Popular Posts

Showing posts with label கியமா நாள் ... Show all posts
Showing posts with label கியமா நாள் ... Show all posts

Wednesday, 16 March 2016

கியமத் நாளின் 14 விடயங்கள்

14 விடயங்கள் நடந்து விட்டால் கியாம நாளை எதிர்14 விடயங்கள் நடந்து விட்டால் கியாம நாளை எதிர்பாருங்கள் !!
நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :-

இந்த பதினான்கு விடயங்கள் நடந்துவிட்டால் மறுமை நாளை எதிர்பாருங்கள்

1 . பொதுச் சொத்தை தம் சொந்தப் பொருளைப் போல் ஆக்கிக் கொள்வார்கள் .

2 . அமானிதத்தை தம் பங்குக்கு கிடைத்த பொருளாக ஆக்கிக் கொள்வார்கள் .

3. ஜகாத்தை கொடுக்க மாட்டார்கள் . (கொடுப்பது அவர்களுக்கு சிரமமாக இருக்கும் )

4. மார்க்கக் கல்வியை உலக லாபத்திற்காக கற்பார்கள் .(பதவிக்காகவும் பொருளுக்காகவும் கற்பார்கள் )

5. கணவன் மனைவிக்கு கட்டுப்பட்டு நடப்பான் .

6. தாயை வேதனைப்படுத்துவான் .

7. நண்பனை அனைத்து விஷயங்களிலும் நெருக்கமாக்கிக் கொண்டு பெற்ற தந்தையை தூரமாக்கி விடுவான்.

8. பள்ளிவாசலில் உலக பேச்சுக்கள் அதிகமாகிவிடும்.

9 . பாவச் செயலில் ஈடுபட்டவன் அச்சமூகத்தின் தலைவனாவான்.

10 . இழிநிலையானவன் முக்கிய்மானவனாகக் கருதப்படுவான் .

11 . அடாவடித் தனத்திற்கு பயந்து அந்த மனிதனுக்கு மரியாதை செய்வார்கள் .

12 . ஆடல் பாடல்களில் ஈடுபடும் பெண்கள் , இசைக் கருவிகள் அதிகமாகிவிடும்.

13 . பலவகையான (பல பெயரில்) மதுபானங்கள் அருந்தப்படும் .

14 . காலத்தால் பிந்தியவன் முந்தைய சமுதாயத்தினரை பழிப்பார்கள் .

இந்த நிலைகள் ஏற்பட்டால் அனல் காற்றையும் பூமி அதிர்ச்சியையும், மனிதன் உருமாற்றபடுவதையும் , வானத்திலிருந்து கற்கள் எறியப்படுவதையும் எதிர்பாருங்கள் .
அறிவிப்பவர் :அபூஹுரைரா (ரலி )
நூல் :திர்மிதி பாருங்கள் !!
Present by ;SSF,கிருஷ்ணாஜிப்பட்டினம் கிளை,புதுக்கோட்டை மாவட்டம் ,தமிழ்நாடு.