Popular Posts

Showing posts with label சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகள். Show all posts
Showing posts with label சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகள். Show all posts

Friday, 4 November 2016

*சூரா கஹ்ஃப்* *(ஜும்ஆ நாளில் ஓதவும்)*

*சூரா கஹ்ஃப்*

*(ஜும்ஆ நாளில் ஓதவும்)*

*1.*வெள்ளிக்கிழமையன்று சூரா கஹ்ஃப் ஓதுபவருக்கு அடுத்த வெள்ளிக்கிழமை வரை (மேலும் 3 நாட்கள் அதிகபட்ஙமாக) செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.
மேலும் ஒரு ஒளி கொடுக்கப்படும்.
அதன் மூலம் தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் பாதுகாக்கப்படுவார்.

*அறிவிப்பாளர் : இஸ்ஹாக் இப்னு அப்துல்லாஹ்,*
*நூல் : தப்ஸீருல் குர்துபீ*

*2.* வெள்ளிக்கிழமை அன்று சூரா கஹ்ஃப் ஓதி வருபவருக்கு அவரது கால் பாதத்தின் கீழிலிருந்து வானத்தில் உச்சி வரை ஒரு ஒளி கொடுக்கப்படும்.
அது அவரின் மறுமை நாளில் ஒளியாக பிரகாசிக்கும்.
மேலும் இரண்டு ஜும்ஆவிற்க்கு மத்தியில் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.

*அறிவிப்பாளர் : இப்னு உமர் ரலியல்லாஹுஅன்ஹு*
*நூல் : தப்ஸீர் இப்னு கதீர்*.

*3.* சூரா கஹ்ஃபை ஓதி வருபவருக்கு ஒரு ஒளி கொடுக்கப்படும்.
அதன் மூலம் கப்ரின் வேதனையை விட்டும் அவர் காப்பாற்றப்படுவார்.

*அறிவிப்பாளர் : அனஸ் ரலியல்லாஹுஅன்ஹு*
*நூல் : தப்ஸீருல் குர்துபீ*

Saturday, 23 April 2016

தௌபாச் செய்யும் அடியானின் தௌபா ஏற்றுக் கொள்ள பட்டுள்ளதா..? இல்லையா?எப்படி தெரிந்து கொள்வது? ஆன்மீக பெரியோர்களிடம் கேட்கப்பட்டது?.


தௌபாச் செய்யும் அடியானின் தௌபா ஏற்றுக் கொள்ள பட்டுள்ளதா..? இல்லையா?

எப்படி தெரிந்து கொள்வது?
ஆன்மீக  பெரியோர்களிடம் கேட்கப்பட்டது?.

அதற்கான முழுமையான விளக்கம் கூற முடியாது. ஆனாலும், சில அடையாளங்கள் உள்ளன.

அதன் மூலம் தௌபா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா? இல்லையா?என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

01. அவர் பாவம் செய்வதிலிருந்து விலகியிருப்பார்

02. அவர் மனதிலிருந்து சந்தோஷம் தூரமாகும்.

03. அல்லாஹ் எங்கும் உள்ளான் என்பதை ஒவ்வொரு மூச்சிலும் நினைப்பார்

04. நல்லவர்களிடம் நெருக்கமாகவும் தீயவர்களிடம் விலகியுமிருப்பார்.

05. உலகியல் ரீதியான பெரிய நிஃமத்தை சிறிதாகவும்,மறுமையின் பெரிய நிஃமத்தை அற்பமாகவும் காண்பார்.

06. எல்லா நேரத்திலும் மௌனத்தைக் கடைப்பிடிப்பார்.

07. எல்லா நேரத்திலும் கடமையானதை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவார்

08. எந்த நேரமும் கடந்த கால குற்றங்களைப் பற்றிய சிந்தனையிலேயே கிடப்பார்

09. கவலையும் சிந்தனையும் அவரை விட்டும் அகலாமலிருக்கும்.

10. தான் செய்யும்  நற்செயல்கள் மூலம்
இறை பொருத்தம்  மட்டுமே  எதிர்பார்ப்பாக இருக்கும்.



"காமிலான ஷைகிடம் முரீதாக இருக்க வேண்டியவர் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள்"¶


¶"காமிலான ஷைகிடம் முரீதாக இருக்க வேண்டியவர் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள்"¶

♦ அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளல் வேண்டும்.

♦ஷைகிற்கு முற்றிலும் கீழ்படிந்து நடத்தல் வேண்டும்.

♦ஷைகின் பேரில் முஹப்பத்தில் மூழ்க வேண்டும். முரீது ஜெயம் பெறுவதற்கு அடையாளம் மற்றவர்களை பார்க்கிலும் தன் ஷைகையே தெரிந்து அவரை நேசிப்பதும், அவர் சொல்வதை மனமுவந்து கேட்டு நடப்பதும், அவரோடு எல்லா கருமங்களிலும் இணங்கி நடப்பதுமாகும்.

♦ தரீகத்தின் அதபுகளை பேணி நடத்தல் வேண்டும்.

♦ தொழுகையே முறையாக பேணி தொழல் வேண்டும் .

♦ஷரீஅத்தின் கட்டளைகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

♦ எப்போதும் பணிவோடு நடத்தல் வேண்டும்.

♦ ஷைகினால் முரீதுக்கு தரப்பட்ட திக்ரு, வளீபாக்களை தவறாமல் ஓதி வர வேண்டும்.

♦ முராக்கபாவை நியமமாக செய்து வர வேண்டும்.

♦ஒரு முரீது ஷைகிடம் தேவை இல்லாத பேச்சுக்களை பேசுவதை விட்டும் தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.

♦ ஷைகிற்கு முன்பாக அதபு குறைவாக நடத்தல் கூடாது.

♦ ஷைகிடம் தனது சக ஆத்மீக சகோதரர்களின் குறைகளை கொண்டு செல்லல் கூடாது. தனது சக ஆத்மீக சகோதரர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ளல் வேண்டும்.

♦ஷைகிற்கு பிடிக்காத காரியங்களை முரீது செய்வதை விட்டும் தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

♦எப்போதும் ஷைகின் துவாவை எதிர்பார்த்த வண்ணம் இருக்க வேண்டும்

♦நல்ல குணங்களை கொண்டு உங்கள் கல்பை சுத்தபடுத்த வேண்டும்.

♦அதிகமதிமாக சலவாத் ஓதல் வேண்டும்.

♦நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், வலீமார்களின் மீதும் அளவுகடந்த அன்பு வைக்க வேண்டும்.

♦முரீது ஷைகிடம் பைஅத் வாங்கிய சமயம் தனது ஷைகினால் தனக்கு வழங்கப்பட்ட தரீகாவின் சில்சிலா கிதாபை (ஷஜரா கிதாப்) முறையாக ஓதல் வேண்டும். மேலும் சில்சிலா கிதாபை தனது இறுதி மூச்சி வரை உங்களோடு பாதுகாத்து வைத்து கொள்ள வேண்டும்.

♦அதிகம் அதிகமாக ராத்திப் மஜ்லிஸ், சலவாத் மஜ்லிஸ், மௌலிது மஜ்லிஸ் போன்றவைகளில் கலந்து கொள்ள வேண்டும்.

♦ஹராமான உணவுகளை உட்கொள்ளுதலை விட்டும் தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ளல் வேண்டும்.
வல்ல ரஹ்மான் நம்மனைவருக்கும் நல்லருள் புரிவானாக ஆமீன்!

இறந்தவர்களுக்கு கத்தம் ஓதுவது பற்றி இஸ்லாம் தரும் தீர்ப்பு என்ன"¶?


¶"இறந்தவர்களுக்கு கத்தம் ஓதுவது பற்றி இஸ்லாம் தரும் தீர்ப்பு என்ன"¶?

1)கேள்வி:
*கத்தம் என்றால் என்ன?

பதில்:
*கத்தம் என்பது கத்மு என்ற அரபி வார்த்தையிலிருந்து மருவி வந்த சொல்லாகும். கத்மு என்பதன் பொருளாகிறது முடித்தல் என்பதாகும். என்றாலும், இஸ்லாமிய பாரம்பரிய நடைமுறை அந்த கத்மு என்ற வார்த்தையை குர்ஆன் ஓதிமுடித்தலுக்கு பயன்படுத்தி வருகின்றது. மேலும் தமாம் என்ற வார்த்தைக்கு நிறைவு, சம்பூரணம் என்று பொருளாகும். எனவேதான் குர்ஆன் ஷரீபு ஓதி முடிக்கப்பட்டு மார்க்கத்தில் சொல்லப்பட்ட பிரகாரம் அதை நிறைவு செய்வதற்கு கத்தம் தமாம் செய்தல் (அதாவது ஓதி முடிக்கப்பட்ட குர்ஆனை நிறைவு செய்தல்) என்று கூறப்படுகிறது.

2)கேள்வி:
*இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இருக்கிறதா?

பதில்:
*எவர் கப்ருகளுக்குச் சென்று குல்ஹுவல்லாஹு அஹது என்ற சூராவை 11 தடவை ஓதி அதன் நன்மையை கப்ராளிக்கு சேர்த்தாரோ அவருக்கு இறந்தவர்களின் எண்ணிக்கையின் அளவு நன்மை கிடைக்கும் என்று திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.(உம்தத்துல் காரீ பாகம் 3 பக்கம் 176- புஹாரி ஹதீது எண் 218ன் விளக்கவுரை பாபுன் மினல் கபாயிரி அன் லா யஸ்த்தத்திர மின் பவ்லிஹி கிதாபுல் வுழுஇ)

*யார் கப்ருஸ்தானுக்குச் சென்று யாஸீன் சூரா ஓதுவாரோ அந்நாளில் அல்லாஹுதஆலா அவர்களின் (வேதனைகளை) இலேசாக்குவான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.(உம்தத்துல் காரீ பாகம் 3 பக்கம் 176 – புஹாரி ஹதீது எண் 218ன் விளக்கவுரை பாபுன் மினல் கபாயிரி அன் லா யஸ்த்தத்திர மின் பவ்லிஹி கிதாபுல் வுழுஇ)

*யார் தனது தாய் தந்தையர்களில் இருவரையோ அல்லது அவர்களில் ஒருவரையோ ஸியாரத் செய்து அவ்விடத்தில் யாஸீன் ஓதுகிறாரோ அவரின் பாவங்கள் பொறுக்கப்படுகிறது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.(உம்தத்துல் காரீ பாகம் 3 பக்கம் 176 –புஹாரி ஹதீது எண் 218ன் விளக்கவுரை பாபுன் மினல் கபாயிரி அன் லா யஸ்த்தத்திர மின் பவ்லிஹி கிதாபுல் வுழுஇ)

*எவராவது கபுருஸ்தானத்திற்கு சென்று ஸூரத்து யாஸீன் ஓதினால் அல்லாஹுதஆலா அந்த கபுருவாசிகளைத் தொட்டும் வேதனையை இலேசாக்குவான். மேலும் அந்த கப்ருஸ்தானில் அடங்கி இருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கையளவுக்கு அவருக்கு நன்மைகள் இருக்கின்றது என்று நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  கூறினார்கள் என்று அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(ஷரஹுல் ஸுதூர் பக்கம் 418 பாபுன் பீ கிராஅத்தில் குர்ஆனி லில் மைய்யித்தி)

*உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை தடுத்து வைத்துக் கொண்டிருக்காமல் உடனடியாக நல்லடக்கம் செய்துவிடுங்கள். மேலும் அவரின் தலைமாட்டில் சூரத்துல் பகராவின் ஆரம்பப்பகுதியையும், அவரின் கால்மாட்டில் பகரா சூராவின் கடைசிப் பகுதியையும் ஓதுங்கள் என்று திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.(மிஷ்காத் ஹதீது எண்: 1717 பக்கம் 149 பாபு தப்னில் மய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ்) பைஹகி பாகம் 7 பக்கம் 16 ஹதீது எண் 9294)

*உங்களில் இறந்தவர்கள் மீது யாஸீன் ஓதுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று மஃகில் இப்னு யஸார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.(இப்னுமாஜா பாகம் 1 பக்கம் 466 ஹதீஸ் எண் 1448 பாபு மா ஜாஅ பீ மாயுக்காலு இந்தல் மரீழி கிதாபுல் ஜனாயிஸ், அபூதாவூத் பாகம் 3 பக்கம் 191 ஹதீது எண் 3121 பாபுல் கிராஅத்தி இந்தல் மய்யித்தி கிதாபு ஜனாயிஸ், அஹ்மது பாகம் 5 பக்கம் 26, மிஷ்காத் பக்கம் 141 ஹதீது எண் 1622 பாபு மா யுகாலு இந்த மன் ஹழரஹுல் மௌத்து கிதாபுல் ஜனாயிஸ்)

*யார் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யாஸீன் ஓதுகிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. ஆகவே அதை உங்களில் இறந்தவர்களின் சமூகத்தில் ஓதுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று மஃகில் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.(முஸ்னத் அஹ்மத் பக்கம் 26, பைஹக்கி அபுல் ஈமான் பாகம் 2 பக்கம் 479 ஹதீது எண் 2458, மிஷ்காத் பக்கம் 189 ஹதீது எண் 2178 கிதாபு பலாஇலில் குர்ஆன்)

*அன்ஸாரி ஸஹாபிகளில் ஒருவர் மரணித்து விட்டால் அவரின் கப்ருக்கு அந்த ஸஹாபாக்கள் பலவாறாக பிரிந்து சென்று அவ்விடத்தில் குர்ஆன் ஓதுபவர்களாக இருந்து கொண்டிருப்பார்கள்.(கிதாபுர் ரூஹ் பக்கம் 14 அகீதத்துஸ்ஸுன்னா பக்கம் 304 ஷரஹுல் ஸுதுர் பக்கம் 417 பாபுன் பீ கிராஅத்தில் குர்ஆனிலில் மய்யித்தி…)

*அன்ஸாரி ஸஹாபாக்கள் இறந்தவர்களுக்காக பகரா சூரா ஓதுபவர்களாக இருந்தார்கள். (முஸன்னப் இப்னி ஷைபா பாகம் 3 பக்கம் 121)

3)கேள்வி:
மய்யித்தை அடக்கிய அன்று ஓதப்படுகின்ற முதலாம் கத்தத்திற்கும் அதைத் தொடர்ந்துள்ள 3,5,7,15,20,30,40 ஆகிய தினங்களில் ஓதப்படுகின்ற கத்தங்களுக்கும் மற்றும் வருஷக் கத்தம் ஓதுவதற்கும் ஏதேனும் ஆதாரம் உண்டா?

பதில்:
*முதலாம் கத்தம்.

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு ஜனாஸாவில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரின் மேல் நின்று கொண்டு கப்று தோன்றுபவரைப் பார்த்து மய்யித்தின் கால்மாட்டிலும், தலைமாட்டிலும் குழியை விசாலப்படுத்துமாறு யோசனை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து திரும்பியபோது இறந்தவரின் மனைவி அனுப்பி வைத்த அழைப்பாளர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை (உணவு உண்பதற்காக) அழைத்தார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த அழைப்பை ஏற்று சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் சென்றோம். உணவு கொண்டு வரப்பட்டது. உடனே உணவில் கையை வைத்தார்கள். கூட்டத்தில் உள்ள அனைவரும் கையை வைத்தனர். பிறகு எல்லோரும் சாப்பிட்டார்கள் என்று ஆஸிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.(அபூதாவூத் ஹதீது எண் 3332 பாபுன் பீ இஜ்தினாபிஷ் ஷுப்ஹாத்தி கிதாபுல் புயூஇ, மிஷ்காத் பக்கம் 544 ஹதீஸ் எண்: 5942 பாபுன் பில் முஃஜிஸாத்தி)

*3ம் நாள் கத்தம்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமை மகனார் இப்றாஹீம் ரலியல்'லாஹு அன்ஹு அவர்கள் வபாத்தாகி மூன்றாம் நாள் அன்று அபூதர்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உலர்ந்த பேரீச்சம் பழம், பால், தொலிக் கோதுமையால் ஆன ரொட்டி ஆகியவற்றைக் கொண்டு வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் வைத்தார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்ஹம்து சூராவை ஒருவிடுத்தம் குல்ஹுவல்லாஹு அஹது சூரா 3 விடுத்தம் ஓதி கையை உயர்த்தி பிரார்த்தித்து விட்டு கையை முகத்தில் தடவினார்கள். பிறகு அபூதர்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து இதை மக்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொடு;ங்கள்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(பதாவா அர்வஹன்தி தஸ்ஹீஹுல் அகாயித் பக்கம் 128)

*5ம் நாள் கத்தம்:

உடம்பை விட்டும் உயிர் பிரிந்து மூன்று நாட்கள் கழிந்தும விட்டால் அந்த ஆன்மா அல்லாஹ்வின் சமூகத்தில் நாயனே! நான் இருந்து வந்த உடம்பை பார்த்து வருவதற்கு எனக்கு அனுமதி அளிப்பாயாக என்று கேட்கின்றது. உடனே அல்லாஹு தஆலா அது சென்று வருவதற்கு அனுமதி அளிப்பான். அப்போது அந்த ஆன்மா தனது கப்;ருக்கு சற்று தூரத்தில் இருந்து  கொண்டு தனது உடம்பைப் பார்க்கும். அப்போது இரு மூக்கு துவாரத்திலிருந்தும் வாயிலிருந்தும் தண்ணீர் வடிந்து கொண்டிருக்கும். இதைக் கண்ணுற்ற அந்த ஆத்மா தனது உடம்பின் நிலையை நினைத்து நீண்ட நேரம் அழுதுவிட்டு பிறகு திரும்பிச் சென்று விடும். ஐந்து நாட்கள் கழிந்து விட்;டால் மீண்டும் அல்லாஹ்விடம் அனுமதி பெற்று தனது உடம்பைப் பார்ப்பதற்காக வரும். அப்போது அதன் வாயிலிருந்து இரத்தமும் அதனடைய ஒரு காதுகளிலிருந்து சீலும் ஊனமும் வடிந்துக் கொண்டிருப்பதைப் பார்த்து மீண்டும் அழுது விட்டு சென்று விடும். பிறகு ஏழாவது நாளில் மீண்டும் வந்து தனது உடம்பைப் பார்க்கும். அப்போது தனது உடம்பை புழுக்கள் கடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு மீண்டும் அழ ஆரம்பித்துவிடும். மேலும் தான் இப்பூவுலகில் வாழ்ந்த சொகுசான வாழ்க்கையைத் தற்போதுள்ள கபுருடைய கஷ்டமான வாழ்க்கையோடு ஒவ்வொரு வகையிலும் ஒப்பிட்டு பார்த்தவண்ணம் தன் நிலையை நினைத்து நினைத்து நீண்ட நேரம் அழுது விட்டு மீண்டும் சென்று விடும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹதீஸ் வந்துள்ளது. (தக்காயிகுல் அக்பார் 16வது பக்கம் 9வது பாபு அத்துரருல் ஹிஸாப் பக்கம் 16) இப்போது கூறப்பட்ட இந்த ஹதீஸில் வந்துள்ளது போன்று தனது உடம்பு நாதியற்று கிடக்கும் நிலையையும் தனது குடும்பத்தாரோ உறவினர்களோ கைகொடுத்து காப்பாற்றாமல் தான் மட்டும் தன்னந்தனியே தவித்துக் கொண்டிருக்கிறோமே என்றும் நினைத்து கவலைப்படுகின்ற நேரத்தில் அந்த மய்யித்தை நினைத்து ஓதப்படுகின்ற கத்தத்தின் நன்மை அதற்கு போய்ச் சேருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றது என்ற காரணத்தினால் மேற்கூறப்பட்ட       தினங்களில் அதாவது 3,5,7 ஆகிய தினங்களில் கத்தம் ஓதப்படுகின்றது.

