Popular Posts

Showing posts with label முஹ்தசிலாக்களின் வழியில் பயணிக்கும் TNTJ. Show all posts
Showing posts with label முஹ்தசிலாக்களின் வழியில் பயணிக்கும் TNTJ. Show all posts

Tuesday, 12 January 2016

சஹாபாக்களை பற்றி அல்லாஹ் சொல்வதை கேளுங்கள்/ஈமானில் அந்தஸ்தில் சிறந்து விளங்கிய சஹாபாக்களை விட அண்ணன் விபரமானவரா ??

சஹாபிகளை விட நாங்கள் அதிகமாக விளங்குவோம் என்று அண்ணன் சொல்கிறார்
 சஹாபிகளை விட அற்புதமாக விளங்கும் அண்ணனின் ஆற்றலை பாரீர் என்று ஒரு வஹ்ஹாபி ஸ்டேடஸ் போடுகிறார் .
 ஈமானில் அந்தஸ்தில் சிறந்து விளங்கிய சஹாபாக்களை விட அண்ணன் விபரமானவரா ??
 சஹாபாக்களை பற்றி அல்லாஹ் சொல்வதை கேளுங்கள் .

 48:29 مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ‌ ؕ وَالَّذِيْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَى الْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ ‌ تَرٰٮهُمْ رُكَّعًا سُجَّدًا يَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا‌سِيْمَاهُمْ فِىْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ‌ ؕ ذٰ لِكَ مَثَلُهُمْ فِى التَّوْرٰٮةِ ۛ ۖۚ وَمَثَلُهُمْ فِى الْاِنْجِيْلِ ۛۚ كَزَرْعٍ اَخْرَجَ شَطْئَـهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰى عَلٰى سُوْقِهٖ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَـغِيْظَ بِهِمُ الْكُفَّارَ‌ ؕ وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا 
 48:29. முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் )அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்கள் ;
 அவர்களுடன் (சஹாபா பெருமக்கள் )இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில்(நிராகரித்தவர்களில் ) எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.
 ஸூரா 47
 சஹாபாக்களை பற்றி தவ்ராத்திலும் ,இன்ஜீலிலும் சொல்லப்பட்டிருக்கிறது .அண்ணனைபற்றி எந்த வேதத்தில் சொல்லப்படிருக்கிறது .???
 அல்லாஹ்வும் அவர்களுடைய ஈமானுக்கு சர்டிபிகேட் கொடுக்கிறான் ? உங்கள் அண்ணனுக்கு யார் கொடுத்தது ??

TNTJ யினர் மறுக்கும் குஸைமா (ரலி) அவர்களின் ஹதீஸும், அதன் உண்மை நிலையும்

TNTJ யினர் மறுக்கும் குஸைமா (ரலி) அவர்களின் ஹதீஸும், அதன் உண்மை நிலையும்
 =====================================================
 TNTJ யினர் தங்களுக்கு பிடித்த ஹதீசுகளை வைத்துக் கொண்டு தங்களுக்கு விருப்பமில்லாத ஹதீசுகளை தட்டி விட்டுக் கொண்டு இருக்கின்றனர் என்பதை யாவரும் அறிந்ததே.!!!

 இன்று இந்த பகுத்தறிவு வாதம் வைத்து ஹதீஸுகளை தட்டி விடும் போக்கு, தமிழ் உலகில் மக்களையும் அதிகமாக தாக்கி, அடிப்படை மார்க்க அறிவு இல்லாத சகோதர்கள் கூட தங்களுக்கு விருப்பமான மாதிரி ஹதீஸுகளை தட்டி விட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
 சமூகத்தில் இப்போது ஹதீஸுகளின் நிலை, 'உங்கள் மனசு ஏற்கிறதா என்று பாருங்கள் இல்லை என்றால் தட்டி விடுங்கள்,' என்ற நிலைக்கு மக்களை கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர். அதற்கு அவர்கள் ஆதாரமாக வைக்கும் ஹதீஸ்.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதில்) நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்.

 என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால் இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிக தூரமானவன்.

 அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)
 நூல்: அஹ்மத் 15478

 இந்த ஹதீஸை ஆதாரமாக காட்டி அளவுகோல் ஒவ்வொரு தனி மனிதனின் கையிலும் இன்று கொடுக்கப் பட்டுள்ளது. விரும்பினவன் விரும்பின ஹதீஸை ஏற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால் தட்டி விடலாம்

 நல்ல நிலைப் பாடு தான்.

 இது என்ன கலியாணத்திற்கு பெண் பார்க்கும் விடயமா????

 அவர் அவருக்கு பிடித்தது போல செயற்படுவதற்கு???
 இன்று சாதாரண பாமர மக்கள் கூட ஹதீஸுகளை தூக்கி வீசும் நிலைமைக்கு கொண்டு வந்து வைத்துள்ளார்கள் என்றால். இந்த 1400 ஆண்டுகளாக இமாம்கள் ஹதீஸ் கலைக்காக பட்ட கஷ்டங்களை எல்லாம் தேவை இல்லாமல் ஆக்கி இருக்கிறார்கள்

 5 லட்சம் அறிவிப்பாளர்களை இமாம்கள் திரட்டி இருக்கிறார்கள், எதற்கு திரட்டினார்கள்????

 இமாம்கள் எல்லாம் குந்தி இருந்து கொண்டு 'நீ ஹதீஸ சொல்லு, மனசுக்கு புடிச்சிருந்தா ஷஹீஹ் என்று சொல்கிறோம், இல்லை என்றால் ழஈப் என்று சொல்கிறோம்' என்று சொல்லிவிட்டு போயிருக்கலாம் அல்லவா??

 ஒரு ஹதீஸை திரட்ட 1 மாதம் பயணம் செய்தார்கள் இமாம்கள். தேவையா இது???

 சரி இவர்கள் மேலே குறிப்பிட்ட ஹதீஸின் அடிப்படையில் எத்தனை ஹதீஸுகளை இமாம்கள் தட்டி உள்ளார்கள்????என்பதை இவர்கள் காட்ட வேண்டும்.

 இந்த ஹதீஸ், சில அடிப்படையே இல்லாத செய்திகளை குறிக்கும். உதாரணமாக தப்லீக் ஜமா அத் சகோதர்களின் தஃலீம் தொகுப்பில் ஒரு ஹதீஸ் வருகிறது, தொழுகையை தொடர்ந்து தொழுதவனுக்கு 15 உபகாரம், தொழுகையை விட்டவனுக்கு 5 தண்டனைகள் என்று, இந்த ஹதீஸை படித்ததுமே நமக்கு தோன்றும் இப்படி ஒரு செய்தியை நபிகளார் சொல்லி இருப்பார்களா என்று...

