Popular Posts

Saturday, 23 April 2016

தப்காதுல் குப்ரா பற்றிய தெளிவான விளக்கம் :


 தப்காதுல் குப்ரா பற்றிய தெளிவான விளக்கம் :

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்கதுஹூ

வஹ்ஹாபிகளின் சூழ்ச்சி வீழ்ச்சி அடைந்தது ;

இன்றைக்கு சில நபர்கள் நம் முன்னோர்களான ஸஹாபாகளையும் , இமாமுகளையும் , இறைநேசர்களையும் தன் மனதில் தோன்றிய தகாத வார்த்தையால் பேசுகிறார்கள்
அது என்ன வென்றால் !

சமீப காலத்தில் " தப்காதுல் குப்ரா " என்ற கிதாபில் ஒரு நிகழ்சி குறித்து குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் .
அந்த கிதாபை இமாம்
ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரனி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள்
ஏற்றியது
அந்த கிதாபில் பல வலிமார்களின் வரலாற்றை பற்றி அதில் எடுத்துக் கூறுகிறார்கள்
அதில் ஒரு வலியுல்லாஹூவைப் பற்றி ஒரு வரலாறு சொல்லப்படுகிறது ?
அவர் யார் ?
அஷ்ஷேஹ் தாரிக்  அப்துல் காதிர் சுப்கீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் வாழ்கையில் நடந்ததாக  ஒரு வரலாறு சொல்லப்படுகிறது


பி.ஜெ என்ற குழப்பவாதிசொல்கிறார் :

அஷ்ஷேஹ் தாரிக்  அப்துல் காதிர் சுப்கீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள்
மிக பெரிய இறைநேசர் என்று கூறுகிறீர்கள் , அவரை பற்றி ஒரு செய்தி சொல்லப்படுகிறது
அதாவது
" பெண் பார்க்க சென்ற இடத்தில் நடந்த நிகழ்சி "
அதை தமிழில் மொழி பெயற்து செய்து வாயில் கூட சொல்ல முடியாது !
அந்த அளவுக்கு ஆபாவசமான வார்தைகள்  காணப்படுகிறது அதை நான் ( பிஜெ ) அரபியில் வார்தையை மட்டும் வாசிக்கிறேன் !
அந்த வாசகத்தை ;
சுன்னத் வல் ஜமாஅத் உலமாகள் ...! !
தங்களுது ஜும்ஆ மேடையில் அர்த்தம் வைத்து பேசினால் தனது வழிகெட் ஜமாஅத்தையே களைத்துவிடுகிறேன் என்று பிஜெ என்ற குழப்பவாதி  பேசிய வீடியோ ஒன்று  உலா வருகிறது.
அவர் சொன்ன விசையம் உண்மை என்று நம்பி பிஜெ - மதத்தை சார்ந்தவர்கள் இஸ்லாமிய மார்கத்தை சார்த ஆலிம்களுக்கு
பிஜெ- யின்  அறை கூவல் ... !!!
அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்களே !!
இந்த அரபி வாசங்களுக்கு ஜூம்ஆ மேடைகளில் மொழி பெயர்ப்பு செய்து குத்பா உரை நிகழ்த்தினால் எங்கள் பிஜெ மதத்தை கலைக்கப்படும் ...?
என்று சொல்லி...! இது ஒரு பகிறங்க சவால் ! ! !
என்று கூறிவுள்ளார்கள் .
ஏன் இப்படி சொல்ல வேண்டும்- ?
அதற்க்கு என்ன காரணம் - ?
என்று பார்க்கும் போது
இப்படி சொன்னால் தான் இஸ்லாமிய சமூகமே வீல் கொண்டு எழூம் என்று நினைத்தார் பிஜெ என்ற குழப்பவாதி
ஆனால் நடந்த்து -------------- ?
அவர் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை ..  !
என்ன காரணம் - ?
பிஜெ - பற்றி இஸ்லாமிய சமூக மக்கள் விளங்கி வைத்து  இருக்கிறார்கள்
இந்த நூற்றாண்டின்  பக்கா பொய்யன் ,
சிறந்த பித்தலாட்ட நாயகன் ,
முன்னுக்கு பின் முறனாக பேசக்கூடிய பேச்சளார்,
 பிரபலத்தை ஆசை படக்கூடிய நாயகன் ,
எதற்கு எடுத்தாலும் சவால் மன்னன்,
இறைவனின் வார்த்தையாக இருந்தாலும் சரி தன் அறிவுக்கு ஒத்து வரவில்லை என்றால் அதை மறுத்து பேசும் மாங்க மடையன் .இது போன்ற என்னற்ற  சிறப்புக்கு சொந்தகார் -- பி.ஜைனுல் ஆபிதீன் என்ற குழப்பவாதி .
என்பதை இஸ்லாமிய சமூகத்தார்கள் விளங்கி வைத்துல்லார்கள்.அதனால் தான் அவருடைய சவாலை யாரும் கண்டு கொள்ளவில்லை .
பிஜெ - என்பவர் அல்லாஹூடைய   குர்ஆனையே மறுத்து பகிறங்க சவால் விடுகிறார் . அல்லாஹூவே மறுத்து பேசுகிறவனுக்கு , இறைநேசர்களை குறைபேசுவது சர்வ சாதரணமான விசையம் தானே !!
பி.ஜைனுல் ஆபிதீன் என்ற நபர் " தப்காதுல் குப்ரா " என்ற ஒரு கிதாபில்  " அஷ்ஷேஹ் தாரிக்  அப்துல் காதிர் சுப்கீ " (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் பற்றி ஒரு செய்தி சொல்லப்படுகிறது
அதாவது
" பெண் பார்க்க சென்ற இடத்தில் நடந்த ஒரு செய்தி "என்று
சொல்கிறார் அதை தமிழில் மொழி  பெயற்து செய்து வாயில் கூட சொல்ல முடியாது !
அந்த அளவுக்கு ஆபாவசமான வார்தைகள்  காணப்படுகிறது.
என்பதாக பிஜெ சொன்னார் .
அவர் சொல்வது உண்மையா ? அல்லது அந்த இறைநேசர்களை மக்கள் மத்தியில் இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கமா ? அல்லது இட்டு கட்ட பட்ட செய்தியா ?
என்பதை நாம் பார்போம் ......
அல்லாஹ் தனது குர்ஆனில் கூறுகிறான் :
يايها الذين امنوا ان جاءكم فاسق بنباٍ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا علي ما فعلتم ندمين- 49:6
இறை நம்பிக்கை கொண்டவர்களே : குற்றம் புரிபவன்  உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் ( இல்லையெனில் ) நீங்கள் செய்ததற்காக கைசேத படுவிர்கள்  =  ( 49 - 6 )
 பிஜெ - க்கு நம்முடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால்
யாரை பற்றியாவது குறைக் காணவேனும் என்றால்  முதலில் அவரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் அதை விட்டுவிட்டு யாரோ ஒருவர் சொன்னார் , அல்லது மனதில் வந்தைதை எல்லாம் வாந்தி எடுக்க வேண்டாம் !
பி.ஜைனுல் ஆபிதீன்  என்ற குழப்பவாதியே  " தப்காதுல் குப்ரா " என்ற இந்த கிதாபை என்றைகாவது முழுமையாக வாசித்தது உண்டா ?
அந்த கிதாபின் முழுமையான பெயராவது தெரியாமா ?
அந்த கிதாபு எழுதப்பட்ட நோக்கமாவது தெரியுமா ?
அந்த கிதாபு எந்த ஆண்டு எழுதினார் என்பதாவதும் தெரியுமா ?
அதை எழுதிய ஆசிரியரின் வாழ்கை வரலாறாவது தெரியாமா ?
அஷ்ஷேஹ் தாரிக்  அப்துல் காதிர் சுப்கீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களை பற்றியாவது தெரியுமா ?
இப்படி எதுவுமே தெரியாமல் இருந்து கொண்டு அவதூராக பேசுவது சரியா ?
பிஜெ என்ற குழப்பவாதியே நாம் யாரை பார்த்து குறைகாணப் போகிரோமோ அவரை விட நாம் சிறந்தவறா ? அவரை குறைகானும் யோகிதை நமக்கு இருக்கிறதா ?
என்பதை எல்லாம் யோசிச்சு இருக்க வேண்டும் !! பிஜெ என்ற குழப்பவாதியே தங்களை பற்றி உலகில் உள்ள இஸ்லாமிய சமூகத்தை சார்தவர்கள் மட்டும் மல்ல மாற்று சமூகதாருகளும்  அனைவரும் அறிவார்கள்
சரி வாருங்கள் பிஜெ என்ற குழப்பவாதி சொல்வது உண்மையா ? அல்லது அது இடை சருகலாக சேர்க்கப்பட்டதா ? என்பதை ஆராயிவோம் ....
உண்மையை உண்மை என்று விளங்குகின்ற ஆற்றலை அல்லாஹ் நமக்கு அனைவருக்கும் தருவானாக ...
ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وانتم تعلمون (42-2)
அறிந்து கொண்டே  உண்மையை பொய்யுடன் கலக்காதீர் . உண்மையை மறைகாதீர் ( 2 - 42 )
இந்த ஆயத்தின் அடிபடையில் நாம் சொல்லுகிறோம் !!
பிஜெ என்ற குழப்பவாதிக்கு உண்மை தெரியும் ஆனால் பணத்திற்காக குழப்பம் செய்கிறார் என்பது தான் உண்மை
அந்த கிதாபின் முழுமையான பெயர் ::
ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் எழுதிய கிதாபின் முழுப்பெயர்
(الطبقات الكبرى المسمى لوافح الانوار القدسية فى مناقب الاخيار الصوفية, الناشر: مكتبة الدينية, القاهرة )
‘’அத்தபாகாதுல் குப்ரா " என்று சொல்லப்படுகின்ற இந்த கிதாபின் முழுப்பெயர்:
‘’லவாஃபிஹுல் அன்வாருல் குத்ஸிய்யா ஃபி மனாகிபில் அக்யாரிஸ் ஸுஃபிய்யா’’என்பதாகும்.
இமாம் வாழ்கை சுருக்கம் ::
عبد الوهّاب الشعرانيالحقبة898 هـ - 973 هـالمولد27 رمضان سنة 898 هـ في قلقشندةفي مصرالإقامةمسلمالوفاةجمادى الأولى سنة 973
ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா
அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)  அவர்களின்
பிறப்பு ஹஜ்ரி = 898 - ரமளான் - 27 ,
மறுஉலக பயணம் = ஹிஜ்ரி - 973 .ஜமாஅதுல் ஊலா
கி ,பி = ஆண்டு
பிறப்பு1492இறப்பு1565 (அகவை 72–73)
இவர்களின் பெயர் : அப்துல் வஹ்ஹாப்  அஷ்ஷஃரானி(ரஹ்மதுல்லாஹி அலைஹி ) என்பதாகும் ஆனால் மக்கள் மத்தியில் மிக பிறபலமாக பேசப்பட்ட பெயர் : இமாம்  அஷ்ஷஃரானி என்று அழைக்கப்பட்டார்.
ஊர் : மிஸ்ர் ( எகிப்த் ) சேர்தவர்கள் .
மத்ஹப் : ஷாஃபீ
இவர்கள் அஹ்லே சுன்னத் ஜமாஅத் கொள்கையை தெளிவாக விளக்க கூடிய அதிகமான கிதாபுகள் எழுதினார்கள் அதிலும் குறிப்பாக ஆன்மீகம் சம்மந்நமான பல கிதாபுகள் எழுதிவுள்ளார்கள் .
ஆன்மீகம் சம்மந்தமாக பல கிதாபுகள் எழுத காரணம் :;
ஆன்மீகம் என்பது இஸ்லாத்திற்கு முறணானது என்று மக்கள் தவறாக விளங்கிவைத்து இருந்த அந்த கருத்தை மாற்றி ஆன்மீகம் என்பது இஸ்லாமிய ஷரீஅத்திற்க்கு உட்பட்ட ஒன்றுதான் .
ஷரீஅத்தை உயிரோட்டம் உள்ளதாக ஆக்க வேண்டும் என்றால் அதற்கு ஆன்மீக ஞானம் அவசியம் என்பதை படிப்பறிவு கூட இல்லாத மக்கள் விளங்குகிற விதத்தில் எழுதினார்கள் .
இதை பார்த்து ஜீரனீக்க முடியாத  வழிகெட்ட கொள்கைக்கு சொந்தகார்ர்கள் . ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரனி
(ரஹ்மதுல்லாஹி அலைஹி)  அவர்களை பிடிக்காதவர்கள் அதாவது ஆன்மீகத்தை ஏற்று கொள்ளதவர்கள் . இவர் ஆன்மீகம் பற்றி  மக்களுக்கு மத்தியில் அழகாக சொல்லி தெளிவு படுத்துகிறார் . இதை இப்படியே விட்டு விடுவேமே ஆனால் மக்கள் அனைவரும் ஆன்மீகத்தில் நுழைந்து விடுவார்கள்  . எனவே இவர் கூறுகிற ஆன்மீக சிந்தனையை விட்டு மக்களை அப்புர படுத்த வேண்டும் அதற்கு என்ன வழி என்று பார்தார்கள் .இமாம் அவர்களின் கிதாபுகளில் அவர்கள் சொல்லாத விசையங்களை , அவர்கள் சொன்னது போல் இடை சறுகள் செய்தார்கள் .
 எனவே இடை சறுகள் சொய்யப்பட்டதாக இமாம் அவர்களின் கிதாபுகள் உள்ளக்கப்பட்டது
இமாம் அஷ்ஷஃரானி அவர்களுடைய தப்காதுல் குப்ரா மட்டும் மல்ல   மற்ற கிதாபுகள்  இடை சறுகள் செய்யப்பட்டுள்ளது .
இமாம் அஷ்ஷஃரானி அவர்கள்  கிதாபின் முன்னுறை பில் கூறுகிறார்கள் ::
قال المؤلف في المقدمة : "وبعد فهذا كتاب لخصت فيه طبقات جماعة من الأولياء الذي يقتدى بهم في طريق الله عز وجل من الصحابة والتابعين إلى آخر القرن التاسع وبعض العاشر،
இமாம் அஷ்ஷஃரானி அவர்கள் ஸஹாபாகளில் இருந்து , தாபியீன்கள் ,தபவு தாபீயீன்கள், 9 - நூற்றாண்டு ,10 நூற்றாண்டு ஆரம்ப பகுதி வரை வாழ்ந்த இறைநேசர்களின் வாழ்கை வலாற்றை சுருக்கமாக எழுதிவுள்ளேன் .
இந்த கிதாபை கோர்வை செய்த்தின் நோக்கம் :::