*7ம் நாள் கத்தம்:


  • மரணித்தவர்கள் நிச்சயமாக தாங்களின் கபுருகளில் 7 நாட்கள் குழப்பத்தில் உட்படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள் அந்த ஏழு நாட்களில் தாங்கள் பெயரால் உணவுமூ கொடுக்கப்படுவதை விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று தாவூஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் இமாம் அஹ்மது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் ஸுஹ்து என்ற நூலிலும் அபூநயீம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் ஹில்யா என்ற நூலிலும் கூறுகிறார்கள் என்று ஷரஹுஸ்ஸுதூர் என்ற நூலின் 139 வது பக்கத்திலும் பிக்ஹுஸுன்னா 369வது பக்கத்திலும் ஹாவி பாகம் 2 பக்கம் 178 வது பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஹதீதை இப்னு ஹஜர் இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஹீஹ் ஆனது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.             (அல்மி;ர்ஆத் பாகம் 4 பக்கம் 584 மற்றும் பாகம் 3 பக்கம் 514)மேலும் நிச்சயமாக கபுராளிகளைத் தொட்டும் செய்யப்படும் தானதருமங்கள் அவர்களுடைய கபுருகளில் உள்ள சூட்டை (உஷ்ணத்தை) அமர்த்தி விடும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் என்று உக்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் அறிவிக்கப்பட்டு தபரானியில் பதிவாகியுள்ள ஹதீது (பிக்ஹு ஸுன்னா பக்கம் 368 – அல் மி;ஆத் பாகம் 3 பக்கம் 514) இங்கு சிந்தனைக்குரியதாகும். மேலும் 7 நாட்கள் உணவு கொடுக்கும் பழக்கம் ஸஹாபாக்கள் காலம் தொட்டு இதுகாலம் வரை மக்கா, மதீனாவில் நடந்து வருகிறது என்று ஹாவியில் (பாகம் 2 பக்கம் 194) ஸுயூத்தி இமாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதுபோன்றே அல்மிர்ஆத் பாகம் 4 பக்கம் 585லிலும்  வந்துள்ளது.

Thursday, 17 March 2016

அல்லாஹ்வின் அருள் யாருக்கு உண்டு என்று நாம் அறிய மாட்டோம்!

அல்லாஹ்வின் அருள் யாருக்கு உண்டு என்று நாம் அறிய மாட்டோம்!
.
முஃமின்களை காபிராக்க நினைக்கும் முஃமின்களுக்கு படிப்பினை!
.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் காலத்தில் ஒருவர் இருந்தார். அவருடைய பெயர் அப்துல்லாஹ் என்பதாகும். ஹிமார் (கழுதை) என்று பட்டப் பெயரால் அவர் அழைக்கப்பட்டு வந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை அவர் சிரிக்க வைத்து விடுவார்.
.
மது குடித்ததற்காக அவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கசையடி கொடுத்தும் இருக்கிறார்கள்.
.
பின்னர், ஒரு நாள் அவர் மது குடித்தற்காகக் கொண்டு வரப்பட்டார். அவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கசையடி கொடுக்குமாறு கட்டளையிட்டு, அவர் கசையடி கொடுக்கப்பட்டார்.
.
அப்பொழுது, (அங்கிருந்த) மக்களில் ஒருவர் “நாயனே, அவருக்கு லஃனத்துச் செய். (உன் கிருபையை விட்டு அவரை விலக்கி வை) எவ்வளவு அதிகமாக அவர் கொண்டு வரப்பட்டிருக்கிறார்” என்று சாபமிட்டார்.
.
அப்பொழுது, “அவரை லஃனத்துச் செய்யாதீர்கள். (சாபமிடாதீர்கள்) அல்லாஹ்வின் மீது சத்தியமாகக் கூறுகிறேன். அல்லாஹ்வையும் அவனுடைய ரஸுலையும் அவர் நேசிப்பவராகத்தான் அறிகிறேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்.
.
ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு - புகாரி 6780

Mail of Islam
Presentby ;;SSF krishnajippattinam branch, pudukkottai district, Tamil Nadu.

Tuesday, 12 January 2016

அமலைக் கொண்டு வஸீலாத் தேடுதல்

அமலைக் கொண்டு வஸீலாத் தேடுதல்



“இஸ்தயீனூ பிஸ்ஸப்ரி வஸ்ஸலாத்தி” (பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் நீங்கள் உதவி தேடுங்கள்) திருக்குர்ஆன் 2 : 153



பொறுமையும், தொழுகையும் மனிதர்கள் செய்கின்ற அமல்களேயாகும். இத்திரு வசனத்தில் இவ்விரண்டைக் கொண்டும் “வஸீலா” உதவிதேடுமாறு அல்லாஹ் விசுவாசிகளைப் பணித்துள்ளான்.



பொறுமை, தொழுகை இரண்டு வகையான வணக்கங்கள் மட்டும் இத்திரு வசனத்தில் கூறப்பட்டிருந்தாலும் “இபாதத்” வணக்கம் அல்லது அமல்கள் என்ற அடிப்படையில் இவ்விரண்டும் தான் வணக்கங்கள் என்றோ அமல்கள் என்றோ சொல்லமுடியாது.



நோன்பு, ஸகாத், ஹஜ்ஜூ, திக்று, பிக்று, முறாக்கபா, முஷாஹதா போன்ற எல்லா நற்கிரியைகளும் மார்க்கத்தில் நல்லமலாக கணிக்கப்படுகின்றன. எனவே இவை அனைத்தையும் கொண்டு நாம் வஸீலாத் தேடலாமென்பது விளங்கும். மேலும் பொறுமையும், தொழுகையும் சிருஷ்டிகள் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து ஆராய்ந்தால் சிருஷ்டிகளைக் கொண்டும் வஸீலாத் தேடலாமென்பது விளங்கும்.



எனவே மேற்கூறிய திருவசனத்தில் நல்லமல்களைக் கொண்டும், சிருஷ்டிகளைக் கொண்டும் வஸீலாத் தேடுவதற்கு மறுக்கமுடியாத ஆதாரமும் இருக்கின்றது.



வஹ்ஹாபிஸத்தை நாடெங்கும் பரப்பிய நல்லவர்கள் இத்திருவசனம் தருகின்ற வெளிப்படையான அர்த்தத்தையும், அது உள்ளடக்கி நிற்கின்ற விளக்கத்தையும் உணராமல்தான் வஸீலாத் தேடுவது கூடாதென்றும், அவ்வாறு கேட்பது “ஷிர்க்” இணைவைத்தலை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.



நபிமொழி . 08



உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர்கள் ஒரு பிரயாணம் செய்தார்கள். அப்பிரயாணத்தின் போது இருட்டாகிவிட்டது. இரவைக் கழிப்பதற்காக வழியில் இருந்த மலைக்குகையொன்றில் நுழைந்தார்கள். அவர்கள் உள்ளே போனபின் மலையுச்சியிலிருந்து விழுந்த கல் ஒன்று அவர்கள் தங்கியிருந்த குகையின் வாயலை அடைந்து விட்டது.



அக்கல் பெரிய கல்லாக இருந்த படியால் அவர்களால் அதை அகற்ற முடியாமல் போயிற்று. அதை அகற்றாமல் அவர்கள் வெளியேற வேறுவழியும் இல்லாமலிருந்தது. குகைக்குள் மாட்டிக் கொண்ட மூவரும் சற்று நேரம் செய்வதறியாது யோசித்துக் கொண்டும், கவலையடைந்து கொண்டுமிருந்தனர்.



அவர்களிலொருவர் மற்ற இருவரிடம் நாம் இதிலிருந்து தப்ப முடியாது போலிருக்கிறது. இதற்து என்ன வழிசெய்யலாமென்று கேட்டார். அதற்கு அவர்களில் ஒருவர் நாம் இதிலிருந்து தப்புவதற்கு எந்த வழியுமே இல்லை. எனினும் நாம் நமது வாழ்க்கையில் செய்த அமல்களில் தூய்மையான அமல்களும் இருக்கும் அந்த வணக்கத்தைக் கொண்டு நாம் இப்பொழுது வஸீலாத் தேடிப்பார்ப்போம் என்று ஆலோசனை சொன்னார்.



அவர் கூறிய ஆலோசனையை மற்ற இருவரும் சரி கண்டதால் அவ்வாறே செய்வதென்று முடிவு செய்தார்கள்.



மூவரில் ஒருவர் “இறைவா! எனக்கு வயது முதிர்ந்த நோயால் பீடிக்கப்பட்ட பெற்றோர் இருந்தார்கள். நான் காலையில் காட்டுக்குச் சென்று விறகு வெட்டிக் கொண்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். வரும் பொழுது எனது பெற்றோர்களுக்கும், மனைவி மக்களுக்கும் இராச்சாப்பாட்டுக்காக பால் கொண்டு வருவேன். முதலில் எனது பெற்றோர்களுக்கே அதைக் கொடுப்பேன். அவர்கள் அருந்தி மிஞ்சுகின்ற பாலையே எனது மனைவி மக்களுக்கு கொடுப்பேன். பெற்றோரின் பசிதீராமல் எனது மனைவி மக்களுக்கு நான் கொடுத்ததேயில்லை.



ஒரு நாள் எனது தேவை காரணமாக காட்டில் நான் தாமதமாகியதால் குறித்த நேரத்திற்கு வீடு திரும்ப முடியாமல் போய்விட்டது. சிறிதுநேரம் கழித்து நான் வந்தபொழுது எனது பெற்றோர்கள் என்னை எதிர்பார்த்திருந்து விட்டு உறங்கிவிட்டார்கள். அவர்களை விழிப்பாக்கி அவர்களின் தூக்கத்தை கலைக்க விரும்பாத நான் விடியும்வரை பால் பாத்திரத்தை ஏந்தியவனாக நின்றுகொண்டிருந்தேன். எனது குழந்தைகளோ பசிக்கொடுமையினால் பால் கேட்டு எனது காலடியில் தவழ்ந்து திரிந்தார்கள். அவ்வாறிருந்தும் அவர்களுக்கு கொடுக்காமல் விடியும்வரை காத்திருந்து விடிந்த பிறகு எனது பெற்றோர்களுக்குக் கொடுத்து விட்டுத்தான் எனது பிள்ளைகளுக்குக்கொடுத்தேன்.



இறைவா! நான் இவ்வேலையை எனது பெற்றோர் மீது எனக்கிருந்த பாசத்தினாலும், அவர்களைக் கண்ணியப்படுத்த வேண்டிய காரணத்தினாலுமேயன்றி யாரிடமும் எதையும் எதிர் பார்த்து நான் அங்கணம் செய்யவில்லை.



எனவே, நான் செய்த இவ்வேலை உன்னிடத்தில் தூய்மையானதாகவும், “இக்லாஸ்” கலப்பற்றதாயுமிருந்தால் இக்கல்லினால் எங்களுக்கேற்பட்டுள்ள கஷ்டத்தை நீக்கிவைப்பாயாக என்று வேண்டினார்.



அப்பொழுது அக்கல் சற்று நகர்ந்தது. எனினும் அதன் வழியாக வெளியேற முடியாமலிருந்தது.



இரண்டாம் நபர்“இறைவா! எனது சாச்சாவுக்கு ஒரு மகள் இருந்தாள் அவள் எனக்கு மிக விருப்பமுள்ளவள். அவளுடன் நான் உடலுறவு கொள்ள விரும்பினேன். ஆயினும் அவள் அதற்கு இணங்கவில்லை. இவ்வாறு ஒரு வருடம் ஓடியது.



ஒரு நாள் அவள் என்னிடம் வந்த பொழுது உடலுறவுக்குச் சம்மதிக்கும் நிபந்தனையுடன் 120 தீனார் அவளுக்குக் கொடுத்தேன். அவளுடன் உடலுறவு கொள்ளத் தயாரான பொழுது அவள் என்னை நோக்கி நான் உனக்கு ஹறாமாக்கப்பட்டவள். என்னுடன் உடலுறவு கொள்ளாதே என்று சொன்னாள்.



உடனே நான் அவளை விட்டும் விலகிவிட்டேன். அவளிடம் கொடுத்த 120 தீனார்களையும் அவளிடம் இருந்து பெறவுமில்லை. “இறைவா! எனது இவ்வேலை உன்னிடத்தில் புனிமானதாகவும், “இக்லாஸ்” கலப்பில்லாததாயுமிருந்தால் இக்கல்லினால் ஏற்பட்டுள்ள கஷ்டத்தினை நீக்கி வைப்பாயாக” என்று வேண்டினார்.



அந்தக்கல் மீண்டும் சற்று நகர்ந்தது. எனினும் அவ்வழியால் வெளியேறமுடியாமல் இருந்தது.



மூன்றாமவர் “இறைவா! கூலிக்கு வேலை செய்பவர்கள் எனக்குத் தேவைப்பட்டனர். பல கூலியாட்களைக் கொண்டு வேலை வாங்கிவிட்டு அவர்களுக்குரிய கூலிகளையும் கொடுத்து விட்டேன்.



எனினும் அவர்களில் ஒரு கூலியாள் தனது கூலியை வாங்காமல் என்னிடம் விட்டுச் சென்று விட்டார். நான் அதை சும்மாபோட்டு வைக்காமல் எனது மூலதனமான ஆடு, மாடு, ஒட்டகம், அடிமை போன்றவற்றுடன் அதையும் சேர்த்துப் பெருக்கினேன். அவருடைய கூலி வியக்கத்தக்க அளவுக்கு பெருகிவிட்டது.



ஒரு நாள் அவர் என்னிடம் வந்து தான் விட்டுச் சென்ற கூலியை தருமாறு கேட்டார். இதோ நீகாணும் ஆடு, மாடு, ஒட்டகம், அடிமை போன்ற எல்லாமே உண்ணுடையதுதான் எடுத்துச் செல் என்றேன்.



அதற்கவர் என்னை கிண்டல் செய்யாதே என்றார். நான் கிண்டல் செய்ய வில்லை. நான் சொல்வது உண்மைதான் என்று சொன்னேன். அவர் மிக்க மகிழ்ச்சியுடன் அவை அனைத்தையும் எடுத்துச் சென்றார். இறைவா! என்னுடைய இந்த வேலை உன்னிடத்தில் புனிதமானதாயும் “இக்லாஸ்”கலப்பில்லாததாயுமிருந்தால் இக்கல்லினால் ஏற்பட்டுள்ள கஷ்டத்தை நீக்கி வைப்பாயாக என்று வேண்டினார். அக்கல் முழுமையாக அகன்று மூவரும் வெளியேறினார்கள். என்று நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்.



ஆதாரம் :புஹாரி அறிவிப்பு :அப்துல்லாஹ்பின்உமர் (றழி

குர்ஆனை ஒளு இன்றி தொடலாமா

குர்ஆனை ஒளு இன்றி தொடலாமா ?

 குர்ஆனை தூய்மையின்றி தொடலாமா ?

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹூ பரக்கத்துஹூ
 சமூதாய சிந்தனைக்கு :
 அல்லாஹூ தஃஆலா வழங்கிய வேதங்களில் இறுதி வேதம் புனிதம் நிறைந்த அல்குர்ஆன் . இந்த புனித குர்ஆனின் கண்ணியத்தை முஸ்லீம்களின் உள்ளத்தில் இருந்து அகற்றவேண்டும் என்று உலக அளவில் சூழ்ச்சி நடை பெறுகிறது .என்பதை இஸ்லாமியர்கள் அனைவரும் அறிந்த விசையம் ! இஸ்லாத்தை சிரழித்திட வழிகேடற்கள் போடும் சதி திட்டம் .