 உண்மையில் இது ஒரு இட்டுக் கட்டப் பட்ட செய்தியாகும்.

 இந்த செய்தி இட்டுக்கட்டப்படதாகும் என இமாம் தஹபி இப்னு ஹஜர் போன்றவர்கள் விளக்கியுள்ளனர்

 அதில் முஹம்மத் இப்ன் அலி பின் அல் அப்பாஸ் என்ற பொய்யன் இடம் பெறுகிறான் அவந்தான் இதை இட்டுக் கட்டினான் என இமாம் தஹபி (ரஹ்) கூறுகிறார்கள்

 இது போன்ற செய்திகளை தான் மேற்குறித்த அஹ்மதுடைய ஹதீஸ் குறிப்பிடுகிறது.

 அதிராம் பட்டினத்தில் TNTJ இற்கும் ADT க்கும் நடந்த விவாதத்தில் 4 ஹதீஸுகளை சுடச் சுட தட்டி விட்டனர்.

 அதில் ஒன்று தான் நபி (ஸல்) அவர்கள் குதிரை வாங்கியதாகவும் அதற்கு குஸைமா (ரலி) அவர்கள் சாட்சி சொன்னதாக அபூதாவூதில் பதிவாகி இருக்கும் ஆதாரபூர்வமான செய்தி

 "நபிகள் நாயகம்(ஸல்) ஒரு கிராம வணிகரிடம் இருந்த குதிரையை விலை பேசி வாங்கி விட்டு அதற்கு உரிய விலையை பெறுவதற்கு தன்னை பின் தொடர்ந்து வருமாறு கூறிவிட்டு நபிகள் நாயகம்(ஸல்) விரைந்து சென்று விட்டார்

 குதிரை வியபாரி தாமதமாக சென்றார். அந்த குதிரையை நபிகள் நாயகம் (ஸல்)வாங்கிவிட்டதை அறியாத சிலர்கள் அந்த குதிரையை மீண்டும் விலை பேசினர். நபிகள் நாயகம்(ஸல்) பேசிய விலையை விட சிலர்கள் அந்த குதிரைக்கு அதிக விலை கூறவே குதிரை வியபாரி நபிகள் நாயகத்தை அழைத்து உங்களுக்கு வேண்டும் என்றால் உரிய விலை கொடுத்து குதிரையை வாங்கி கொள்ளுங்கள் இல்லையேல் நான் வேறு நபருக்கு விற்க போகிறேன் என்று குறிப்பிட்டார் இதை செவியுற்ற நபிகள் நாயகம்(ஸல்) நான் அந்த குதிரையை வாங்கி விட்டேனே என்று கூறினார்கள் வணிகர் நான் உங்களுக்கு விற்பனை செய்யவில்லை என்று கூற, இல்லை நான் வாங்கி விட்டேன் என்று மீண்டும் நபிகள் நாயகம் கூற இருவருக்கும் இடையே பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பலரும் நபிகள் நாயகம்(ஸல்) பொய் பேசவே மாட்டார்கள் என்று கூறி வணிகரை எச்சரித்தனர் நீங்கள் வாங்கி விட்டது உண்மையானால் அதற்கு உரிய சாட்சியை கொண்டு வாருங்கள் என்று வணிகர் கூறவே அப்போது அங்கு வந்த குஸைமா பின் ஸாபித் அன்ஸாரி நான் சாட்சி என்று கூறினார்கள். உடனே நபிகள் நாயகம்(ஸல்) குஸைமா அவர்களை நோக்கி திரும்பி நீ தான் அதை பார்க்கவில்லையே எப்படி சாட்சி சொன்னாய் என்று விளக்கம் கேட்டார்கள் .அதற்கு அந்த நபி தோழர் நீங்கள் பெற்று தரும் இறை செய்திகளை முழுமையாக நம்பும் நான் இந்த வணிகருக்கு எதிரான விசயத்தில் எப்படி உங்களை நம்பாமல் இருக்கமுடியும் என்று திருப்பி கேட்டார்கள். உடனே நபி அவர்கள் குசைமா சொல்லும் சாட்சி இரு நபருக்கு இணையான சாட்சியாகும் என குறிப்பிட்டார்கள்." (அபூ தாவூத்)

 இவர்கள் இந்த ஹதீஸை மறுபதற்கு சொல்லும் காரணம்.
 குசைமா அவர்கள் பொய் சாட்சி சொல்லியதாகவும் நபிகள் நாயகம் அவர்கள் அதை ஊக்க படுத்துவது போன்றும் இந்த நபி மொழி அமைவதால் இது ஏற்று கொள்ள தகுந்த நபி மொழி அல்ல! எனவே இந்த நபி மொழியை மறுக்கிறோம். என்று வாதம் வைக்கிறார்கள்.

 அனைத்து ஹதீஸுகளையும் இவர்கள் தலைகீழாக புரிந்தது போல் இதையும் தலைகீழாக புரிந்து உள்ளனர்.
 நபி (ஸல்) அவர்களை மக்கத்து காபிர்கள் கூட உண்மையாளர் என்றே அழைத்தார்கள். அவர் ஒரு நற்குண சீலராக சிறு வயதில் இருந்தே விளங்கினார்கள். என்பது அனைவரும் அறிந்ததே.

 இந்த ஹதீஸில் வரும் குதிரையை விற்றவன் நபி (ஸல்) அவர்கள் கொடுத்த காசை விட அதிகமாக காசு கிடைக்கும் என்று நபிகளாரை பொய்யர் ஆக்க முயன்றான்.

 "இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்" (33:6)

 நம்மை விட நபி (ஸல்) அவர்களை அதிகமாக நேசித்தவர்கள் தான் அந்த உத்தம தோழர்கள்.அந்த அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் நேசித்தார்கள்.

 நபி(ஸல்) அவர்களை பொய்யர் ஆக்க அவன் முயன்றால் சஹாபாக்கள் விடுவார்களா???

 ஆனால் நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் பொய் சொல்ல மாட்டார் என்பது சஹாபாக்களுக்கு தெரியும், 100% இற்கு 200% உறுதியாகவே இருந்தார்கள் அதனால் தான் குஸைமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை உண்மை படுத்துவதற்கு அங்கு வந்து அவ்வாறு சாட்சி சொன்னார்.
 ஒரு முஸ்லிம் இவ்வாறான சந்தர்ப்பத்தில் இப்படி தான் நடந்திருக்க வேண்டும்

 நபி (ஸல்) அவர்களை உண்மை படுத்துவதற்கு ஒரு உண்மையை எடுத்து வைத்தால் அது எப்படி பொய்யாகும்???

