Popular Posts

Showing posts with label சுயமாக நான் ஹதீஸ்படி அமல் செய்கிறேன். Show all posts
Showing posts with label சுயமாக நான் ஹதீஸ்படி அமல் செய்கிறேன். Show all posts

Saturday, 23 April 2016

சுயமாக நான் ஹதீஸ்படி அமல் செய்கிறேன்,ஹதீஸ்களின் தர்ஜமாவை மட்டும் படித்துவிட்டு, முன்னோர்களின் விளக்கவுரைகளை புறம்தள்ளுவதும், இமாம்களை புறக்கணிப்பதும் இஸ்லாத்திலே பிரிவிணையை உண்டாக்கும்.

ஹதீஸ்களின் தர்ஜமாவை மட்டும் படித்துவிட்டு, முன்னோர்களின் விளக்கவுரைகளை புறம்தள்ளுவதும், இமாம்களை புறக்கணிப்பதும் இஸ்லாத்திலே பிரிவிணையை உண்டாக்கும்.

 சுயமாக நான் ஹதீஸ்படி அமல் செய்கிறேன், என்பதை விட மார்க்க வல்லுணர்கள் ஹதீஸின் படி எப்படி அமல் செய்தார்களோ அவ்விதம் அமல் செய்வதே மிக உறுதியானதும் பலமானதுமாகும், என்று இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்.

 சுஃப்யான் பின் உயைனா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் (மிகப் பெரும் ஹதீஸ் கலை வல்லுணர்.) நபிமொழி ஃபுகஹாக்களைத் தவிர மற்றவர்களுக்கு (மொழிபெயர்ப்பை மட்டும் பார்ப்பதால்) வழிகெட்டுப்போக காரணமாகிவிடலாம், என்று கூறுகிறார்கள்.

 இப்னு வஹப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், ஒரு லட்சத்து இருபதாயிரம் நபிமொழிகளை கோர்வை செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஹதீஸ் கலை வல்லுணரும் கூட எந்த மனிதரிடம் ஹதீஸ் மட்டும் இருந்து,
 ஃபிக்ஹில் பின்பற்றத் தகுந்த ஒரு முன்மாதிரி இல்லையானால் அவர் வழிகெட்டுப் போய்விடுவார் என பதிவுசெய்துள்ளார்.

 எங்களை இமாம் மாலிக், இமாம் லைய்ஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹிமா போன்ற (மார்க்கச் சட்ட வல்லுணர்கள்) மூலம் அல்லாஹ் (காப்பாற்றிவிட்டான். அப்படி மட்டும்) வழிகெட்டுப் போவதை விட்டும் பாதுகாக்கவில்லையானால் நாங்கள் வழிகெட்டுப் போயிருப்போம், என்று கூறுகிறார்கள்.
 📕இக்திலாஃபெ அயிம்மா அவ்ர் ஹதீஸெ நபவி