 பிஜெ மதம் ஒரு பேராபத்து ;
 பிஜெ என்ற அதி மேதாவி தான் சொல்வது மட்டும் தான் மார்க்கம் மற்ற யார் சொன்னாலும் அது மார்க்கம் அல்ல என்று . சொல்வது அனைவருக்கும் தெரிந்த விசையம் , அதை உருதி செய்வதர்க்கு ஒரு உதாரணம் பார்போம் ...
 யார் ? வேண்டுமானாலும் சுத்தம் இல்லாமல் அதாவது ஒளூ இல்லாதவர்களும் , குளிப்பு கடமையானவர்களும் , மாதவிடாய் பெண்களும் , பேருகாலத்தொடக்கு உள்ள பெண்களும் , எல்லா நிலைகளிலும் , எல்லா மனிதர்களும் , குர்ஆனை தொடலாம் , என்று தன் சுய அறிவின் படி கருத்தை சொல்கிறார் :


 ஒளூ வின்றி குர்ஆனைத் தொடலாமா ? என்பதை பற்றிய குர்ஆன் & ஹதீஸ்களை வைத்து ஆறாயிவோம்
 ஒளூ இல்லாதவர்களும் , குளிப்பு கடமையானவர்களும் ,பெண்கள் மாதவிடாய் மற்றும் பேறு காலத்தொடக்கு உள்ளவர்களும் , குர்ஆனை தொடலாம் ? ஓதலாம் ? என்று இஸ்லாமிய பெயர்தாங்கியான பிஜெ என்ற வழிகேடர் கூறுகிறார் .
 இதுவும்ஷரீஅத்தீன் தீர்ப்புக்கு முற்றிலும் மாறுபட்டதும் , ஹராமான செயலுமாகும்.
 ஸூரத்துல் வாகிஆவிலுள்ள 79 ஆவது வசனத்திற்கு அடைப்புக்குறிக்குள் ஒரு வார்த்தையைச் சேர்த்து தவறான அர்த்தம் எழுதி , அதனுடைய விளக்க குறிப்பு 291 ல் பின் வருமாறு எழுதுகிறார் .
 பிஜெ வின் விளக்கம்
 திருக்குர்ஆன் எழுத்துவடிவில் அருளப்படவில்லை எனும் போது எழுத்து வடிவில் அருளப்படாததை தொடும் பேச்சுக்கே இடமில்லை . தொடும் விதத்தில்லாவது அருளப்படிருந்தால் மட்டுமே இந்தக் குர்ஆனைத் தொடமாட்டார்கள் என்று கூறமுடியும் . திருக்குர்ஆன் நபிகள் நாயகத்திற்கு ஓதிக் காட்டப்பட்டதே தவிர எழுத்து வடிவில் அருளப்படவில்லை .எனவே . இதைத் தொடமாட்டார்கள் என்பது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனைக் குறிக்காது . எங்கிருந்து அருளப்பட்டதோ அந்த மூலப்பிரதியைத்தான் குறிக்கும் இவ்வாறு தன்னுடைய சுய விளக்கத்தை எழுதியபின் கடைசி பாராவில் இப்படி எழுதி இருக்கிறார் : எல்லா நிலைகளிலும் , எல்லா மனிதர்களும் குர்ஆனை தொடலாம் , படிக்கலாம் , வாசிக்கலாம் , என்பது தான் குர்ஆனிலிருந்து பெறப்படுகிற ,நபிகள் நாயகத்தின் வழிமுறைகளிலிருந்து பெறப்படுகிற முடிவாகும் .
 நூல் : பிஜெ வின் தர்ஜமா என்ற நாவல் பக்கம் : 1248
 நம்முடைய விளக்கம்
 இதிலும் தன் சொந்தக் கருத்தைத்தான் சொல்கிறார் , ஆதாரம் எதையும் காண்பிக்கவில்லை . குர்ஆனிலிருந்து ,நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளிலுருந்தும் பெறப்படுகின்ற முடிவு என்று பிஜெ கூறியிருப்பதும் தன்னிச்சையான முடிவேயாகும் .
 இவ்வாறு தன் சுய அறிவுப்படி குர்ஆனுக்கு விளக்கம் சொல்ப்வரைப் பற்றி ஹதீஸ்கள் எச்சரிகிறது ஹதீஸ்:
 தன் சுய அறிவின்படி குர்ஆனுக்கு விளக்கம் கூறுகிறவர் தன் தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும் என்று நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ
 நூல் : திர்மிதி ,மிஷ்காத் ,,
 ஹதீஸ் = 2
 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : யார் வேண்டும் என்றே என்மீது பொய் சொல்கிறாறோ அவர் தன் தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும் . அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ
 நூல் : திர்மிதி ,மிஷ்காத் ,,


 பிஜெ இது போன்ற ஹதீஸ்களை பார்பது இல்லை போல் ! குர்ஆன் & ஹதீஸ் இவைகளில் இருந்து ஆதாரம் இல்லையே ? மாறாக பெறப்படும் கருத்து என்று சொல்கிறார் . பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் குர்ஆனும் & ஹதீஸூம் அல்லாத வேறு எந்த மனித அபிப்பிராயத்தையும் ஏற்கவே முடியாது என்று முழங்கிக் கொண்டுருப்பவர் . பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் தன்னுடைய அபிப்பிராயத்தை மட்டும் இங்கு புகுத்தி '' இதுதான் சரியான கருத்து '' என்று எவ்வாறு எழுதுகிறார் ? எந்த ஆயத்திலும் & எந்த ஹதீஸிலும் இல்லாத , ஒரு விளக்கத்தை ,தன் அறிவை மட்டும் பயன் படுத்திக் கூறியிருப்பது . இவர் மிக பெரிய பொய்யன் , , வழிகேடன் என்பதற்க்கு சான்றாகும் . ..


 இந்த பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் :
 தன்னுடைய கருத்து மட்டுமே சரியானது , மற்றவை தவறானவை என்ற விதத்திலேயே குர்ஆனுடைய இந்த ஆயத்திற்கு அர்த்தம் எழுதியுள்ளார் , பிஜெ வின் விளக்கத்தை பாருங்கள் :
 ''தூய்மையான ( வான ) வர்களைத் தவிர ( மற்றவர்கள் ) அதைத் தீண்டமாட்டார்கள் '' ( மொழிபெயர்ப்பு = 56 / 79 )
 மற்ற மொழிபெயர்ப்புகளில் உள்ள அர்த்தம் :
 '' பரிசுத்தமானவர்களைத் தவிர ( வேறு எவரும் ) இதனைத் தொடமாட்டார்கள் ''
 பிஜெ தன்னுடைய மொழிபெயர்ப்பில் தூய்மையானவர்கள் வானவர்கள்தாம்என்பதை உறுதிப்படுத்துவதற்காக '' வான '' என்ற ஒரு வார்த்தையை அடைப்புக்குறிக்குள் அதிகப்படுத்தி எழுதியுள்ளார் . இது எந்த மொழிப்பெயர்ப்பாளரும் எழுதாத புதிய கருத்தாகும் மேலும் ,பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் '' லாயமஸ்ஸூஹூ '' என்பதற்க்கு தீண்டமாட்டார்கள்என்று தவறாக அர்த்தம் எழுதியுள்ளார் .'' லாயமஸ்ஸூஹூ '' என்பதற்கு தொடமாட்டார்கள் என்பது அர்த்தம் .
 தொடமாட்டார்கள் என்பதற்கும் , தீண்டமாட்டார்கள் என்பதற்க்கும்நிறைய வேறுபாடு உள்ளது .பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கடிப்பதற்குத்தான் தீண்டுதல் என்று சொல்லப்படும் .அவருடைய மொழிபெயர்ப்பில் இது போன்ற தாறு மாறான மொழிபெயர்ப்பைக் கொண்டு விளக்கங்கள் கூறி குழப்பங்கள் செய்து வரும்இந்த வழிகேடர் பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் அடையாளம் கண்டுகொள்ளுங்கள் இது ஒரு சில வசனங்களுக்கு , மட்டும் மல்ல குர்ஆன் முழுமைக்கும் இவ்வாறே தவறான கருத்துக்கள் எழுதப்படுள்ளன ! இஸ்லாமியர்களே நம் ஈமானை பாதுகாக்க இது போன்ற வழிகேடர்கள் சொல்லும் & எழுதும் விளக்கம் வேண்டாம் .அல்லாஹூ நம்மை அனைவரையும் பாதுகாப்பானாக .
👇👆👇👆👇👆👇

 இனி நம் தஃப்ஸீர்களில் உள்ள விளக்கங்களைப் பார்ப்போம் :
 பரிசுத்தமானவர்கள் என்று அல்லாஹூ தஃஆலா கூறியுள்ள இந்த வார்த்தைக்கு இரண்டு அர்த்தம் கூறப்படும்
 [ 1 ]=பாவங்களை விட்டுப் பரிசுத்தமானவர்கள்
 [ 2 ]= அசுத்தாங்களை விட்டுப் பரிசுத்தமானவர்கள்
 முதல் அர்த்தத்தின் படிபரிசுத்தமானவர்கள் என்பவர்கள் மலக்குகளாகும் .அதன் படி தொடமாட்டார்கள் என்றால் '' லவ்ஹூல் மஹ்ஃபூள்என்னும் பதுகாக்கப்பட்ட பேரேட்டில் உள்ளதை அவர்களைத் தவிர வேறெவரும் தொடமாட்டார்கள் என்பது கருத்தாகும் .
 👆👇👆👆👇👆👇

 இரண்டாவது அர்த்தத்தின் படிபரிசுத்தமானவர்கள் என்பவர்கள் மனிதர்களாகும் . ஒளு இல்லாமலிருப்பது , குளிப்பு கடமையாயிருப்பது , பெண்கள் மாதவிடாய் மற்றும் பேறு காலத்தொடக்கு உள்ளவர்களாக இருப்பது போன்று அசுத்தங்களை விட்டும் பரிசுத்தமாயிருப்பது என்று பொருளாகும் . இதன் படி தொடமாட்டார்கள் என்பது நம் மிடமுள்ள அச்சிடப்பட்ட தாள்களைக் கொண்டகுர்ஆன் ஷரீஃபாகும் . ''' குர்ஆனை (மேற்கூறப்பட்ட சிறிய பெரிய அசுத்தங்களை விட்டும் ) பரிசுத்ட்ட்ட்தமானவர்களான மனிதர்களைத் தவிர வேறு எவறும் தொடமாட்டார்கள் ''' எனக் கருத்தாகும் . இவ்விரண்டு கருத்துகளுமே சரியானது தான் . ஒவ்வொரு கருத்தையும் ஸஹாபாக்களிலும் , தாபியீங்களிலும் , இமாம்களிலும் பலர் கூறியுள்ளனர் .
 👆👇👆👇👆👇👆👇👆👇👆

 முதல் கருத்தை
 ஹஜரத் இப்னு அப்பாஸ் , அனஸ் , ஸயீது ஜூபைர் ( ரலியல்லாஹூ அன்ஹூம் ) அவர்களும் , முஜாஹித் , இக்ரிமா , ளஹ்ஹாக் , ஜாபிர் பின் ஜைத் ( ரஹிமஹூ முல்லாஹ் ) போன்றோர் கூறியுள்ளார்கள் .
 இரண்டாவது கருத்தை
 ஹஜரத் அலீ , இப்னு மஸூது , ஸஃது பின் அபீவக்காஸ் , ஸயீது பின் ஜைது ( ரலியல்லாஹூ அன்ஹூம் ) அவர்களும் , முஹம்மது பாகர் , அதாஉ , தாவூஸ் , ஜுஹ்ரி , ஸாலிம் , நகயீ , ஹகம் , ஹம்மாது , மாலிக் பின் அனஸ் , அபூஹனிஃபா , ஷாஃபீ , அஹ்மது பின் ஹம்பல் , ( ரஹிமஹூல்லாஹூ ) போன்றோர்கள் க்றியுள்ளார்கள் .
 👆👇👆👇👆👇👆👇👆👇👆

 இரண்டு கருத்துகளுமே சரியானது தான். என்றாலும் இரண்டில் தீர்ப்புக்குரியதும், அமல் படுத்தப்பட வேண்டியதும் , இரண்டாவது கருத்தைத்தான் என்பது இமாம்கள் அனைவரின் ஏகோபித்த அபிப்பிராயமாகும். எனவே , பரிசுத்தமானவர்களைத் தவிர ( வேறு எவறும் ) இதனைத் தொடமாட்டார்கள் . என்ற ஆயத்திற்கு ஒளூ இல்லாதவர்கள் குர்ஆனைத் தொடுவதும் . குளிப்பு கடமையானவரும் , மாதவிடாய் மற்றும் பேறு காலத்தீட்டு உள்ள பெண்களும் , குர்ஆனைத் தொடுவதும் , ஓதுவதும் ஹராமாகும் . இதற்கு நேர்மாற்றமாக பிஜெ என்ற வழிகேடர் எல்லா நிலைகளிலும் , எல்லா மனிதர்களும் , குர்ஆனைத் தொடலாம் . படிக்கலாம் . வாசிக்கலாம் , என்று பிஜெ எழுதியிருப்பது முற்றிலும் தவறாகும் . ஷரீஅத்தில் ஹராம் என்று தீர்ப்பாளிக்கப்பட்ட ஒரு செயலை ஹலாலாக்கிவைக்கிறார்
 👆👇👆👇👆👇👆👇👆👇👆

 ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் பரிசுத்தமான மனிதர்கள் மட்டுமே இந்தக் குர்ஆனைத் தொடவேண்டுமெனக் கூறிய ஹதீஸ்களை பார்போம்
 ஹதீஸ் : 1 =
 யமன் நாட்டுக்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் : எழுதிய ஒரு கடிதத்தில் '' லா யமஸ்ஸூல் குர்ஆன இல்லா தாஹிருன் '' பொருள் : சுத்தமானவரைத் தவிர இந்தக் குர்ஆனைத் தொடவேண்டாம் '' என எழுதியனுப்பியதாக அம்ரு பின் ஹஜம் ( ரலியல்லாஹூ அன்ஹூ ) அவர்கள் அறிவித்துள்ளார்கள் . இந்த ஹதீஸ் தாருகுதீனி , யில் பதிவு செய்யப்பட்டுள்ளது , இதனை ஹாகிம் அவர்கள் மஃரி ஃபாவிலும் , பைஹகீ அவர்கள் கிலாஃபிய்யத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள் .
 👆👇👆👇👆👇👆👇👆👇👆

 ஹதீஸ் : 2
 '' பரிசுத்தமானவரைத் தவிர ( வேறு எவறும் ) இந்தக் குர்ஆனைத் தொடவேண்டாம் '' ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் :கூறினார்கள் அறிவித்தவர் : இப்னு உமர் ரலயல்லாஹூ அன்ஹூ நூல் : தப்ரானீ
 ஹதீஸ்: 3
 ஹகீம் பின் ஹிஜாம் ( ரலியல்லாஹூ அன்ஹூ ) அவர்களை யமன் நாட்டிற்கு அனுப்பிய பொழுது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் : '' நீ பரிசுத்தமாயிருக்கும் நிஹதீஸ் : 3 லையிலே தவிர இந்தக் குர்ஆனைத் தொடவேண்டாம் என்று கூறி அனுப்பினார்கள் . நூல் : தப்ரானீ , அபிதாவுத் , ஹாகிம் , கஞ்ஜுல் உம்மால் ( 1 / 615 ) நூல் : ரூஹூல் மஃஆனீ ( 9 / 155 ) இப்னு கதீர் (4 / 229 ) குர்துபீ (17 / 225 ) மள்ஹரீ ( 1 / 181 ) மஃஆரிஃபுல் குர்ஆன் (8 /287 )
 ஆகிய விரிவுரைகளிலும் , எடுத்தெழுதப் பட்டுள்ளன .இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றும் இப்னு கதீரில் குறிப்பிடப்பட்டுள்ளது
 ஹதீஸ் ; 4
 சுத்தம் ( ஒளூ ) இல்லாதவர்கள் குர்ஆனை தொட வேண்டாம் , தொடக்கூடாது . என நிச்சியமாக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் யமன் வாசிகளுக்கு கடிதம் எழுதினார்கள்
 ( அறிவித்தவர் : அபூபக்ரு பின் முஹம்மது பின் ஹஜ்ம் ரலியல்லாஹூ அன்ஹூ நூல் : தப்ரானி )
 ஹதீஸ் : 5
 தூய்மை மூலம் தவிர எந்த தொழுகையும் ஏற்க்கப்படாது என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அறிவித்தவர் : அபு குரைரா ரலியல்லாஹூ அன்ஹூ நூல் : முஸ்லிம் , அபூதாவுத் இதில் தூய்மை என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள் இதில் தூய்மை என்பது ஒளூ மற்றும் குளிப்பு , இரண்டையும் குறிக்கும் . அதே போல் தான் தூய்மை இன்றி குர்ஆனை தொடாதே என்பதற்க்கு ஒளூ மற்றும் குளிப்பு இரன்டையும் குறிக்கும் .
 ஹதீஸ் : 6
 மாதவிடாய் ஏற்பட்டவர்களும் , குளிப்பு கடமையானவர்களும் , குர்ஆனை எதனையும் . ஓதலாகாது என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள்
 ( அறிவித்தவர் : இப்னு உமர் ரலியல்லாஹூ அன்ஹூ நூல் : திர்மிதீ , அபுதாவுத் , )
 ஹதீஸ் : 7
 ஜனாபத் இல்லாத எல்லா நிலையிலும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள் அறிவித்தவர் : அலி ரலியல்லாஹூ அன்ஹூ
 நூல் : திர்மிதீ
 👆👇👆👇👆👇👆👇👆👇👆

 மேற்கூறப்பட்ட ஹதீஸ்களில் குர்ஆனை ஒளூ வின்றித் தொடுவதும் , குளிப்பு கடமையானவர் , மாதவிடாய் மற்றும் பேறு காலத்தீட்டு உள்ள பெண் ஆகியோர்கள் தொடுவதும் , ஓதுவதும் ஹராம் என்பதைச் ஹதீஸ்கள் மூலம் ஆதாரம் காட்டிவுள்ளோம் இதைத்தான் சட்டமாமேதைகள் ஹராம் என்பதை விளக்கிவுள்ளார்கள் .
 திருக்குர்ஆனை ஓளூ இல்லாமல் தொடலாம் என்பதற்க்கு இன்னோரு உதாரணத்தையும் எழுதியுள்ளார் பிஜெ என்ற கருத்து கண்ணாயிரம் இதை படியுங்கள் :
 இந்தக்குரஆன்த் தூய்மையானவர்கள் தான் தொடவேண்டும் , மற்றவர்கள் தொடக்கூடாது என்றெல்லாம் இவ்வசனத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு பலரும் சட்டங்களை வகுத்துள்ளனர் .ஆனால் இந்த வசனம் எல்லா மக்களுக்கும் , வழிகாட்டுவதற்காக அருளப்பட்டது . எல்லா நிலையிலும் வாசிப்பதற்காக அருளப்பட்டது . எல்லா மாந்தர்களும் படிப்பதற்காக அருளப்பட்டது . முஸ்லிம்கள் அல்லாதாவர்கள் இந்தக் குர்ஆனை வாசித்தால் தான் அவர்கள் நேர்வழி பெற முடியும் . நீங்கள் தூய்மையாக இல்லை , நீங்கள் குர்ஆனைத் தொடக் கூடாது , என்று கூறினால் எந்த நோக்கத்திற்க்காக குர்ஆனை அல்லாஹூ அருளினானோ அந்த நோக்கத்தைச் சிதைத்தவர்களாக நாம் ஆகிவிடுவோம் . நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் பல நாடுகளின் தலைவர்களுக்கு திருக்குர்ஆன் வசனங்களை எழுதி இஸ்லாத்தின் பால் அழைப்புக் கொடுத்துள்ளார்கள் . அந்த மன்னர்கள் அதைத் தம் கையால் தொட்டு வாசிப்பார்கள் என்பதை அறிந்தே திருக்குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியிருக்கும் போது திர்க்குர்ஆனைத் தூய்மையுடன் தான் தொடவேண்டும் என்று கூறுவது தவறாகும் . குர்ஆனிலிருந்து மக்களை அந்நியப்பத்தி விடும் .
 பிஜெ வின் தர்ஜமா என்ற நாவல் பக்கம் : 1065
 👆👇👆👇👆👇👆👇👆👇👆

 நம்முடைய விளக்கம்
 இது, அவர் தன்னுடைய சுய அறிவின்படி எழுதியதாகும் இதற்காவது குர்ஆன் & ஹதீஸ்களில் இருந்து ஆதாரம் காட்டி இருக்க வேண்டும் அப்படியும் செய்யவில்லை . குர்ஆனில் நாம் சுயகருத்தை சொல்லலாமா ?
 ஹதீஸ் : 1
 '' எவரொருவர் தன் சுயறிவுப்படி குர்ஆனுக்கு விளக்கம் கூறி ( உண்மையில் ) அது சரியாக இருந்தாலும் உறுதியாக அவர் தவறு செய்தவரேயாவார் ''
 அறிவிப்பவர் :ஜூந்துப் பின் அப்தில்லாஹ் ரலியல்லாஹூ அன்ஹூ நூல் திர்மிதி
 ஹதீஸ் : 2
 '' யார் குர்ஆனில் தர்கம் செய்கிறறோ அவர் காஃபிராகி விட்டார் ''
 ( அறிவிப்பவர் : அபூஹூறைறா ரலியல்லாஹூ அன்ஹூ நூல் : அஹமது , அபூதாவூத் , )
 அல்லாஹூ திருகுர்ஆனில் இணைவைத்து வணங்குபவர்களை பற்றி :
 ஈமான் கொண்டவர்களே ; நிச்சயமாக இணைவைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே( 9 / 28 )
 இந்த குர்ஆனை தூய்மையானவர்கள்தான் தொடவேண்டும் மென்பதற்க்கு மேலே பல ஆதாரமாக ஹதீஸ்களை காட்டி விட்டோம் ஆனால் பிஜெ குர்ஆனையோ & ஹதீஸையோ காட்டாமல் தன் சொந்த சரக்கை ( சுய அறிவை ) பயன்படுத்திவுள்ளார் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது .
 நாம் பிஜெ பானியிலே கேட்போம் அதாவது
 அல்லாஹூவும் ,அவனுடைய ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் சொல்படி நடப்பது சிறந்ததா ?
 தன்னுடைய சுயஅறிவை பயன்படுதும் இந்த பிஜெ என்ற கருத்து கண்ணாயிரத்தை பின்பற்றுவது சிறந்ததா ?
 என்று உங்களிடத்தில் கேட்டால் நீங்கள் கண்களை முடிக்கொண்டே சொல்விற்கள் அல்லாஹூம் , ரஸூலும் சொல்வதைதான் கேட்போம் என்று .......!