 அப்படியென்றால் உங்கள் வாதப் படி நபி (ஸல்) அவர்கள் பொய் சொன்னார்களா??? நபி (ஸல்) அவர்கள் பொய் சொன்னார்கள் என்று குஸைமா (ரலி) அவர்கள் சொல்லியிருந்தால் அது உங்கள் பார்வையில் ஷஹீஹ் ஆக ஆகி இருந்திருக்கும், அந்த வாதத்தை தான் வைக்க வருகிறார்களா???

 என் அன்பின் சகோதரர்களே!!!இது ஒரு வாதமா ???? யாரவது இப்படி ஒரு வாதம் வைத்து ஹதீஸுகளை தட்டி விடுவார்களா?? நான் தெரியாமல் கேட்கிறேன்???

 அல்லாஹு ரப்புல் ஆலமீன் இந்த tntj யினருக்கு நேர்வழி காட்ட அனைவரும் துஆ செய்யுங்கள்

Saturday, 9 January 2016

Wednesday, 6 January 2016

பீ ஜே யின் விள‌க்க‌வுரைக‌ளை ஏற்றுக் கொள்ள‌லாமா?? பீ ஜே யின் வீடியோவை ஆதாரமாக‌ காட்ட‌லாமா????

பீ ஜே யின் விள‌க்க‌வுரைக‌ளை ஏற்றுக் கொள்ள‌லாமா??

பீ ஜே யின் வீடியோவை ஆதாரமாக‌ காட்ட‌லாமா????



த‌வ்ஹீத் ஜ‌மாஅத் என்ர‌ என்ற‌ பெய‌ரில் அத‌ன் அர்த்த‌ம் தெரியாம‌ல் இன்று மார்க்க‌ச் சொற்பொழிவாற்றும் ( பீ ஜெய்னுல் ஆப்தீன் ) என்ர‌ பீ ஜே என்ப‌வ‌ரின் மார்க்க‌ சொற்பொழிவுக‌லை கேட்டு அத‌ன் பிர‌கார‌ம் ந‌ட‌க்க‌லாமா??? அந்த‌ வீடியோக்க‌ளை அவ‌ர்க‌ளின் ஆத‌ரவால‌ர்க‌ள் ஆதாரமாக‌ காட்ட‌ முடியுமா??? என்ற‌ கேள்வி இப்போது வேரிட்டுல்ல‌து.



இவ்வாரு ஒரு கேள்வி உண்டாகக் கார‌ண‌ம் யாதெனில் இவ‌ர் ஏற்க‌னவே பேசிய‌ மார்க்க‌ உரைக‌ளில் ப‌ல‌ ஹ‌தீத்கலை பிழையாக கூறி அத‌ற்கு பிழையான விள‌க்க‌ம் சொல்லியிருப்ப‌து இந்த‌ உல‌கம் முழுவ‌து அறிந்த‌ விடைய‌மே.அதை அவ‌ரே பின்ன‌ர் தான் பேசிய‌து பிழை என்று ஒப்புக்கொண்ட‌ கானொளி ப‌திவுகளையும் பார்த்திருப்பார்க‌ள் என்ரு நினைக்கிரோம்.



மாறாக‌ இன்னும் எத்த‌னை விடைய‌ங்க‌ளை பிழையாக சொல்லி முடித்து விட்டு அதை ஆராய்ந்து கொண்டிருகிறாரோ தெரிய‌வில்லை??? இன்னும் தான் பேசிய‌ விடைய‌ங்க‌ளில் எத்த‌னையை பிழை என்று சொல்வாரோ புரிய‌வில்லை??? கார‌ண‌ம் அவ‌ரின் க‌ருத்து பிழையாக இருந்தால் அதை ஆராய்ந்து வாபஸ் வாங்குவோம் என்ப‌தே ஒளிய‌ பிழையில்லாவ‌ன்ணம் ஆராய்ந்து முடிவு க‌ண்ட‌ பின் சொல்ல‌ வேன்டும் என்ப‌து அல்ல‌ என்று தெளிவாகிற‌து.



அன்பார்ந்த‌ ந‌ண்ப‌ர்க‌லே நாம் இப்போது ந‌ன்றாக‌ சிந்திக்க‌ வேண்டிய‌து இதுதான்.....



இவ்வாரு இவ‌ர் கூறிய‌ க‌ருத்துக்க‌ளை ச‌ரி க‌ண்டு அத‌ன் ப‌டி செய‌ல்ப‌ட்டு பீ ஜே அதை பிழை என்று ஏற்ருக் கொள்வ‌த‌ற்கு முத‌ல் ம‌ர‌ணித்த‌வ‌ர்க‌ளின் நிலை என்ன????இன்னும் இவ‌ர் பேசிய‌ க‌ருத்துக்க‌ளில் எதை பிழை என்று சொல்வாரோ என்று தெரியாமல் வாழும் அவ‌ர்க‌ளின் ஆத‌ரவாளர்க‌ளின் நிலை என்ன‌????



இது ப‌ற்றி இவ‌ர்க‌ள் சிந்திக்க‌ வேண்டாமா??? இவ‌ர்க‌ளின் ஈமான் ச‌ரியான‌தா???இவ‌ரின் மார்க்க‌ சொற்பொழிவுக‌லை கேட்க‌ளாமா???இவ‌ரின் வீடியோக்க‌ளை இவ‌ர்க‌ள் ஆதாரமாக எவ்விட‌த்திலும் சுட்டிக்காட்ட‌லாமா??இவ‌ர் குர்ஆனுக்கு கொடுக்கும் த‌ர்ஜிமாக்கள் ச‌ரியான‌தா??? அதை ஏற்றுக் கொள்ள‌ முடியுமா???இவ‌ர் ஹ‌தீக‌லுக்கு பொருள் சொல்வ‌தை ஏர்றுக் கொள்ள‌லாமா????



இப்ப‌டியான‌ கேள்விக‌ல் உங்க‌லுக்கும் எழும் என‌ நினைக்கிரேன்.என‌வே அன்பினிய‌ ச‌கோத‌ர‌ர்க‌ளே இவ‌ரின் வீடியோக்க‌லை ஆதாரமாக காட்டுவ‌தையும்,இவ‌ரின் க‌ருத்துக்க‌லை ச‌ரி க‌ண்டு அத‌ன் ப‌டி ந‌ட‌ப்ப‌தையும் விட்டுவிடுங்க‌ல். நீங்க‌ள் உங்க‌லுக்கு ந‌ல் வ‌ழி காட்ட‌க் கூடிய‌ த‌ன‌து க‌ருத்துக‌ளை ஆராய்ந்து குரானுக்கும்,ஹ‌தீதுக்கும் முர‌ண‌ற்ற வ‌கையில் க‌ருத்தூட்டும் ஒரு மார்க்க‌ ஞானியை தேடிக் கொள்ளுங்க‌ல்.

