Popular Posts

Showing posts with label இப்லீஸ் என்றால் யார்.. Show all posts
Showing posts with label இப்லீஸ் என்றால் யார்.. Show all posts

Thursday, 17 March 2016

யார் இந்த இப்லீஸ்.

இதை அவசியம் படித்து விட்டு பகிரும் உள்ளங்களுக்கு அல்லாஹ் ஈமானை தருவாயாக!
                  ,,ஆமீன்,,

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்.
💚💚💚💚💚💚💚💚💚💚💚

யார் இந்த இப்லீஸ்,,

பெருமான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் தோழர்களும் பேசிக்கொண்டு இருக்கும் போது கதவு தட்டப்படும் ஓசை!

பெருமான் சொன்னார்கள் இப்லீஸ் வந்து இருக்கான்,, கதவை திறங்கள் என்று,,

உமர் நாயகம் சொன்னார்கள் " அனுமதி கொடுங்கள் நாயகமே,, ஒரே போடாக போட்டு விடுகிறேன்,,

கியாமநாள் வரை மக்கள் துன்பம் இல்லாமல் இருக்கலாமே என்று!

அவனை கொல்லுகிற உரிமையோ பெருமையோ உமக்கு கிடையாது உமரே!

கண் போனவனாக ஒரு மாதிரியான உருவம் கொண்டவனாக வந்தான்! இப்லீஸ்!

அஸ்ஸலாமு அழைக்க யா முஹம்மத்....என்கிறான்!

அஸ்ஸலாமு அழைக்க யா ஜமா அத்தல் முஸ்லிமீன் என்கிறான் இப்லீஸ்!

ஸலாம் என்பது அல்லாஹ்வுக்கு சொந்தமானது,,,,உனக்கு செல்லமுடியாது என்றார்கள் கண்மணி!

(பெருமானார் வாயில் இருந்து உனக்கு சாந்தி உண்டாகட்டும் என்று சொன்னால்,, அதை விட பெரிய வார்த்தை இப்லீசுக்கு வேறு ஒன்றும் இல்லை அல்லவா?

ஆகவே ,, அலைக்க யா லயீன் ,, லஹ்னத்தான் உனக்கு சொந்தம் என்றார்கள்!  ஏன் இங்கே வந்தாய்?

அல்லாஹ்வர சொன்னான்,,,,,வந்தேன் முஹம்மது என்ன கேட்க்கிராரோ அதற் கெல்லாம் சரியாக பதில் சொல்ல வேண்டும் உண்மையை சொல்ல வேண்டும்!  பொய் சொன்னால் மெழுகு உருகி விடுவதைப் போன்று உருகிவிடுவாய் என்று அல்லாஹ் சொல்லி அனுப்பினான்!

கேள்வி இதே,,,,,!

💚கண்மணி நாயகம்"" உனக்கு முதல் எதிரி யார்?

😡ஷைத்தான்.... நீங்க தான்..

💚அதற்க்கு அடுத்து இரண்டாவது எதிரி யார்?

😡ஷைத்தான்== ஒரு வாலிபன் (வாலிப பருவத்தில் அல்லாஹ்வை நினைக்கிறான் - தொழுகிறான் அழுகிறானே அவன் தான் இரண்டாவது எதிரி!

💚 மூன்றாவது எதிரி யார்?

😡 பேணுதலான ஆலிம்.

💚 நான்காவது எதிரி யார்?

😡 சுத்தத்தின் மீதே நிரந்தரமாக இருந்தவர்கள் (ஓழுவுடன் இருப்பவர்கள்)

💚 ஐந்தாவது எதிரி யார்?

😡 பொறுமையாளான்?

💚 நபி அவர் பொறுமையாளான் என்று எப்படி அறிந்து கொள்வாய்?

😡 மூன்று நாள் பட்டினியால் வாடினாலும் அடுத்தவரிடம் உதவி கேட்க மாட்டான் பொறுமையுடன் இருப்பான் ,, என்றான்.

💚  அடுத்த எதிரி யார்?

😡 நன்றி செலுத்துகிற பணக்காரன்!

💚 கண்மணி நாயகம் --- என் உம்மத் தொழுகையிலே நிற்கிற போது உன் நிலை என்ன ஆகும்?

😡 எனக்கு கடுமையான காய்ச்சல் வந்து விடும்!

💚 கண்மணி நாயகம் --- நோன்பு நோற்கிற பொழுது உன் நிலை என்ன ஆகும்?

😡 என்னை கைது செய்யப்பட்டவனைப் போன்று மாறி விடுவேன்!