Wednesday, 6 January 2016

நபிமார்களும், அவ்லியாக்களும் மரணிப்பதில்லை! திருமறை முழக்கம் திருநபி விளக்கம்.


நபிமார்களும், அவ்லியாக்களும் மரணிப்பதில்லை! திருமறை முழக்கம் திருநபி விளக்கம்.





'பீஸபீலில்லாஹ்’ அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு உயிர் இழந்தவர்கள் மரணித்துவிட்டார்கள் என்று கருதிவிடாதீர்கள் எங்கிலும் அவர்கள் தங்களின் இறைவனிடம் உயிரோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவளிக்கப்படுகிறது. மேலும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கும் அருட்கொடைகளை கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாய் இருக்கிறார்கள்” (அல்குர்ஆன்)
மேலே கூறப்பட்ட திருமறை வசனத்தின் மூலம் புனிதப்போரில் உயிர் துறந்த உத்தமர்கள் ஷுஹதாக்கல் ஆவார்கள் அவர்களுக்கு இவ்வுலகில் மவ்த் மரணம் பேரளவில் மட்டும்தான் ஏற்படுகிறது ஆயினும் அவர்கள் உண்மையில் மரணிப்பதில்லை. அவர்கள் எங்கு இருந்தாலும் உயிரோடுதான் இருக்கிறார்கள் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது மேலும் பல்வேறு அருட்களும் அவர்களுக்கு கிடைக்கின்றன. அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாய் இருக்கிறார்கள் என்ற உண்மையான தத்துவங்கள் கிடைக்கின்றன.மேலே கூறிய மறை வசனம் ஷுஹதாக்கல் எனப்படும் புனிதப்போரில் உயிர் துறந்தவர்களைப் பற்றி அருளப்பட்ட வசனமேயாகும். அந்தத் தியாகிகள் யாவரும் யுத்த களத்தில் மரணத்தைத்தழுவி முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டவர்களேயாவார்கள். அவர்கள் மரணித்ததும் அவர்களை மற்ற நண்பர்கள் நல்லடக்கம் செய்ததும் உண்மையேயாகும். இறைவன் திருமறையில் மேலே கூறிய வசனத்தின் மூலம் ஷுஹதாக்கள் மரணிக்கவில்லை என்று தெளிவாகக்கூறியுள்ளான் இதனால் ஷுஹதாக்கள் உயிர்தியாகிகள் யாவரும் பேரளவில் மரணத்தவர்களேயன்றி 'ஹகீகத்’ யதார்தத்தில் அவர்கள் மரணிக்கவில்லையென்பது தெளிவாகிவிட்டது. மறை வசனத்தில் கூறப்பட்ட ஷுஹத்தாக்கள் உயிர்தியாகிகள் யாரெனில் திருக் கலிமாவை நிலைநாட்டுவதற்காகவும் ஈமானையும், ஸ்திரப்டுத்துவதற்காகவும் காபிர்களுடன் போர்தொடுத்து அந்தப்போரில் காபீரீன்களால் அல்லது தவறுதலாக முஸ்லீம்களால் வெட்டப்பட்டு இறந்தவர்களேயாகும். மேலே கூறப்பட்ட வசனங்கள் யாவும் இவர்கள் விசயத்தில் அருளப்பட்டவைதான்.கலிமாவுக்காகவும், தவ்ஹீதை நிலைநாட்டுவதற்காகவு மின்றி நாட்டைக்கைப் பற்றுவதற்கும், எல்லைப் பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்கும் மேலும் இவ்வுலக விவகாரங்களுக்கும் நடைபெறும் போர் புனிதப்போராக மாட்டாது. அதில் இறப்பவர்கள் ஷுஹதாக்கள் ஆகவும் மாட்டார்கள். அவர்களுக்கு மேலேகூறிய வசனத்தில் உள்ள எந்த ஒரு சிறப்பும் கிடையாது. ஆகவே ஷுஹதாக்கல் எனப்படுவோர் புனிதப்போரில் உயிர்துறந்தவர்களேயல்லாமல் வேறு எந்த நோக்கத்திற்காகவும் உயிர் துறந்தவர்களல்லர்.மேலே கூறிய மறை வசனத்தில் விரிவான விளக்கத்தை அறியாதவர்கள் அவ்வசனத்தில் சுஹதாக்களை மட்டும்தான் அல்லாஹ் கூறியுள்ளான் ஆகையால் ஷுஹதாக்கள்அல்லாத வேறெவரும் ஷஹீதுடைய இடத்தை அடைய முடியாது என்று கருதி. நபிமார்களும், அவ்லியாக்கலும் ஷுஹதாக்களின் பதவியை பெற முடியாது என்றும் ஷுஹதாக்கள் அல்லாத எவரும் மரணித்த பின்பு உயிரோடு இருப்பதில்லை என்றும் வாதிடுகிறார்கள். இன்னொர் திருமறை வசனத்தின் சரியான விளக்கத்தை அறியாதவர்கள் என்றே கூறவேண்டும் மேலே கூறப்பட்ட மறை வசனத்தை சரியாக ஆராய்ந்தால் அவ்வசனத்திலேயே நபிமார்களும் அவ்லியாக்களும் மரணத்தபின் உயிர் உள்ளவர்கள் என்பது தெளிவாகும்.ஷுஹதாக்கள் அல்லாத நபிமார்களும் அவ்லியாக்களும் இயற்கை மரணத்தின்பின் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கு மேற்கூறிய வசனத்தில் எந்த வகையில் ஆதாரம் இருக்கிறது என்பதை பின்னால் ஆராய்வோம். நபிமார்கள் அவ்லியாக்கல் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை ஹதீஸ்கள் மூலம் ஆராய்வோம்.1.நபிமார் தமது கப்ரில் மண்ணறையில் உயிரோடு இருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள். ஆதாரம் –பைஹகீ2. நான் விண்ணுலக யாத்திரை சென்றபோது நபி மூஸா (அலை) அவர்களுக்கு அருகே சென்றேன் அப்பொழுது அவர்கள் தங்களின் கப்ரில் மண்ணறையில் நின்றவர்களாய் தொழுதுகொண்டிருந்ததைக் கண்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். ஆதாரம் –புஹாரி3. நபி (ஸல்)அவர்கள் விண்ணுலக யாத்திரை சென்ற இரவு எல்லா நபிமார்களையும் அல்லாஹ் நமது நபிக்கு எழுப்பிக் காட்டினான் நபி (ஸல்) அவர்கள் அந்த நபிமார்களை மஉமூம் தொடர்பவர்களாய் வைத்து இரண்டு ரக்அத் தொழுகை நடாத்தினார்கள். ஆதாரம்- புஹாரி, முஸ்லீம்4. நான் விண்ணுலக யாத்திரை செய்த பொழுது நபிமார்களில் ஒரு கூட்டத்துடன் என்னை நான் கண்டேன் அப்போழுது மூஸா நபி (அலை) அவர்கள் தொழுதுகொண்டிருந்தார்கள் மூஸா நபி சுருண்ட முடியுடையவராயும் மஞ்சல் நிறத்தை ஒத்தவராயும் இருந்ததைக் கண்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். ஆதாரம்-புகாரி, முஸ்லீம்மேற்கூறப்பட்ட ஆதாரபூர்வமான நான்கு ஹதீஸ்களின் மூலம் நபிமார் மரணத்தின்பின் உயிரோடு இருப்பார்கள் என்பது தெளிவாகிவிட்டது ஆயினும் உங்களுக்கு ஒரு சநதேகம் தோன்றும் அதை விளக்கி வைக்கிறேன்.இரண்டாவது ஹதீஸில் கூறப்பட்ட மூஸா (நபி) தனது கப்ரில் தொழுதுகொண்டிருந்த விஷயமும் மூன்றாவது ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் எல்லா நபிமாரையும் வைத்து தொழுகை நாடாத்தினார்கள் என்ற விஷயமும். நான்காவது ஹதீஸில் மூஸா நபி சுருண்ட முடியையும் மஞ்சல் நிறத்தையும் உடையவர் என்ற விசயமும் நபிமார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாகாதென்று சிலர் கருதி நபிமார்கள் மற்ற உயிரினங்களைப்போல் உயிரில்லாத பிணங்கள் என்றும் கூறுகிறார்கள் அதற்கு பின்வருமாறு அவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்.நபி (ஸல்) அவர்கள் விண்ணுலக யாத்திரை சென்ற சமயம் மூஸா நபி (அலை) அவர்களின் உடலமைப்பில் சடமில்லாத உருவத்தையும், மஉமூம்களாக நின்று தொழுத ஏனைய எல்லா நபிமார்களின் உடலமைப்பில் சடமில்லாத பல உருவங்களையும் இறைவன் நபி (ஸல்) அவர்களின் பார்வைக்கு காட்டிக் கொடுத்தானேயன்றி அந்த நபிமார் சடமுள்ளவர்களாகத் தென்படவில்லை. எனவே மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் மூலம் நபிமார் மரணித்தபின் உயிருள்ளவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதென்று கூறுகிறார்கள் நபிமார் மரணித்தபின் உயிருள்ளவர்கள் அல்லர். வென்பதற்கு மேலேகூறிய மூன்று ஹதீஸ்களிலும் ஆதாரமில்லை என்று வாதிடுவோர் முதலாவதாக கூறப்பட்ட பைஹகீ அறிவித்த ‘நபிமார் தமது கப்ரில் உயிரோடு இருக்கிறார்கள் இன்னும் தொழுகிறார்கள் என்ற ஹதீஸ் பற்றி என்ன சொல்வார்கள்? அந்த ஹதீஸில் நபிமார் மரணித்தபின் உயிருள்ளவர்கள் என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளதால் அவர்கள் உயிரோடு இருப்பதில் சந்தேகம் இல்லை. மேலும் அந்த ஹதீஸ் ஆதாரமற்ற தென்று கூறுவதற்கும் வழியே இல்லை.மேலே கூறப்பட்ட மூன்று ஹதீஸ்களிலும் நபிமார் மரணதித்தபின் உயிருள்ளவர்கள் என்பதற்கான ஆதாரத்தை கவனிப்போம். மூஸா நபி (அலை) அவர்களும் மற்ற எல்லா நபிமாரும் விண்ணுலக யாத்திரையின்போது நபி (ஸல்) அவர்களுக்கு காட்சி கொடுத்தார்கள் என்பதற்கு நபிமார்களின் உடலமைப்பை பெற்ற உருவங்களை கண்டார்களேயன்றி அவர்களை சடத்துடன் காணவில்லை என்று மேற்கூறப்பட்ட மூன்று ஹதீஸ்களுக்கும் மறுப்பவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்.நபீ (ஸல்) அவர்கள் விண்ணுலக யாத்திரையின்போது நபிமாரை அவர்களின் சடத்துடன் காணவில்லை என்பது அவர்களின் வாதமாகும். இவர்களின் வாதம் மறுக்கப்படவேண்டியதேயாகும். ஏனெனில் நபி மூஸா (அலை) அவர்களும் மற்ற நபிமார்களும் தொழுவார்கள். என்ற நபி மொழியிலிருந்து அவர்கள் தமது சடத்துடன் உயிரோடு இருக்கிறார்கள் என்பது தெளிவாகிவிட்டது. ஏனெனில் தொழுகை என்பது ருகூஉ, சுஜூது போன்ற பலவகையான செயல்களைக் கொண்டதாகும் செயல்கள் ஆட்ட அசைவுகள் யாவும் சடத்துக்குரிய தன்மைகளேயன்றி றூஹூக்குரியவையல்ல. குனிதல், நிமிர்தல், நிற்றல் ஆகியவையெல்லாம் சடத்துக்கும் உடலுக்குமுறிய தன்மைகளாகும் தொழுகையில் இவ்வாறான செயல்கள் இடம்பெறுவதால் விண்ணுலக யாத்திரையின்போது நபி (ஸல்) அவர்கள் கண்ட நபிமார் யாவரும் தமது சடத்துடனேயே காட்சியளித்தார்கள். என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களை சுருண்ட முடியும் மஞ்சல் நிறமும் உடையவர்கள் என்று வருணித்ததிலிருந்தும் நபி மூஸா (அலை) அவர்கள் தமது சடத்தோடுதான் காட்சியளித்தாகள் என்பது விளங்குகிறது. ஏனைனில் சுருண்ட முடியும் மஞ்சல் நிறமும் சடத்துக்குரிய வருணனையேயன்றி றூஹூக்குரியதல்ல. றூஹூ உயிர் என்பது சுருண்டது, நீண்டது, கறுப்பு, மஞ்சல் என்று வருணிக்கமுடியாததாகும். எனவே நபிமார் மரணத்தின்பின் உயிரோடு இருக்கிறார்கள் என்பது நபி (ஸல்) அவர்கள் விண்ணுலக யாத்திரையின்போது நபிமார்களை அவர்களின் சடத்துடனேயே கண்டார்கள் என்பதும் மேற் கூறப்பட்ட ஹதீஸ்கள் மூலம் நிரூபணமாகிவிட்டது.நபிமார் மரணித்த பின்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதில் இமாம்களும், அவ்லியாக்களும் அறிஞர்களும் எவ்வித கருத்து வேறுபாடுகளும் தெரிவிக்கவில்லை. ஆனால் வஹாபிய்யத் எனும் வழிதவறிய கொள்ளை வழிநடப்பவர்களும் இன்னும் அவர்களைப்போன்ற சுன்னத் வல் ஜமாஆத் கொள்கைக்கு முரண்பட்ட கொள்கையுடையவர்களும் நபிமார் மரணித்தபின் உயிரோடு இருப்பதில்லை அவர்களின் சரீரம் இறந்து அழிந்து மண்ணுடன் மண்ணாகிவிட்டது என்று கருதுகிறார்கள்.இமாம்களும் அவ்லியாக்களும் ஏகமாக நபிமார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் தமது சடத்துடன் உயிரோடு இருக்கிறார்கள் என்பதில் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டு. விபரம் பின்னால் வரும்.இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களும் இமாம் கர்றாபி (ரஹ்) அவர்களும் நபிமார் மரணித்தபின் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள் ஆயினும் மரணத்தின்பின்பு நபிமார் தமது சடத்துடன் காட்சியளிப்பதை மறுக்கிறார்கள்.நபிமாருடைய மரணத்தின் பின்பு யாராவது அவர்களை கனவில் அல்லது விழிப்பில் கண்டால் அவர்களின் உடலமைப்பையுடைய உருவத்தைக் காண்கிறார்களேயல்லாமல் அவர்களின் சடலத்தைக் காணவில்லை. என்று வலியுறுத்திக்கூறியுள்ளார்கள்.இமாம்களுக்கிடையில் கருத்துவேறுபாடு இல்லையானால் நான்கு மத்ஹபுகள் தோன்றியிருக்க மாட்டாது “இக்திலாபுல் அயிம்மா றஹ்மதுன் லில்உம்மா” இமாம்களின் கருத்து வேறுபாடு மனிதர்களுக்கு மாபெரும் அருளேயாகும். என்று அறிஞர்கள் ஏகமாக கூறியுள்ளார்கள்.இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்களும் இமாம் கர்றாபி (றஹ்) அவர்களும் நபிமார் மரணத்தின்பின்பு சடத்துடனேயே மற்றவர்களின் கனவிலோ, நினைவிலோ காட்சியளிக்கின்றார்கள் என்பதை மறுக்கின்றார்கள். ஆயினும் நபிமார் மரணத்தின் பின்பு உயிரோடு இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். இவர்கள் இருவரையும் தவிரவுள்ள ஏனைய இமாம்கள் இவ்விருவருக்கும் மாறாக கூறுகிறார்கள். நபீமார் மரணத்தின்பின்பு உயிரோடு இருப்பதைப்போல் தமது சடத்துடனேயே மற்றவர்களுக்கு காட்சியளிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இதுவரை எழுதியவற்றிலிருந்து நபிமார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதும் கனவிலோ நினைவிலோ தமது சடத்துடனேயே மற்றவர்களுக்கு காட்சியளிக்கின்றார்கள் என்பதும் நிரூபணமாகிவிட்டது.ஆரம்பத்தில் கூறிய திருமறை வசனத்தை ஆராய்வோம். அவ்வசனத்தில் மரணத்தின் பின்னும் உயிரோடு இருப்பவர்கள் ஷுஹதாக்கள் புனிதப்போரில் உயிர் துறந்தவர்கள் என்று அல்லாஹ் அருளியுள்ளான். அந்த ஷுஹதாக்களில் நபிமார்களும் அவ்லியாக்களும் சேர்ந்தவர்களா? இல்லையா? என்பதை ஆராய்வோம்.மேலே கூறப்பட்ட திருமறை வசனத்தில் “குதிலூ பீஸபீலில்லாஹ்” அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு இறந்தவர்கள் என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான் இதனால் புனிதப்போரில் உயிர் துறந்தவர்கள் மட்டும்தான் அவ்வசனத்தில் குறிக்கப்பட்டவர்கள் என்பது மேலெழுந்த வெளிப்படையான விளக்கத்தின்மூலம் கிடைக்கின்றது.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் புனிதப்போருக்கு சென்று யுத்தம் செய்துவிட்டு திரும்பி வந்த சமயம் நாம் சிறிய யுத்தத்திலிருந்து பெரிய யுத்தத்திற்கு வந்துள்ளோம் என்று கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் ரசூலே நாம் செய்துவிட்டு வந்திருப்பது சிறிய யுத்தம் என்றால் பெரிய யுத்தம் எது என்று வினவினார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒருவர் தனது நப்சுடன் போராடுவது பெரிய யுத்தம் என்று அருளினார்கள். இந்த ஹதீஸில் போர்களத்தில் வால் ஏந்தி காபீர்களுடன் யுத்தம் செய்வது சிறிய யுத்தம் என்றும் ஒருவர் தனது நப்சுடன் போரிடுவது பெரிய யுத்தம் என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.சிறிய யுத்தத்தில் உயிர் துறந்தவர் ஷஹீத் ஆகிவிடுகிறார் என்றால் பெரிய யுத்தம் என்று நபி (ஸல்) அவர்களால் வருணிக்கப்பட்ட நப்சுடனான போரில் உயிர் துறந்த ஒருவர் ஷஹீதாகி விடுவார் என்பதில் வியப்பொன்றும் இல்லை.‘நுபுவ்வத்’ நபித்துவம் என்ற பதவி நபிமாருக்கும், ‘விலாயத்’ ஒலித்தனம் என்ற பதவி அவ்லியாக்களுக்கும் கிடைப்பதனால் அப்பதவியைப் பெறுபவர் நப்ஸுடன் போராடி வெற்றி பெற்றவராக இருத்தல் வேண்டும் உயர் பதவிக்கு தகுதியற்றவருக்கு அப்பதவியை வழங்குவது நியாயமற்றது ஹக்தாஆலா நியாயமில்லாத வேலை செய்ய மாட்டான் உலகில் தோன்றிய எல்லா நபிமார்களும் ஒலிமார்களும் ஜிஹாத் அக்பர் என்னும் பெரிய யுத்தம் செய்தவர்களேதான். அவ்யுத்தத்தில் போராடி வெற்றி பெறாதவர் நபியாகவோ ஒலியாகவோ முடியாது. எனவே மேலே கூறப்பட்ட ஹதீஸின் மூலம் நப்சுடன் போராடிய அனைவரும் பெரிய யுத்தம் செய்த ஷஹீதுகளேயாவார்கள். சிறியபோரில் உயிர் துறந்தவர் மரணித்த பின்னும் உயிரோடு இருக்கிறார் என்றால் நப்ஸுடன் போராடிப் பெரிய யுத்தம் செய்தவர் உயிருடன் இருப்பது நிச்சயமானதாகும்.வாளேந்தி காபீர்களுடன் சமர் செய்வது சிறிய ஜிஹாத் யுத்தம் என்றும் நப்சுடன் போராடுவது பெயரிய யுத்தம் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதன் இரகசியம் என்னவெனில் திருக்கலிமாவை ஏற்றுக் கொள்ளாத காபிரீன்களுடன் வாலேந்திப் போரிடுவது மிகச் சுலபம். ஏனெனில் காபீர் தன்னை விட்டும் வேறானவனேயல்லாமல் தன்னிலிருப்பவன் அல்லன். நப்ஸு என்பது தன்னிலேயே அமைந்த ஒன்றாகும். மேலும் காபிர் சடமுள்ளவனாகும் நப்ஸ் என்பது சடமுள்ளதல்ல ஆகையால் தன்னை விட்டும் வேறான ஒருவனையும், சடமுள்ளவனையும் வெட்டிக் கொன்றுவிடுதல் தன்னிலுள்ளதையும், சடமில்லாததையும் வெட்டிக் கொல்வதைவிடச் சுலபமானதேயாகும். கூண்டில் கிளியிருப்பது போல் மனிதனிலேயே தங்கியுள்ள நப்ஸு எந்த நேரத்தில் எந்த உருவத்தில் தீமை செய்யும் என்பதை அறிந்து கொள்ள முடியாது மேலும் காபீரை வாள்போன்ற ஆயுதத்தினால் வெட்டி விடலாம். ஆனால் நப்ஸ் என்பது வாள் போன்ற ஆயுதத்தினால் வெட்ட முடியாத ஒன்றாகும். ஒரு காபிரை வெட்டி வீழ்த்துவதிலும். நப்ஸை வெட்டி வீழ்த்துவதிலும் நப்சை வெட்டிவீழ்துவதுதான் மிகவும் சிரமமானது.மேலும் நபி (ஸல்) அவர்கள் இன்னோரு ஹதீஸில் உனது பகைவர்களில் உனக்கு மிகவும் கொடிய பகைவன் யாரெனில் உனது இரண்டு விலாவுக்கும் இடையிலுள்ள நப்சு ஆகும் என்று கூறியுள்ளார்கள்.இந்த ஹதீஸில் திருக்கலிமாவை ஏற்றுக் கொள்ளாதவன் பகைவனாய் இருந்தாலும் நப்சானது அவனைவிட பகை கூடியதென்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். எனவே பகை கூடியவனை வெற்றி கொள்வது பகை குறைந்தவனை வெற்றி கொள்வதைவிட சிறந்ததென்பது தெளிவாகிவிட்டது. ஆகவே பகை குறைந்த காபிரை வெற்றி கொண்டவன் ஷஹீது என்ற பதவியை பெற்று மரணத்தின் பின்னும் உயிரோடு இருக்கும் பட்சத்தில் பகை கூடிய நப்ஸுடன் போராடி பெரிய ஜிஹாத் செய்து அதை வெற்றி கொண்டவன் ஷஹீது எனற பதவியைப் பெற்று மரணித்தபின் உயிரோடு இருப்பது வியப்பொன்றுமில்லை.போர்களத்தில் வாளேந்தி போரிடுவது சிறிய யுத்தம் என்பதும் நப்ஸுடன் போராடுவது பெரிய யுத்தம் என்பதும் மேலேகூறிய ஹதீஸ்களினால் நீரூபனமாகிவிட்டதால் சிறிய யுத்தம் செய்தவர் மரணத்தின்பின் உயிரோடு இருப்பதேபோல் பெரிய யுத்தம் செய்தவரும் உயிரோடு இருக்கிறார் என்பதும் தெளிவாகிவிட்டது

