, 658🌸

சூனியம் உண்டு மார்க்கத்தில் சூனியம் இல்லை என்று சொல்பவர்களுக்கு பாதில்அடி

ஆயிஷா  (ரலி)அறிவிக்கிறார்கள் லபீதுப்னுல் அஃஸம் என்ற யூதன் நபி  (ஸல்)அவர்களுக்கு சூனியம் செய்தான் அதன் காரணம் நபி  (ஸல் )அவர்களுக்கு ஒரு செயலைச் செய்யாமலே செய்ததாக தோன்றும் உன்மையிலே அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் ஆதலால் நபி  (ஸல்)ஒரு பகல் அல்லது ஒரு இரவு துஆ செய்தார்கள் பிறகும் துஆ செய்தார்கள் அப்புறமும்  துஆ செய்தார்கள் பிறகு நபி ஸல் ஆயிஷா ரலி அவர்களிடத்தில் கூறினார்கள் ஆயிஷா உனக்கு ஒன்று தெரியுமா நான் ஃபத்வா கேட்ட விஷயத்தில் அல்லாஹு எனக்கு விளக்கம் தந்திருக்கின்றான் இரண்டு நபர்கள் என் அருகில் வந்து ஒருவர் என் தலைப் பகுதியிலும் மற்றொருவர் எனது கால் பகுதியிலும் அமர்ந்தார்கள் தலைப்பகுதியில் இருப்பவரோ அல்லது கால் பகுதியில் இருப்பவரோ சொன்னார் இவர்களுடைய  வேதனை என்ன சூனியம் பாதித்து இருக்கின்றது யார் சூனியம் வைத்தது லபீதுப்னுல் அஃஸம் என்ன பொருளில் சூனியம் வைத்தார் இரும்பு சீப்பிலும் தலை முடியிலும் பேரித்தம்பழ மரத்தினுடைய பூக்கொலையுடைய ஒரு துன்டிலும் அது எங்கே கிடக்கின்றது திஅர்வான் கிணற்றில் ஆயிஷா ரலி சொல்கிண்றார்கள் நபி ஸல் அவர்களும் ஸஹாபாக்களும் அந்த கிணற்றிற்கு சென்று அதை வெளியே எடுத்தார்கள் பிறகு நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் ஆயிஷாவே அந்த கிணற்றினுடைய தண்ணீர் மருதாணி கலக்கிய தண்ணீரைப் போன்று இருந்தது பேரித்தம்பழ மரத்தினுடைய பூக்கொலை ஏதோ ஒரு பிசாசினுடைய தலைப் போன்று இருந்தது அப்போது ஆயிஷா ரலி கேட்டார்கள் அல்லாஹுவினுடைய தூதரே அதை நீங்கள் எரித்து இருக்கக் கூடாதா உடனே நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் அல்லாஹு  எனக்கு நிவாரணம் தந்திருக்கிறான் பொது மக்களுக்கு நாசம் உன்டாகுவதை நான் வெறுக்கின்றேன் அதனால்  அதைப் புதைக்க சொன்னேன் அதைப் புதைத்து விட்டார்கள் நூல் முஸ்லிம் 4059.
SSF,krishnajippattinam கிளை,
புதுக்கோட்டை மாவட்டம். 🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🌺🌺🌺🌺

Sunday, 1 May 2016

தொழுஹையை எவ்வாறு தொழுக வேண்டும் ??.

தொழுஹையை எவ்வாறு தொழுக வேண்டும் ??.

தொழுகை என்பது வெளிச் செயல்களால் முழுமை பெறுவதில்லை என்ற உண்மையை ஸஹாபி ஒருவரின் வினாவிற்குப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கொடுத்த விடையிருந்து தெளிவாகத் தெரிகிறது.
.
"இறைவனை எப்படி வணங்க வேண்டும்?" என்று அந்த ஸஹாபி கேட்ட போது பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
.
"இறைவனை நீர் பார்ப்பது போல் வணங்க வேண்டும். நீர் அவனைப் பார்ப்பவராக இல்லாவிட்டால், அவன் உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வோடு வணங்க வேண்டும்" எனக் கூறினார்கள்.
.
இங்கு தொழுகையின் உயர் மாண்பு சுட்டிக் காட்டப்படுகிறது. இதே உண்மை மற்றோரு ஹதீஸ் இப்படித் தெளிவுப்படுத்துகிறது.
.
"தொழுகை என்பது மூமின்களுக்கு 'மிஹ்ராஜ்' ஆகும்
மிஹ்ராஜ் என்று சொல்லப்படுகிற ஆத்மீகப் பயணத்தில் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்) அவர்கள் இறைவனைத் தரிசித்தது போல், தொழுகையில் ஈடுபடுகிற ஒவ்வொரு மனிதனும், இறைவனைப் பார்ப்பதுப் போன்ற உணர்வைத் தோற்றுவித்துக் கொள்ளவேண்டும்.
.
"தொழுகையில் மனிதன் தன் நாயனோடு உரையாடுகிறான்" என்று, பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லிம்) அவர்கள் கூறியிருகின்றார்கள்.
.
அப்படியானால், நாம் தொழுகையின் போது, எந்த அளவுக்கு விழிப்புணர்வோடு இருப்பது முக்கியமானது என்று தெரிய வருகின்றது.
.
"உடலும் உள்ளமும் கலக்காத எந்தச் செயலையும் தன் அடியாரிடமிருந்து இறைவன் ஏற்றுக் கொள்ளமாட்டான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கருத்து.
.
உறுப்புக்களின் அசைவுகளினால் இறைவணக்கம் முழுமைப் பெற்றுவிடும் என்று எண்ணுகின்றவர்களைத் தூக்கத்திலிருந்து தட்டி எழுப்புகிறது.
.
"ஒரு மனிதன் தன் தொழுகையைப் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்துக் கொள்கிறானோ அந்த அளவுக்குத்தான் அதிலிருந்து அவனுக்கு பயன் கிடைக்கும்!"
.
நன்றி: Ahamed Bilal