இந்த தபகாதுல் குப்ரா - வை நான் கோர்வை செய்த்தின் நோக்கம் ,ஆன்மீக பாதையில் செல்பவர்களுக்கு அந்த நல்லடியார்களின் சிறப்புகலை பற்றி அறிந்து கொள்ளட்டும் .இந்த இறைநேசர்களின் வாழ்கையில் நடந்த நிகழ்சிகளை அனைத்தும் சொல்ல வில்லை . மாறாக அவர்களின் வாழ்கையில் நடந்த முத்து போன்ற கருத்துகலை மட்டும் தேர்வு செய்து எழுதிவுள்ளேன்.
وكذلك لا أذكر من أحوالهم في بداياتهم إلا ما كان منشطا للمريدين كشدة الجوع والسهر ومحبة الخمول وعدم الشهرة ونحو ذلك
அவ்வாறே ஆன்மீக பாதையில் வருபவர்களுக்கு ஆர்வம் ஊட்டக்கூடிய வரலாறுகளையும்  மட்டும் எழுதிவுள்ளேன் .

وكذلك لا أذكر من أحوالهم في بداياتهم إلا ما كان منشطا للمريدين كشدة الجوع والسهر ومحبة الخمول وعدم الشهرة ونحو ذلك
அவ்வாறே ஆன்மீக பாதையில் வருபவர்களுக்கு ஆர்வம் ஊட்டக்கூடிய வரலாறுகளையும்  மட்டும் எழுதிவுள்ளேன் .
எந்த மாரியான சிந்தனைகள் :
1 - கடுமையான பசி  நிலையிலும் இறை வணக்கத்தில் திலைத்து இருப்பார்கள்
2 - இரவு முழுவதும்  இறை வணக்கங்களில் கழித்து இருப்பார்கள்
3 - பிறப்பள படுத்துவதை விரும்ப மாட்டார்களே
4 - பிறபளமாக இருப்பதை விருப்பாத நிலையில்
இப்படி பட்ட விசையங்களை மட்டும் சொல்லி இருக்கிறேன் .
பிஜெ குழப்பவாதி சொல்வதை போல் வாசகம் " அத்தபாகாதுல் குப்ரா "வில்
ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரானி (ரஹ்) அவர்களால் எழுதப்பட்டதா ? அல்லது இடை சொர்களாக சேர்கப்பட்டதா ? இட்டு கட்டப்பட்டதா ?
என்று ஆராயிந்து பார்தால் அந்த வாசகம் இடை சொர்களாக சேர்கப்பட்டது .இட்டு கட்டப்பட்டது .
இப்போது இதை நாம் சொல்ல வில்லை பல ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களிடம் வஹ்ஹாபிகள் விவாதித்து அதில் வஹ்ஹாபிகளால் அது உண்மையான வாசகம் தான் என்று நிரூபிக்க முடியாமல் போனது .....
அது மட்டும் மல்ல , வலிமார்களின் கண்ணியத்தை எப்படியவது இஸ்லாமிய சமூகத்தில் இருந்து எடுத்து விட வேண்டும் என்று எண்ணிய அந்த வஹ்ஹாபிகளின் சூழ்சிகள் அனைத்தும் தோல்வில் முடிந்தது ....
ஆனால் இன்று ஏதோ தான் கண்டுபிடித்தது போல பிஜெ என்ற குழப்பவாதி சவால் விடுகிறார் ஆனால் உண்மையில் இவர் தன்னுடைய வஹ்ஹாபி கொள்கை கொண்ட முன்னோர்கள் சொன்னதை தூசி தட்டி போடுகிறார் என்பது உண்மை !
தலைமுறை தலைமுறையாக வலிமார்களுக்கு கண்ணியம் செய்வதை தாங்கி கொள்ள முடியாத வஹ்ஹாபிகள் மக்கள் வலிமார்கள் மேல் வைத்துல்ல கண்ணியத்தையும் ,
நல்ல எண்ணங்களையும் , பால்படுத்த நினைத்தார்கள் அதற்காக பல வழிமுறைகளை கையான்டார்கள் அதில் ஒன்றுதான் இறைநேசர்கள் எழுதிய கிதாபுகளில் அவர்கள் கூறுவதுபோல சில வாசகங்களை இனைத்து விடுவது ,அதை படிக்கும் போது என்ன இப்படி எல்லாம் எழுதியிருகிரார்கள்
எப்படி வலிமார்களாக இருக்கமுடியும் ? என்று மக்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள் என்பதற்காக இடை சருகுதலாக சேர்க ஆரம்பித்தார்கள்
 அப்படி இடைசருகுதல் செய்யப் பட்டதுதான்        " அத்தபாகாதுல் குப்ரா  "வில்  உள்ள அந்த நிகழ்சி
ஏன்என்றால்
இமாம் ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் மிக பெரிய இறைநேசர் ,மிக பெரிய அறிவு திறன் கொண்ட மகான் ,இறைஞான கடலில் மூழ்கி திலைத்தவர் என்று மக்கள் வைத்திருக்கிற மிக பெரிய மரியாதை  பார்த இந்த வஹ்ஹாபிகள் தாங்கி கொள்ள முடியாமல் ! இவருக்கு இவ்வளவு நல்ல பெயரா ? ,இவருக்கு இப்படி நல்ல பெயர்  இருக்க கூடாதே என்று அவர் எழுதிய கிதாபில் இப்படி ஒரு கருத்தை இனைத்து விட்டார்கள் .
இதோ பாருங்கள்
இமாம் ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் மிக பெரிய இறைநேசர் ,மிக பெரிய அறிவு திறன் கொண்ட மகான் ,இறைஞான கடலில் மூழ்கி திலைத்தவர் என்றெல்லாம் கூறுகிறீர்கள் ஆனால் அவர் இப்படி எல்லாம் எழுதிஇருக்கிறார் அவர் எப்படி நல்லவறாக இருக்க முடியும் ?
அவர் எப்படி வலியுல்லாவாக இருக்க முடியும் ?
என்று மக்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள் என்பதற்காக இடை சொற்கள் சேர்கப்பட்டது