ஸஹீஹான ஹதீஸை மறுப்பவரின் நிலை

ஸஹீஹான ஹதீஸை மறுப்பவரின் நிலை
 கேள்வி:
 ஸஹீஹான ஹதீஸை மறுப்பவர் காஃபிராகி விடுவாரா?சிலர் புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் வரும் சில ஹதீஸ்கள் அல்குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி அவற்றை மறுக்கின்றனா.இவர்களின் நிலை என்ன?இவர்கள்காஃபிராகி விடுவார்களா?
 பதில்:
 நபியவர்களின் ஸுன்னா இஸ்லாமிய சட்டவாக்கத்தின் இரண்டாவது மூலாதாரமாகும். அல்குர்ஆனைப் பொன்றே அதுவும் வஹீயாகும்.“அவர் (நபி (ஸல்) ) மனோ இச்சைப்படி பேசுவதில்லை.அ(வர் பேசுவ)து வஹீயே அன்றி வேறில்லை”. (53: 3 – 4)
 நபி (ஸல்) அவர்களது பேச்சுக்கும் அவர்களது ஹதீஸுக்கும் மற்றும் அவர்களது சட்டங்களுக்கும் முஃமின்கள் பூரணமாகக் கட்டுப்பட வேண்டுமென்று அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நபி (ஸல்) அவர்களது பேச்சைக் கேட்டு அதை ஏற்காமல் மறுப்பவனிடம் அறவே ஈமான் இல்லை என்று தன்மீது சத்தியமிட்டு அல்லாஹ் கூறியுள்ளான்.(நபியே!) உம் இரட்சகன் மீது சத்தியமாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமாயாகக் கட்டுப்படும்வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (4:65)
 எனவேதான், பொதுவாக ஸுன்னாவின் ஆதாரத் தன்மையை மறுப்போர், அல்லது நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை, அது நபியவர்களின் கூற்றுத்தான் என்பதை அறிந்த நிலையில் அதனை மறுப்போர் காஃபிர்களாகக் கருதப்படுவர் என்பதில் அறிஞர்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.
 இமாம் இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறாh;கள்.“ரசூல் (ஸல்) அவர்களைத் தொட்டும் ஒரு செய்தி கிடைத்து, அது ஸஹீஹானது என்று ஏற்றுக் கொண்ட பின் தக்வா இன்றி யார் அதை மறுக்கின்றாரோ அவா; காஃபிராவார்;”
 இமாம் சுயூத்தீ (ரஹ்) அவர்கள்கூறினார்கள் :
 “அறிந்து கொள்ளுங்கள்! உஸுலலுல் ஹதீஸில் அறியப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைவாக வந்த ஹதீஸ் ஆதாரமாகக் கொள்ளத்தக்கது என்பதை மறுப்பவர் காஃபிராகி விடுவார். இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு அவர் வெளியேறி விடுவார். மேலும் அவா; யூதர்களுடன் அல்லது கிறிஸ்வதவர்களுடன் அல்லது அவர் நாடிய நிராகரிக்கும் கூட்டத்துடன் மறுமையில் எழுப்பப்படுவார்.”(மிஃப்தாஹுல் ஜன்னா பக்-14)
 மேலும், அல்லாமா இப்னுல் வஸீர் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “ ரஸுல் (ஸல்) அவர்களது ஹதீஸ்தான் என்று அறிந்த நிலையில் ஒருவர் ஹதீஸை பொய்ப்படுத்ு தெளிவான குஃப்ர் ஆகும்.”(அல்அவாஸிம் வல்கவாஸிம் 2⁄274)
 அல்லஜ்னா அத்தஇமா (சஊதி ஃபத்வா வழங்கும் சபை) பின்வருமாறு ஃபத்வா வழங்கியுள்ளது.
 “சுன்னாவைக் கொண்டு அமல் செய்ய மறுப்பவார் காபிராவார். ஏனெனில் அவா;
 அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மற்றும் முஸ்லிம்களது ஏகோபித்த முடிவையும் பொய்ப்படத்துவராவார்”( ஃபத்வா இரண்டாவது தொகுதி 2⁄194)

உளு இன்றி குர்ஆனைத் தொடலாமா?

குர்ஆனைத் தொடுதல்:

குர்ஆனைத் தொடக்கூடியவர் சிறுதொடக்கு மற்றும் பெருந்தொடக்கிலிருந்து தூய்மையானவராக இருக்க வேண்டும். அதாவது உளு இல்லாதவர்களும், குளிப்பு கடமையானவர், மாதவிடாய் பெண்கள் மற்றும் பிள்ளைப் பேறு உதிரப் போக்குள்ள பெண்கள் ஆகியோர் இறைவேதம் குர்ஆனைத் தொடக்கூடாது.

பரிசுத்தமானவர்கள்தான் குர்ஆனைத் தொட வேண்டுமென்பதற்கு அடிப்படை ஆதாரங்கள் மூன்று:
இறைமறை வேதம் அல்குர்ஆன்
இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளான ஹதீது.
நபித் தோழர்களின் ஏகோபித்த முடிவான இஜ்மாஃ

குர்ஆன்: இறைவன் கூறினான்:

لَا يَمَسُّهُ اِلَّا الْمُطَّهَّرُوْنَ (الواقعة 79

‘தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) குர்ஆனைத் தொட மாட்டார்கள்.’ (அல்-குர்ஆன் 56:79)

இச்செய்தியின் மூலம் இறைவன் குர்ஆனின் மாண்பை வெளிப்படுத்துகிறான். தூய்மையானவர்கள்தான் என்று கூறி ஒரு வரைமுறையை இறைவன் விதித்துவிட்டதால் மற்றவர்கள் குர்ஆனைத் தொடக்கூடாது என்ற அழுத்தமான அர்த்தம் இவ்வசனத்தில் உள்ளடங்கியுள்ளது.

(நூல்: ஃதகீரா 1-238 ஆசிரியர் -கர்ராஃபீ)

மனிதர்களில் தூய்மையானவர்கள் என்பதன் பொருள்:
ஷிர்க் எனும் இணைவைப்பு, குஃப்ர் எனும் இறைமறுப்பு இவ்விரண்டை விட்டும் நீங்கி உளத்தூய்மையுடன் இருப்போர்.
புலன்களுக்குத் தெரிகின்ற நஜீஸ் எனும் அசுத்தத்தை விட்டும் உடல் தூய்மையாக இருப்போர்.
ஹதஃத் எனும் சிறுதொடக்கு மற்றும் பெருந்தொடக்கை விட்டும் நீங்கியிருப்போர்.

மேற்கண்ட வசனத்திலுள்ள வாசகம் வெளித்தோற்றத்தில் அமைந்திருந்தாலும் கட்டளை வாக்கியமாகவே இங்கே கருதப்படும்.

(நூற்கள்: தஃப்ஸீர் பஙவி 5-301, தஃப்ஸீர் இப்னு கதீர் 4-299)

ஹதீது:

عَنْ حَكِيْمِ ابْنِ حِزَامِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: لَمَا بَعَثَنِيْ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم اِلٰى اليمن قال :لَاتَمْس القُرْآنَ اِلَّا وَاَنْتَ طَاهِرٌ

ஹகீம் இப்னு ஹிஜாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ‘இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிய சமயம் என்னிடம் கூறினார்கள். நீங்கள் தூய்மையானவர்களாக இருக்கும் போதுதான் குர்ஆனைத் தொட வேண்டும். (இல்லையென்றால் தொடக்கூடாது)’

நூற்கள்: ஹாகிம் எண்: 6066, தப்ரானி (கபீர்) எண்: 306, தார குத்னீ எண்: 366)

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِي الله عنه قَالَ: قَالَ النَبِيُّ صلى الله عليه وسلم لَايَمَسَّ الْقُرْآنَ اِلَّاطَاهِرٌ

இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மொழிந்தார்கள்: ‘பரிசுத்தமானவர்கள்தான் குர்ஆனைத் தொட வேண்டும்.’

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு

நூற்கள்: தாரகுத்னீ 383, தப்ரானி (ஸஙீர்) 1160

عَنْ عُثْمَانِ بِنِ اَبِي العَاصِ قَالَ: وَفَدْنَا عَلَى رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم فوجدُوْنِيْ اَفْظَلَهُمْ اَخَذًا لِلْقُرْآنِ وَقَدْ فَظَلْتَهُمْ بِسُوْرَةَ البَقَرة قَالَ النَّبِيُ صلى الله عليه وسلم قَدْ اَمَّرْتُكَ عَلٰى اَصْحَابِكَ وَاَنْتَ اَصْغَرُهُمْ وَلَا يَمَسَّ الْقُرْآنَ اِلا وانت طاهر (رواه التبراني فى الكبير

உத்மான் இப்னு அபில் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ‘நாங்கள் இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்தோம். எங்களில் குர்ஆனை நன்கு ஓதக் கூடியவனாக நானிருந்தேன். இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் என்னிடம் சொன்னார்கள். ‘நீர் சிறுவராக இருப்பினும் உம் கூட்டத்தினருக்கு தலைவராக உம்மை நியமிக்கிறேன். நீர் தூய்மையானவராக இருக்கும்போது தான் குர்ஆனைத் தொட வேண்டும்.’

(நூல்: தப்ரானி (கபீர்) 8255)

عن عبد الله بن ابي بكر ابن محمدبن عمرو بن حزم عن ابيه عن جدّه قال: كان فى كتاب النبي صلى الله عليه وسلم لعمروبن حزم: لا يمس القرآن الّا علٰى طهر(رواه مالك وابن حبان والدار مي والبيهقى والدار قطني

இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்ரு இப்னு ஹஜ்ம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டு இருந்தது. ‘து|ய்மையானவரான நிலையில்;தான் குர்ஆனைத் தொட வேண்டும்.’

நூற்கள்: முஅத்தா 466, தாரமி 2195, பைஹகி 376, தாரகுத்னி 385, இப்னு ஹிப்பான் 6703.

குர்ஆன் ஓதக்கூடாத நிலைகள்:
குளிப்பு கடமையானவர்கள் – ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் குர்ஆனை ஓதக் கூடாது.
மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதக் கூடாது.
பேறுகால உதிரப் போக்குள்ள பெண்கள் குர்ஆன் ஓதக் கூடாது. உளு இல்லாதவர்கள் குர்ஆனைத் தொடாமல் ஓதுவது கூடும்.

சான்றுகள்:

عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال لا تقرأ الحائض ولا الجنب شيئا من القرآن (رواه الترمذي والبيهقي فى السنن الكبري والبن عساكر والدار قطني وابن ماجة

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லா நேரங்களிலும் எங்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஆனால் குளிப்பதற்கு கடமையான நிலையில் ஓதிக் காண்பிக்க மாட்டார்கள்’.

அறிவிப்பாளர்: அலி ரலியல்லாஹு அன்ஹு நூல்: திர்மிதீ எண்: 136

عن علي قال قال رسول الله صلى الله عليه وسلم يقرونا القرآن علٰى كل حال مالم يكن جنبا (رواه الترمذي

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கழிவறை சென்று வந்த பின்னால் குர்ஆன் ஓதுவார்கள். மாமிசம் உண்பார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவதிலிருந்து தடுப்பது குளிப்பு கடமை என்ற நிலை மட்டுமே.

அறிவிப்பாளர்: அலி ரலியல்லாஹு அன்ஹு நூல்: தப்ரானி 6873.

عن علي انه اتي بوضوء فتوضأ وضوءه للصّلاة قال: هٰكذا رايت رسول الله  توضأ ثمّ شيئا من القرآن ثم قال: هٰذا لمن ليس بجنب قاما الجنب فلا ولآيه     (رواه احمد

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உளு செய்யும் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தொழுகைக்கு உளு செய்வது போல் உளு செய்து விட்டு கூறினார்கள், ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உளு செய்யும்போது இவ்வாறே நான் பார்த்தேன். பிறகு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனில் சில வசனங்கள் ஓதிய பிறகு கூறினார்கள். குளிப்பு கடமையில்லாத நபருக்கு குர்ஆன் ஓதுவது கூடும். ஆனால் குளிப்பு கடமையானவரோ ஒரு வசனம் கூட ஓதக் கூடாது.

இஜ்மாஃ

இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் உமர் ரலியல்லாஹு அன்ஹு தனது சகோதரியின் இல்லத்திற்கு வருகை தந்தபோது குர்ஆன் ஓதப்படும் ஓசையைக் கேட்டார்கள். பிறகு தனது சகோதரியிடம் கேட்டார்கள்.

فقال عمر: اعطوني الكتاب الذي عندكم اقراه

‘உங்களிடம் உள்ள குர்ஆனை என்னிடம் கொடுங்கள்.’

فقالت له اخته: انك رجس ولا يمسه الا المطهرون فقم واغتسل و توضَّأ

‘நீங்கள் அசுத்தத்தில் உள்ளீர்கள். இக்குர்ஆனை சுத்தமானவர்கள் தான் தொட வேண்டும். ஆகவே எழுந்து குளித்து விட்டு அல்லது உளு செய்து விட்டு வாருங்கள்.’