 

முஹ்தசிலாக்களின் வழியில் பயணிக்கும் TNTJ ..

முஹ்தசிலாக்களின் வழியில் பயணிக்கும் TNTJ
 ++++++++++++++++++++++++++++++++++++++++++

 தனக்குப்பின் இஸ்லாமிய சமுதாயத்தில் பலப்பிரிவுகளும் கூட்டங்களும் தோன்றும் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தான் வாழும் போதே முன்னறிவிப்புச் செய்தார்கள். அவர்கள் கூறியது போன்று நபி(ஸல்) அவர்களுக்குப் பின் பல வழிகெட்ட கூட்டங்கள் இஸ்லாமின் பெயரால் தோன்றின. தாங்கள் மட்டுமே சத்தியத்தில் இருப்பதாக ஒவ்வொரு கூட்டத்தினரும் வாதிட்டனர். நபி(ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் கடைபிடித்த சத்தியக்கொள்கையில் இருந்த நல்லோர்களை வழிகேடர்கள் என இவர்கள் கூறினர்.

 இவர்களில் ஒரு பிரிவினர்தான் முஃதஸிலாக்கள். இவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாம் நூற்றாண்டில் தோன்றினர். ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தோன்றி அழிந்துபோன ஒரு கூட்டத்தைப் பற்றி இன்று நாம் ஏன் பேச வேண்டும் என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம்.

 அழிந்துபோன இந்த பிரிவினர் முன்பு கூறிச் சென்ற, நபிமொழிகளுக்கு எதிரான சில வழிகெட்ட கொள்கைகளை, தற்போது தமிழகத்தில் சிலவருடங்களாக சகோதரர் பீஜே அவர்கள் கூறி வருகிறார். அவரின் இயக்கத்தைச் சார்ந்தவர்களும் அதை உண்மை என நம்புகின்றனர். இதனால் தற்போது இஸ்லாமிய சமுதாயத்தில் மிகப்பெரிய கொள்கைக் குழப்பம் ஏற்பட்டு, நபிமொழிகளை நம்பும் முஸ்லிம்களை இணைவைப்பாளர்கள் என இவர்கள் கூறிவருகின்றனர்.

 முஃதஸிலாக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை அவனுடைய தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறியவாறு விளங்கவில்லை. ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை மறுத்து தன் சுய அறிவையே மார்க்கமாக ஆக்கிக்கொண்டனர். தங்களின் அறிவுக்கு ஒத்துவராத நபிமொழிகளை சம்பந்தம் இல்லாத குர்ஆன் வசனங்களை காட்டி அந்த நபிமொழிகள் குர்ஆனுடன் முரண்படுகிறது எனக் கூறினர். தங்கள் அறிவுக்கு ஒத்துவராத ஹதீஸ்கள் நபியின் கூற்றாக இருக்காது என அவர்களாக எண்ணிக்கொண்டனர். சுயஅறிவே இவர்களின் அடிப்படை ஆதாரம். இதற்கு ஏற்றவாறு குர்ஆனைப் புரிந்தார்கள். இதற்கு ஒத்துவராத ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை பொய்யானக் காரணங்களைக் கூறி அவற்றில் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி மறுத்தனர். இதுவே அவர்களின் வழிகேட்டிற்கு காரணம்.

 தற்போது தமிழகத்தில் உள்ள சகோதரர் பீஜே அவர்களும் இதே வேலையை செய்து வருகிறார். நபிமொழிகளின் மீதுள்ள நம்பிக்கையை விட தன்அறிவின் மீதுள்ள நம்பிக்கை இவருக்கு மிகைத்துவிட்டது. தன் அறிவிக்குப்படுவதே மார்க்கம். தன் அறிவிக்கு ஒத்துவராதவை ஹதீஸ்களாக இருந்தாலும் அவை மார்க்கமாகாது என்ற நிலைக்கு வந்துவிட்டார். முஃதஸிலாக்களுக்கும் இவருக்கும் இடையே சில வித்தியாசங்கள் இருந்தாலும் பல ஒற்றுமைகள் உள்ளன. அந்த ஒற்றுமைகளை கீழே காணலாம்.

 கொள்கை ஒற்றுமை

 முஃதஸிலாக்கள் குர்ஆன் வசனங்களை நேரடிப் பொருளில் புரியாமல் தன் சுய சிந்தனைக்கு ஏற்றவாறு வசனங்களை வளைத்தது போல் இவரும் குர்ஆன் வசனங்களை தன் கருத்திற்கு ஏற்றவாறு வளைத்தும் ஒடித்தும் வருகிறார். உதாரணமாக (2:102) வது வசனத்தை பல இடங்களில் வெட்டி அதன் எதார்த்தமான அர்த்தத்தை மாற்றி இதுவரை யாரும் கூறாத விளக்கத்தை கூறியுள்ளார். அதுவும் குா்ஆனுக்கு முற்றிலும் எதிரான விளக்கம்.
 இஸ்லாமிய வரலாற்றில் முஃதஸிலாக்கள் மட்டுமே மறுத்த சில நபிமொழிகளை இன்று இவர் மட்டுமே மறுத்து வருகிறார். இந்த நபிமொழிகளை மறுப்பதற்கு முஃதஸிலாக்கள் என்ன வாதங்களை வைத்தார்களோ அதே வாதங்களை இன்று இவரும் கூறி வருகிறார். உதாரணமாக சூனியம் கண்ணேறு தொடர்பான பல நபிமொழிகளை மறுத்துள்ளார்.
 நபிமொழிகளை மறுக்கும் போது அவை குர்ஆனுக்கு முரண்படுகிறது என முஃதஸிலாக்கள் கூறியது போல் பொய்யானக் காரணத்தைக் கூறுகிறார்.
 நபிமொழிகளை நம்பிய முஸ்லிம்களை இணைவைப்பாளர்கள் என முஃதஸிலாக்கள் துணிந்து கூறியது போல் தற்போது இவரும் கூறுகிறார்.
 இவர் முஃதஸிலாக்களின் கொள்கைகளை ஒவ்வொன்றாக படித்து அறிந்துவிட்டு அவற்றைக் கூறவில்லை. இவர் ஆதாரங்களின் அடிப்படையில் சிந்திக்காமல் நாத்திகச் சிந்தனையின் அடிப்படையில் சிந்திப்பதால் இவரை அறியாமலேயே இதற்கு முன்பு இவரைப் போன்று சிந்தித்த முஃதஸிலாக்களுடன் சில விசயங்களில் ஒன்றுபட்டுள்ளார். நாம் இன்ன இன்ன கொள்கையில் முஃதஸிலாக்களுடன் சேர்ந்துள்ளோம் என்ற உண்மை தாமதமாகவே இவருக்குத் தெரிய வந்துள்ளது.