இடை சருகதலாக சேர்கப்பட்டது என்பதற்க்கு என்ன ஆதாரம் இருக்கிறது ? என்று நீங்கள் கேட்களாம் !!!

அதற்கு பல ஆதாரங்கள் இருக்கிறது அதில் சிலதை மட்டும் இங்கே பதிவு செய்கிறோம்
ஏன் என்றால்
العاقل بالاشارد
புத்திசாலிகளுக்கு சைக்கினையே போதும்
முதல் ஆதாரம் = ------
" தப்காதுல் குப்ராவை  " எழுதிய இமாம்
ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரனி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)  அவர்கள் கூறி உள்ளார்கள்  ‘’தப்காதுல் குப்ராவில்’’
أو كان يدل على تعظيم الشريعة
ஷரிஅத்திற்க்கு உட் பட்ட விசையத்தை மட்டும் தான் கூறிவுள்ளேன் . எந்த விசையத்தை சொன்னால் மார்கத்திற்கு கண்ணியம் கிடைக்குமோ அந்த விசையத்தை மட்டும்தான் சொல்லி இருக்கிறேன் .ஏன் என்று தெரியுமா ?
அதற்கு உரிய காரணத்தையும் சொல்லி தருகிறார்கள்.
دفعا لمن يتوهم في القوم
இந்த சமூகத்தில் சில நபர்கள் உள்ளார்கள் , அவர்கள் என்ன நினைகிறார்கள் என்றால் !
  أنهم رفضوا شيئا من الشريعة حين تصوفوا
இந்த ஸூபியாக்கள் இருக்கிறார்கள் அல்லவா .இவர்கள் ஆன்மீகத்தில் நூழைந்தவுடன் " ஷரீஅதை " விட்டு விடுகிறார்கள் என்று குறை சொல்பவர்கள் நம்மில் சில நபர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் எண்ணம் தவறானது . என்பதை காட்டுவதற்காக !!!இந்த கிதாபில்  ஷரீஅத்திற்கு முரணான எந்த விசையகளும்  இருக்காது ,இடம் பெறாது .
என்று கூறியது மட்டும் அல்லாமல் அதற்கு உதாரணத்தையும் காடினார்கள் :
كما صرح به ابن الجوزي في الغزالي بل في حق الجنيد والشبلي فقال في حقهم : ولعمري لقد طوى هؤلاء بساط الشريعة طيا فيا ليتهم لم يتصوفوا".
இப்னு ஜவ்ஸி என்பவர் இமாமுனா கஸ்ஸாலி ( ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்களுடைய விசையத்திலும் ,
ஜூனைதி பக்தாதி ( ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்களுடைய விசையத்திலும்
ஷிப்லி ( ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்களின் விசையத்திளும்
,இவர்கள் எல்லாம் ஆன்மீகத்தில் நூழையாமல் இருந்திருத்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று குறை கூறிவுள்ளார்கள்.
சில நபர்கள் ஆன்மீகத்தில் இருப்பவர்களை தவறாக விளங்கி வைத்து இருப்பதால்
இந்த கிதாபில் சொல்லப்படுகிற விசையம் ஷரீஅத்திற்கு உட்பட்டதாகவே மட்டும் இருக்கும் .ஷரீஅத்திற்கு கண்ணியம் அளிக்கக் கூடியதாகவே இருக்கும் என்று " தப்காதுல் குப்ரா " ஆசிரியர்
ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரனி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)  அவர்களே கிதாபின் முன்னுறையிலே கூறிவுள்ளார்கள் .அப்படி இருக்க
இந்த ஒரு விசையமே போதும் "" பெண்பார்க போனதாக ஒரு நிகழ்சி  சொல்லப்படுகிறதே  ""
அது இடை சறுகுதலாக சேர்கப்பட்டது தான் என்பதற்கு .
ஏன் என்றால் அந்த  நிகழ்சி  ஷரீஅத்திற்கு முரணான ஒன்று தானே !!!
 ஷரீஅத்திற்க்கு முரணான எந்த விசையமும் இந்த கிதாபில் இருக்காது ,இடம் பெறாது என்று உத்திரவாதம் ,கேரண்டி கொடுத்துவிட்டார்கள் அல்லவா !!! அப்படி இருக்கும் போது பெண் பார்க் போனதாக  சொல்லப்படுகிற விசையம் ஷரீஅத்திற்கு முரணானதா ? இல்லையா ? என்று கேட்டாள் நாமே சொல்வோம் அந்த வரலாறு ஷரீஅத்துக்கு முறனாணது தான் என்று அப்படி இருக்கும் போது எப்படி இந்த நிகழ்சியை கிதாபில் கொண்டு வந்து இருப்பார்கள் .
இது ஒன்றே போதும் இடை சறுகள் செய்யப்பட்டது என்று சொல்ல

தபகாதுல் குப்ரா வில் இந்த ஒன்று மட்டும் இடை சருகள் செய்ய வில்லை மாறாக பல வரலாறுகள் ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரனி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)  அவர்கள் கூறியதாக வலிமார்களின் வரலாறு சொல்லப்படுகிறது . அதில் சிலதை நாம் பார்போம் ......
இரண்டாவது ஆதாரம் ::
ஆரிஃபு பில்லாஹ், அல்லாமா அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரனி (ரஹ்மதுல்லாஹி அலைஹி)  அவர்கள் எந்த  கிதாபை எழுதினாலும் அந்த கிதாபு ஆரம்பிக்கப்பட்ட இன்னும் முடிக்கப்பட்ட தேதியை குறிப்பிடுவார்கள் இது அவர்களின் வழமையான ஒன்று .
அதனால் ஏற்பட்ட நல்ல விசையத்தை  பாருங்கள் .
இமாம் அஷ்ஷஃரானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தபகாதுல் குப்ராவில் முடிவுறை என்ற தலைப்பில்
ஹிஜ்ரி - 952 ,ரஜப் மாதம் - பிறை - 15 ல் முடித்து விட்டேன் என்று கூறிவுள்ளார்கள் .
அப்படியானால் ஹிஜ்ரி - 952 ரஜப் பிறை -15 வரை நடந்த நிகழ்வுகள் மட்டுதான் இடம் பெறும் மாறாக ஹிஜ்ரி 952 ரஜப் பிறை 15 க்கு பின்னால் நடை பெற்று   உள்ள எந்த நிகழ்வும் இடம் பெறாதுதானே அது தானே உண்மை .அப்படி இடம் பெற்றால் அதை நாம் என்ன சொல்லுவோம்
1 - அது இட்டுகட்ட பட்ட செய்தி தான்  என்று கூறுவோமா இல்லையா !! என்று நம்மிடத்தில் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு பதில் = ஆம் என்றுதானே கூறுவோம் .
சரி வாங்க ஒரு நிகழ்சியை பார்போம் :;
இமாம் அஷ்ஷஃரானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தமது தபகாதுல் குப்ராவில் ஒரு இறைநேசரின் வரலாற்றை சொல்லுகிறார்களாம் ??
சையது ஹரீயல் பைஃயீர் என்ற இறைநேசரை பற்றி குறிப்பிடுகிறார்கள் அதாவது அந்த இறைநேசர் ஹிஜ்ரி-953 , ஷவ்வால் மாதம் மரணித்தார்கள் என்று எழுதிவுள்ளார்கள் .
ஆதாரம் : தபகாதுல் குப்ரா : பக்கம் =147 , பாகம் = 2 ,
இங்கு என்ன குழப்பம் என்றால் .953 - ஷவ்வால் ,ஒரு வருடம் மூன்று மாதங்களுக்கு முன்னால் நடக்க இருக்கும் ஒரு நிகழ்சியை ஹிஜ்ரி-952 ரஜப் மாதம் எழுதிவைத்தார்களாம் ?? இப்படி எழுதுவதற்கு சாதியமா ?
இதுவே போதும் அவர்கள் கிதாபில் இடைசறுகள் செய்து உள்ளார்கள் என்பதற்கு என்று நினைக்கிறோம் .
ஆதாரம் = 3 :::
அஷ்ஷேஹ் தாரிக்  அப்துல் காதிர் சுப்கீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் வாழ்கையில் நடந்ததாக  ஒரு வரலாறு சொல்லப்படுகிறது அல்லவா ? அந்த வரலாறு சொல்வதற்கு முன்னும் ,பின்னும் அவர்களை பற்றி புகழ்ந்து கூறப்படுகிறது . இந்த குழப்பவாதிகள் சொல்வது போன்ற நிகழ்சி நடைப் பெற்று இருந்தால் ? அப்பேற்பட்ட அந்த இறைநேசறை பற்றி ஏன் புகழ்ந்து சொல்லவேண்டும் ! அப்படி ஒரு நிகழ்வு நடை பெற்றதாக வைத்துக் கொண்டால் அவர் எப்படி இறைநேசர்களின் பட்டியலில் இடம் பெறுவார் நாம் அவரை இறைநேசர் என்று கூறுவோமா ? நாமே கூறமாட்டோம் என்று இருக்க இமாம்அஷ்ஷஃரானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எப்படி இறைநேசர்பட்டியலில் சேர்த்து மட்டும் அல்ல ? அவரை பற்றி புகழ்ந்து எழுதி இருப்பாறா ? சிந்தனை செய்து பாருங்கள் ....
அப்போ இது இட்டுகட்ட பட்டதுதானே .....