فقام عمر فتوضأ ثم اخذ الكتاب فقراطه (رواه الدارمي والبيهقي فى دلائل النبوة

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுந்து சென்று உளு செய்து விட்டு குர்ஆனை எடுத்தார்கள். தாஹா எனும் அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு

நூல்: பைஹகி (தலாயிலுன்னுபுவ்வா) 546

ثم رجع فقلنا له : توضأ يا ابا عبدالله لعلنا ان نسألك عن آي من القرآن قال: فاسألوا فاني لا امسه انه لا يمسّه الا المطهرون قال فسالناه فقرأ علينا قبل ان يتوضّا (رواه ابن ابي شيبة والبيهقي فى السنن الكبرى)

அப்துர் ரஹ்மான் இப்னு யஜீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ஸல்மான் ஃபார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். அவர்கள் கழிவறை சென்று வந்தார்கள். அவர்களிடம் நாங்கள் கூறினோம். நீங்கள் ஒளு செய்து கொள்ளுங்கள். நாங்கள் குர்ஆனில் சில வசனங்கள் பற்றி உங்களிடம் கேட்க விரும்புகிறோம்.

ஸல்மான் ஃபார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எங்களைப் பார்த்து சொன்னார்கள்: ‘என்னிடம் கேளுங்கள். நான் குர்ஆனை தொடப் போவதில்லையே. குர்ஆனைத் தொடுவதற்குத்தான் தூய்மை அவசியம். பிறகு அவர்களிடம் (சில கேள்விகள் கேட்டோம்) அவர்கள் உளு செய்வதற்கு முன்பாக சில வசனங்களை எங்களுக்கு ஓதிக் காண்பித்தார்கள்.

நூற்கள்: இப்னு அபீஷைபா எண் 1100, பைஹகீ 416

விவாதம்: 1

56-79 வசனத்தில் இறைவன் கூறிய வேதம் தற்போது மக்கள் கைகளில் தவழும் குர்ஆனல்ல. வானுலகிலுள்ள லவ்ஹுல் மஹ்ஃபூல் பலகையில் எழுதப்பட்ட வேதத்தையே குறிக்கிறது.

மேலும் இவ்வசனத்திலுள்ள தூய்மையானவர்கள் என்பது மலக்குகளையே குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஏனென்றால் அவர்கள் தான் பாவம் மற்றும் இணைவைப்பிலிருந்து தூய்மையானவர்கள்.

விளக்கம்:

لا يمسه الّا الطهرون

தூய்மையானவர்களைத் தவிர (வேறு எவரும்) குர்ஆனைத் தொட மாட்டார்கள்(56-79)

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள வேதம் குர்ஆனை குறிப்பதுபோல மக்கள் கைகளிலுள்ள குர்ஆனையும் குறிக்கும். காரணம் இவ்வசனத்திற்குப் பிறகு,

تنزيل من رب العالمين

அகிலங்களின் அதிபதியி(இறைவனி)டமிருந்து இவ்வேதம் இறக்கி வைக்கப்பட்டது.’ (6-80)

என்று கூறப்பட்டுள்ளது. இறைவனிடமிருந்து இறக்கி வைக்கப்பட்ட குர்ஆன் என்பது மனிதர்களின் கரங்களிலுள்ள குர்ஆனைத்தான் குறிக்குமே தவிர லவ்ஹுல் மஹ்பூலிலுள்ள குர்ஆனை அல்ல. எனவே தூய்மையானவர்களே தொட வேண்டும் என்ற வசனத்திலுள்ள வேதம் விண்ணுலகிலுள்ள குர்ஆனையும், மண்ணுலகிலுள்ள குர்ஆனையும் அறிவிக்கும். ஏனெனில் எதார்த்தத்தில் இரண்டும் ஒன்றே.

இவ்வசனத்திலுள்ள தூய்மையானவர்கள் என்பது மலக்குகளை மற்றும் மனிதர்களை குறிக்கும். மலக்குகள் மட்டும் தான் குறிக்கும் என்ற சிலரது கருத்தை ஒருவாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் கூட அதுவும் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்குத்தான் வலு சேர்க்கிறது.

அதாவது விண்ணிலுள்ள குர்ஆனை அங்கிருக்கும் தூய்மையானவர்கள் தொடுகிறார்கள் என்றால், அதுபோன்று மண்ணுலகிலிருக்கும் குர்ஆனையும் இங்குள்ள தூய்மையானவர் தான் தொட வேண்டும் என்ற கருத்தை இவ்வசனம் நமக்கு பாடமாக போதிக்கிறது.

மேலும் மண்ணுலகிலுள்ள குர்ஆன் பரிசுத்தம் வாய்ந்ததென்று இறைவன் குர்அனில் தெளிவுபடுத்துகிறான்.

رَسُوْلٌ مِّنَ اللهِ يتْلُوا صُحَفًا مُّطَهَّرةَ(البينة :2

இறைவனிடமிருந்து வந்த தூதர் தூய்மையான ஏடுகளை ஓதுவார் (98:2)

فِيْ صُحْفٍ مُكَرَّمَةٍ مَّرْقُوْعَةٍ مُّطَهَّرَةِ ( عبس : 13-14

‘இது கண்ணியமிக்க உயர்வுள்ள தூய்மையான ஏடுகளில் உள்ளது. வேதங்கள் தூய்மையானவை என இறைவன் அடையாளம் காட்டி விட்டான். ஆகவே சுத்தமில்லாதவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது.

நூல்: ஷரஹுல் உம்தா (1:384)

விவாதம் 2:

இறைவன் கூறினான் هُدًا لِنَّاسِ(البقرة : 185இந்த வேதம் மக்களனைவருக்கும் நேர்வழி காட்டக் கூடியது.’

இறைநம்பிக்கையுள்ள தூய்மையானவர்கள்தான் குர்ஆனைத் தொட வேண்டும் என சட்டமிருந்தால் இறைமறுப்பாளர்கள் எவ்வாறு குர்ஆனைத் தொட முடியும்? ஓத முடியும்? எவ்வாறு நேர்வழி பெற முடியும்? குர்ஆன் எல்லோருக்கும் நேர்வழி காட்டும் என இறைவன் கூறியது நடைமுறையில் சாத்தியமற்றதாகி விடுகிறது. இது குர்ஆன் மக்களை சென்றடைய விடாமல் தடுக்கும் சூழ்ச்சியாகும்.

விளக்கம்:

குர்ஆன் மொழி பெயர்ப்புகளை தமிழ்- ஆங்கிலம் மற்றும் பிற மொழி பெயர்ப்புகளை இறைமறுப்பாளர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் அதைப் படித்து புரிவதற்கும் இறைவனை அறிவதற்கும் மற்றும் இஸ்லாம் மார்க்கத்தை தெரிவதற்கும் வாய்ப்புண்டாகும்.

தர்ஜமாவில் குர்ஆன் வசனங்களிலிருந்தாலும் இறை மறுப்பாளர்கள் அதைத் தொடுவதற்கும் தடையில்லை. ஏனென்றால் தர்ஜமாவிற்கு குர்ஆன் என்று கூறப்படாது. குர்ஆனின் சட்டம் குர்ஆனுக்குத்தானே தவிர தர்ஜமாவிற்கு அல்ல.

அதேபோல குர்ஆனுக்கு அரபி மொழியில் விளக்கம் எழுதப்பட்ட தப்ஸீருக்கும் குர்ஆன் என்று சொல்லப்பட மாட்டாது. தப்ஸீர் என்பது குர்ஆனின் விரிவுரை நூலாகும். எனவே குர்ஆனுக்குரிய சட்டம் இதற்குக் கிடையாது.

இறை மறுப்பாளர்களால் படிக்கவும், புரியவும் முடியாத அரபி மொழியில் அமைந்த மூல குர்ஆன் பிரதியைக் கொடுக்காமல் படித்துப் புரியும் வகையிலுள்ள மொழி பெயர்ப்பு தர்ஜமாக்களை கொடுக்க வேண்டுமென்றுதான் சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள் கூறுகின்றனர்.

وانزلنا اليك الذكر لتبين لناس مانزل اليهم (النحل : 44

நபியே! மக்களுக்கு தெளிவுபடுத்த  வேண்டுமென்பதற்காக உங்களுக்கு குர்ஆனை இறக்கி வைத்தோம்.’

لقد من الله على المؤمنين اط بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته يزكيهم ويعلمهم الكتاب والحكمة ( آل عمران : 164

‘இறை நம்பிக்கையாளர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி வைத்து இறைவன் உறுதியாக பேரருள் புரிந்துள்ளான். அவனுடைய வசனங்களை அவர்களுக்கு அவர் ஓதிக்காட்டுவார். அவர்களை தூய்மைப்படுத்துவார். வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்கு கற்று கொடுப்பார்.’ (3-164)

குர்ஆன் அரபி மொழியிலிருப்பதால் அரபி பேசுபவர்கள் எளிதாக விளங்கிக் கொள்ள இயலுமென்றிருந்தால் இறைவன்  திருத்தூதரை அனுப்பி வைத்திருக்க மாட்டான். மக்களுக்கு விளக்கமளிக்க மற்றும் கற்று கொடுக்க வேண்டுமென்று கட்டளையிட்டிருக்க மாட்டான்.

அதிய்யி இப்னு ஹாதிம் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ‘நோன்பு காலத்தில் கருப்பு கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்கு தெளிவாகும் வரை நீங்கள் உண்ணுங்கள், பருகுங்கள். (2-187) என்ற இறைவசனம் இறங்கிய போது கறுப்புக் கயிறொன்றையும், வெள்ளைக் கயிறொன்றையும் எடுத்து என் தலையணைக்குக் கீழே வைத்துக் கொண்டேன். இரவு முழுவதும் கவனித்துக் கொண்டிருந்தேன். எனக்கு தெளிவாகவில்லை. காலையில் இறைத்தூதர் நபிகளாரிடம் சென்று நடந்தவற்றைக் கூறினேன். அவர்கள் கூறினார்கள்: ‘கருப்புக் கயிறு என்பது இரவின் இருளையும், வெள்ளைக் கயிறு என்பது வைகறை வெளிச்சத்தையும் குறிக்கும்.’

நூற்கள்: புகாரி எண்: 1783,  முஸ்லிம் எண் 1824

ولقد يسرنا القرآن للذكر فهل من مذّكر (القمر:17

 ‘ஓதி அறிவுரை பெற குர்ஆனை திண்ணமாக நாம் எளிதாக்கியுள்ளோம். அறிவுரை பெறுவோர் உண்டா?  (54-17)

ஓதுவதற்கும் விளக்கமளிக்கப்பட்டால் விளங்குவதற்கும் மேலும் அறிவுரை பெறுவதற்கும் குர்ஆன் எளிதாக்கப்பட்டுள்ளது என்றே இவ்வசனத்திலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். காரணம் என்னதான் தெளிவுபடுத்தினாலும் எல்லோராலும் விளங்க முடியாத எத்தனையோ நூல்கள் இவ்வையகத்தில் உண்டு. இறைமறை வேதம் குர்ஆன் அவ்வாறல்ல என்பதுதான் இவ்வசனத்தின் கருத்தாகும்.

விவாதம் 3

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திஹ்யத்துல் கல்பி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தனது தூதராக ரோமபுரி மன்னர் ஹெர்கலிஸிடம் அனுப்பி வைத்தார்கள். இஸ்லாத்தில் இணைய அழைப்பு விடுத்து அவருக்கு ஒரு கடிதத்தையும் கொடுத்தனுப்பினார்கள். அக்கடிதத்தில் கீழ்காணும் இவ்வசனம் எழுதப்பட்டிருந்தது.

ياَ اَهْلَ الكِتَابِ تَعَالَوْ اِلٰى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ اَلَا نَعْبُدَ اِلَّا الله وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَخَذَ بَعَضُنَا بعضا اَرْبَابًا مِن دُوْنِ اللهِ فَاِنْ تَوَلَّوْا فَقولوا اشهدوا بِاَنَّا مسلمون (ال عمران: 64

‘வேதமுடையவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் மத்தியிலுள்ள பொதுவான விசயத்தின் பக்கம் வாருங்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்க மாட்டோம். அவனுக்கு எதையும் இணையாக்க மாட்டோம். அல்லாஹ்வைத் தவிர நம்மில் யாரும் எவரையும் தெய்வங்களாக ஆக்கக் கூடாது. அவர்கள் புறக்கணித்தால் உறுதியாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று கூறிவிடுங்கள்’ (3:64)

நூற்கள்: புகாரி எண் 6,  முஸ்லிம் எண் 3322

இறைவசனம் எழுதப்பட்ட அக்கடிதத்தை இறைமறுப்பாளரான ஹெர்குலிஸ் தொடுவார் என்று தெரிந்தேதான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடுத்தனுப்பியுள்ளார்கள். தொடுவது கூடாது என்றிருந்தால் இறைவசனத்தை அக்கடிதத்தில் எழுதியிருக்க மாட்டார்கள்.

இறைமறுப்பாளர்களுக்கே தொடுவது கூடும் எனும் போது இறை நம்பிக்கையாளர்களுக்கு ஏன் கூடாது?

விளக்கம்:

குர்ஆனுடைய வசனம் எழுதப்பட்ட கடிதத்தை சுத்தமில்லாமல் தொடலாம் என்பதற்குத் தான் இந்த ஹதீஃத் ஆதாரமே தவிர குர்ஆனையே தொடலாம் என்பதற்கல்ல. அது போன்ற கடிதத்திற்கு குர்ஆன் என்று கூறப்படாது. எனவே குர்ஆனுடைய சட்டம் இதற்கு பொருந்தாது.

அல்ஹாஃபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹெர்கலிஸ் மன்னனுக்கு எழுதிய கடிதத்தில் இறைவசனம் அல்லாமல் வேறு செய்திகளும் எழுதப்பட்டிருந்தன. இக்கடிதம் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட தஃப்ஸீர் மற்றும் ஃபிக்ஹ் நூற்களைப் போன்றுள்ளதால் அவற்றிற்குரிய சட்டமே இக்கடிதத்திற்கும் பொருந்தும்.

விவாதம் 4

ஈமான் இறை நம்பிக்கையுள்ள ஒவ்வொரு மனிதனும் தூய்மையானவனே! ஏனெனில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயம்பினார்கள்.

اِنَّ الْمُؤْمِنَ لَا يَنْجُسُ (رواه البحاري و مسلم

‘உறுதியாக இறைநம்பிக்கையாளன் அசுத்தமாக மாட்டான்.’

நூல்: புகாரி 276,   முஸ்லிம் 556

எனவே உளு இல்லாமல் குர்ஆனைத் தொட எத்தடையுமில்லை.

விளக்கம்:

இஸ்லாமிய மார்க்கத்தில் சுத்தம் இருவகைப் படும்.
உள்ள சுத்தம். 2. உடல் சுத்தம்.

ஈமான் – இறைநம்பிக்கை கொள்ளாமல் இணை வைப்போர் அனைவரும் உள்ளம் அசுத்தமானவர்கள். இவர்களைப் பற்றி இறைவன் அருள்மறையில் கூறினான்:

اِنَّمَا الْمُشْرِكُوْنَ نَجِسُ (التوبة :28

‘இணை வைப்போரெல்லாம் உறுதியாக அசுத்தமானவர்களே’

இறை மறுப்பாளர்களின் உடலும், உடையும் தூய்மையாக இருந்தாலும் அவர்கள் அசுத்தமானவர்களே என்று இவ்வசனம் கூறுவதற்குரிய காரணி அவர்களின் உள்ளங்களை கருத்தில் கொண்டே தவிர அவர்களின் உடல்களை கவனித்தல்ல என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இணைவைப்பை விட்டுவிட்டு ஈமான் – இறைநம்பிக்கை கொள்கின்றபோது உள்ளம் தூய்மை பெறுகிறது. இதையே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயம்பினார்கள்.

‘உறுதியாக இறை நம்பிக்கையாளன் அசுத்தமாக மாட்டான்’. நூல்: புகாரி 276.

இத்தகைய இறைநம்பிக்கையாளர்களுக்கு உடல் சுத்தம் அவசியமென இஸ்லாம் மார்க்கம் போதிக்கிறது. அதனால்தான் உளு, குளிப்பு மற்றும் நஜீஸ் அகற்றுதல் போன்ற சட்டங்கள் அவர்களுக்கு உண்டு என்பதையும் இஸ்லாம் சொல்லிக் காட்டுகிறது.

இறைநம்பிக்கையாளன் தூய்மையானவன். எனவே குர்ஆனைத் தொட உளு அவசியமில்லை என்ற வாதத்தை வஹ்ஹாபிகள் முன்வைத்தால் தொழுகைக்கும் ஒளு அவசியமில்லை என்ற அபாயகரமான அர்த்தமல்லவா வந்து விடும். தொழுகைக்கு உளு கட்டாயம் என்பதற்கு சான்றுகள் உள்ளன என்று வஹ்ஹாபிகள் கூறினால் அவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்ளலாம். குர்ஆனைத் தொடுவதற்கு உளு தேவை என்பதற்கும் பல ஆதாரங்கள் இருக்கின்றன.

விவாதம் 5:

குர்ஆன் ஓதுவது திக்ரில் உள்ளடங்கிய வணக்கம். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து நேரங்களிலும் திக்ர் செய்துள்ளார்கள் என்று ஹதீதில் வந்துள்ளது.

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்:

عن عائشة قالت كان انبي صلى الله عليه وسلم على كل احيانه (رواه مسلم والترمذي واحمد

‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  அல்லாஹ்வை எல்லா நேரங்களிலும் திக்ர் செய்யும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள்.’

நூல்: முஸ்லிம் 558, அஹ்மத் 23274, திர்மிதி 330

எல்லா நேரங்களிலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திக்ர் செய்துள்ளார்கள் என்றால் குர்ஆன் ஓதுவது திக்ரில் கட்டுப்பட்டதுத என்ற அடிப்படையில் குளிப்பு கடமையான சமயத்திலும் குர்ஆன் ஓதியிருப்பார்கள் என யூகிக்க முடிகிறது.

விளக்கம்:

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் கூற்றில் வஹ்ஹாபிகள் சுற்றி வளைத்து தங்களது யூகத்தை திணிக்கிறார்கள். குளிப்பு கடமையானவர்கள் குர்ஆன் ஓதலாம் என்பதற்கு எந்த சான்றும் அதிலில்லை.

ஏனென்றால் எல்லா நேரங்களிலும் குர்ஆன் ஓதுவார்கள் என்ற வாக்கியம் இடம் பெறவில்லை. திக்ர் செய்வார்கள் என்றுதான் உள்ளது. திக்ர் என்பது பல பொருளுள்ள ஒரு பொதுச் சொல். குர்ஆன், இறைப்புகழ் மற்றும் பிரார்த்தனை சம்பந்தப்பட்டவைகளை குறிக்கும் வார்த்தைதான் திக்ர்.

ஆகவே ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் செய்தியின் மூலமாக குர்ஆன் அல்லாத மற்ற திக்ருகளை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதியுள்ளார்கள் என்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்:

‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லா நேரங்களிலும் குர்ஆனை எங்களுக்கு ஓதிக் காண்பிப்பார்கள். ஆனால் குளிப்பு கடமையான நிலையில் மட்டும் ஓத மாட்டார்கள்.’

நூல்: அஹ்மத், அபூதாவூது, திர்மிதி, இப்னு மாஜா, நஸாயீ.