 ஏகத்துவத்திற்காக பல தியாகங்களைச் செய்த சகோதரர் பீஜே தற்போது தடம்மாறி முஃதஸிலாக்களின் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறார். இதை இலங்கையைச் சார்ந்த அறிஞர்கள் அவருக்கு உணர்த்தினர். ஆனால் அவர் உணர்ந்தபாடில்லை.

 தனது ஆன்லைன்பீஜே இணையதளத்தில் முஃதஸிலாக்களைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டார். அதில் இவருக்கும் முஃதஸிலாக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை மட்டும் சுட்டிக்காட்டி இவர் முஃதஸிலா வழியில் செல்லவில்லை என்பது போல் சித்தரித்துள்ளார். ஆனால் இவருக்கும் முஃதஸிலாக்களுக்கும் இடையே உள்ள பல ஒற்றுமைகள் குறித்து வாய்திறக்கவில்லை.

 முஃதஸிலாக்களின் அனைத்துக் கொள்கையையும் இவர் கூறுகிறார் என்று நாம் குற்றம்சாட்டவில்லை. முஃதஸிலாக்கள் விட்டுச் சென்ற சில வழிகெட்ட கொள்கை இவரிடம் உள்ளது என்பதே நம் விமர்சனம். சூனியம் கண்ணேறு சம்பந்தமான நபிமொழிகளை மறுத்து அதை நம்பக்கூடியவர்கள் இணைவைப்பாளர்கள் என்று முஃதஸிலாக்களைத் தவிர வேறு எந்த நல்லறிஞர்களும் கூறவில்லை. சகோதரர் பீஜே அச்சுப்பிசகாமல் அப்படியே இதேக் கருத்தைக் கூறுகிறார்.

 இது சாதாரண மசாயில் பிரச்சனை இல்லை. முஃமின் முஷ்ரிக் என்ற கொள்கை ரீதியிலான பிரச்சனை. இக்கொள்கையில் இவர் முஃதஸிலாக்களுடன் இணைத்துள்ளதால் இவர் முஃதஸிலாக்களின் வழியில் செல்கிறார் என்ற விமர்சனம் இவருக்கு 100 சதவிகிதம் பொருந்தக்கூடியதே. இதை எப்படி மறுக்க முடியும்?

 இது பொய்யான விமர்சனமோ காழ்ப்புணர்வினால் கூறும் அவதூறோ அல்ல. மாறாக அவர் செய்த செயலால் அவரே இழுத்துக்கொண்ட இழுக்காகும். கொள்கை ரீதியில் முஃதஸிலாக்களுக்கும் இவருக்கும் இவ்வளவு பெரிய ஒற்றுமை இருக்கும் போது எனக்கும் முஃதஸிலாக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இவர் மறுப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் தில்லுமுல்லு வேலையாகும்.

 இந்தக் கட்டுரையில் முஃதஸிலாக்களைப் பற்றி நீங்கள் அறியும் ஒவ்வொரு தருணங்களிலும் சகோதரர் பீஜேவிற்கும் முஃதஸிலாக்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை பளிச்சென்று அறிவீர்கள் இன்ஷா அல்லாஹ்.

 முஃதஸிலாக்களின் துவக்கம்

 வாஸில் இப்னு அதாஃ என்பவனே முஃதஸிலாக்களின் தலைவன். இவனைப் பற்றி இமாம் தஹபீ(ரஹ்) கூறியதை அறிந்து கொள்ளுங்கள்.

 سير أعلام النبلاء
 (5 / 464)
 210 وَاصِلُ بنُ عَطَاءٍ أَبُو حُذَيْفَةَ المَخْزُوْمِيُّ مَوْلاَهُم *
 البَلِيْغُ، الأَفْوَهُ، أَبُو حُذَيْفَةَ المَخْزُوْمِيُّ مَوْلاَهُم، البَصْرِيُّ، الغَزَّالُ. وَقِيْلَ: وَلاَؤُهُ لِبَنِي ضَبَّةَ. مَوْلِدُه: سَنَةَ ثَمَانِيْنَ، بِالمَدِيْنَةِ. وَهُوَ وَعَمْرُو بنُ عُبَيْدٍ رَأْسَا الاعْتِزَالِ، طَرَدَهُ الحَسَنُ عَنْ مَجْلِسِهِ لَمَّا قَالَ: الفَاسِقُ لاَ مُؤْمِنٌ وَلاَ كَافِرٌ. فَانضَمَّ إِلَيْهِ عَمْرٌو، وَاعْتَزَلاَ حَلْقَةَ الحَسَنِ، فَسُمُّوا المُعْتَزِلَة

 இவன் சொல்லாற்றலும், பேச்சாற்றலும் மிகுந்தவன். ஹிஜ்ரீ 80 ஆம் ஆண்டில் மதீனாவில் பிறந்தான். இவனும் அம்ர் இப்னு உபைத் என்பவனுமே முஃதஸிலா கொள்கையின் தலைவர்கள். இவன் இமாம் ஹஸனுல் பஸரீ(ரஹ்) அவர்களின் சபையில் இருந்தபோது பெரும்பாவம் செய்தவன் முஃமினாகவும் இருக்க மாட்டான். காஃபிராகவும் இருக்கமாட்டான் எனக் கூறியபோது ஹஸன் இவனைத் தன்னுடைய சபையிலிருந்து வெளியேற்றினார். இதன் பிறகு இவனுடன் அம்ரு என்பவனும் இணைந்துகொண்டான். இவ்விருவரும் ஹஸன்(ரஹ்) அவர்களின் சபையை புறக்கணித்தார்கள். எனவே, இவர்களுக்கு முஃதஸிலாக்கள் (விலகியவர்கள்) என்று பெயர் வந்தது.

 நூல்: சியரு அஃலாமின் நுபலா பாகம் 5 பக்கம் 464

 வரம்புமீறிய சிந்தனையும் அளவுக்கு அதிகமான பேச்சும் வாஸில் பின் அதாஉ வழிகெடுவதற்கு காரணமாகும்.

 பெரும்பாவம் செய்தவன் காஃபிராகமாட்டான் என நபிமொழிகள் தெளிவாகக் கூறுகிறது. உதாரணத்திற்கு ஒரு சில நபிமொழிகளை அறிந்துகொள்வோம். :

 அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
 “”எனது இரட்சகனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது “எனது சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறக்கின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான், “அவர் விபசாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?” எனக் கேட்டேன். அவர் விபசாரத்திலோ திருட்டிலோ — ஈடுபட்டிருந்தாலும்தான்” என்று பதிலளித்தார்கள்.”
 புகாரி (1237)

 விபச்சாரமும் திருட்டும் பெரும்பாவமாகும். இப்பாவங்களை செய்தவன் ஓரிறைக்கொள்கையை ஏற்றிருந்தால் அவன் ஓரிறைக் கொள்கையை ஏற்றதற்காக அல்லாஹ் அவனுக்கு சொர்க்கத்தைத் தருகிறான். முஃமின்களுக்கே அல்லாஹ் சொர்க்கத்தை தருவான். எனவே பெரும்பாவம் செய்தவன் முஃமினாகமாட்டான் என்ற கருத்தை இந்த நபிமொழி தகர்க்கின்றது.