ஆதாரம் நான்கு = 4 :::
அஷ்ஷேஹ் தாரிக்  அப்துல் காதிர் சுப்கீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் வாழ்கையில் நடந்ததாக  ஒரு வரலாறு சொல்லப்படுகிறது அல்லவா இதில் அதிகமான இலக்கண பிழைகள் காணப்படுகிறது .உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் ?
அப்போது இலக்கண பிழை இல்லாமல் இடை சறுகள் செய்யலாமா ?
செய்ய கூடாதுதான் ஆனால் இங்கு பிறச்சனை என்னவென்றால் தபகாதுல் குப்ரா முழுவதும் இலக்கண பிழைகள் காணப்பட வில்லை இந்த இட்டுகட்ட பட்ட வரலாறை தவிர சரி இமாம் அவர்கள்தான் எழுதி இருந்தால் அந்த கிதாபில் பல இடங்களில் இலக்கண பிழை காணப்பட வேண்டுமா ? இல்லையா ? அது எப்படி இந்த இட்டுகட்ட பட்ட சம்பவத்தில் மட்டும் ஏறக்குறைய 10 வரிசைகள் உள்ளன அதில் 3 - க்கும் மேல் இலக்கண பிழைகள் இருக்க ! இமாம் அஷ்ஷஃரானி ரஹ்மதுல்லாஹி அலைஹி  அவர்கள் அந்த இட்டுகட்ட பட்ட  வரலாறு எழுதி  உண்மை என்றால் கிதாபு முழுவதும் எத்தனை இலக்கண பிழை வரவேண்டும் அப்படி வேறு எந்த வரலாறிலும் இலக்கண பிழை காணப்பட வில்லை !!
இது போதாத இந்த வரலாறு இட்டுகட்ட பட்ட வரலாறு என்று அறிவதற்க்கு ....
அல்லாஹ் தனது திருமறை குர்ஆன் ஷரீஃபில் கூறுகிறான் ::
وقل جاء الحق وزهق الباطل انّ الباطل كان زهوقا
சத்தியம் வந்து விட்டது .பொய் அழிந்து விட்டது .பொய் அழியக் கூடியதாகவே இருக்கிறது என்று கூறுவீர்களாக ( 17 = 81 )

 சரி இமாம் அஷ்ஷஃரானி
 அவர்கள் சொல்லாத ஒரு செய்தியை சொல்லி விவாதத்திற்க்கு அழைத்தால் எப்படி வீவாதத்திற்க்கு வரமுடியும் நீங்களே கூறுங்கள்


அல்லாஹ் நம் அனைவரையும் இது போன்ற வழிகெட்ட கொள்கை கொண்டோர்களை விட்டும் பாதுகாப்பானாக ஆமீன் ....... .

இஸ்லாத்தை விட்டு வெளியேறியோர்


வெள்ளிமேடை منبر الجمعة

தமிழ் பேசும் நிலமெங்கும் தரமான ஜும்ஆ உரைகள்



இஸ்லாத்தை விட்டு வெளியேறியோர்


இஸ்லாமிற்கு சில எல்லைகள் உண்டு. அதற்குள்ளிருப்பவர் மட்டுமே முஸ்லிமாக இருக்க இருக்க முடியும்.

அதை கடப்பவர் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை இழப்பார்.

வார்த்தை சித்தர் வலம்புரிஜான் இதைப் புகழ்ந்து பாராட்டுவார். ஒரு சரியான மார்க்கம் என்பது இப்படித்தான் இருக்க முடியும். நீ எதை வேண்டுமானாலும் செய்து கொள் அல்லது கருதிக் கொள் உன் விருப்பப் படி நடந்து கொள் , சாமியை கும்பிடுகிறாயா சரி! இல்லை ஏசுகிறாயா அதுவும் சரி என்பது ஒரு உண்மை சமயத்தை அடையாளமாக இருக்க முடியாது என்பார்.

تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا وَمَنْ يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُوْلَئِكَ هُمْ الظَّالِمُونَ(229)

وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ(4

இந்த வகையில் தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை தமிழகத்தில் முஸ்லிம்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிற – திரு பிஜே வை இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டார் என்று அறிவித்திருக்கிறது.


கருத்து வேறுபாடுகள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது தான், ஆனால் அவ்வேறுபாடுகள் மார்க்கத்தை பலப்படுத்தும் வகையில் அமைந்திருக்க வேண்டும். தக்வாவை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும். திரு பிஜே வின் கருத்து வேறு பாடு மார்க்கத்தை பலவீனப்படுத்துவதாகவும் அதன் அடிப்படைகளை ஆட்டங்கானச் செய்வதாகவும் இருக்கிறது,


சாமாணிய மக்கள் பேச்சுக் கவர்ச்சியில் மயங்கி அதிகம் யோசிக்காமல் இத்தீய சக்தியின் பின்னே சென்று விடுகிறார்கள், அதன் மூலம் தமது அடிப்படையான ஈமானை இழந்து வருகிறார்கள், மார்க்கத்தை முஸ்லிம் பெயரை வைத்துக் கொண்டே தகர்த்து வருகிறார்கள்,


இன்றைய முஸ்லிம் சமூகத்தில் விஷமிக்கிருமிகளுக்கான அத்தனை அம்சங்களோடு இயங்கி வருகிறார்கள், இந்தச் சூழலில் மக்களை முறையாக எச்சரிப்பதற்காக ஜமாத்துல் உலமா இப்படி ஒரு தீர்மாணத்தை அறிவித்திருக்கீறது,  இது அவசர கதியில் எடுக்கப்பட்ட முடிவல்ல, ஆழ்ந்த சிந்தனைக்கும் போதிய நிதானத்திற்கும் பிறகும் எடுக்கப்பட்டிருக்கிற முடிவாகும்.


இதற்கான நியாயயத்தை புரிந்து கொள்ள வேண்டியது முஸ்லிம் சமுகத்தின் கடமையாகும்.


இது போல ஒரு இழி நிலைக்கு வேறு யாரும் ஆளாகிவிடக் கூடாது, அது போல இவரை விட்டு இவர் சார்ந்த அமைப்பை விட்டு விலகி நிற்கவேண்டும்.


அவரது அமைப்பான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு என்பது ஒரு இஸ்லாமிய அமைப்பு அல்ல, அது வேறு ஒரு புதிய மதம் என்பதை சமுதாய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


இதை நமக்கு பக்க்கத்திலிருக்கிற சமூகத்திற்கும், அதிகாரிகளுக்கும் நாம் அறிவித்து விட வேண்டும். அப்போது தான் இந்த விஷமிகளினால் ஏற்படுகிற ஆபத்துக்களிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும். நமது அடுத்த தலைமுறையின் ஈமானையும் பாதுகாக்க முடியும்.


இவ்வமைப்பினர் ஒரு புதிய மதத்துக்காரர்கள் என்பதை சரியாக நாம் மற்றவர்களுக்கு புரிய வைக்காத வரை இவர்களுடைய பித்னாவிலிருந்து நாம் தப்பிக்க முடியாது,


திரு  பிஜே முஸ்லிம் அல்ல, அவர் ஒரு புதிய மதத்தின் நிறுவனர் என்று நாம் ஏன் கூறுகிறோம் என்றால்


அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று அவர் கூறுகீறார்,


முஸ்லிம்கள் உருவமற்ற ஏக இறைவனை வணங்குகிறார்கள் என்பது சின்னக் குழந்தைக்கும் தெரிந்த இஸ்லாத்தின் அடிப்படை உண்மையாக இருக்கிற போது –

பிஜே கூறுகிறார்.

•         அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு, ( பிஜே தர்ஜமா பக் 1643)

•         அந்த உருவம் மனிதனின் உருவத்தைப் போன்று இருக்கிறது

•         இறைவன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்வான்,

•          இறைவனிடம் மாற்றங்கள் ஏற்படும்

•         இறைவனுக்கு பல உருவமுண்டு

•         அந்த உருவங்களை ஒவ்வொருவரும் கற்பனை செய்யலாம் என்றும், அவரவர் கற்பனை செய்த உருவங்களில் மறுமையில் இறைவன் காட்சியளிப்பான்


பார்க்க : ஏகத்துவம். மார்ச் 2009, பக்கம் 5.

17,18-7-2010 அன்று சென்னை விவாதம்


இறைவனுக்கு உருவமுண்டு என்றுகூறுவது யூதர்களின் கருத்து. தூயஇறைக்கோட்பாட்டை கொண்ட முஸ்லிம்களிடத்தில் அந்த யூதக்கருத்தை கொண்டு வந்து திணிக்கிறார்பிஜே.

புகாரியில் ஒரு ஹதீஸ் வருகிறது.