மேலும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியது நாவால் மொழியும் திக்ரைப் பற்றியதல்ல. உள்ளத்தால் நினைக்கும் திக்ரைப் பற்றியதுதான் என்பதையும் நம்மால் வெள்ளிடை மழையென அறிந்து கொள்ள முடியும்.

காரணம் எல்லா நேரமும் என்பது கழிவறையில் இருக்கும் காலத்தையும் உள்ளடக்கும். ஆனால் கழிவறையில் இருக்கும் போது நாவால் திக்ர் செய்தல் இஸ்லாமிய மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

‘ஹழ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

عَنِ ابْنِ عُمَرَ اَنْ رَجُلٌا مَرَّ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم يبُول فسلَّمَ قَلَمْ يردُّ عَلَيْهِ (رواه مسلم وابو داؤد والترمذي والنسائي وابن ماجة

‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும்போது அவ்வழியாக சென்ற நபித் தோழர் ஒருவர் ஸலாம் சொன்னார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் ஸலாம் கூறவில்லை.’

நூல்: முஸ்லிம் 555, திர்மிதி 37

எனவே எல்லா நேரமும் திக்ர் செய்தல் என்பது கழிவறையில் இருந்தாலும் கூட உள்ளத்தால் செய்யும் திக்ரில் மட்டுமே சாத்தியமாகும். இதிலிருந்து ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் எல்லா நேரமும் திக்ர் என்ற கூற்று குர்ஆன் ஓதுவதற்கு அறவே பொருந்தாது என்று உறுதிபடக் கூற முடியும்.

விவாதம் 6

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் குர்ஆன் ஒன்று திரட்டப்படவில்லை. எனவே தூய்மையானவர்கள் குர்ஆனைத் தொடவேண்டும் என இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் கட்டளையிட்டிருக்க வாய்ப்பில்லை.

விளக்கம்:

எல்லா வசனங்களும் ஒன்று திரட்டப்பட்ட தொகுப்புக்கு குர்ஆன் என்று சொல்லப்படுவது போன்றே குர்ஆனின் சில வசனங்கள் மட்டும் எழுதப்பட்டவைகளுக்கும் குர்ஆன் எனக் கூறலாம்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் மரப்பலகைகளிலும் எலும்புத் துண்டுகளிலும் மற்றும் கற்களிலும் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டன. இவைகளுக்கெல்லாம் குர்ஆன் எனும் வார்த்தையை இறைவனும் இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பிரயோகித்துள்ளனர்.

குர்ஆனை தெளிவாக நிறுத்தி ஓதுவீராக! (முஜம்மில் 4) ورتل القرآن ترتيلا

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

عن ابي سعيدٍ الخُذْري قَال قَال رسول صلى الله عليه وسلم لا تكتبوا عني شيئًا الاَّ القرأن فمن كتب عني شيئًا غير القرأن فليمحه (رواه احمد وم

‘நான் கூறுபவற்றில் குர்ஆனைத் தவிர வேறெதையம் எழுதாதீர்கள். குர்ஆன் அல்லாததை யாராவது எழுதியிருந்தால் அவர் அதை அழித்து விடட்டும்.’

நூல்: அஹ்மத் எண்: 10731, முஸ்லிம் எண்: 5326

குர்ஆன் வசனங்கள் மட்டும் எழுதப்பட்டவைகளுக்கு அவை சில வசனங்களாக இருப்பினும் குர்ஆன் எனும்சொல் பொருந்துமென்பதை மேற்கண்ட இறைவசனமும் நபிமொழியும் அறிவிக்கின்றன.

குர்ஆனைத் தவிர வேறெதையும் எழுதக்கூடாது என்ற தடையை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்னர் தளர்த்தி விட்டார்கள். அம்ர் இப்னு ஹஜ்ம் அவர்களுக்கு கூறினார்கள்:

عن عبد الله ابن عمرو قال قال  رسول الله صلى الله عليه وسلم اكتب فوالذي نفسى بيده ما خرج منِّي الا الحقُّ (رواه احمد وابو داود والدارمي

(அம்ரே  நான் கூறுவதை) எழுதுக! எனது ஆத்மா யார் கைவசமுள்ளதோ அ(ந்த இறை)வனின் மீது ஆணை(யிட்டுக் கூறுகிறேன்) என்னிடமிருந்து வெளிப்படுகின்ற (சொல்-செயல்) அனைத்தும் சத்தியமே. – நூல்: அஹ்மத் எண் 6221.

குர்ஆனோடு மற்றவை கலந்து விட வாய்ப்புள்ளது என்று அஞ்சிய சமயத்தில் குர்ஆனை மட்டும்தான் எழுத வேண்டுமென இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். அந்த அச்சம் இனியில்லை என்ற நிலைவந்தபோது தனது மணிமொழிகளான ஹதீதுகளை எழுதுவதற்கு அனுமதி வழங்கினார்கள்.

விவாதம் 7:

தூய்மையில்லாமல் குர்ஆனைத் தொடக்கூடாதென்பதற்கு இஜ்மாஃ -ஒருமித்த கருத்து என்ற ஆதாரத்தை ஒப்புக் கொள்ள இயலாது. ஏனெனில் தாபியீன்களிலும் அதன்பின் வந்தவர்களிலும் ஒருசிலர் சுத்தமில்லாமல் குர்ஆனைத் தொடலாம் என்ற மாற்றுக் கருத்தை தெரிவித்துள்ளனர். அதனால் இஜ்மாஃ – ஒருமித்த கருத்து என்ற ஆதாரம் அடிபட்டுப் போய்விடுகிறது.

விளக்கம்:

இந்த வாதம் ஏற்புடையதல்ல. ஏனென்றால் சுத்தமானவர்கள் தான் குர்ஆனைத் தொடவேண்டும் என்பதில் சஹாபா பெருமக்கள் ஒருமித்த கருத்துடையவர்களாக இருந்துள்ளனர். அவர்களின் காலத்தில் இதற்கு மாற்று கருத்துத தெரிவித்த ஒரு நபித்தோழர் கூட கிடையாது.

இதன்மூலம் தூய்மையின்றி குர்ஆனைத் தொடுவது மார்க்கத்தில் விலக்கப்பட்ட செயல் -ஹராம் என்பதே நபித்தோழர்களின் இஜ்மாஃ ஆக இருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

விவாதம் 9:

தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் குர்ஆனைத் தொட மாட்டார்கள். (56:79)

இந்த வசனத்தில் தூய்மையானவர்கள் தான் குர்ஆனைத் தொடுவார்கள் என்ற செய்தி கூறப்பட்டுள்ளதே தவிர தூய்மையானவர்கள் தான் தொட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. எனவே செய்தியாக கூறப்பட்டதை கட்டளை அர்த்தமாக மாற்றக்கூடாது.

விளக்கம்:

அரபி இலக்கணப்படி செய்தி வாசகம் சூழ்நிலைக்கேற்ப சிலகட்டங்களில் கட்டளை வாசகமாக பொருள் கொள்ளப்படும். உதாரணமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மொழிந்தார்கள்.

لا يعضد شجرها (رواه الخاري والمسلم

மக்காவிலுள்ள மரம் வெட்டப்படமாட்டாது. நூல் புகாரி 109, முஸ்லிம் 2415

மக்காவின் மரம் வெட்டப்படாது என்ற செய்தி வாசகமா கஉள்ள இந்த நபிமொழி மக்காவின் மரம் வெட்டப்படக் கூடாது என்ற கட்டளை வாசகத்தின் பொருளைத் தருகிறது.

இமாம் ஜஸ்ஸாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: ‘பரிசுத்தமானவர்கள் தவிர (வேறெவரும்) குர்ஆனைத் தொட மாட்டார்கள் என்ற வசனம் வெளித்தோற்றத்தில் செய்தி வாக்கியமாக இருப்பினும் அதன் அர்த்தம் கட்டளை வாக்கியத்திற்குரியதே. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்ரு இப்னு ஹஜ்ம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், பரிசுத்தமானவரே குர்ஆனைத் தொட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதே இதற்கு காரணியாகும்.

விவாதம் 11

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒலி வடிவத்தில்தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டது.

எழுத்து வடிவில் அருளப்படாததைத் தொடுகின்ற பேச்சுக்கே இடமில்லை. தொடும் விதத்தில் திருக்குர்ஆன் அருளப்பட்டிருந்தால் மட்டுமே தொடுதல் சம்பந்தப்பட்ட சட்டம் வரும்.

விளக்கம்:

பலகையில் பதியப்பட்டடோ அல்லது காகிதத்தில் எழுதப்பட்டோ குர்ஆன் அருளப்படவில்லை என்பதைத பாமர இஸ்லாமியனும் தெரிந்து வைத்துள்ளான்.

குர்ஆனுக்கு எழுத்துக்கள் உண்டு. குர்ஆன் ஓதுகின்றபோது எழுகின்ற ஒலிக்கும் எழுத்துக்கள் உண்டு. நபித்தோழர்களால் எழுதி வைக்கப்பட்ட குர்ஆனுக்கும் எழுத்துக்கள் உள்ளன. குர்ஆனில் எழுத்துக்கள் எழுதப்பட்டு கண்களுக்குத் தென்படும் வகையில் ஏதோ ஒரு பொருளாக குர்ஆன் அருளப்படவில்லை என்பது உண்மை. அதற்காக குர்ஆனுக்கு எழுத்து அமைப்பு இல்லை என்று கூறினால் அதைவிட வடிக்கட்டிய மதியீனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

இறைவன் தனது அருள் மறையில் பல்வேறு இடங்களில் பிரயோகிக்கம் குர்ஆன் என்னும் சொல் நம்மிடம் உள்ள வேதத்தைக் குறிக்கிறது.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் குர்ஆனுடைய வசனங்கள் பலகைகளிலும், கற்களிலும், எலும்புகளிலும் எழுதி வைக்கப்பட்டன. இவைதான் குர்ஆன் என்றும் அன்று கருதப்பட்டது.

عن عبج الله ابن عمر قال نهي رسول الله صلى الله عليه وسلم يسافر بالقرآن الى ارض العدز (رواه البخاري والمسلم

‘அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘பகைவர் நாட்டிற்கு பயணம் செய்யும் போது குர்ஆன் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள்.’

நூல்: புகாரி 2768 முஸ்லிம் 3474

மேற்கண்ட ஹதீதில் கூறப்பட்ட குர்ஆன் என்னும் சொல் எழுத்து வடிவில் நம் கைகளில் உள்ள வேதத்தையே குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஒலி வடிவில் அமைந்த குர்ஆனை அல்ல.

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நால்வர் குர்ஆனைத் தொகுத்தார்கள். அவர்கள் அனைவரும் அன்ஸாரி தோழர்கள்;.

உபை இப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு

முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு

அபூ ஜைத் ரலியல்லாஹு அன்ஹு

ஜைத் இப்னு ஃதாபித் ரலியல்லாஹு அன்ஹு

-நூல்: புகாரி 3526

ஒலி வடிவில் அமைந்த குர்ஆனையா தொகுத்தார்கள். இந்த நான்கு தோழர்களும் இல்லையே!  எழுத்து அமைப்பிலுள்ள குர்ஆனைத் தானே!

انا انزلناه قرآنا عربيا  (سورة اليوسف : 2

‘உறுதியாக நாம் இதை அரபி மொழியில் அமைந்த குர்ஆனாக இறக்கி வைத்தோம்.’ (12:2)

மேலும் இறைவன் சொன்னான்:

بلسان عربي مبين (سورة الشعرآء : 195

தெளிவான அரபி மொழியில் குர்ஆனை ஜிப்ரயீல் இறக்கினார். (26:195)

மேற்கண்ட வசனங்கள் மூலமாக குர்ஆன் அரபி சொற்களால் அமைந்த வேதம் என்பதை இறைவன் அறிமுகம் செய்கிறான்.

உத்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (குர்ஆனை தொகுப்பதற்காக) ஜைத் இப்னு ஃதாபித் , அப்துல்லாஹ் இப்னு ஜுபைர், சயீத் இப்னு ஆஸ் மற்றும் அப்துர் ரஹ்மானிப்னு ஹாரித் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோரை அழைத்து (அந்நால்வரில் குறைஷிக் குடும்பத்தைச் சார்ந்த மூவருக்கு சொன்னார்கள்.)

‘குர்ஆனை தொகுத்து எழுதும்போது உங்களுக்கும் ஜைத் இப்னு ஃதாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் இடையில் ஏதாவதொன்றில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் குறைஷி மொழியைக் கொண்டு குர்ஆனை எழுதுங்கள். ஏனென்றால் அவர்கள் மொழியில் தான் குர்ஆன் இறங்கியது.

யார் குர்ஆனில் ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு ஒன்றுக்குப் பத்து என்ற அடிப்படையில் நன்மை கிடைக்கும். ‘அலிஃப் லாம் மீம்’ என்பது ஓர் எழுத்தென்று நான் சொல்லமாட்டேன். மாறாக அலிப் ஓர் எழுத்து லாம் ஓர் எழுத்து மீம் ஓர் எழுத்து.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு நூல்: திர்மிதி

மேற்கூறப்பட்ட ஹதீதுகளிலிருந்து குர்ஆன் எழுத்தமைப்பைக் கொண்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

குர்ஆனும், ஹதீது குத்ஸியும் இறைவனுடைய பேச்சுக்கள் என்றாலும் இரண்டுக்கும் மத்தியில் வேறுபாடு உண்டு.

குர்ஆன் – பொருளும் வார்த்தையும் இறைதரப்பிலிருந்து வந்தது.

ஹதீது குத்ஸி – பொருள் இறைவனுடையது வார்த்தைகள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குரியது.

எனவேதான் குர்ஆனுடைய வசனத்திற்கு பதிலாக தொழுகையில் ஹதீது குத்ஸியை ஓதினால் தொழுகை கூடாது. அதேபோன்று ஹதீது குத்ஸியை படிக்கும்போது ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மை என்பதும் கிடைக்காது.

இமாம் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ‘சுத்தமில்லாதவன் குர்ஆனை சுமந்து செல்லக் கூடாது. குர்ஆனுள்ள பை மற்றும் உறைகளுக்கும் இச்சட்டம் பொருந்தும். தூய்மையில்லாதவன் குர்ஆனைத் தொட்டால் அது அழுக்காகி விடும் என்பதற்காக இச்சட்டமென்று யாரும் கருதிவிடக் கூடாது. சுத்தம் தேவை என்பதற்குண்டான காரணி குர்ஆனுக்குரிய கண்ணியத்தையும் மாண்பையும் அளிப்பதுவே.

நூல்: அல்ஜாமிஉ லி அஹ்காமில் குர்ஆன்.

ஆசிரியர்: இமாம் குர்துபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனின் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டுமென்பதில் அதிக அக்கறை செலுத்தியுள்ளார்கள். அதற்கு ஆதாரம்

‘பகைவர் உள்ள பகுதிக்கு பயணம் செ;யயும்போது குர்ஆனை எடுத்துச் செல்ல வேண்டாமென்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி, முஸ்லிம்.

குறிப்பு: 1

குளிப்பு கடமை நிலையில் உள்ளோரும் மாதவிடாய் பெண்களும் பிள்ளைப்பேறு உதிரப்போக்குள்ள பெண்களும் குர்ஆன் ஓதுதல் என்ற எண்ணமில்லாமல் திக்ர் அல்லது பிரார்த்தனை என்ற அடிப்படையில் குர்ஆனுடைய வசனத்தை ஓதுவது மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகும். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர்ந்தார்கள்:

عن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم الا عال بالنيات (رواه البخاري

‘உறுதியாக செயல்களனைத்தும் எண்ணங்களைப் பொறுத்ததாகும்.’

அறிவிப்பாளர்: உமர் ரலியல்லாஹு அன்ஹு. நூல்: புகாரி.

இந்த நபிமொழியின் கருத்துப்படி திக்ருடைய நிய்யத்தில் குர்ஆன் வசனத்தைக் கூறுவது கூடும். ஏனென்றால் குர்ஆன் ஓதுவதற்கும் திக்ர் செய்வதற்கும் மத்தியில் நிறைய வேறுபாடுகளுண்டு. குர்ஆன் ஓதினால் ஒவ்வோர் எழுத்துக்கும் பத்து நன்மைகள் கிடைக்குமென்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். – நூல்: திர்மிதி

குர்ஆன் ஓதுவதால் ஒவ்வோர் எழுத்திற்கும் கிடைக்கிற பத்து நன்மைகள்  திக்ர் – பிரார்த்தனை செய்யும்போது கிடைப்பதில்லை. திக்ர் மற்றும் பிரார்த்தனையில் ஈடுபடுகின்ற போது அதற்குரிய நன்மைகள் நமக்கு உறுதியாக கிடைக்கும். அதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் ஒரு எழுத்திற்குப் பத்து என்ற அடிப்படையில் ஓதுவதற்குரிய நன்மைகள் இவற்றிற்கில்லை.

‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயணம் புறப்படுவதற்காக ஒட்டகை மீது அமர்ந்து விட்டால் மும்முறை ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறுவார்கள். பிறகு (இதை எங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்த இறைவன் தூய்மை மிக்கவன். நாங்கள் இதை அடக்கிப் பயன்பெற இயலாதவர்களாக உள்ளோம். மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமேம திரும்பக் கூடியவர்களாக இருக்கிறோம்’ என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு உமர்  ரலியல்லாஹு அன்ஹு

நூல்: முஸ்லிம், திர்மிதி, அபீதாவூத், அஹ்மத், தாரமீ.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஸுப்ஹான எனத் தொடங்கும் வாசகங்கள் அத்தியாயத்தின் 13 ஆம் வசனத்தின் ஒரு பகுதியாகவும் 14ஆம் வசனமாகவம் இடம் பெற்றுள்ளன. எனினும் பயணி குளிப்பு கடமையான நிலையிலிருந்தாலும் அப்பயணி  பெண்ணாக இருப்பின் மாதவிடாய் நிலையிலிருந்தாலும் இவற்றைக் கூறலாம். அதற்கு எத்தடையுமில்லை. காரணம் பயணப் பிரார்த்தனை என்பதுதான் இங்கு நோக்கமே தவிர குர்ஆன் ஓதுதல் என்பதல்ல.

அதே போன்று ஒரு செயலைத் தொடங்கும்போது  بسم الله الرحمٰن الرحيم என்று கூறுகிறோம். இது குர்ஆனிலுள்ள ஒரு வாசகம். ஒருசெயலைத் தொடக்கம் செய்பவர் குளிப்பு கடமை நிலையிலிருந்தாலும் பெண்களாக இருந்தால் மாதவிடாய் அல்லது பேறுகால உதிரப் போக்கு நிலையிலிருந்தாலும் இதைக் கூறுவது கூடும். ஏனென்றால் செயல் தொடக்கப் பிரார்த்தனை என்ற நோக்கில் தான் இதைக் கூறப்படுகிறது. குர்ஆன் ஓதுதல் என்ற எண்ணத்தில் இல்லை. ஆகவே இதைக் கூற எத்தடையம் மார்க்கத்தில் இல்லை.