 பத்ருப்போரில் கலந்துகொண்டவரும், இரவில் நடந்த அகபா உடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டு) தலைவர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

 (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, “அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும், திருட மாட்டீர்கள் என்றும், விபசாரம் புரியமாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும் புனைந்துகொண்டு வரமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்கரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகவாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்” என்ற சொன்னார்கள். உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.
 நுால் புகாரி (18)

 திருட்டு விபச்சாரம் பச்சிளம் குழந்தைகளை கொலை செய்தல் அவதூறு கூறுதல் ஆகியவை பெரும்பாவங்களாகும். மறுமையில் அல்லாஹ் நாடினால் இப்பாவங்களை மன்னிக்கலாம் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பெரும்பாவம் செய்தவன் இறைநம்பிக்கையாளன் அல்ல என்றால் அவனை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். எனவே இந்த நபிமொழியும் பெரும்பாவம் செய்தவன் இறைநம்பிக்கையிலிருந்து வெளியேறிவிடுகிறான் என்ற கருத்தை தகர்க்கிறது.

 வாஸில் என்பவன் நபிமொழிகளை ஏற்று அதனடிப்படையில் தீர்ப்புக் கூறவில்லை. மாறாக இவற்றை கவனிக்காமல் தன்னுடைய சுய சிந்தனை அடிப்படையில் பெரும்பாவம் செய்தவன் காஃபிராகவும் மாட்டான். முஃமினாகவும் இருக்கமாட்டான். இரண்டிற்கும் இடையிலான ஒரு நிலையில் இருக்கிறான் எனக் கூறினான்.

 நபிமொழிகளை மறுத்து சுய சிந்தனையை புகுத்தியதே முஃதஸிலாக்கள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணம். இதே வேலையை சகோதரர் பீஜே தற்போது ஹதீஸ்களில் செய்கிறார். இதனாலேயே இவர் முஃதஸிலா வழியில் செல்கிறார் என்கிறோம்.

 முஃதஸிலாக்களுக்கு வக்காலத்து வாங்குவோர்

 அல்லாஹ்வின் மார்க்கத்தில் உள்ள ஒரு முஸ்லிமை பெரும்பாவம் செய்த காரணத்திற்காக அவன் முஸ்லிமே இல்லை என்பது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாகும். முஸ்லிமை கொல்வதற்கு நிகரான மாபெரும் ஃபித்னாவாகும். இந்த ஃபித்னாவில்தான் முதன்முதலில் முஃதஸிலாக்கள் உருவாகிறார்கள்.

 ஆனால் சகோதரர் பீஜேவிற்கு இவை பெரிய குற்றமாகத் தெரியவில்லை. ஏனென்றால் இவரும் முஃதஸிலாக்களைப் போன்று நபிமொழிகளை நம்பும் முஸ்லிம்களுக்கு முஷ்ரிக் பட்டம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். எனவேதான் இவருக்கு முஃதஸிலாக்களின் இந்த ஃபித்னா பாரதூரமாகத் தெரியவில்லை. முஃதஸிலாக்களுக்கு எப்படி வக்காலத்து வாங்குகிறார் என்று பாருங்கள்.

 இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்றும் உள்ளது. அவர்கள் முஃதஸிலாக்கள் என்று அழைக்கப்படும்போது இதர வழிகேடான கொள்கைகள் அவர்களிடம் தோன்றவில்லை. மாறாக பெரும்பாவம் செய்தவனை முஃமின் என்றும் சொல்லக்கூடாது, காஃபிர் என்றும் சொல்லக் கூடாது என்ற இந்தக் கொள்கையே இருந்தது.

 இந்த ஒன்றிலேயே சமுதாய அறிஞர்களின் கருத்துக்களை விட்டும் அவர்கள் தனித்து இருந்தார்கள். இதனாலேயே அவர்கள் முஃதஸிலாக்கள் – விலகியவர்கள் என்று அழைக்கப்படவும் செய்தார்கள். இது முஃதஸிலா என்ற பெயர் தோன்ற காரணமாக இருந்த நிகழ்வு.

 முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் சமாதி வழிபாட்டுக் கொள்கையைவிட இது பயங்கரமானது அல்ல. இறைச் செய்தி மட்டுமே மார்க்கம் என்ற அடிப்படையைத் தகர்த்து சஹாபாக்களைப் பின்பற்றுவோம், இமாம்களைப் பின்பற்றுவோம் எனக் கூறும் சலபி மத்ஹபினர் மற்றும் நான்கு மத்ஹபினரின் கொள்கையை விட இது பாரதூரமானதல்ல.

 (ஆன்லைன் பீஜே இணையதளம்)
http://www.onlinepj.com/deen_kula_penmani/2015-dkp/jan-dkp-2015/#.VUzovtKUewQ

 இஸ்லாமிய வரலாற்றில் முஃதஸிலாக்கள் உருவாக்கிய இந்தக் கொள்கைக் குழப்பம் சகோதரர் பீஜேவிற்கு சிறிய பிரச்சனையாகத் தெரிகிறது. சமாதி வழிபாட்டுடன் ஒப்பிடும் போது இது பாரதூரமானதல்ல எனக் கூறி முஃதஸிலாக்களின் வழிகேட்டை சாதாரணது போல் சித்தரிக்கிறார்.

 இனம் இனத்தைச் சாரும் எனக் கூறுவார்கள். இந்தப் பழமொழி இவர் விசயத்தில் இங்கே பொருந்திப் போகிறது. இமாம் ஹஸன் பஸரி இப்பிரச்சனையில் மிகச்சரியாக நடந்துகொண்டார்கள். ஆனால் முஃதஸிலாக்களுக்கு வக்காலத்து வாங்கிய சகோதரர் பீஜே இமாம் ஹஸன் பஸரீ அவர்களை அநியாயமாக விமர்சனம் செய்வதைப் பாருங்கள்.