عَنْ عَبْدِ اللَّهِ أَنَّ يَهُودِيًّا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا مُحَمَّدُ إِنَّ اللَّهَ يُمْسِكُ السَّمَوَاتِ عَلَى إِصْبَعٍ وَالْأَرَضِينَ عَلَى إِصْبَعٍ وَالْجِبَالَ عَلَى إِصْبَعٍ وَالشَّجَرَ عَلَى إِصْبَعٍ وَالْخَلَائِقَ عَلَى إِصْبَعٍ ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ ثُمَّ قَرَأَ وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ

ஒரு யூதர் பெருமானாரிடம் வந்து “அல்லாஹ் வானங்களை ஒரு விரலிலும்,பூமிகளை ஒரு விரலிலும், மலைகளைஒரு விரலிலும் , மரங்களை ஒருவிரலிலும், மற்ற படைப்பினங்களை ஒருவிரலிலும் வைத்துக் கொண்டு பின்பு.நானே அரசன் என்று கூறுவான்” என்றுசொன்னார்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள்கடைவாய்ப் பற்கள் தெரியுமளவு சிரித்துவிட்டு “ அவர்கள் அல்லாஹ்வை எப்படிமதிக்க வேண்டுமோ அப்படிமதிக்கவில்லை. எனும் யூதர்களைப்பற்றிய 6;91 ஆவது வசனத்தைஓதிக்காட்டினார்கள். (புகாரி 7414)

இந்த ஹதீஸுக்கு விளக்கம் கூறுகிற  இமாம் குர்துபீ (ரஹ்) அவர்கள்பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள்.

قَالَ الْقُرْطُبِيّ فِي الْمُفْهِم قَوْله " إِنَّ اللَّه يُمْسِك " إِلَىآخِرالْحَدِيث،هَذَا كُلّه قَوْل الْيَهُودِي وَهُمْ يَعْتَقِدُونَ التَّجْسِيم وَأَنَّاللَّه شَخْص ذُوجَوَارِح كَمَا يَعْتَقِدهُ غُلَاة الْمُشَبِّهَة مِنْ هَذِهِ الْأُمَّة،


இந்த கூற்று யூதனின் கூற்றாகும்.யூதர்கள் இறைவனுக்கு உருவமுண்டுஎன்றும், இறைவனுக்கு உறுப்புக்கள்இருக்கிறது என்றும் நம்பிக்கைகொண்டவர்கள் ஆவர். இந்தஉம்மத்திலும் இது போன்ற வரம்பு மீறியகூட்டத்தினர் இருக்கிறார்கள்.

நூல் : முஃப்ஹிம்

மஹ்மூது சுப்கீ (ரஹ்) அவர்கள்“இத்திஹாபுல் காயினாத்” எனும் தனது நூலில் கூறுகிறார்.

( மறைவு ஹிஜ்ரி 1352 - இவர் அல்அஜ்ஹர் பல்கலைக் கழகத்தைச்சார்ந்தபெரும் இஸ்லாமிய அறிஞரும், எகிப்தின்ஷரீஆ அமைப்பின் நிறுவனரும் ஆவார் )


وقال محمود خطاب السبكى في كتابه إتحاف الكائنات ببيان مذهب السلف و  الخلف فى المتشابهات-

وقد قام إجماع السلف والخلف على أن من اعتقد أن الله تعالىفي جهة فهو كافر  كماصرح به الحافظ العراقي وبه قالأبوحنيفة ومالك والشافعي وأبوالحسن الأشعري والباقلاني



"அல்லாஹ் ஒரு திசையில் இருக்கிறான்என்று நம்புகிறவன் காபிர், இதை ஹாபிழ்இராக்கி அவர்கள்  கூறியுள்ளார்கள்.  இதுவே இமாம் அபூஹனீபா, இமாம்மாலிக், இமாம் ஷாபிஈ, இமாம் அபுல்ஹஸன் அல்அஷ்அரி, பாகில்லானி (ரஹ்) ஆகியோரின் கருத்தாகும்”.


இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின்கருத்து.


قال الشافعي: لايكفرأحد من أهل القبلة واستثنى من ذلك :المجسم ومنكرعلم الجزئيات

- الأشباه والنظائر - للشافعي - (1 / 744(


கிப்லாவை ஏற்றுக் கொண்டவர்கள்யாரையும் காபிராக்கக் கூடாது என்று கூறுகிற இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள், அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது என்று சொல்கிறவனையும் அல்லாஹ்வுக்குச் சின்னச் சின்னவிசயங்கள் தெரியாது என்று சொல்கிறவனையும் காஃபிர் என்று கூறினார்கள்.

நூல் : அல்அஷ்பாஹ் வந்நழாயிர் (1/744)


திரு பிஜே முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் மற்ற நபுமார்களையும் சாதாரணாம இழிவு படுத்தி தொடர்ந்து இழிவு படுத்தி பேசிக் கொண்டிருக்கீறார், எந்த அளவுக்கென்றால் அவரது தொண்டர்கள் முஹம்மது (ஸல்) அவர்களையும் மற்ற நபிமார்களையும் சர்வ சாதாரணமாக குறை சொல்லிப் பேசுகிற அளவுக்கு துணிச்சல் பெற்று விட்டார்கள்,


நபித்தோழர்கள் தம்மை அறியாமல் நுனுக்கமான ஷிர்க் வைத்திருந்தார்கள் , முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு யூதன் சொல்லிக் கொடுக்கும் வரை இதை அறியாமல் இருந்தார்கள் என பிஜே தனது உரை ஒன்றில் கூறுகிறார்.


வீடியோ பதிவு :


“ ஒரு யூதர் பெருமானாரிடம் வந்து ஒரு பயங்கரமான குற்றச் சாட்டை முன்வைக்கிறார். உன்னுடைய உம்மத்தினர் மா ஷாஅல்லாஹ் வ ஷிஃத என்று சொல்வதன் மூலம் இணைக் கற்பிக்கிறார்கள். கஃபாவின் மீது சத்தியமாக என்று சொல்லி இணைக்கற்பிக்கிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். உடனே ரசூலுல்லாஹ் என்ன செய்கிறார்கள். ஆகா ! ஆமா ! நுனுக்கமான இந்த விசயத்தை நாம கவனிக்காம விட்டுட்டோமே! அப்ப அவ்வளவு சஹாபாக்களுக்கும் அது ஷிர்க் என்று விளங்கல! ரஸூல் (ஸல்) அவர்களும் இதை கவனிக்காம இருந்துட்டாங்க!”


இதில் உண்மை என்ன வென்றால்


ஒரு ஹதீஸ் இப்படி வருகிறது





سنن النسائي 3713 –


ஜுஹைனா குடும்பத்தைச் சேர்ந்தகுதைலா என்ற பெண்மணிஅறிவிக்கிறார்.


ஒரு யூதர் பெருமானார் (ஸல்)அவர்களிடம் வந்து “ நீங்கள் இணைவைக்கிறீர்கள், அல்லாஹ் நாடினால்,நீயும் நாடினால் என்று சொல்கிறீர்கள்.கஃபாவின் மீதாணையாக என்றும்சொல்கிறீர்கள் என்று கூறினார். அப்போதுநபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம்“சத்தியம் செய்வதானால் கஃபாவின்இறைவன் மீதாணையாக என்றுசொல்லுங்கள் அவ்வாறே இறைவன்நாடினால் என்று சொல்லி விட்டு பிறகு நீநாடினால் என்று சொல்லுங்கள் எனக் கட்டளையிட்டார்கள்.  (நஸயீ : 3713.


மாஷா அல்லா வ ஷிஃத என்று இப்போது ஒரு வர் சொன்னாலும் அது ஷிர்க் ஆக ஆகாது, இது ஷிர்கும் அல்ல, இந்த வாசகத்தை தடுக்கும் உத்தரவு எதுவும் இந்த ஹதீஸ்லி இல்லை, இது மாதிரியான பல வாசகங்கள் குர் ஆனில் இடம் பெற்றுள்ளனர். அல்லாஹ் தன்னையும் இறைத்தூதரையும் வாவு இட்டு இணைத்துக் கூறியுள்ளான்,



பத்ஹுல் பாரியில் அபூஜஃபர் தாவூதி (ரஹ்) அவர்கள் கூறுவதாக குறிப்பிடப்படுகிறது.


عَنْ أَبِي جَعْفَرالدَّاوُدِيِّ قَالَ : لَيْسَ فِي الْحَدِيث الَّذِي ذَكَرَهُ نَهْيعَنْ الْقَوْل الْمَذْكُورفِي التَّرْجَمَة،وَقَدْقَالَ اللَّه تَعَالَى ( وَمَانَقَمُوا إِلَّاأَنْ أَغْنَاهُمْ اللَّهُ وَرَسُولُهُ مِنْ فَضْلِهِ ) وَقَالَ تَعَالَى ( وَإِذْ تَقُولُلِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْت عَلَيْهِ ) وَغَيْرذَلِكَ-

فتح الباري شرح صحيح البخاري – ابن حجر (19/ 9(


எங்களையும் கவனித்துக்கொள்ளுங்கள் என்ற அர்த்தமுடைய ராஇனா என்ற வார்த்தையை சஹாபாக்கள் பயன்படுத்தினார்கள். யூதர்கள் சூழ்ச்சியாக அதை தங்களது வழக்கில் திட்டும் வார்த்தையாக மாற்றிப் பயன்படுத்தினார்கள். அல்லாஹ் அதை தடுத்து நீங்கள் உன்ழுர்னா என்றவார்த்தையைப் பயன்படுத்துங்கள் என்று முஃமின்களுக்குச் சொன்னான். இதில்ராஇனா என்ற வார்த்தை தவறானதுஅல்ல என்ற போதும் யூதர்களின் சூழ்ச்சியை தடுப்பதற்காக அல்லாஹ்அந்த வார்த்தையை மாற்றினான்.அதுபோலத்தான் இந்த இடத்தில் மா ஷாஅல்லாஹ் வ ஷிஃத வைபெருமானார் (ஸல்) அவர்கள்மாற்றினார்கள்.