💚 ஹஜ்ஜுக்கு வரும் போது உன் நிலை என்ன?

😡 நான் பைத்தியக் காரனை போன்று மாறி விடுவேன்!

💚 சதக்கா கொடுக்கிற பொழுது உன் நிலை என்ன ஆகும்?

😡 என்னை ரம்பத்தை வைத்து அறுத்ததை போன்று இருக்கும்!

💚 சபையில் இருக்கிற அபூபக்கர் நாயகத்தை காட்டி கேட்க்கிறார்கள்,, நாயகம்,, இவரை குறித்து இப்லீஸே,, நீ என்ன சொல்கிறாய்?

😡 இஸ்லாத்துக்கு வருவதற்கு முன்னாடியே இவர் எனக்கு வழிப்பட வில்லை ,,,,, இஸ்லாத்துக்கு வந்ததற்கு பின்பு எங்கே எனக்கு வழிப்பட போகிறார்?

💚 உமர்கத்தாப் ரலியல்லாஹு அன்ஹுவை காட்டி கேட்டார்கள் " இவரை குறித்து என்ன சொல்கிறாய்?

😡 இவர் ஒரு பாதையில் வந்தால்,,,, நான் அடுத்த பாதையில் சென்று விடுவேன்!

💚 உஸ்மானைக் குறித்து என்ன நினைக்கிறாய்?

😡 மலக்குகளே அவரை கண்டு வெட்க்கப்படுகிரார்கள் நானும் அவரைக் கண்டு வெட்க்கப்படுகிறேன்!

💚 அலியை குறித்து நீ என்ன சொல்கிறாய்?

😡 அலி என்னுடைய முடியை பிடித்து உள்ளார் நான் அவரின் முடியை பிடித்து இருக்கேன் இரு வரும் சண்டையிட்டு கொண்டுள்ளோம் - நான் விட்டாலும் என் முடியை அலி விடுவதாக தெரியவில்லை " அலி எதில் நின்றாலும் ஸ்திரமாக இருப்பார் " வெற்றி வாகை சூடுவார்,,,,,என்றான்!

💚 அல்லாஹ்விடம் நீ என்ன கேட்டாய் ? அவன் என்ன கொடுத்தான் இப்லீஸே?  என்று கண்மணி நாயகம் கேட்கக்,,,,,,

😡 எனக்கு என்று வீடு ,, வேணும் எனகேட்டேன் பாத்ரூம் ,, கழிவறை தான் உன் வீடு ,, என்றான் அல்லாஹ்!

😡 எனக்கு ஒரு மஜ்லிஸ் வேணும் (சபை வேணும்) என கேட்டேன் ,, முச்சந்திதான் உன் சபை என்று அல்லாஹ் சொல்லி விட்டான்!

😡 எனக்கு ஓரு மோதினார் வேணும் என கேட்டேன்! 

இசைக்கருவிகள் ,,,,(ஹராமான) தான் உன் மோதினார் (அழைப்பொலி)

😡 எனக்குன்னு உதவியாளர் வேணும் என கேட்டேன்!

பெண்கள் தான் உன் உதவியாளர்கள் என்றான் அல்லாஹ்!

😡 எனக்கு என்று ஒரு பேச்சு வேண்டும்,,,,,,பொய் தான் உனது பேச்சு ,,

💚 நீ தவ்பா செய்து விடு உனக்காக நான் பவ மன்னிப்பு கேட்க்கிறேன் ,, உன்னை சுவர்க்கத்திற்கு அனுப்பி விடுகிறேன் ,, என்று நாயக கண்மணி சொல்ல,, 💚

😡 சிரித்துக் கொண்டே சொன்னானாம் நீங்கள் சிதேவிகளின் தலைவர் ,, நானோ மூதேவிகளின், தலைவன்! என்று அல்லாஹ் முத்திரை குத்தி விட்டான் ,,
இந்த முயற்சிக் கெல்லாம் நீங்கள் வர வேண்டாம் என்னை திருத்த முடியாது ,,,,, முயற்சி செய்யாதீர்கள் என்று ஒதுங்குகிறான்,,

இப்லீஸே திருத்த முயற்சித்த கண்மணி யின் பாசம் தான் என்னே?

சுப்ஹானல்லாஹ்! !

படித்த பின் பகிரவும்
இன்ஷா அல்லாஹ்.
நன்மையான நல்லதை செய்யுங்கள்.

Present by ;SSF krishnajippattinam branch, pudukkottai district, Tamil Nadu.