 ஹஸன் பஸரி அல்லாஹ்வின் தூதர் அல்ல. அவருடன் ஒரு கொள்கையில் வாசில் பின் அதா என்பவர் முரண்பட்டால் அவருடன் விவாதித்து அவர் சொல்வது சரியல்ல என்று விளக்கம் சொல்வதுதான் ஹஸன் பஸரியின் கடமையாகும். அவ்வாறு கூறி ஆதாரம் காட்டாமல் நான் சொன்னதை எப்படி மறுக்கலாம் என்று ஒருவரை வெளியேற்றியதே இஸ்லாத்தின் அடிப்படையில் ஏற்கத்தக்கதல்ல.

 அப்படியே ஹஸன் பஸரியின் சபையை விட்டு ஒரு சிறிய கொள்கைப் பிரச்சனைக்காக ஒருவர் விலக்கப்பட்டால் அதை அல்லாஹ்வின் தூதர் விலக்கி வைத்தது போல் எடுத்துக் கொண்ட செயலும் கண்டிக்கத்தக்கதே.

 நான் சொல்வதை எவரும் எதிர்க்கக் கூடாது என்று ஹஸன் பஸரி நடந்து கொண்டதால் ஒதுக்கி வைக்கப்பட்ட வாசில் பின் அதாவின் வழி வந்தவர்கள் இதன் பின்னர் இன்னும் சில தவறான கொள்கைகளையும் உருவாக்கிக் கொண்டனர். இக்கொள்கையை இவர்கள் உருவாக்குவதற்கு முன்னரே இவர்கள் முஃதசிலாக்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விட்டனர்.

 (ஆன்லைன் பீஜே இணையதளம்)
http://www.onlinepj.com/deen_kula_penmani/2015-dkp/jan-dkp-2015/#.VUzovtKUewQ

 முஃதஸிலாக்கள் நபிமொழிகளுடன் மோதியிருக்கும் போது ஹஸன் பஸரீ என்ற தனிப்பட்ட ஒருவரின் பிரச்சனையைப் போல் இதை சித்தரிக்கிறார். அல்லாஹ்வின் தூதருக்காக கோபம் கொண்ட ஹஸன் பஸரீ அவர்களை அல்லாஹ்வின் தூதர் போல் நடந்துகொண்டதாக விமர்சித்துள்ளார். மொத்தத்தில் முஃதஸிலாக்கள் உருவாகியதற்கு ஹஸன் பஸரீயே காரணம் என பலியை இமாம் ஹஸன் பஸரீ மீது சுமத்தியுள்ளார்.

 குர்ஆன் வசனங்களை ஒடித்து நபிமொழிகளை மறுத்து இவர் கூறும் சுயக்கருத்தை யாராவது எதிர்த்தால் அவரை ஜமாத்தை விட்டும் விலக்குவதும் சமுதாயத்தில் அவரை கேவலப்படுத்த முயற்சிப்பதும் சகோதரர் பீஜே அவர்களின் இயல்பாகிவிட்டது. சகோதரர் பீஜேவிற்கு மாற்றுக்கருத்து சொன்னால் நம்மை ஒரு வழி செய்துவிடுவார் என்ற பயத்தை பரவலாக ஏற்படுத்தியுள்ளார். இந்த லட்சணத்தில் நான் சொல்வதை எவரும் எதிர்கக்கூடாது என்பது போல் ஹஸன் பஸரீ நடந்துகொண்டார் என விமர்சிக்கும் தகுதி இவருக்கு இருக்கிறதா?

 குா்ஆன் சுன்னா அடிப்படையில் தான் பதிலளித்தப் பிறகும் அதை ஏற்காமல் எந்த ஆதாரமும் இன்றி தன் மனோ இச்சைப்படி ஒரு மாபெரும் கொள்கை குழப்பத்தை ஏற்படுத்தி அதில் பிடிவாதமாகவும் இருந்தால் அவர்களை விரட்டாமல் மடியில் வைத்து கொஞ்சவா முடியும்? திமிர்பிடித்து விலகிச் சென்றவர்களைத் தான் ஹஸன் பஸரீ அவர்களும் அப்படியே விட்டுவிட்டார். முஃதஸிலாக்கள் வழிகேடர்கள் எனக் கூறிய சகோதரர் பீஜே தற்போது முஃதஸிலாக்களின் மீது ஏன் இவ்வளவு கரிசனம் காட்டுகிறார் என்று புரிகிறதா?

 ஐந்து அடிப்படைகளும் ஒற்றுமைகளும்

 முஃதஸிலாக்கள் தங்களுக்கென ஐந்து அடிப்படை கொள்கையை வகுத்துள்ளனர். இந்த ஐந்து கொள்கைகளை கொண்டவர்களையே முஃதஸிலா எனக் கூற முடியும். டிஎன்டிஜே முஃதஸிலாக்கள் கூறிய இந்த ஐந்து விசயங்களில் எந்த ஒன்றிலும் உடன்படவில்லை. மாறாக இவர்களுக்கு எதிரான கருத்தைக் கூறுகிறது. அவ்வாறிருக்க எங்களை எப்படி முஃதஸிலாக்களுடன் சம்பந்தப்படுத்தலாம் என்று சகோதரர் பீஜே கேட்கிறார். இந்தக் கேள்விக்கு பதிலை அறிந்துகொள்வதற்கு முன்னால் முஃதஸிலாக்கள் உருவாக்கிய ஐந்து கொள்கைகளைப் பற்றி அறிவோம்.

 1. தவ்ஹீத்
 அல்லாஹ் தனக்கு இருப்பதாக சொன்ன தன்மைகளை அல்லாஹ்விற்கு இல்லை என மறுக்க வேண்டும். அல்லாஹ் கேட்பான். பார்ப்பான். வருவான் எனக் கூறினால் அல்லாஹ் படைப்பினங்களுக்கு ஒப்பாகிவிடுவான். எனவே, இவ்வாறு கூறுவது இணைவைப்பாகும். இதை மறுப்பது தான் தவ்ஹீதாகும். அல்லாஹ்விற்கு இந்தத் தன்மைகள் இருப்பதாக கூறும் வசனங்களுக்கு மாற்று விளக்கம் கொடுக்க வேண்டும் என்று கூறினர்.

 2. நேர்மை
 அல்லாஹ் நேர்மையானவன். எனவே, அடியார்களில் யாராவது வழிகெட்டுப்போனால் அவர்கள் வழிகெட்டதற்கும் அல்லாஹ்வின் நாட்டத்திற்கும் இடையில் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த விஷயம் விதிப்படி நடப்பதில்லை. மனிதர்களில் அவரவரின் முயற்சிக்கேற்பவே நன்மை தீமைகள் ஏற்படுகின்றன. மொத்தத்தில் விதியை மறுக்க வேண்டும் என்கின்றனர்.

 3. இரண்டு நிலைகளுக்கிடையில் ஒரு நிலை
 பெரும்பாவம் செய்தவனை முஃமின் என்றும் சொல்லக் கூடாது. காஃபிர் என்றும் சொல்லக் கூடாது. இந்த இரண்டு நிலைகளுக்கு இடையில் ஒரு நிலையில் அவன் இருக்கிறான் என்றே கூற வேண்டும் என்றனர்.

 4. வாக்குறுதி மற்றும் எச்சரிக்கை நிறைவேற்றுதல்
 பெரும்பாவம் செய்தவன் மரணித்து விட்டால் அவனுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. அவன் நரகத்தில் நிரந்தரமாக கிடப்பான். அல்லாஹ் பெரும்பாவம் செய்தவர்களுக்கு என்ன தண்டனையைக் கூறி எச்சரிக்கிறானோ அதை கண்டிப்பாக நிறைவேற்றுவான். மன்னிக்கமாட்டான் எனக் கூறினர்.

 5. நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்
 ஆட்சியாளர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்கள் அநியாயம் செய்துவிட்டால் அதை பொறுத்துக் கொண்டு இருக்கக் கூடாது. மாறாக அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து ஆட்சியை கவிழ்க்க வேண்டும்.

 இந்த ஐந்து வழிகெட்ட கருத்துக்களில் ஒன்றைக்கூட டிஎன்எஜே கூறவில்லை என்பது உண்மைதான். ஆனால் இந்த ஐந்து வழிகெட்ட கொள்கைக்கும் எது மூலக்காரணமாகவும் ஆணிவேராகவும் உள்ளதோ அந்த நோய் சகோதரர் பீஜேவிடம் உள்ளது. இந்த அடிப்படையில் சகோதரர் பீஜேவிற்கும் முஃதஸிலாவிற்கும் இடையே பெரிய சம்பந்தம் உள்ளது. நபிமொழிகள் முஃதஸிலாக்களின் இந்த ஐந்து அடிப்படைகளையும் நிராகரிக்கின்றன. பின்வரும் கருத்தே நபிமொழிகளில் கூறப்பட்டுள்ளது.

 அல்லாஹ் தனக்கு இருப்பதாக சொன்ன தன்மைகளை நாம் மறுத்து அதற்கு வேறு ஒரு விளக்கம் தரக்கூடாது. அந்தத் தன்மைகள் அல்லாஹ்விற்கு மனிதனைப் போன்றில்லாமல் அவனுடைய தகுதிக்கு ஏற்ப உள்ளது என்றே நம்ப வேண்டும்.
 அனைத்தும் விதியின் படியே நடக்கின்றன. நன்மை அல்லாஹ்வின் நாட்டத்தால் ஏற்படுவதைப் போன்று தீமைகளும் அவன் நாட்டத்தாலே ஏற்படுகிறது.
 பெரும்பாவம் செய்தவன் பாவி என்றாலும் அவன் இஸ்லாமை விட்டு வெளியேற மாட்டான்.
 அல்லாஹ் ஒரு பெரும்பாவத்திற்கு ஒரு தண்டனையை கூறி எச்சரித்தால் அந்த தண்டனையை அவன் கட்டாயம் நிறைவேற்றி ஆகவேண்டும் என்ற கட்டாயம் அல்லாஹ்விற்கு இல்லை. அவன் கருணையாளன்; அவன் நினைத்தால் மன்னிப்பான். அவன் நினைத்தால் தண்டிப்பான்.
 ஆட்சியாளர்கள் முஸ்லிம்களாக இருக்கும் வரை அவர்களிடம் அநியாயங்கள் வெளிப்பட்டாலும், நாம் பொறுமையாகவே இருக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யக் கூடாது. கட்டுப்பட்டே நடக்க வேண்டும். அவர்களிடம் வெளிப்படையாக இணைவைப்போ, இறைமறுப்போ காணப்பட்டால் மட்டுமே எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
 முஃதஸிலாக்கள் ஏற்படுத்தியுள்ள இந்த ஐந்து அடிப்படைகளுக்கும் நேர் எதிராக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்கள் அனைத்தையும் குர்ஆனுக்கு முரண் என மறுத்துவிட்டு இந்த ஹதீஸ் மறுப்புக்கொள்கையின் மீதுதான் நாம் முன்னர் குறிப்பிட்ட ஐந்து அடிப்படைகளை இவர்கள் நிறுவியுள்ளனர்.

 இவர்கள் கூறியுள்ள இந்த ஐந்து கருத்துக்களையும் ஆதாரங்களின் அடிப்படையில் சிந்திக்காமல் பாமரத்தனமாக மேலோட்டமாக சிந்தித்துப்பார்த்தால் சரியானவை போன்று தெரியும். இந்த சிந்தனையை ஆதாரமாகக் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுகளே இவை. இதற்கு எதிராக வரும் நபிமொழிகளை சம்பந்தம் இல்லாத குர்ஆன் வசனங்களை காட்டி அவ்வசனங்களுக்கு இவை முரண்படுவதால் இவற்றை ஏற்கக்கூடாது என்றனர். தன் சுய சிந்தனையை ஆதாரமாகக் கொள்ளாமல் நபிமொழிகளை அவற்றின் வழியிலேயே ஏற்றிருந்தால் இந்த ஐந்து அடிப்படைகளையும் இவர்கள் கூறியிருக்கவே மாட்டார்கள்.

 இன்று சகோதரர் பீஜே அவர்கள் இதே அடிப்படையில் தான் பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்து வருகிறார். எனவேதான் சூனியம் கண்ணேறு தொடர்பாக வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பதில் இவர் முஃதஸிலாக்களுடன் கூட்டு சேர்ந்துள்ளார். இப்பிரச்சனைக்கு நபிமொழிகளைக் கொண்டு விடைதேடாமல் பாமரத் தனமாக நாத்திகன் சிந்திப்பது போல் தன் மனோஇச்சையை ஆதாரமாகக் கொண்டதால் இந்த நபிமொழிகளை நம்புவது இணைவைப்பு என்ற பாரதூரமான கொள்கை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். இதை அப்படியே இதற்கு முன் முஃதஸிலாக்கள் அச்சுப்பிசகாமல் கூறியுள்ளனர். இருவரின் அடிப்படையும் ஒன்று என்பதால் வழிகேடுகள் தானாக ஒன்றிணைந்துவிட்டது.

 முஃதஸிலா என்றால் நபிமொழிகளை மறுத்து புதுக்குழப்பத்தை ஏற்படுத்தி இஸ்லாமிய சமுதாயத்தை விட்டு விலகி தனியே சென்றவன் என்பது பொருள். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்து புதுப் புது இணைவைப்புகளை கண்டுபிடிக்கிற விசயத்தில் இந்த அளவுகோல் 100 சதவிகிதம் சகோதரர் பீஜேவிற்கு பொருந்திப்போகிறது.
தொடர்ந்து படிக்க:
http://www.islamkalvi.com