எதார்த்தம் இப்படி இருக்க, சஹாபாக்கள்ஷிர்க் வைத்திருக்க பெருமானார் (ஸல்) அதை அறியாமல் இருந்தார்கள் என யூதர்களைப் போலவே பிஜே வும்கூறுகிறார்.


இறைத்தூதர் முஹம்மது (ஸல்)அவர்களின் கடமையையும்அந்தஸ்தையும் ஒரு சேர படுகுழியில்தள்ளுகிற வார்த்தைகளை  சர்வசாதாரணமக  பேசி  இழிவு படுத்தும் பிஜேவின்  இப்பாதகச் செயலை இஸ்லாத்தின்துரோகிகள் கூட சிந்தித்திருக்கமாட்டார்கள்.


நபி (ஸல் அவர்கள் யுத்த களத்தில் பொய் சொல்லுவார்கள் என அதனால் தான் நமது ஆர்ப்பாட்டங்களுக்கு 500 பேர் வந்தாலும் 5000 பேர் வந்தார்கள் என்று சொல்லுகிறோம் என மிக பகிரங்கமாக கூறுகிறார்,


முஹம்மது நபி (ஸல்) அவர்களையே சகட்டு மேனிக்கு பந்தாடுகிறவர் மற்ற நபிமார்களை விட்டு வைப்பாரா?


இதே இன்னும் சில


·         தாவூத் (அலை) அவர்கள் தனதுஆட்சியைப் பயன்படுத்திஅடுத்தவரின் சொத்தைஅபகரித்தார்.  மொழிபெயர்ப்பு  8வது பதிப்பு 1374


·         யூசுஃப் (அலை) அவர்கள்அடுத்தவரின் மனைவியைவிபச்சாரம் செய்ய நாடினார்

·         (8 வது பதிப்பு 511)


·         ‘அல்லாஹ் தன் மீது சக்தி பெறமாட்டான்” என்றும் யூனுஸ்(அலை) அவர்கள் இறைவனின்வல்லமையை குறைத்துமதிப்பிட்டார்  (8 வது பதிப்பு 646)

 


இறைத்தூதரின் தரத்துக்கு குறைவானஒன்றை அவர்களுடன்சம்பந்தப்படுத்துவது மரணதண்டனைக்குரிய குற்றம் என சட்டஅறிஞர்கள் கூறுகின்றனர்.


قال الإمام أحمد بن حنبل : كل من شتم النبي صلى الله عليه وسلم ، أو تنقصه ، مسلمًا كان أو كافرًا فعليه القتل ، وأرى أن يقتل ولا يستتاب .


“நபியை ஏசுபவன், அல்லது குறைத்துபேசுகிறவன், முஸ்லிமாக இருந்தாலும்காஃபிராக இருந்தாலும் அவனுக்கு மரணதண்டைதான். அவன் கொல்லப்படவேண்டும். தவ்பா செய்யுமாறு அவனிடம்கோரப்படக் கூடாது என்பதே என்கருத்தாகும் என இமாம் அஹ்மது பின்ஹன்பல்( ரஹ்) கூறுகிறார்கள்.


وقال الإمام مالك : من سب النبي صلى الله عليه وسلم أو شتمه أو عابه أو تنقصه ، قُتِل ، مسلمًا كان أو كافرًا ولا يستتاب

நபியை திட்டுகிறவன், ஏசுகிறவன், குறைபேசுகிறவன் முஸ்லிமாக இருந்தாலும்.காஃபிராக இருந்தாலும்கொல்லப்படுவான்.  தவ்பா செய்யுமாறுஅவனிடம் கோரப்படக் கூடாது எனஇமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்கூறுகிறார்கள்.


இந்தச் செய்திகளை மேற்கோள்காட்டுகிறஇப்னுதைமிய்யா கூறுகிறார்கள






قُلْ أَبِاللَّهِ وَءَايَاتِهِ وَرَسُولِهِ كُنْتُمْ تَسْتَهْزِئُونَ   என்றவசணம் இறைத்தூதர் (ஸல்) அவர்களைவேணுமென்றோ, அல்லதுநகைச்சுவையாகவோ, குறைத்துபேசுகிறவன் காஃபிராகிவிட்டான் என்பதைஅறிவிக்கிறது.

நூல் : الصارم المسلول  

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நபித்துவத்தை முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லை

நாம் முஹம்மது நபி (ஸ;) அவர்களை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம். அவர்கள் என்ன சொன்னார்களோ அது அனைத்தும் சத்தியம் என்று நம்புகிறோம்.

மக்தப் மதரஸாக்களில் ஈமான் முபஸ்ஸலுக்கு முன் ஈமான் முஜ்மல் என் ஒன்றை நமக்கு உஸ்தாதுகள் கற்றுக் கொடுத்ததை மறந்திருக்கிற  மாட்டீர்கள்,

الأيمان المجمل : التصديق بكل ما جاء به محمد

.

அல்லாஹ்வை நம்புகிறோம் என்பதற்கு முன்னனதாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய வேண்டிய அடிப்படை ஈமானாகும் இது,

ஆனால் திரு பிஜே பெருமானார் தம்மிஷ்டத்திற்கு பல விச்யங்களை சொல்லி யிருக்கிறார்கள், அவை வஹி அல்ல , அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுக்கிறார்.

·         பணயத் தொகையை பெற்றுக் கொண்டுபத்ரு போர்க் கைதிகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் விடுவித்தனர். இறைவனின்கட்டளையை எதிர்பாராமல் இவ்வாறுசெய்தது தவறு என்று இறைவன் கண்டித்துதிருத்துகிறான்.  வஹிக்கு மாற்றமாககவனக்குறைவாக அவர்கள் எடுத்தமுடிவையும் இறைவன் ஏற்றுக்கொள்ளவில்லை. ( (நபித்தோழர்களும் நமதுநிலையும் 63)


அதே போல தன்னுடைய அறிவுக்கு சரியாகப் பட வில்லை என்பதன் பேரில் ஸஹீஹ் என்று முஸ்லிம் உலகம் ஏகோபித்து அங்கீகரித்துக் கொண்ட நபிமொழிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுக்கிறார்.

இன்று அவருடைய தொண்டர்களோ வெண்டைக்காயை முறித்துப் போடுவது போல ஹதீஸ்களை குப்பதை தொட்டிக் குள் அனுப்பிக் கொண்டிருக்கீறார்கள்,

புகாரி முஸ்லிம் என்று நாவரளக் கத்தியவர்கள் இன்று இமாம் புகாரியையை குப்பையில் தூக்கி போடு என்கிறார்கள், சூனியம் இருக்கிறது என்று நம்பிய அவரது ஈமான் சரியில்லை என்கிறார்கள்.  

திரு பிஜே ஏற்றுக் கொண்டது மட்டும் தான் ஹதீஸ் மற்றவை ஹதீஸ் அல்ல என்ற கொள்கையில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற மதம் செயல் படுகிறது,

இஸ்லாத்திலிருந்தும் ஹதீஸிலிருந்தும் சிலதை எடுத்துக் கொண்ட சீக்கிய பஹாய் மதங்களைப் போலவே இந்த தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பும் இஸ்லாத்த்திலிருந்து சிலதை எடுத்துக் கொண்டு செயல்படுகிறது,

திரு பிஜே குர் ஆனில் பிழை இருக்கிறது என்று கூறுகிறார்.

உலக் முஸ்லிம்களை மிகவும் திகைப்பில் ஆழ்த்திய விசயம் இது, முழுக்க நம்பத்தகுந்த வேதமான திருக்குர் ஆனை இப்படி கொச்சைப் படுத்திப் பார்க்கும் எண்ணம் முஸ்லிம் உம்மத்தை சிதைக்கும் சதித்திட்டத்தின் அடி வேறாகும்,

குர் ஆனில் இருக்கக்கூடிய சில எழுத்துக்களை  இவை தவறாக எழுதப்பட்டு விட்டது.  இவை  இருக்கக்கூடாது என்று பிஜே  கூறுகிறார்.


பிஜே மொழிபெயர்ப்பின் 10 ம் பதிப்பு பக்கம் 64 ல்எழுத்துப் பிழைகளின் பட்டியலை எழுதிவிட்டு சுமார்20 இடங்களில் குர் ஆனில் இருக்கும் எழுத்துக்களைஅவை குர்ஆனில் உள்ளவை அல்ல என்று கூறுகிறார்.


கவனியுங்கள் இதுகாரும் முஸ்லிம் உம்மத ஒன்று பட்டு நிற்கிற குர் ஆனில் திரு பிஜே நிகழ்த்தும் கைங்கர்யம் எதில் எத்தகைய சந்தேக விதையை விதைக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள்!


அவர் மீது கொண்டிருக்கிற மோகத்தில் ஒரு சிறு குழுவினர் எத்தனை தூரம் முஸ்லிம்களின் வழியிலிருந்து விலகிச் சென்று விட்டனர் என்பதையும் எண்ணிப் பாருங்கள்.


இவ்வாறு குர் ஆனின் எழுத்துக்களை குறை கூறுவது இஸ்லாமிய நோக்கில் குப்ராகும்.


காழி இயாழ் (ரஹ்) ஷிபா எனும் தமது நூலில் கூறுகிறார்கள்.


وَاعْلَمْ أَنَّ مَنِ اسْتَخَفَّ بِالْقُرْآنِ، أَوِ الْمُصْحَفِ، أَوْ بِشَيْءٍ مِنْهُ، أَوْ سَبَّهُمَا، أَوْ جَحَدَهُ، أَوْ حَرْفًا مِنْهُ، أَوْ آيَةً أَوْ كَذَّبَ به، أو بشيء منه.. أو بِشَيْءٍ مِمَّا صُرِّحَ بِهِ فِيهِ مِنْ حُكْمٍ، أَوْ خَبَرٍ، أَوْ أَثْبَتَ مَا نَفَاهُ، أَوْ نَفَى مَا أَثْبَتَهُ.. عَلَى عِلْمٍ مِنْهُ بِذَلِكَ، أَوْ شَكَّ فِي شَيْءٍ مِنْ ذَلِكَ، فَهُوَ كَافِرٌ عِنْدَ أَهْلِ الْعِلْمِ بِإِجْمَاعٍ.


குர் னையோ அதன்  உருவெழுத்தையோ அல்லதுஅதில் கொஞ்சத்தையோ மலிவாக கருதுகிறவர்அல்லது குர்ஆனை ஏசுபவர் மொத்த குர்ஆனையோஅதில் ஒரு எழுத்தையோ வசனத்தையோ மறுப்பவர்,குர் ஆனை பொய்ப்பிப்பவர், அல்லது அதில்தெளிவாக கூறப்பட்டுள்ள ஒரு சட்டத்தையோசெய்தியையோ பொய்பிப்பவர், அதில் இருக்கிறஒன்றை இல்லை என்று கூறுகிறவர், இல்லாதஒன்றை இருப்பதாக கூறுகிறவர்  அனைவருமே,அறிஞர்கள் அனைவரின் ஏகோபித்த முடிவின்படிகாஃபிராவார்கள்.



திப்யானில் இமாம் நவவி (ரஹ்) அவர்கள்கூறுகின்றார்





முஸ்லிம்கள் ஏகோபித்துள்ள  குர்ஆனின் ஒருஎழுத்தை மறுப்பவன் அல்லது அதில் யாரும் ஓதாதஒரு எழுத்தை தெரிந்து கொண்டேஅதிகப்படுத்துபவன்  காஃபிராவான் – (பாகம் 1 பக் 164).


இமாம் பத்ருத்தீனுல் ஐய்னீ (ரஹ்) அவர்கள்  உம்ததுல் காரியில் கூறியுள்ளார்கள்:


وقدأجمعواعلى أن من جحد حرفا مجمعاعليه منالقرآن فهوكافر-  عمدة القاري شرح صحيحالبخاري - (29 / 85(


“முஸ்லிம்கள் ஏகோபித்த குர்ஆனின் ஒரு எழுத்தைமறுப்பவன் காபிராவான் என்பதில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டுள்ளனர்

தப்ஸீர் தப்ரியில் இப்படி ஒரு செய்தி வருகிறது.


عن إبراهيم،عن عبدالله، قال: من كفربحرف منالقرآن، أوبآية منه، فقد كفربه كله - تفسيرالطبري -        (1 / 55)

“குர் ஆனில் ஒரு எழுத்தையோ அல்லதுவசனத்தையோ மறுப்பவன் முழு குர்ஆனைமறுத்தவனை போன்றவனே என அப்துல்லாஹ் பின்மஸ்வூத் ரலி கூறியுள்ளார்கள். (தப்ஸீ தப்ரீ)


முஸ்லிம்களின் ஏகத்துவக் கோட்பாடான உருவமற்ற ஏக இறைக் கோட்பாட்டை மறுத்து அல்லாஹ்விற்கு உருவமுண்டு என்று சொன்னது

பெருமானாரை முழுமையாக ஏற்க மறுப்பது, பிஜே ஒப்புக்கொண்ட ஹதீஸை மட்டுமே ஏற்க முடியும் என்று கூறுவது

அதே போல வருடந்தோறும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை

கழா தொழ வேண்டியதில்லை.

ஆடைக்கு மேல் உடலை மறைக்கும் ஒரு பேர்வையாக பர்தா அணியத் தேவையில்லை

அல்லாஹ்விற்கு எதிராக கேள்வி கேட்க சைத்தான் மலக்குகளை தூண்டிவிட்டான்,

சஹாபாக்கள் மார்க்கத்தின் கருத்துக்களை திசை திருப்பி விட்டனர்

பெருமானார் (ஸல்) அவர்களும் சஹாபாக்களும் தர்காக்களை ஜிராரத் செய்திருக்க, தர்காக்களை ஜியாரத் செய்வோரை சமாதி வழிபாடு செய்வோர் என்று கூறுவது போன்ற இன்னும் ஏராளமான வழி கெட்ட கருத்துக்களை கூறுகிற காரணத்தால் தான் திரு பிஜே இஸ்லாமிலிருந்து விலகி விட்டார் என தமிழ் மாநில ஜமாத்துல் உலமா அறிவித்திருக்கிறது,

அவரை பின்பற்றுவோர் அவரை ஒரு இஸ்லாமிய பேச்சாளராக கருதுவோர் அனைவரும் எச்சரிக்கை அடைய வேண்டிய விசய்ங்கள் இவை,

அவரை ஆதரிப்போர்  இந்த விவகாரங்களில் அவரது கருத்தை ஒத்துக் கொள்வதாகவே பொருள் அமையும்.

அத்தகையோருக்கும் முஸ்லிம் உம்மத்திற்கு எந்த சம்ப்ந்தமும் இல்லை என்பதை இன்றைய தினம் பிரகடணம் படுத்திக் கொள்கிறோம்.

இப்படி பிரகடணப் படுத்த வேண்டியது நாளைய நமது தலைமுறையை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய கால கடமை என்பது மட்டும் அல்ல,

இவ்வாறு பிரகடணப் படுத்துவதற்குரிய முழு தகுதியும் சத்தியமும் நம்மிடம் இருக்கிறது

தர்கா ஜியாரத்தை தாயத்து அணிவதை ஓதிப்பார்ப்பதை ஷிர்க் என்று பேசுகிறவர்கள் போலித்தனமாகவே பேசுகிறார்கள்.

சத்தியம் துளி அளவும் அவர்களிடம் இல்லை.

நெஞ்சில் உரமும் நேர்மை திறமும் இல்லாத வாய்ச்சொல் வீரர்களான கோழைகள் அவர்கள்.

தர்கா ஜியாரத், தாயத்து அணிதல், ஓதிப்பார்த்தலை ஏற்போரும், சூனியம் உள்ளது என்பதை நம்புவோரும் ஷிர்க் செய்கிறார்கள் என்று கூறும் கூற்றில் இவர்கள் உண்மையான ஆண்பிள்ளைகளாக இருப்பார்களானால் அதற்கேற்ற அறிவிப்பை இவர்கள் செய்யட்டும் பார்க்கலாம்.

தர்கா ஜியாரத் செய்வோர் தாயத்து அணிவோர் ஓதிப்பார்ப்போருக்கு எங்கள் மதத்திற்கும் எந்த சம்ப்ந்தமில்லை என்று சொல்லட்டுமே பார்க்கலாம்.

குறைந்த பட்சம் அவர்களது மாநாட்டு தீர்மாணாக அவர்களது தொண்டர்களுக்குச் இதை  உறுதியேற்கச் சொல்லட்டும்

தர்கா ஜியாரத், தாயத்து அணிதல், ஓதிப்பார்த்தலை ஏற்போரும், சூனியம் உள்ளது என்பதை நம்புவோரும்

உன் தகப்பன் எனில் அவனது சொத்தில் பங்கு கேட்காதே! உன்னுடைய சொத்தில் அவருக்கு பங்கில்லை என எழுதி வைத்து விடு!

அந்தப் பள்ளிவாசல்களுக்கு போகாதே ! அத்தகையோர் பின் நின்று தொழாதே!

அத்தகைய குடும்பங்களில் திருமணம் செய்து கொள்ளாதே!

அவர்களுடை கப்ருஸ்தானும் நமக்கு வேண்டாம். அதை விட இந்துக்களின் மயானங்களே மேல்! ஏனெனில் சிலை வணக்கம் ஷிர்கில் வரவில்லை அல்லவா?

என்று தம்முடைய தொண்டர்களுக்குச் சொல்லி, உறுதி மொழி ஏற்கட்டுமே பார்க்கலாம்!

எத்தனை போஸ்டர் அடிக்கிறாய்?  இப்படி ஒரு போஸ்டர் அடி பார்க்கலாம்,

இவற்றை நம்புகிறவர்கள் இப்படிச் செயல்படுகிறவர்களுடைய மதம் எங்களுடைய மதம் அல்ல.

செய்ய மாட்டார்கள், ஏனெனில்


இவர்கள் சத்திய வான்கள் அல்ல. வெட்கம் கெட்ட விஷமிகள்.

சுய நலத்தை மையமாக கொண்டு ஒரு குரூப்பிஸமாக இருந்து முஸ்லிம் உம்மத்தை பலவீனப்படுத்த நினைக்கும் சதிச் சக்திகள்.

சுன்னத் ஜமாத்தினர் அறுத்ததை சாப்பிடுவதற்கு சப்புக் கொட்டிக் கொண்டு காரணம் சொல்கிறார்கள், அபூஜஹ்ல் அறுத்ததை கூட சாப்பிடலாம் என்கின்றனர்.

மக்கா இமாம்கள் சிஹ்ரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களே அவர்களைப் பின்பற்றித் தொழலாமா என்ற அப்பாவி ஒருவனின் கேள்விக்கு மக்கா இமாம்கள் விவரமற்றவர்கள் வெறுமனே குர் ஆன் ஓதத்தெரிந்தவர்கள் தான் நம் அளவுக்கு ஆய்வு செய்யத் தெரிந்தவர்கள் அல்ல எனவே அறியாமல் அவர்கள் நம்புவதால் அவர்களை பின்பற்றலாம் என்கிறான்.

கேனத்தனமாக ஒரு கூட்டம் அவன் சொல்வதை ரசித்து சிரிக்கிறது,

ஜமாத்துல் உலமா தலைவரே தங்களது மாநாட்டிற்கு அழைப்பதாக போலி விளம்பரம் செய்து இலாபம் பார்க்க நினைத்தவர்கள்.

அத்தனை விதமான மோசடித்தனங்களையும் மார்க்கத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு தைரியமாக செய்கிறவர்கள்.

அந்த அசட்டு தைரியத்தை மூலதனமாக கொண்டவர்கள் ஒரு புதிய மதத்தை உருவாக்கி சாதித்துக் காட்ட நினைக்கிறார்கள்.

தன்னையும் தனதுஆதாரவாளர்களையும் தவிர மற்றஅனைத்து முஸ்லிம்களையும்சரமாரியாக காபிர் முஷ்ரிக் என்றுசொல்வதில் பிஜே சாதனைபடைத்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். 150 கோடிக்கும் மேற்பட்டமுஸ்லிம்களையும் காபிர்களாக்கி விட்டுஇவரும் இவருடனிருக்கிற சில ஆயிரம்பேர் மட்டுமே முஸ்லிம்கள் என்பதுஅவருடைய வாதமாகும்.இவர்களுடைய காபிர் முத்திரைக்கு,மக்கா மதீனா புனித பள்ளிவாசல்களின்இமாம்களும் தப்பவில்லை. இமாம் புகாரி,இமாம் முஸ்லிம் போன்ற ஹதீஸ்கலைஇமாம்களும் தப்பவில்லை. இமாம்ஷாபிஈ, இமாம் அபூஹனீபா போன்றமத்ஹபு இமாம்களும் தப்பவில்லை. ஏன் சஹாபாக்களும் தப்பவில்லை.


முஸ்லிம் உம்மத் உஷாராக வேண்டும்.

ஒவ்வொரு மஹல்லாவிலும் இவர்களைப் பற்றிய எச்சரிக்கை சக சமூக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதிகாரிகளுக்கு இவர்களைப் பற்றிய நமது பிரகடணத்தை தெரிவிக்க வேண்டும்.

நமது பள்ளிவாசல்களின் முன்னால் நின்று கொண்டு இந்துத்துவ அமைப்பினர் நோட்டீஸ் விநியோகிப்பதை அல்லது போஸ்டர் ஓட்டுவதை எப்படி அனுமதிக்க மாட்டோமோ அது போல இவர்களையும் அனுமதிக்க கூடாது.

கோவை மாநகரில் சுன்னத் ஜமாத்துகள் காவல் துறையிடம் புகார் தெரிவித்த காரணத்தால் முஸ்லிம் மஹல்லாக்களில் இந்த விஷமிகள் ஊடுறுவுவதை அவர்கள் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள்.

இதை ஒவ்வொரு பகுதியுலும் காவல் துறையிடம் வலியுறுத்த வேண்டும்

சரியான புகார்களும். கோரிக்கை களும் வைக்கப்படுமானால் இந்த விஷமிகளை கட்டுப்படுத்த முடியும்.

தற்காலத்தில் இந்து புராணங்களைப் பற்றி விமர்சனம் செய்யப் போவதாக ஒரு நோட்டீஸ் வெளிவருமா?  அதை காவல் துறை அனுமதிக்குமா?

இதற்கு காரணம் என்ன ?

புகார் அளிப்பது தான்.  தொடர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் கிளர்ந்து எழுந்தது தான்>

தர்கா  தாயத்து ஓதிப்பார்த்தல் என்ற வார்த்தையை இப்புதிய மதத்துக்காரர்கள் தவறாகப் பயன்படுத்துவதை எங்களால் ஏற்க முடியாது என்று  சுன்னத் ஜமாத்தினர் ஒன்று பட்டு ஒரு குரல் கொடுத்தால் இவர்களின் விஷமத்தனத்தை கட்டுப்படுத்த முடியும்,

இப்போது இப்புதிய மதத்துக் காரர்கள் மாநாடு என்ற பெயரில் கூட்டம் நடத்துவது தேர்தல் நேரத்தில் நடத்தும் ஒரு அரசியல் கூத்து.

கூட்டத்தை காட்டி ஆட்சியாளர்களிடம் காசுக்கு பேரம் பேசும் உத்திதான் என்றாலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த விஷம்ச் சக்திகளை உலகிற்கு அடையாளப்படுத்திக் காட்டுவதோடு.. நமது மக்களை பாதுகாகவும் நாம் முயற்சிக்க வேண்டும்.

இது சத்தியத்தில் நமக்குள்ள உறூதியை வெளிப்படுத்தவும் எதிர்கால சந்தத்தியின் ஈமானைப் பாதுகாக்கவும் நமக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு,

அல்லாஹ் வழி கேட்டிலிருந்தும் வழி கெட்ட கூட்டங்களிடமிருந்தும் நம்மை பாதுகாப்பானாக!

Baqavi abdul azeez








இமாம் கஸ்ஸாலி(ரஹ்மத்துல்லாஹ் அலைஹி)அவர்கள் இறைபக்திக் கொண்டவருக்கு 12 வகையான நன்மைகள் கிடைப்பதாக கூறுகிறார்கள்


இமாம் கஸ்ஸாலி(ரஹ்மத்துல்லாஹ் அலைஹி)அவர்கள்
இறைபக்திக் கொண்டவருக்கு 12 வகையான நன்மைகள் கிடைப்பதாக கூறுகிறார்கள்.

1, இறைவன் மீது பயபக்தி கொண்டவர்களுக்கு வாழ்வில் திருப்திக் கடைக்கிறது.

2,பகைவர்களின் ஆபாயங்களிருந்து பாதுகாப்புக் கிடைக்கிறது.

3, அல்லாஹ்வின் உதவிக் கிடைக்கிறது.

4, பலாய் முஸீபத்துகளை வட்டும் ஈடேற்றமும் ஹலாலான உணவும் கிடைக்கும்.

5, தம் வணக்கம் மற்றும் செயலில் முறையில் நல்ல சீர்திருத்தத்தை உண்டாக்கும்.

6, அவரின் பாவங்கள் மன்னிக்கப்படும்.

7, அவரின் மீது அல்லாஹ்வின் பிரியம் உண்டாகும்.

8, அவரின் வணக்கங்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.

9, அவருக்கு அல்லாஹ்விடமிருந்து சங்கையும் மறியாதையும் கிடைக்கும்.

10, அவர் மரிக்கும்போது சீதேவியாக மரிப்பார்

11, அவர் நரகத்தை விட்டும் ஈடேற்றம் அடைவார்.

12, அவர் சொர்க்த்தில் வாழ்வார்.

நூல் மின்ஹாஜுல் ஆபிதீன்.

தௌபாச் செய்யும் அடியானின் தௌபா ஏற்றுக் கொள்ள பட்டுள்ளதா..? இல்லையா?எப்படி தெரிந்து கொள்வது? ஆன்மீக பெரியோர்களிடம் கேட்கப்பட்டது?.


தௌபாச் செய்யும் அடியானின் தௌபா ஏற்றுக் கொள்ள பட்டுள்ளதா..? இல்லையா?

எப்படி தெரிந்து கொள்வது?
ஆன்மீக  பெரியோர்களிடம் கேட்கப்பட்டது?.

அதற்கான முழுமையான விளக்கம் கூற முடியாது. ஆனாலும், சில அடையாளங்கள் உள்ளன.

அதன் மூலம் தௌபா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா? இல்லையா?என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

01. அவர் பாவம் செய்வதிலிருந்து விலகியிருப்பார்

02. அவர் மனதிலிருந்து சந்தோஷம் தூரமாகும்.

03. அல்லாஹ் எங்கும் உள்ளான் என்பதை ஒவ்வொரு மூச்சிலும் நினைப்பார்

04. நல்லவர்களிடம் நெருக்கமாகவும் தீயவர்களிடம் விலகியுமிருப்பார்.

05. உலகியல் ரீதியான பெரிய நிஃமத்தை சிறிதாகவும்,மறுமையின் பெரிய நிஃமத்தை அற்பமாகவும் காண்பார்.

06. எல்லா நேரத்திலும் மௌனத்தைக் கடைப்பிடிப்பார்.

07. எல்லா நேரத்திலும் கடமையானதை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவார்

08. எந்த நேரமும் கடந்த கால குற்றங்களைப் பற்றிய சிந்தனையிலேயே கிடப்பார்

09. கவலையும் சிந்தனையும் அவரை விட்டும் அகலாமலிருக்கும்.

10. தான் செய்யும்  நற்செயல்கள் மூலம்
இறை பொருத்தம்  மட்டுமே  எதிர்பார்ப்பாக இருக்கும்.



பக்கத்து வீட்டுக்காரர்களையும் எப்படி பேணவேண்டும் என வலியுறுத்துகிறது என்று பாருங்கள்..!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

கண்ணியமிக்க அல்லாஹ்வின் நல்லடியார்களே,

உறவினர்களை பேணி வாழக்கூறிய மார்க்கமான இஸ்லாம், பக்கத்து வீட்டுக்காரர்களையும் எப்படி பேணவேண்டும் வலியுறுத்துகிறது என்று பாருங்கள்..!

ஹதீஸ்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “தனது அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவர் முஃமினாக (இறை விசுவாசியாக) மாட்டார்.” {முஸ்னத் அபூ யஃலா}

அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: (என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அபூதர்! நீர் குழம்பு சமைத்தால் அதில் அதிகமாகத் தண்ணீர் சேர்த்துக்கொள்வீராக. உம்முடைய அண்டை வீட்டாரையும் கவனித்துக்கொள்வீராக” என்று கூறினார்கள். {ஸஹீஹ் முஸ்லிம்: 5120}