குறிப்பு – 2:

சுத்தமில்லாமல் குர்ஆனைத் தொடக்கூடாது என்ற சட்டம் குர்ஆன் எழுத்து வடிவில் உள்ளபோது தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறில்லையானால் அச்சட்டமும் இல்லை.

குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்கள் குர்ஆன் பதிவு செய்யப்பட்ட ஒலி-ஒளிப் பேழைகள் மற்றும் குறுந்தகடுகளை உளு இல்லாமல் தொடுவதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது. காரணம் அவற்றில் குர்ஆன் எழுத்து வடிவில் தென்படவில்லை.

குர்ஆன் ஓதினால் ஓர் எழுத்திற்குப் பத்து நன்மை கிடைக்குமென்பது கூட எழுத்து வடிவில் மொழிந்தால் தான். குர்ஆன் வசனங்களை மனதால் நினைப்பவருக்கு அந்த நன்மையில்லை என்பது நாமறிந்ததே. வெளியில் தெரிகின்ற எழுத்தின் சட்டம் மனதில் அல்லது ஒளி நாடாவில் அல்லது குறுந்;தகடில் மறைந்துள்ள எழுத்திற்குக் கிடையாது. அறத்குச் சான்றாக ஒன்றைக் குறிப்பிடுவது இங்கே பொருத்தமாகும். கழிவறைக்குச் செல்பவன் இறை நாமம் பொறித்த மோதிரம் அணிந்திருந்தால் அதைக் கழற்றி விட்டுத்தான் செல்ல வேண்டும்.

عن انس قال كان النبي اذادخل الخلاء وضع خاتمه (رواه ابو داؤد والترمذي والنسائي وابن ماجة

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; கழிவறை செல்லும்போது மோதிரத்தை கழற்றி வைத்து விடுவார்கள்.’

நூல்: அபூதாவூத் 18, திர்மிதி 1668

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரோம் நாட்டிற்கு கடிதம் எழுத நாடியபோது ரோம் மக்கள் முத்திரையிடப்பட்ட கடிதத்தை தான் படிப்பார்கள் என நபித்தோழர்கள் கூறினார்கள். ஆகவே வெள்ளியால் ஆன ஒரு மோதிரத்தை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தயார் செய்தார்கள். அதன் வெண்மையை நான் பார்த்தேன். அம்மோதிரத்தில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று பொறிக்கப்பட்டிருந்தது.

அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு

நூல்: புகாரி 6629, முஸ்லிம் 3902.

இறைவனுடைய திருநாமம் எழுத்து வடிவில் மோதிரத்தில் பதியப்பட்டிருந்தததால் கழிவறை செல்கின்ற போது கழற்றி வைத்துவிட வேண்டுமென மார்க்கம் பணிக்கிறது. கண்களுக்குத் தெரியும் வகையில் உள்ளதால் இச்சட்டம்.

குறுந்தகடுகளை கணிணியில் போட்டுப் பார்க்கின்றபோது குர்ஆன் எழுத்துக்கள் மட்டும் தெரிந்தால் குர்ஆனின் சட்டம் அந்தக் கணிணிக்குப் பொருந்தும். உளுவுடனேயே அக்கணிணியைத் தொட வேண்டும். ஆனால் குர்ஆன் எழுத்துக்களோடு மொழி பெயர்ப்பு அல்லது விரிவுரை ஆகியவை சேர்த்துத் தெரிந்தால் குர்ஆனுக்குரிய சட்டம் இதற்கில்லை. உளு இல்லாமலேயே இதைத் தொடலாம்.

குறிப்பு – 3

பரிசுத்தமானவர்களே தொட வேண்டுமென்பது குர்ஆனுக்கு மட்டுமே உரிய சட்டமாகும். எனவே

ஹதீது நூற்கள்

பிரார்த்தனைப் புத்தகங்கள்

ஃபிக்ஹ் கிரந்தங்கள்

குர்ஆன் மொழிபெயர்ப்பு தர்ஜமாக்கள்

குர்ஆன் விரிவுரை தஃப்ஸீர்கள்

அவ்ராத் தொகுப்புகள்

மற்றும் மௌலித் கிதாபுகள்

ஆகியவற்றைத் தொடுவதற்கு உளு கட்டாயம் அல்ல. அவற்றில் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டிருந்தாலும் உளு இன்றி தொடுவது கூடும். ஏனெனில் இவற்றிற்கு குர்ஆன் என்று கூறப்படாது.

ஆனாலும் மேற்கண்ட நூல்களைத் தொடுவதற்கு உளு செய்து கொள்வது மார்க்கத்தில் வரவேற்கத்தக்க மற்றும் புகழுக்குரிய செயலாகும்.

குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் பெண்கள் மற்றும் பேறுகால உதிரப் போக்குள்ள பெண்கள் ஓதக் கூடாதென்ற சட்டம் குர்ஆனுக்கு மட்டுமே. இச்சட்டம் மற்ற நூல்களுக்கு இல்லை. எனவே இத்தகையவர்கள் மேற்கண்ட கிதாபுகள் – கிரந்தங்கள் – தர்ஜமாக்கள்-தஃப்ஸீர்கள்-தொகுப்புகள் மற்றும் புத்தகங்களைத் தொடுவது ஆகும் என்பது போலவே ஓதுவது கூடும்.

குறிப்பு 4

உளு இன்றிக் குர்ஆனைத் தொடக் கூடாது. அதுபோன்று குர்ஆன் வைக்க மட்டும் பயன்படுத்துகின்ற பெட்டி ரேஹாலி பலகை போன்றவைகளையும் அவற்றில் குர்ஆன் இருக்கும் போது உளு இல்லாமல் தொடக் கூடாதென்பது ஷாஃபி, மத்ஹபின் சட்டம். அவற்றை குர்ஆன் இல்லாத நிலையில் தொடுவதற்குத் தடையில்லை.

இறைவேதம் குர்ஆன் புனிதமானது. அதுபோல குர்ஆன் உள்ள இடமும் புனிதமானது என்பது இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்து. ஏனென்றால் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘தூர்ஸீனா’ மலைக்கு வேதத்தைப் பெறுவதற்காக வருகை தந்தபோது இறைவன் கூறினான்.

انى انا ربك فاخلع  نعليك انك بالوادي المقدس طوي (طه: 12

‘(மூஸாவே) உறுதியாக நானே உங்கள் இறைவன். ஆகவே, உங்கள் இரு காலணிகளையும் கழற்றுங்கள். திண்ணமாக நீங்கள் துஆ என்ற தூய்மையான பள்ளத்தாக்கில் உள்ளீர்கள். (20-12)

வேதம் மட்டும் அல்ல. வேதம் இறங்குகிற இடமும் தூய்மையானதுதான் என்பதை இவ்வசனத்தின் மூலம் இறைவன் தெளிவுபடுத்துகிறான்.

குறிப்பு 5

குர்ஆனை மட்டும் ஓரு பெட்டியில் வைத்து தூக்கிச் செல்வதென்றால் உளுவுடனேயே அப்பெட்டியைத் தொட வேண்டும். அதேசமயம் மற்ற பொருட்களுடன் குர்ஆனுமுள்ள பெட்டியை உளு இன்றி சுமந்து செல்ல மார்க்கத்தில் அனுமதி உண்டு.

ஏனெனில் இவ்விரு நிலைகளுக்கும் வேறுபாடுள்ளது. ஒருவன் மற்ற பொருட்களுடன் குர்ஆனையும் எடுத்துச் செல்கின்றபோது அவனது எண்ணம் ஒட்டுமொத்த பொருட்கள் என்பதுதானே தவிர குர்ஆன் மட்டும் என்பதல்ல.

குர்ஆனை தனித்து எடுத்துச் சென்றால் அவனது நோக்கமே குர்ஆன்தான். எண்ணங்களைப் பொருத்தே நமது மார்க்கத்தில் சட்டங்கள் அமையும்.

உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்

உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம் என்று புனிதக் குர் ஆனின் தோற்றுவாயில் நமக்குத் சொல்லித்தரும் இறைவன் மற்றுள்ள எல்லா அத்தியாயங்களிலும் என்னிடமே உதவித் தேடுங்கள், உங்கள் தேவைகளை நானே பூர்த்திச் செய்கிறேன் என்று அறுதியிட்டு உறுதிக்கூறுகிறான்.அவனது உயர் படைப்பினமாகிய நாமும் அவனையே வணங்குகிறோம்; அவனிடமே அனைத்தையும் கோருகிறோம். ஆனால் நம்முடைய கோரிக்கை நிறைவேறு வதில்லை,   நம்முடையத் தேவை பூர்த்தியடைவதில்லை. நாம் எவ்வாறு தொழுதாலும் எத்தனை முறை முறையிட்டாலும் நம்முடையத் தேவைகள் நிறைவேறுவதில்லை; குறைந்த பட்சம் பகுதியாகிலும் நிறைவேறியுள்ளதா என்றால் இல்லை என்ற பதிலே நிற்கிறது. அப்படியானால் இறைவன் தன் வாக்குறுதியைத் தவறவிடுகிறானா? இல்லை "பிறகு" என்ற அலட்சிய மனப்பான்மையில் இருக்கின்றானா? இல்லை நமக்கு கேட்கத்தெரியவில்லையா? இல்லை நாம் கேட்கும் துஆவில் குறைபாடுகள் உள்ளனவா? கேள்வி அதன் வடிவிலேயே இருக்கிறது.விடை............!இறைவன் தன் நிலையிலிருந்து மாறுவதில்லை; வாக்குறுதியை மீறுவதில்லை; அவன் சரியாகவே இருக்கிறான். நமக்குத்தான் கேட்கத் தெரியவில்லை, தெளிவில்லாமல் குழம்பிய மனத்தோடு கேட்கிறோம். வேறுவார்த்தையில் சொன்னால் குழப்பம் மனதில் இருப்பது மனதுக்கே தெரியவில்லை; சிந்தனைச் சிதறிகொண்டிருப்பது நமக்கும் தெரியவில்லை. மனதை எங்கோ வைத்துக்கொண்டு நாவை சுழற்றிகொண்டிருக்கிறோம் என்பதுதான் எதார்த்தம்."காலையில் கேட்கும் துஆ மாலைக்குள் நிறைவேறி இருக்கவேண்டும்; இரவில் கேட்கும் துஆ மறு நாள் நிறைவேறவேண்டும், அதிக பட்சமாக இரண்டு நாட்களுக்குள் நிறைவேறவேண்டும். அப்படி இல்லையென்றால் நீங்கள் கேட்கும் துஆவில் குறைபாடு உள்ளது. இறைவனிடத்தில் துஆ கேட்பதானால் வெறும் வார்த்தைகளால் கேட்கக்கூடாது. அவன் உள்ளத்தைப் பார்ப்பவன், எனவே மனதால் கேட்கவேண்டும். உடல், மனம், ஆன்மா இவை மூன்றும் இணைந்த நிலையில் கேட்கப்படும் துஆ உடனே கபூலாகும். வேறு வார்த்தையில் சொன்னால் எது நிறைவேறுமோ அதை மட்டுமே திரண்டிருக்கும் மனம் கேட்கும். மற்ற எதையும் கேட்காது."அல்லல்பட்டு, சங்கடப்பட்டு, மனம் நொந்துபோயிருப்பவனை ஏசாதீர்கள், அவன் கேட்கும் துஆ உடனே பலித்துவிடும்" என்று பெருமானார் அவர்கள் சொன்னதில் எவ்வளவு ஆழமான கருத்து இருக்கிறது என்பதை உற்றுப்பாருங்கள்" என்று ஹஜ்ரத் (அப்துல் வஹ்ஹாப் பாக்கவி) அவர்கள் சொன்னார்கள்.துஆ கேட்பதில் மனத்தின் பங்கு பெருமளவு இருக்கிறது. மனதைக் கட்டுப்படுத்தி ஓர் நிலைக்குக் கொண்டுவருவது சாதாரணக் காரியமல்ல. பல இரவுகள் கண்விழித்து, உணவைத் துறந்து, ஆசையை அகற்றி அல்லல்கள் பல பட்டாலே மனத்திரட்சி வசமாகும்.இத்தகைய சிரமங்கள், அவதிகள் வேண்டாமென்று ஒரு சில பெரியோர்கள், வலிமார்கள் சுலபமான சில வழிமுறைகளை வகுத்துத் தந்திருக்கிறார்கள். அத்தகையப் பெரியோர்களில் ஒருவரான ஹஜ்ரத் முஹம்மது பின் சுலைமான் அல் ஜஜூலி அவர்கள் "தலாயில் கைராத்" என்ற உயர்வான அவ்ராதை நமக்கு தந்திருக்கிறார்கள்.அவ்ராது என்ற அரபி வார்த்தைக்கு தினம் ஓதக்கூடிய புகழ்மாலை என பொருள் கொள்ளலாம். அவர்கள் எழுதிய அதனை உற்று நோக்கினால் இறைவனைப் புகழ்ந்தவண்ணமாகவே இருக்கும். அப்படி புகழ்ந்துக்கொண்டு வரும்போது இடையில் ஒரு வரியில் சின்ன துஆ, பின் புகழ்ச்சி, இப்படியாக கடைசிவரை இருக்கிறது. ஆழ்ந்து சிந்தித்தால் இறைவனைப் புகழ்ந்துக்கொண்டு வரும்போது அப்புகழ்ச்சியில் மனம் லயித்து ஆன்மாவுடன் சங்கமித்த நிலையில் முறையீட்டை இறைவனிடம் வைக்கப்படுகிறது. வேறு வார்த்தையில் சொல்லப்போனால் மனம் ஒன்றி கேட்கப்படும் துஆ இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற உறுதிப்பாட்டை இங்கு உருவாக்கி இருக்கிறார்கள் இமாமவர்கள். இவர்கள் இயற்றிய இவ்அவ்ராது இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமல்ல ஆப்ரிக்கா ஐரோப்பிய மேலை நாடுகளிலும் பரவலாக ஓதப்படுகிறது. இமாம் அவர்களின் முழுப் பெயர் அபு அப்துல்லாஹ் முஹம்மது பின் சுலைமான் பின் அபு பக்கர் அல் ஜஜூலி அல் சிமாலி. இவர்கள் மொராக்கோ நாட்டின் ஜஜுலா பகுதியைச் சார்ந்த பெர்பெர் இனத்தைச் சார்ந்தவர்கள் தம் எட்டாம் வயதில் தந்தையை இழந்து தம் சகோதரர் ஈசா அவர்களுடன் மராகிஸ் பகுதியில் தன் ஆரம்ப வாழ்க்கை பகுதியை கழித்தார்கள்.ஆரம்பக் கல்வியை தம் சொந்த ஊரிலும் பின் ஃபெஜ்(Fez) என்ற ஊரிலும் பயின்றார்கள். இளம்பருவத்திலே திருக்குரானை மனனம் செய்ததோடு மட்டுமல்லாமல் பிக்ஹ், அரபி மொழியியல், கணிதவியல் ஆகியவற்றை அபுல் அப்பாஸ் அல்ஹல்பானி மற்றும் அவரின் சகோதரர் அப்துல் அஜுஜ் ஆகியோரிடம் சற்றேரக்குறைய பதினாறு ஆண்டுகள் பயின்றார்கள். நீண்ட நாட்களாக நடந்துவந்த இனப்போராட்டக்காரணமாக புலம்பெயர்ந்து சற்றேரக்குறைய நாற்பதாண்டுகாலம் மக்கா, மதினா, பைத்துல் முகத்திஸ் ஆகிய நகர்களில் வாழ்ந்தவர்கள் தம் சொந்த ஊரான ஃபெஜ்(Fez) க்குத் திரும்பினார்கள். அங்குதான் "தலாயில் கைராத்" தை நிறைவுப் படுத்தினார்கள்.ஒருமுறை பயணத்தின்போது ஒலு செய்வதற்காகத் தண்ணீர் தேவைப்பட்டது. அங்கிங்கும் சுற்றிப்பார்த்தபோது ஒரு கிணற்றைக் கண்டார்கள். ஓடிச்சென்று பார்த்தபோது தண்ணீர் ஆழத்தில் இருந்தது. மோள்வதற்கு வாளி வேண்டும். வாளி இருந்தால் கையிறு வேண்டும், இரண்டும் இல்லாத நிலையில் தண்ணீரை எப்படி மொள்ள முடியும்? கவலைக் கொண்டவர்களாக எதாவது உதவிக் கிடைக்குமா என்று அங்குமிங்கும் பார்த்தார்கள். தூரத்தே இதை கவனித்துக்கொண்டிருந்த ஒரு மங்கை அருகே வந்து கிணற்றில் துப்பினாள், உடனே தண்ணீர் பொங்கிக்கொண்டு மேல் மட்டத்திற்கு வந்தது. இதை கண்ணுற்ற இமாம் அவர்கள் எப்படி செய்தாய் என்று வினவினார்கள். பெருமானார் அவர்களின் ஆசியால் என்னால் செய்ய முடிந்தது என்று பதிலளித்தாள். இந்நிகழ்வே தலாயில் கைராத் எழுத காரணமாக அமைந்தது.ஷாதலியா தரீக்காவை தம் வாழ்வில் இணத்துக்கொண்ட இவர்கள் சுமார் பதினாங்காண்டு காலம் தனிமையில் (கல்வத்து) இருந்தார்கள். தனிமைக்குப் பிறகு அசஃபி என்ற பகுதியில் வாழ்ந்த போது பல்லாயிரகணக்கானோர் அவர்களின் சீடர்களானர். இதனைக் கண்ணுற்ற அப்பகுதியின் ஆளுநர் அவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார். ஆளுநரின் உத்திரவுக்கிணங்கி ஆப்ரகால் பக்கம் பயணமானார்கள். ஞானச் சுவைக்கு அடிமையான அவர்களின் சீடர்கள் கூடவே சென்றனர். அங்கும் தன் சீடர்களை ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபடுத்துவதில் தன் நேரத்தை செலவிட்டார்கள். முரிதீன்கள் எனப்படும் சீடர்கள் அதிகமானதன் காரணமாக தன் மணவர்களை பல பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். அவர்களின் ஷேக் அபூ அப்துல்லாஹ் முஹம்மது அல்ஸகீர் ஸஹலி மற்றும் ஷேக் அபூ முஹம்மது அப்துல் கரீம் அல்முந்திரி பிரபல்யமானவர்கள். இதை கண்ணுற்ற அவ்வாளுநர் பொறாமைத் தீயின் வெம்மையினால் அவர்களுக்கு நஞ்சூட்டிக் கொன்றார். காலை சுபுஹுத் தொழுகையின்போது அவர்கள் உயிர் பிரிந்தது. எழுபத்தேழு ஆண்டுகளுக்குப் பின் அவர்களை உடலை மரக்காஷ் என்ற ஊரில் மீண்டும் அடக்கம் செய்வதற்காகத் தோண்டியபோது எந்த கேடுமில்லாமல் சற்று முன்பு அடக்கம் செய்யப்பட்ட உடல் போலிருந்ததாக தி என் சைக்லோபீடியாஆஃப்இஸ்லாம்1957லீடன் பதிப்பில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது